Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Wednesday, 10 October 2012

சக பதிவர் - சகோதரிக்கு - உதவி செய்ய முன்வருவீர்களா?


சில நாட்களுக்கு முன்பாக, சகோதரி ஹுசைனம்மா மூலமாக சக பதிவரான சங்கீதா சேன்யால் அவர்கள் எதிர்க்கொள்ளும் ஒரு போராட்டத்தை அறிந்துக்கொள்ள முடிந்தது. கேட்பவர் உள்ளங்களை நொறுங்கச் செய்வதாக இருந்தது அந்த நிகழ்வு. 

வாழ்வதற்கும், உயிர்பித்து மட்டுமே இருப்பதற்கும் வித்தியாசங்கள் உண்டு. இதில் இரண்டாம் நிலையில் உள்ளார் திருமதி சங்கீதாவின் சகோதரி மகளான பிரதீபா. Multiple Sclerosis எனப்படும் மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடூர நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் பிரதீபா. இந்த நோயானது நாளடைவில் சிறுகச் சிறுக உடல் உறுப்புகளை செயலிக்க செய்து நோயாளியை நடைபிணமாக மாற்றக்கூடியது. நோயாளி மட்டுமின்றி அவரை சார்ந்தவர்களையும் உளவியல்ரீதியாக நிலைக்குலைய செய்யக்கூடியது இந்த நோய்.  

இந்த நோய்க்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் மேற்கொண்டு பாதிப்பு ஏற்படுத்தாமல் தடுக்க முடியும். 


இதுவரையிலான சிகிச்சையை தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மூலமாக சமாளிக்க முடிந்த திருமதி சங்கீதா அவர்கள், மேற்கொண்டு சிகிச்சையை நடத்த சகோதர சகோதரிகளிடம் உதவி நாடியிருக்கின்றார்கள். 

முதலில் சங்கீதா அவர்கள் இதுக்குறித்து தன் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இருந்து சில பகுதிகள்:

"பிரதீபா (ப்ரீத்தி)  என் சகோதரியின் மகள் வயது 25  நடுத்தர குடும்பத்தின் மூத்தமகள் . இவள் துடிப்பான அழகான பெண். வாழ்கையை பற்றி நிறைய கனவுகளுடனும் முன்னேற்றத்தில் ஆர்வம் உடையவள். B.Com., படித்து விட்டு கடந்த இரண்டு வருடங்களாக சென்னையில் Logistics கம்பெனி ஒன்றில் பணி ஆற்றிவருகிறாள்.  பெயர்க் காரணம் போலவே எங்கள் குடும்பத்தில் ஒளி அவள். எங்கள் குடும்பத்தில் ரொம்ப நாட்களாக சந்தோஷமான நிகழ்வுகள் நடக்காத நேரத்தில் பிறந்து, எங்களுக்கு அளவில்லா சந்தோஷத்தைத் தந்தவள். 

என் சகோதரியின் திருமண வாழ்கை தோல்வியில் முடிந்து விட்டது. 1998-ல் தன் மகனையும் மகளையும் அழைத்து கொண்டு டெல்லியில் இருந்து என்னிடம் வந்து விட்டார்கள். நானும் அவர்கள் வாழ்வின் அடிப்படைவசதிகள் கொடுத்து என் அக்காவிற்கு வேலையும் வாங்கிக் கொடுத்து என்னால் இயன்ற வரை சப்போர்ட் செய்து கொண்டு வந்தேன். குழந்தைகளும் தாயின் நிலை அறிந்து நன்றாக படித்து வந்தார்கள். 

எல்லாம் நல்ல படியாக நடந்து கொண்டு இருந்தது 2010 டிசம்பர் 7-ந் தேதி வரை. அன்று காலை 10 மணி அளவில் ப்ரீத்தி இடம் இருந்து ஃபோன்கால் வந்தது. ”சித்தி, Vasan Eye Care -ல் இருந்து பேசுகிறேன்” என்றவள் என்னை உடனே வர சொன்னாள்.

காலையில் இருந்து "Double Vision " (இரண்டிரண்டாகத் தெரிவது) இருப்பதாகவும், கண் மங்கலாகத் தெரிவதாயும் கூறினாள். டாக்டரிடம் செக் செய்த போது கண்ணில் பிரச்சனை ஏதும் இல்லை என்று, நரம்பியல் நிபுணரைப் (Neurologist) பார்க்க சொன்னார்கள். 

அங்கிருந்து ஒவ்வொரு டாக்டராகக் காட்டி, கடைசியில் 3 முறை MRI ஸ்கேன் எடுத்து, இறுதியில் அவர்கள் சொன்னது Multiple Sclerosis & De-Myelination Disorder என்றும் அதற்கு கொடுக்க வேண்டிய ஊசியின் விலை ஒரு முறைக்கு 50,000 ஆகும் என்றும் பார்வை முழுவதும் வரும் வரை போட வேண்டும் என்றும் சொன்னார்கள். நான்கு லட்சம் செலவாகியது. 5 மாத போராட்டத்திற்குப் பிறகு பார்வை மீண்டு வந்தது. ஆனாலும் உட்கொண்ட அதிக மருந்துகளினால் பக்க விளைவுகளாக எப்போதும் தலை வலி மற்றும் பல. 

இந்த சிகிச்சைக்கு பிறகு சிலருக்கு இந்த நோயின் தீவிரம் தெரிய இரண்டு மூன்று வருடம் ஆகலாம். ஆனால் ப்ரீதிக்கு செப்டம்பர் 2011 மறுபடியும் அதே பாதிப்பு relapse ஆகிவிட்டது. 

மருத்துவத்தில் இந்நாள் வரை இதற்கு குணப்படுத்த மருந்து ஒன்றும் கண்டு பிடிக்கவில்லை. "No Cause No Cure disease"   இதை மேலும் பரவுவதைக் கட்டுப்படுத்த மட்டுமே மருந்து கொடுக்கபடுகிறது.

இந்த மருந்தை ஊசி முலமாக வாரம் இரண்டு முறை எடுத்துக் கொள்ள வேண்டும். அமெரிக்காவில் எல்லாம் இந்த நோய்க்கு இன்சூரன்ஸ் coverage இருக்கிறது. ஆனால் இந்தியாவில் இன்னும் இந்த நோய் பற்றி முழுவதுமாக விழிப்புணர்வு இல்லாத நிலையில் நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டிய சூழல். எந்த வித உதவியோ, ஆதாரமோ இல்லாத நிலையில் தொடர்ந்து சிகிச்சை எடுக்க முடியாமல் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

டாக்டரின் கருத்து படி ஒரு மூன்று வருடம் தொடர்ந்து மருந்து  எடுத்து கொண்டால். நோயின்  தீவிரத்தை சில வருடங்கள் தள்ளி போட முடியும். 

நானும் என் உடன் வேலை செய்து வரும் சிலரும், ப்ரீத்தியின் நண்பர்களும் சேர்ந்து ஒரு வருட சிகிச்சையை முடித்து விட்டோம். இதைப் படிப்பவர்கள் தரும் ஒரு ருபாய் கூட உங்கள் பிரார்த்தனையோடு  சேர்ந்து கிடைக்கும் பொழுது இவள் ஒரு இயல்பான வாழ்கை வாழ உதவி செய்யும்" 

மருத்துவ சான்றிதழ்கள் மற்றும் இது தொடர்பான பல ஆவணங்களை கொண்ட சகோதரி சங்கீதாவின் பதிவை படிக்க <<இங்கே>> சுட்டவும். 

இந்த நோய் குறித்த 'தி ஹிந்து' நாளிதழின் சமீபத்திய விழிப்புணர்வு பதிவை <<இங்கே>> காணலாம். 

சகோதரி சங்கீதா கொடுத்துள்ள தகவல்களை நாங்கள் உறுதி செய்துக்கொண்டோம். இது குறித்து நேரடியாக திருமதி சங்கீதா மற்றும் பிரதீபாவை சந்திக்க விரும்புகின்றவர்கள் கீழ்காணும் எண்ணில் தொடர்புக் கொள்ளலாம். 

ஒரு மனித உயிரை காப்பாற்றினால் அது மனித சமுதாயத்தையே காப்பாற்றியதற்கு சமம் என்று குர்ஆன் கூறுகின்றது. மனித சமுதாயத்தையே காப்பாற்றும் இந்த நன்மையான செயலில் உங்களையும் பங்கு கொள்ள முன்வருமாறு பணிவன்புடன் அழைக்கின்றோம். உங்கள் உதவி மிகச் சிறிதாய் இருந்தாலும் அது மிகப் பெரிய நன்மையை பெற்றுத்தரும். 

உங்கள் பொருளாதார உதவியை நீங்கள் இரண்டு விதமாக செய்யலாம். 

ஒன்று, கீழ்க்காணும் திருமதி சங்கீதாவின் பேங்க் அக்கௌன்ட் நம்பருக்கு காசோலையாகவோ அல்லது fund Transfer-ராகவோ  செய்யலாம். 

Benificiary Name: GEETHA SURESH
Bank Name: ANDHRA BANK
Branch Name: Adyar, chennai
A/C Number: 070310011013916
Account type: Savings account (SB)
IFSC CODE: ANDB0000703
Address: Andhra Bank
ADAYAR Branch
NO 30 1st Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600 020

அல்லது, திருமதி சங்கீதா அவர்களின் வீட்டிற்கு சற்று தொலைவில் வசிக்கும் சக பதிவரான சிராஜ் அவர்களின் பேன்க் அக்கௌன்ட் நம்பருக்கு காசோலையாகவோ அல்லது fund Transfer-ராகவோ  செய்யலாம். மொத்தமாக கலெக்ட் செய்து சகோதரி அவர்களிடம் கொடுத்துவிடலாம். இந்த அக்கௌன்ட் நம்பருக்கு பணம் அனுப்புபவர்கள் மறக்காமல் அனுப்பிய தொகையை எனக்கு மெயில் மூலமாக தெரிவித்துவிடவும் (aashiq.ahamed.14@gmail.com)


Benificiary Name: SIRAJUDEEN
Bank Name: State Bank of India (SBI)
Branch: SALIGRAMAM (CHENNAI)
AC NO: 30005572107
Account type: Savings account (SB)
IFSC CODE: SBIN0006850

(or)

Benificiary Name: SIRAJUDEEN
Bank Name: CITI BANK
Branch: ANNA SALAI  OR MOUNT ROAD (CHENNAI)
Account type: Savings account (SB)
AC NO: 5013964442
IFSC CODE: CITI0000003


திருமதி சங்கீதா அவர்களை 9677035544 என்ற எண்ணில் தொடர்புக்கொள்ளலாம். நீங்கள் அனுப்பும் சிறிய தொகையும் கூட சகோதரி பிரதீபா மேலும் சில நாட்கள் சிரித்திருக்க உதவும். 

இந்த நோய் குறித்த விழிப்புணர்வை ஊட்டுவதும் நம் மீது கடமையாகின்றது. தயவுக்கூர்ந்து இந்த நோய் குறித்தும், இந்த உதவி குறித்தும் அடுத்தவர்களுக்கு, நீங்கள் அறிந்த டிரஸ்ட்களுக்கு எடுத்துச் சொல்லி இந்த சகோதரியின் வாழ்வு பிரகாசமாய் அமைய வழிவகை செய்யுங்கள்.   

நன்றி,

தகவல் உதவி: சகோதரி ஹுசைனம்மா.
தகவல்கள் சரிபார்ப்பு: ஆஷிக் அஹமத் மற்றும் சிராஜ்.

Saturday, 25 August 2012

பதிவர் சந்திப்பு ரூல்ஸ் - HATS OFF


நாளை நடைபெறவுள்ள சென்னை பதிவர் சந்திப்புக்கான இறுதி அழைப்பிதழ் இன்று பல தளங்களில் வெளியாகியுள்ளது. பதிவர் சந்திப்பிற்கான இடத்திற்கு எப்படி வருவது என்பதில் ஆரம்பித்து முழுமையான தகவல்கள் இவற்றில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு சகோதரர் மதுமதியின் பதிவை இங்கே காணலாம்.

பதிவர்கள் பேண வேண்டிய ரூல்ஸ் ரொம்பவே கவனத்தை கவருவதாக உள்ளது. புகைபிடித்தல், மது, பெண்களை அவர்கள் அனுமதியின்றி படம் பிடிப்பது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. சபை நாகரிகத்தை பேணவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மதுமதி அவர்களின் பதிவில் இருந்து, 

1.அரங்கத்தில் புகைபிடித்தலை தவிர்த்துக் கொள்ளவும். 
2.மது அருந்திவிட்டு அரங்கிற்குள் நுழைவதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளவும். 
3.பெண் பதிவர்களின் அனுமதியின்றி அவர்களை புகைப்படம் எடுப்பதை தயவுகூர்ந்து தவிர்த்துக் கொள்ளவும்.அனுமதியோடு புகைப்படம் எடுக்கும் பட்சத்தில் அவர்கள் அனுமதியில்லாமல் வலையில் பதிவதை தவிர்த்துக் கொள்ளவும். 
4.ஒவ்வொரு பதிவரும் சபை நாகரீகத்தை கடைபிடிக்கவும்.

இதில் மூன்றாவது பாய்ன்ட் சான்சே இல்லை. செம டாப். இந்த வரையறைகளை மீறுபவர்கள் மீதான நடவடிக்கைகள் ஏற்கனவே தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது (அனுமதி மறுக்கப்படும்/அரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்).

எங்கு ஒழுக்கதிற்கான விதை தூவப்படுகின்றதோ அப்போதே அதன் வெற்றியும் ஆரம்பமாகிவிடுகின்றது. அந்த வகையில் இந்த சந்திப்பு ஒரு மிகச்சிறந்த துவக்கமாகவும், முன்னுதாரணமாகவும் இருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை.

Hats Off organisers.....Hats off....

இந்த பதிவர் சந்திப்பில் ஆக்கப்பூர்வமான முடிவுகள் எடுக்கப்பட்டு, அவை சிறந்த முறையில் பின்பற்றப்பட்டு, தமிழ் பதிவுலகம் மற்ற மொழிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்திட மனமார்ந்த பிரார்த்தனைகள்.

விழா ஒருங்கிணைப்பாளர்களே, ஆக்கப்பூர்வமான விசயங்கள் கலந்த உங்கள் உழைப்பு அருமையானது. நீங்கள் எதிர்ப்பார்த்ததை விடவும் இந்த விழா அசத்தலாக இருக்கபோகின்றது (இன்ஷா அல்லாஹ்) பாருங்கள்.....அதற்கு எங்களுடைய பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள்....

நன்றி: ஆஷிக் அஹமத்

Tuesday, 21 August 2012

பதிவர் சந்திப்புகள் டாஸ்மாக் பிசினஸ்சை உயர்த்தும் இடங்களா?


பதிவர் சந்திப்புகள் என்றாலே இப்போதெல்லாம் ஒருவித அலர்ஜிதான். அதனாலேயே இவற்றில் இருந்து விலகி நிற்க வேண்டியதாகி விடுகின்றது. பதிவுலகில் சும்மாவே "தண்ணியடிப்பது" குறித்து ரொம்ப எதார்த்தமாக(?) பேசிக்கொள்வார்கள். பதிவர் சந்திப்பிலோ இதுக்குறித்து சொல்லவே வேண்டாம். பதிவர் சந்திப்பு என்பதே நண்பர்களை கூட்டி டாஸ்மாக் பிசினஸ்சை ஏத்தி வைக்கதானோ என்று எண்ணத்தோன்றுகின்றது. 

சிலர் செய்யும் சலம்பல்கள் ஒட்டுமொத்த முயற்சியையும் குப்பையில் வீசக்கூடியவை என்பதற்கு பதிவர் சந்திப்புகள் ஒரு மிகச்சிறந்த உதாரணம். 

சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஈரோடு பதிவர் சந்திப்பை எடுத்துக்கொள்வோம். இது குறித்து ஒரு சகோதர பதிவர் ஒருவர் மிக வருத்தத்துடன் பல செய்திகளை குறிப்பிட்டார். "பதிவர் சந்திப்புக்கு தண்ணி அடிச்சிட்டு வருவாங்க பாருங்க, அப்படியே டென்ஷனா வரும். ஏன்டா வந்தோம்னு இருக்கும். இவங்க கூடி பேசிகிட்டு இருந்தா அதுல குறிப்பிட்ட அளவு தண்ணி அடிக்குறது பத்தி தான் பேச்சு இருக்கும். ஒரு மூத்த பதிவர் கிட்ட பேசனும்னு போனேன். அப்புறம் பேசலாம்னு சொன்னார். மதிய சாப்பாட்டின் போது அந்த மூத்த பதிவர் என்னை கூப்பிடுரார்னு சொன்னாங்க. போய் பார்த்தா புல் டக்குல அவுரு. 'தம்பி சொல்லுங்க. என்னா பேசணும். எதாருந்தாலும் பன்னிருவோம்' அப்படின்னு பேச ஆரம்பிச்சு என்னென்வோ உலருராறு. இவர் கூட போதைல இன்னும் சில பதிவர்கள். நோந்திட்டேன். என்னவா வேணும்னாலும் இருந்துட்டு போகட்டும். ஆனா தண்ணி அடிச்சிட்டு பதிவர் சந்திப்பு வர்ரதெல்லாம் ஏத்துக்கவே முடில. ஈரோடு சங்கவி போன்ற நல்ல ஆட்கள் ஒருங்கிணைத்த சந்திப்புன்னு தான் போனேன். அதுக்காக இதையெல்லாம் சகிச்சிக்க வேண்டியதா இருக்கு"

இந்த சகோதரரை போலவே சில சகோதரிகளும் பதிவர் சந்திப்புகளில் நடக்கும் "தண்ணி" கூத்துக்கள் குறித்து நொந்துக்கொள்கின்றனர். இம்மாதிரியான நிகழ்வுகளில் பெண்கள் அதிகளவில் கலந்துக்கொள்ளாததற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகவே இந்த தண்ணி மேட்டர் தெரிகின்றது.

இப்ப சென்னைல ஒரு சந்திப்பு நடக்க போகுது. அதுக்கான ஒரு ஹின்ட் இப்பவே கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. இரு பதிவர்கள் இடையே நடந்த உரையாடல் கீழே. ஈரோடு சந்திப்பு குறித்து அந்த சகோதரர் கூறியது இந்த கமெண்ட்களை பார்த்ததும் கண்முன்னே வந்து நிற்கின்றது. பதிவர்களுக்கு சமூக பொறுப்பு இருக்கின்றது. உலக வரலாற்றை எடுத்து பார்த்தால் பெரிய பெரிய சாம்ராஜ்யங்கள் முதல் சாமான்யன் வரை வாழ்க்கையில் தொலைந்து போனதற்கு குடி ஒரு நிச்சய காரணமாக இருக்கும். அதனை ஆதரிக்கவோ அல்லது எடுத்துக்காட்டாக நடந்து காட்டும் யாரும் மிக மோசமான முன்னுதாரனமாகவே இருக்கின்றனர்.

எதார்த்தமாக பேசுவது போன்று குடியை அடுத்த தலைமுறையிடம் ஊக்குவிக்கும் செயல்களை பதிவுலகம் நிறுத்தவேண்டும். அதற்கு இந்த சென்னை பதிவர் சந்திப்பு துணை நிற்கவேண்டும்.

ஏற்கனவே சொன்னது போன்று பதிவர் சந்திப்பு என்பதே தங்கள் நண்பர்களுடன் கூடி கும்மி(தண்ணி)யடிக்கும் வாய்ப்பாக தான் தெரிகின்றது. அந்த அளவில் பெரிய அளவிலான சீர்கேட்டிற்கு இந்த பதிவர் சந்திப்புகள் மறைமுகமான காரணமாக அமைந்து விடுவது நிதர்சனமான உண்மை.

இது போன்ற கீழ்த்தரமான முன்னுதாரணங்களில் இருந்து பதிவுலகம் மீண்டு ஆரோக்கியமான வழியில் செல்ல சென்னை பதிவர் சந்திப்பு நல்ல துவக்கமாக அமைய வேண்டுமென்பதே அனைவரின் ஆசையாக இருக்க முடியும்.

குறிப்பு: இந்த பதிவில் தனி மனித தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சிலர் கூறுவது வருத்தம் அளிக்கின்றது. குடி குறித்த பதிவுலகின் எதார்த்தமான நிலையை எடுத்துரைக்கவும், பதிவின் மையத்தை ஒட்டியும் இருந்ததால் ஒரு உதாரணம் பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றப்படி எந்த ஒரு தனி மனிதரையும் சாடுவது பதிவின் நோக்கமல்ல. தனிமனித தாக்குதல் என்று பதிவு நினைக்க வைத்திருந்தால் உளப்பூர்வமான மன்னிப்பை கேட்டுக்கொள்கின்றேன். 

சகோதரர்கள் மதுமதி மற்றும் பட்டிக்காட்டான் ஜெய் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்த சர்ச்சைக்குரிய பகுதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

நன்றி: ஆஷிக் அஹமத் மற்றும் பதிவுலக சகோதர சகோதரிகள் 

Wednesday, 16 May 2012

Wi-fi போகின்றது...Li-fi வருகின்றது...


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு (உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக).

இன்டர்நெட் தொழிநுட்பத்தில் மறக்க முடியா பெயர் Wi-fi. வயர் இல்லாமல் இன்டர்நெட் உபயோகிக்க பயன்படுத்தும் இந்த தொழில்நுட்பத்திற்கு விடை கொடுக்கும் நேரம் நெருங்கிக்கொண்டிருக்கின்றது.

டாக்டர்கள் முஸ்தபா அப்கனி, கார்டன் போவே மற்றும் பேராசிரியர் ஹெரால்ட் ஹாஸ் ஆகியோரின் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புரட்சிகர Li-fi தொழில்நுட்பம் எதிர்க்கால இன்டர்நெட் உலகை மாற்றியமைக்க போவதாக அறிவியல் உலகம் கருதுகின்றது.

wifi தொழில்நுட்பத்தில் உள்ள மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் அது ரேடியோ அலைவரிசை சிக்னல்களை உபயோகிப்பது தான். இந்த சிக்னல்கள் மற்ற அலைவரிசையுடன் குறுக்கிட்டு குழப்பம் ஏற்படுத்த கூடாது என்பதற்காக தான் விமானம், மருத்துவமனை போன்றவற்றில் wifi-யை தடை செய்கின்றனர்.

Visible light communication (VLC) என்று அழைக்கப்படும் Lifi தொழில்நுட்பத்தில், ஒளியை கொண்டு தகவல்கள் அனுப்படுவதால் மேலே கூறிய பிரச்சனைகள் வர வாய்ப்பில்லை. மேலும் தண்ணீருக்கு அடியிலும் இன்டர்நெட் பயன்படுத்தலாம்.இன்னும் ஆச்சர்யம் என்னவென்றால், இந்த தொழில்நுட்பம் wifi-யை விட ரொம்ப விலை மலிவானது. மேலும் மிக வேகமானதும் கூட. 10 Gbps வரை இதன் வேகம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது 1.5 hrs ஓடக்கூடிய ஒரு High Definition வீடியோவை 30 நொடிகளில் டவுன்லோட் செய்திடலாம்.

இன்னும் ஐந்து வருடங்களில் இந்த தொழில்நுட்பம் நம் கணிப்பொறிகள் மற்றும் மொபைல் போன்களை ஆட்கொள்ள ஆரம்பித்துவிடும் என்று சமீபத்திய EFY (Electronics for You) இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு தொழில்நுட்பத்திலும் இருப்பது போல இதிலும் குறைகள் உண்டு. இருப்பினும் பாதுகாப்பு மற்றும் வேகத்தில் தலைச்சிறந்து இருப்பதால் அந்த குறைகளை நிவர்த்தி செய்யும் முயற்சியில் ஆய்வாளர்கள் இறங்கியிருக்கின்றனர்.

Wednesday, 9 May 2012

தமிழ்மணம், பதிவர்கள், வாசகர்கள் கவனத்திற்கு


பதிவிற்குள் போகும் முன்பாக, இராமம்பாளையம் அரசு பள்ளி மேம்பாட்டுக்கு உதவ முன்வந்த/வரவிருக்கும், தகவலை கொண்டு சேர்த்த/சேர்த்துக்கொண்டிருக்கின்ற அனைவருக்கும் முதற்கண் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம். பள்ளி சார்பாக ஆசிரியர் பிராங்க்ளின் அவர்களும் தன் நன்றியை தெரிவித்துள்ளார்.

பதிவிற்குள் செல்வோம். சமீப காலமாக தமிழ்மணத்தில் உலாவி வரும் சைக்கோ கள்ள வோட் ஆள்மாறாட்ட ஆள்/ஆட்கள் இன்று ஒரு கீழ்த்தரமான செய்கையை நிகழ்த்தி காட்டியிருகின்றனர். இன்று மகுடத்தில் இருந்த கழுகு தளத்தின் விழிப்புணர்வு பதிவை மைனஸ் வோட் போட்டு கீழிறக்கி இருக்கின்றனர்.

முஸ்லிம் பதிவர்கள் பெயரில் (சிறு) மாற்றம் செய்து போடப்படுள்ள அந்த கள்ள மைனஸ் வோட்கள் பின்வருகின்றன.

  
கள்ள வோட்கள்: hussainaamma, suvanapppiriyan, abdulhakkimm, peermohamed.mm@gmail.com, mohaaashik, hajamydheeen, AMINAA29 (முஸ்லிம் பதிவர்களின் தமிழ்மண முகவரியில் ஒரு எழுத்தை சேர்த்து கள்ள வோட் போட்டிருப்பதை கவனிக்கவும்)

இந்த ஆள்/கும்பல் இத்தோடு நிற்கவில்லை. கையோடு கையாக சுவனப்பிரியனின் இன்றைய பதிவிற்கு இதே பாணியில் பிளஸ் வோட் போட்டிருக்கின்றது. தற்போது வரை சுவனப்பிரியன் பதிவிற்கு விழுந்துள்ள 24 பிளஸ் வோட்களில் சுமார் 14 இந்த கள்ள வோட் கும்பல் போட்டதே.

அந்த கள்ள வோட் விபரங்கள் பின்வருகின்றன.


கள்ள வோட்கள்: rabbanii carbonffriend mustaquee1515@gmail.com suvanapppiriyan PeerMhdd AMINAA29 askabt.islamm@gmail.com hajamydheeen gulaam nayagan_12 peermohamed.mm@gmail.com mohaaashik hussainaamma abdulhakkimm

ஆக, பதிவர்களிடையே குழப்பத்தை உண்டாக்குவதே இந்த ஆள்/கும்பலின் நோக்கம்.

குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக காழ்ப்புணர்வு வரவைப்பதற்காக, கழுகு தளத்தின் மிக சிறப்பான விழிப்புணர்வு பதிவை மைனஸ் குத்தி கீழிரக்குவது எல்லாம் மனிதத்தன்மையற்ற செயல். இம்மாதிரியான தீய எண்ணங்களை கொண்டவர்கள் தங்கள் எண்ணத்தில் நிச்சயம் வெற்றி பெறவும் முடியாது.

இதுக்குறித்து தன் பதிவில் முக்கிய அறிவிப்பு என்று குறிப்பிட்டு சுவனப்பிரியன் கூறியுள்ளதாவது:

"இன்று கழுகு தளத்தில் சென்று இஸ்லாமியர்கள் பெயரில் மைனஸ் கள்ள ஓட்டுக்களைப் போட்டு அந்த பதிவை தமிழ்மண மகுடத்திலிருந்து இறக்கி எனது பதிவில் வந்து அதே போல் கள்ள பிளஸ் ஓட்டுக்களைப் போட்டு மகுடத்தில் ஏற்றியிருக்கிறார்கள். இதன் மூலம் மற்ற பதிவர்களும் வாசகர்களும் இஸ்லாமிய பதிவுகளின் மீது காழ்ப்புணர்வு கொள்ள வேண்டும் என்ற நோக்கில் செய்யப்பட்டுள்ளது. இது பற்றி விளக்கி தமிழ் மணத்துக்கும் கடிதம் எழுதியுள்ளேன். ஒரு பதிவு வாசகர்களை அதிகம் சென்றடைவது அந்த பதிவின் நம்பகத் தன்மையினாலும் எழுதுபவரின் எழுத்து திறமையினாலுமே ஆகும். இது போன்ற குறுக்கு வழிகளை நானோ மற்ற எந்த இஸ்லாமிய பதிவர்களோ இதுவரை செய்ததில்லை: இனியும் செய்யப்போவதில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்"

இன்று இப்படியான ஒரு கேடுகெட்ட செயலை பார்த்த உடனேயே மேலும் ஒரு குழப்பம் வரவழைக்க முயல்கின்றார்கள் என்று புரிந்துவிட்டது. மேலும், உடனடியாக இது குறித்து சுவனப்பிரியன், கழுகு, தமிழ்மணம் போன்றவர்களுக்கு தெரிவித்தாகிவிட்டது. 

இந்த கள்ள வோட் குறித்து ஏற்கனவே தமிழ்மணத்திடம் தெரிவித்து அவற்றை நீக்க சொல்லி கேட்டிருக்கின்றோம். என்னென்ன பெயரில் கள்ள முகவரிகள் உருவாக்கப்படுகின்றன என்பதை இந்த இடத்தில் அப்டேட் செய்தும் கொண்டிருக்கின்றோம்.

மத துவேஷ பதிவுகள் விசயத்தில் சிறப்பான முடிவை எடுத்து அனைவரது பாராட்டுகளையும் பெற்ற தமிழ்மணம் இந்த கள்ள ஆள்மாறாட்ட ஆள்/கும்பல் குறித்தும் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம்.

Friday, 4 May 2012

முன்னுதாரண அரசு பள்ளி - தோள் கொடுக்க தயாரா?


தான் சார்ந்த அரசு பள்ளியை மிகச்சிறந்த முன்னுதாரண பள்ளியாக மாற்றியவர் சகோதரர் ப்ராங்க்ளின் அவர்கள். காரமடை அருகே இராமம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆசிரியரான இவரை சென்ற ஆண்டு பதிவுலகத்திற்கு சக பதிவர்கள் அறிமுகப்பத்திய போது, இவரது கல்வி பணிகளை பார்த்து மிகவும் வியப்படைந்தோம். வியப்படைந்தோம் என்பது கூட சாதாரண வார்த்தையாகவே இருக்க முடியும். (இந்த பள்ளி மற்றும் சகோதரர் ப்ராங்க்ளின் குறித்த ஈரோடு கதிர் அவர்களது பதிவை இங்கே காணலாம்).

(நம்புங்க..இது அரசு பள்ளி தான்)

தற்போது, தொடக்கப்பள்ளியின் மேலும் சில ஆக்கப்பூர்வமான பணிகளுக்காக உதவி தேவைப்படுகின்றது. சுமார் 14 லட்சம் வரை செலவாகும் இந்த பணிக்கு, எட்டு லட்ச ரூபாயை அரசு வழங்குகின்றது. மீதம் உள்ள ஆறு லட்ச ரூபாய்க்கு பொது மக்களின் உதவியை கோருகின்றார் ப்ராங்க்ளின். இதுக்குறித்த அனைத்து தகவல்களும் பின்வருகின்றன (வெளிநாட்டில் வசிப்பவர்கள் நன்கொடை அளிக்க ஏதுவாக அது குறித்த தகவல்களும் பின்வருகின்றன).

ஏழை மாணவர்கள் சிறப்பான கல்வி பெரும் இந்த பள்ளிக்கு உங்களால் இயன்ற தொகையை வழங்குங்கள். உதவி மிகச் சிறியதாக இருந்தாலும் அது இறைவனிடத்தில் மிகப்பெரிய நற்கூலியை பெற்றுத்தரும் என்பதை மனதில் கொள்ளுங்கள். நம்மால் ஆன உதவியை செய்து மாணவர்கள் சிறப்பான எதிர்காலம் அமைய பிரார்த்திப்போம்.

பின்வரும் ப்ராங்க்ளின் அவர்களின் கோரிக்கையை பாருங்கள். மேலதிக விளக்கங்களுக்கு அவரை தொடர்புகொள்ளுங்கள். முடிந்தவரை இந்த செய்தியை அடுத்தவருக்கு கூறி எதிர்க்கால சமுதாயம் சிறப்பாக உருவெடுக்க உதவுங்கள்.

சகோதரர் ப்ராங்க்ளின் இன்று அனுப்பிய மெயிலில் இருந்து,

===================

இராமம்பாளையம் பள்ளியின் வளர்ச்சி குறித்து அறிந்த பலரும் பள்ளிக்கு வருகை தந்து பாராட்டியும், பல்வேறு கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.

குறிப்பாக 2011-12 ஆம் கல்வியாண்டில் கோயம்புத்துார் மாவட்ட ஆட்சியர் திரு.எம்.கருணாகரன் அவர்கள், கோவை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அறிவர்.கருணாகரன் அவர்கள், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அறிவர்.கலாநிதி அவர்கள், கனடா நாட்டு வாட்டர்லுா பல்கலைக்கழகத்தின் இயக்குநர் அறிவர். செல்வக்குமார் அவர்கள், கல்வித்துறையின் உயர் அதிகாரிகள், எங்கள் பள்ளியின் செயல்பாடுகளை உலக நாடுகளில் வாழும் பல தமிழர்களுக்கு எடுத்துச்செல்ல காரணமாக இருந்தவர்களான புகழ்பெற்ற எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள், இனைய எழுத்தாளரும் நல்லாலோசகருமான ஈரோடு கதிர் அவர்கள், எழுத்தாளர் யுவகிருஷ்ணா அவர்கள், பல்வேறு இனைய, பத்திரிகை எழுத்தாளர்கள், கர்நாடக மாநிலத்தின் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் (சுமார் 90 பேர்), தமிழக்தின் பல பகுதிகளில் பணியாற்றிவரும் ஆசிரியர்கள் என பலரும் வருகை தந்த நிலையில், தமிழகம் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் பணியாற்றும் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள், பொதுமக்கள், இனையதள நண்பர்கள் என பலரும் தொடர்ந்து தொடர்பு கொண்டு பாராட்டி வருவது இராமம்பாளையம் பகுதி கிராம மக்களை மேலும் ஊக்கப்படுத்தி வருகிறது.

அடுத்த கட்டமாக, எதிர்வரும் 2012-13 கல்வியாண்டில் மாணாக்கரின் நலனைக் கருத்தில் கொண்டு மேலும் சில பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம்.

இதன்படி,

1. நவீன கணினி வகுப்பறை ( Smart computer lab ) கட்டுதல்.
2. பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டுதல் (125 மீட்டர் ).
3. மாணவர்களுக்கு உணவுக் கூடம் அமைத்தல்.
4. சமையலறையைப் புதுப்பித்தல்.
5. புதிதாக 11 கணிப்பொறிகள் மற்றும் LCD Projector வாங்குதல்.
6. விளையாட்டு மைதானம் அமைத்தல்.
7. விளையாட்டு தளவாடப்பொருள்கள் வாங்குதல்.
8. பொருள்கள் அறை (Store room) அமைத்தல்.
9. பள்ளி வளாகத்தில் அழகிய தோட்டம் மற்றும் கருத்துப்படங்களைச் சுற்றுச் சுவர்களில் வரைதல்.
10. புதிய தளவாடப் பொருட்கள் வாங்குதல்.

இப்பணிகளை வரும் கல்வியாண்டின் துவக்கத்திற்குள் விரைந்து முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். இப்பணிகளுக்கானத் திட்டத் தொகை ரூபாய் 14 இலட்சம் ஆகும். இதில் தமிழக அரசின் மூலம் 8.08 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. திட்டமிட்ட பணிகளை நிறைவு செய்ய இன்னும் சுமார் 6 இலட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.

(புதிய கணினி வகுப்பறை கட்டடப் பணி)


(சுற்றுச்சுவர்- வடக்குப்பகுதி)


(சுற்றுச்சுவர்- மேற்கு பகுதி)


(சுற்றுச்சுவர்- தெற்கு பகுதி)

இந்நிலையில் தங்களிடம் ஆலோசனைகளையும், உதவிகளையும் கோர விரும்புகின்றோம். எங்களின் ஆக்கப்பூர்வமான பணிக்குத் தாங்கள் தோள் கொடுத்து உதவினால் பேருதவியாக அமையும்.

தாங்கள் வழங்கும் ஒவ்வொரு ரூபாயையும் மகிழ்வோடு ஏற்றுக் கொள்வதோடு மிக நேர்த்தியாக, தொலைநோக்குப் பார்வையுடன் பயன்படுத்தப்படும்.

"தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்"

Canara Bank Swift code : CNRBINBBOXC ( வெளிநாடுகளில் வாழ்பவர்கள் )
Canara Bank IFSC Code  : CNRB0001031 ( இந்தியாவில் வாழ்பவர்கள் )
வங்கிக் கணக்கு எண்: 1031101123120 
கணக்கு பெயர் : PTA, PANCHAYAT UNION PRIMARY SCHOOL, RAMAMPALAYAM. 
வங்கி / கிளை :  CANARA BANK / SIRUMUGAI Branch
பள்ளி முகவரி : THE HEADMISTRESS, 
PANCHAYAT UNION PRIMARY SCHOOL, 
RAMAMPALAYAM, JADAYAMPALAYAM-POST,
SIRUMUGAI- 641302. METTUPALAYAM.

தொடர்பு எண்கள் :
ந.சரஸ்வதி : 99521 64582
து.பிராங்கிளின் : 99424 72672

" காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது"

- நன்றியுடன்,
பிராங்கிளின்.

எங்கள் பள்ளியின் இனையதளம் : www.rmpschool.blogspot.com
======================

தகவல்கள் உதவி: ஆஷிக் அஹமத் அ
  

Wednesday, 2 May 2012

கள்ள வோட் பின்னணியில் ஈழ பதிவர்கள்?


**************************
முக்கிய செய்தி:

எதிர்தரப்பு தற்போது போட்டுள்ள பதிவில் இங்கே கேட்கப்பட்டிருக்கும் எந்த கேள்விக்கும் பதில் இல்லை. ஏமாற்றுகாரர்களை மறுபடியும் தோலுரித்து வெற்றியை அளித்த இறைவனுக்கே புகழ் அனைத்தும் உரித்தாவதாக்.
**************************

மேற்கொண்டு தொடர்வதற்கு முன் இந்த பதிவையும், இதனையும் பார்த்துவிடுங்கள்.

முஸ்லிம் பதிவர்களின் பெயரில் மாற்றம் செய்து முகவரி உருவாக்கியும், மேலும் பல முகவரிகளை உருவாக்கியும் முஸ்லிம்களின் பதிவுகளுக்கு தாறுமாறாக மைனஸ் குத்தப்பட்டது பதிவுலகை கவனித்தவர்களுக்கு தெரிந்திருக்கும். அதுபோலவே, முஸ்லிம்கள் மீது தவறான எண்ணம் ஏற்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக முஸ்லிமல்லாதவர்கள் பதிவுகளுக்கும் இந்த கள்ள வோட் ஆட்கள் மைனஸ் குத்தினார்கள். இதனையெல்லாம் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி மேலே உள்ள பதிவுகள் மூலமாக தெரிவித்தோம்.

அப்படி மைனஸ் வோட் குத்தப்பட்ட முஸ்லிமல்லாத பதிவர்களை தொடர்புக்கொண்டு எங்கள் நிலைகளை விளக்கினோம் என்பதையும் கூறியிருந்தோம். மேலும் கள்ள முகவரிகளை லிஸ்ட் போட்டு (அப்போதைய நிலைமைக்கு) தமிழ்மணத்திற்கு அனுப்பி அவற்றை நீக்க சொல்லியும் கேட்டிருந்தோம்.

இதெல்லாம் உங்களில் பலருக்கும் தெரிந்த கடந்த கால சம்பவங்கள். முஸ்லிம்களுக்கும் மற்ற பதிவர்களுக்குமிடையே குழப்பம் ஏற்படுத்த எடுக்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் பலனளிக்கவில்லை. மேலும் இந்த சூதுகளை முஸ்லிம் பதிவர்கள் சிறந்த முறையில் கையாண்டும் வந்தனர். புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக.

மைனஸ் போட்டு போட்டு ஓய்ந்து போய்விட்டார்களோ என்னவோ, கடந்த சில நாட்களாக சில வினோதமான காட்சிகளை நடத்தி காட்டினார்கள். அதாவது, இதுநாள் வரை முஸ்லிம்களின் பதிவுக்கு மைனஸ் வோட் போட்டுக்கொண்டிருந்த ஆள்(ஆட்கள்), முஸ்லிம்களின் சில பதிவுகளுக்கு பிளஸ் வோட் போட்டார்கள். அவை மகுடதிற்கும் வந்தன.

ஏதோ பிளான் செய்வதாக நினைத்துகொண்டு மறுபடியும் சறுக்கத்தான் போகின்றார்கள், பொறுத்திருந்து பார்ப்போம் என்று எண்ணினோம். இது முஸ்லிம் பதிவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. உதாரணமாக ரஜின் அவர்களின் இந்த பதிவை பாருங்கள். இதில் விழுந்த பல பிளஸ் வோட்கள் கள்ள முகவரியில் இருந்து குத்தப்பட்டவையே. இது குறித்த முஸ்லிம் பதிவர்களின் கருத்து பரிமாற்றத்தையும் அதில் கவனியுங்கள். ஆக, இதுகுறித்து முஸ்லிம் பதிவர்கள் பொதுவில் தங்கள் கருத்துக்களை முன்னமே வைத்துவிட்டார்கள்.

இதனை குழப்பம் விளைவிக்க முயற்சிக்கும் ஆள்/கும்பல் அறிந்ததாக தெரியவில்லை. அவர்களது கடந்த கால நடவடிக்கைகளை கவனிக்கையில் அவ்வளவு புத்திசாலித்தனம் அவர்களுக்கு இருப்பதாகவும் நாங்கள் கருதியதில்லை.

முன்பு, முஸ்லிமல்லாதவர்கள் பதிவுக்கு மைனஸ் வோட் விழுந்த போது, அதனை முஸ்லிம்கள் தான் செய்தனர் என்று திசை திருப்ப முயன்ற ஒரு தளத்தின் முயற்சிகள் இறைவனின் கிருபையால் தகர்த்தெறியப்பட்டு, புஸ்வாணமாகி பதிவுலகில் பலரும் உண்மை நிலையை அறிந்துக்கொண்டனர். அவர்களுடன் அழகான நட்பும் உருவானது.

அதே போன்ற ஒரு யுக்தியை தற்போது கையில் எடுத்திருக்கின்றது மதுரன் என்பவரது சிறகுகள் என்ற தளம். அவர் சொல்ல வருவது இதுதான். இத்தனை காலமும் இந்த செயலை செய்தது முஸ்லிம்கள் தான் என்று நிறுவ முயற்சிக்கின்றார். அதாவது, முன்பு முஸ்லிம்கள் பதிவுகளுக்கு மைனஸ் போட்டுக்கொண்டதும் முஸ்லிம்கள் தானாம். இப்போது பிளஸ் போட்டு கொள்வதும் முஸ்லிம்கள் தானாம். :)

அதற்கு அவர் கூறும் காரணங்களை கீழே விமர்சித்துள்ளேன். அதில் ஒன்றை இப்போது பார்ப்போம். அவருடைய சென்ற இஸ்லாமிய விரோத பதிவுக்கு வெகு விரைவாக மைனஸ் வோட் குத்தப்பட்டதாம். முஸ்லிம் பதிவர்களை பொருத்தவரை இஸ்லாமை கீழ்த்தரமாக விமர்சிக்கும் பதிவுகளுக்கு தவிர வேறு எந்த பதிவிற்கும் ஒருங்கிணைந்து மைனஸ் வோட் குத்துவதில்லை. இதனை முன்னமே தெரிவித்தும் இருக்கின்றோம். பதிவுலகை கவனிப்பவர்களுக்கு எளிதாக புரியும் உண்மை இது. அப்படியாக ஒரு பதிவு வந்தால் உடனடியாக பலருக்கும் தெரிவிக்கப்பட்டு விரைவாக மைனஸ் வோட் குத்தப்பட்டு எதிர்ப்பு காட்டப்படுவது இயல்பான ஒன்றே.

தன்னை தானே தொழிநுட்பம் தெரிந்தவர் என்று குறிப்பிடும் மதுரன், வெகு விரைவாக போடப்பட்ட இந்த மைனஸ் வோட்கள் யார் யார் என்ற விபரத்தை, கூடவே அதுகுறித்த தொழில்நுட்ப விபரத்தையும் வெளியிட்டால் பலரும் உண்மையை அறிந்துக்கொள்ள ஏதுவாய் இருக்கும். இதனை ஏன் சொல்லுகின்றேன் என்றால், குழப்பத்தை விளைவிக்க முயற்சி செய்யும் அந்த கள்ள வோட் ஆள்(ஆட்கள்), மதுரனின் அந்த பதிவிற்கு மைனஸ் வோட் குத்தி இருந்தனர். தொழில்நுட்பத்தில் சிறந்த(?) மதுரன், வோட் குத்திய அனைவரின் தொழிநுட்ப விபரங்களை வெளியிட்டால் இந்த குழப்பம் விளைவிக்க முயலும் ஆள் (ஆட்கள்) குறித்து நாம் அனைவரும் அறிந்துக்கொள்ளலாம். செய்வாரா மதுரன்? (அப்படி அவர் வெளியிட்டால் அடுத்து இருக்கின்றது பெரிய கச்சேரி)

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த நகைச்சுவையாளர்கள் ஒரு விசயத்தை புரிந்துக்கொள்ளவில்லை. இந்த கள்ள வோட்களை லிஸ்ட் போட்டு தமிழ்மணத்திற்கு அனுப்பி அவற்றை நீக்க சொன்னவர்கள் நாங்கள். முஸ்லிம்கள் இந்த பிரச்னைக்கு காரணம் என்றால் ஏன் தமிழ்மணத்திடம் போலிக்களை ஒழிக்க சொல்லி கோர வேண்டும்? இன்றளவும் கூட என்ன என்ன பெயரில் கள்ள வோட்கள் உருவாகிக்கொண்டு இருக்கின்றன என்பதை இந்த பதிவில் அப்டேட் செய்துக்கொண்டிருக்கின்றோம். தமிழ்மணம் இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள கள்ள முகவரிகளை நீக்குமானால் மிக்க மகிழ்ச்சியே. அனைத்து பதிவர்களும் இதற்கு குரல் கொடுக்க தயாரா?

இந்த கள்ள வோட் பிரச்சனை ஆரம்பித்ததே இந்த தளத்தில் வந்த இலங்கை தீர்மானம் குறித்த ஒரு பதிவில் இருந்து தான். அந்த பதிவிற்கு முதன் முதலாக மைனஸ் குத்திய நான்கு பேரில் ஒருவர் இதே மதுரன், மற்றொருவர் இன்னொரு ஈழ பதிவரான காட்டான். மற்ற இரு முகவரிகளும் கள்ள முகவரிகள். இதனை தொடர்ந்து தான் அதே பதிவில் முஸ்லிம்கள் பெயரில் மாற்றம் செய்து வெகு விரைவாக கள்ள வோட்கள் குத்தப்பட்டது. அப்படியென்றால் இதற்கு பின்னணியில் மதுரனின் அனுமானம் படி ஈழ பதிவர்கள் தானே இருக்கின்றனர்?????

(மேலே உள்ள படத்தில் முஸ்லிம் பதிவர்கள் பெயரில் மாற்றம் செய்து வோட்கள் போடப்பட்டுள்ளதை கவனியுங்கள். அப்படியே மதுரன் மற்றும் காட்டான் இருவரது வோட்டையும் கவனியுங்கள். ஈழ பதிவர்கள் மற்றும் போலிகளை தவிர வேறு யாரும் மைனஸ் குத்தவில்லை என்பதையும் கவனியுங்கள். இது தான் போலி பிரச்சனை ஆரம்பித்த முதல் பதிவு)

அதுபோல, புலிகளின் தலைவர் பிரபாகரனை சிலாகித்து வந்த ஒரு பதிவிற்கு இந்த மைனஸ் வோட் கள்ள கும்பல் தாறுமாறாக பிளஸ் வோட் குத்தி மகுடத்திற்கு கொண்டுவந்தது. அப்படியென்றால் இதற்கு பின்னணியில் மதுரன் லாஜிக் படி யாரென்று புரிகின்றதா?????

(மேலே உள்ள படத்தில் முஸ்லிம்கள் பெயரை பயன்படுத்தி முஸ்லிம்கள் கடுமையாக வெறுக்கும் ஒரு நபரை பற்றிய பதிவிற்கு வோட்கள் போடப்பட்டிருப்பதை கவனியுங்கள். இந்த பதிவிற்கு விழுந்த அனைத்துமே பிளஸ் வோட்கள். இதில் சுமார் ஐந்து மட்டுமே பதிவர்களின் வோட்கள். மற்ற அனைத்தும் போலி வோட்கள்)

ஆக, மதுரனின் லாஜிக் படி இந்த கள்ள வோட் பிரச்சனைக்கு பின்னணியில் யார் இருப்பார்கள் என்பது புரிகின்றதா? படிப்பவர்கள் முடிவுக்கே விட்டு விடுகின்றோம். 

மதுரன் அவர்களின் கருத்துக்களுக்கு எம் பதில்கள்:

<<இதனால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தவர்கள் பதிவுலகில் மதவாதம் பேசிவந்த இஸ்லாமிய மதவாத கும்பலே>> - பாதிப்பு என்பதை எந்த அர்த்தத்தில் பயன்படுத்துகின்றீர்கள் என்று புரியவில்லை. முன்பை காட்டிலும் இன்னும் வீரியமாகவே எழுதுகின்றார்கள்.

<<பல இஸ்லாமிய பதிவர்கள் இந்த கள்ள/ போலி ஓட்டு தொடர்பாக பதிவுகளை எழுதியதோடு அந்த போலி ஐடிக்களையும் வெளிப்படுத்தினார்கள்>> - தவறு. இருவர் மட்டுமே எழுதினார்கள்.

<<எம்மை தொடர்பு கொண்ட அந்த பதிவர் கூறினார் "நாற்று குழுமம் தான் தொழில்நுட்பம் தெரிந்த குழுமம்>> - இதை யார் சொன்னார் என்று தெரியவில்லை. ஆனால் அவருடைய judgement ரொம்ம்ப தவறு. 

<<விரைவில் இந்த போலி ஓட்டு போடுபவர்களை கண்டுபிடித்து தாருங்கள் என்றும் கூறினார்>> - தவறு தான். தனிமையில் சொன்ன விசயத்தை இப்படி பொதுவில் வந்து சொல்லுகின்ற அற்புத பண்பு கொண்ட உங்ங்ங்க கிட்ட வந்து கண்டுபிடித்து தாருங்கள் என்று கூறினார் பாருங்கள், அது தவறு தான். வருத்தம் தெரிவித்து கொள்கின்றோம்.

<<தொழில்நுட்பம் தெரிஞ்சது ஒரு குத்தமாய்யா?????????>> - இதற்கு ஒரு ஸ்மைலி மட்டுமே :)

<<போலி ஐடிகளில் மைனஸ் ஓட்டு போட ஆரம்பித்தபோது இஸ்லாமிய பதிவர்களுக்கு மட்டும் கண்டபாட்டுக்கு மைனஸ் ஓட்டு விழுந்துள்ளது>> - தவறு. முஸ்லிம்கள் மீது பழி போட வேண்டும் என்பதற்காக முஸ்லிமல்லாத பதிவர்களுக்கும் விழுந்துள்ளது. மேலே முதல் வரியில் கொடுக்கப்பட்டுள்ள சுட்டிகளை பாருங்கள்.

<<அதன் இன்னொரு முயற்சிதான் போலிகளை வெளிப்படுத்தி போட்ட பதிவுகள். இந்த முயற்சியில் அவர்கள் வெற்றியும் பெற்றார்கள்>> - அப்படியா. புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக. நன்றி.

<<முதலாவது விடயத்தில் சரியாக அடித்தாடியவர்கள் அடுத்தடுத்து கோட்டை விட ஆரம்பித்தார்கள்>> - அப்படியா. இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் இதிலும் அடித்தாடினார்கள் என்று சொல்லும் நிலை வரும்.

<<இங்கே நடந்துகொண்டிருப்பது என்னவென்றால் இந்த மதவாதிகளின் பதிவுகள் 7 வாக்கு பெறும்வரை எந்த போலி ஐடியும் மைனஸ் வாக்கு அளிப்பதில்லை>> - அறிவுக்கு ஒத்துவராத அவசரபுத்தி கருத்து. இந்த போலிகள் மைனஸ் போட ஆரம்பித்த காலத்திலிருந்து எங்களுடைய பதிவுகள் பல ஏழு வோட் வாங்குவதற்கு முன்னமே மைனஸ் வோட்களை இவர்களால் வாங்கியிருக்கின்ரன. இதற்கு சமீபத்திய சுவனப்பிரியன் பதிவு வரை உதாரணம் இருக்கின்றது. சாம்பிளுக்கு ஒன்று இங்கே. கடந்த இரண்டு மாதங்களில் எங்கள் பதிவுகளை கணக்கெடுத்து கொள்ளுங்கள். பின்னர் அதில் எத்தனை பதிவுகள் தமிழ்மண வாசகர் பரிந்துரையில் வந்திருக்கின்றன என்று பார்த்து சொல்லுங்கள். சும்மா வாய்க்கு வந்ததை பேசக்கூடாது. உங்கள் தலைவர் மீது நீங்கள் வைத்துள்ள மதிப்பு உண்மையென்றால் உங்கள் கருத்தை நிருபியுங்கள்.

<<மகுடத்திற்கு கொண்டுவரப்படும் இந்த மதவாத பதிவுகள் ஆச்சரியப்படும்விதமாக முதல் நாள் ஒரு மைனஸ் கூட இல்லாமல் இருக்கின்றன. ஆனால் இரண்டாம் நாள் மாத்திரம் குறிப்பிட்ட சில நேரத்திற்குள் மைனஸ் வாக்குகள் அளிக்கப்படுகின்றன.மைனஸ் வாக்குகளை அளித்தவர்களின் நோக்கம் இஸ்லாமிய பதிவுகளை ஓரம்கட்டுவதாக இருந்தால் மைனஸ் வாக்குகளை முதல் நாளே அல்லவா போட்டிருக்கவேண்டும்>> - நான் மேலே சொன்னது போன்று சமீப காலங்களாக தான் இம்மாதிரி நடக்கின்றது. முஸ்லிம்களின் அதிக வாக்குகள் பெற்ற முந்திய பதிவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். அவை மகுடத்தில் ஏறி இருக்கின்றவா என்று சொல்லுங்கள். சாம்பிளுக்கு ஒன்று இங்கே. ஒன்று மகுடத்தில் ஏறும் முன் மைனஸ் குத்தி ஏற விடாமல் தடுக்கப்படும். அல்லது வந்த சில நிமிடங்களில் மைனஸ் குத்தப்பட்டு இறக்கப்படும்.

<<இஸ்லாத்துக்கு எதிராக எழுதப்படும் பதிவுகள் அனைத்துக்கும் சரமாரியாக மைனஸ் வாக்கு அளிக்கப்படும்>> - தவறு. இஸ்லாமை கீழ்த்தரமாக விமர்சிக்கும் பதிவுகளுக்கு மட்டுமே இதுவரை ஒருங்கிணைத்து மைனஸ் குத்தப்பட்டிருக்கின்றது. ஆரோக்கியமான விமர்சனங்களை என்றுமே வரவேற்கின்றோம்.

<<குறிப்பிட்ட சிலரே பல ஐடிக்களில் இட்டிருக்கிறார்கள்>> - தவறு. உங்கள் மண்ணை உண்மையிலேயே நேசிக்கும் ஆளாக இருந்தால் இதனை நிரூபியுங்கள்.

<<அடுத்த விடயம் இவர்களை சார்ந்தவர்களால் தங்கள் மதம் சம்மந்தமாக விளக்கம் கொடுப்பதற்கென ஆரம்பிக்கப்பட்ட புது ப்ளாக். இந்த ப்ளாக் ஆரம்பித்ததும் அதை அறிமுகப்படுத்தவேண்டிய தேவை இருக்கிறது அல்லவா. அதற்கு தமிழ்மணம் மகுடம் சிறப்பான வழி. வாக்குகள் அனைத்தும் ப்ளஸ் ஆக அளிக்கப்பட்டன. பதிவும் மகுடத்துக்கு வந்தது. வாக்களித்தவர்களின் லிஸ்டை பார்த்ததும் ஆச்சரியம். காரணம் ஒரு மைனஸ் வாக்கு கூட இல்லாதிருந்த நிலையில் போலி ஐடிகள் முழுக்க அந்த லிஸ்டில் இருந்தன>> - அறிவுக்கு கொஞ்சமும் ஒத்துவராத கருத்து. மேலே இதற்கான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் புது ப்ளாக்கிற்கு மட்டுமல்ல, பதிவர் ரஜின் பதிவிற்கும் இந்த போலி ஆள் (ஆட்கள்) பிளஸ் போட்டிருக்கின்றார்/கள். மேலே பார்க்கவும்.

உங்கள் லாஜிக் படி, முஸ்லிம்களின் பதிவுக்கு இந்த கள்ள வோட் ஆள் (ஆட்கள்) பிளஸ் வோட் குத்தியிருப்பதால் இந்த போலிகளுக்கு பின்னணியில் முஸ்லிம்கள் இருக்கின்றனர் என்றால், அதே போல பிரபாகரனை போற்றி போட்ட பதிவு மகுடத்திற்கு வருவதற்கும் இந்த போலிகளே காரணம். ஆக, இந்த போலிகளுக்கு பின்னணியில் ஈழ பதிவர்கள் இருக்கின்றனர். சரிதானே? என்னே ஒரு அற்புத லாஜிக்?

<<எதையுமே ப்ளான் பண்ணி செய்யனும் என்கிறது முக்கியமில்ல.. போடுற ப்ளான பக்காவா போடனும்.. இல்லாட்டி இப்பிடித்தான்...>> - ஆம். வோட் போடும் போலிகள் இப்படிதான் எதையாவது சொதப்பிவிட்டு விடுகின்றனர். எங்கள் மத்தியில் இவர்களுக்கு காமெடி பீஸ்கள் மற்றும் எதையும் உருப்படியாக செய்யாதவர்கள் என்ற செல்லப்பெயர்(?) உண்டு.

மொத்தத்தில் எதையோ பிளான் பண்ணி செய்வதாக நினைத்துக்கொண்டு சொதப்ப போகின்றார்கள் என்று பேசிக்கொண்டோம். அது தான் நடந்திருக்கின்றது. இந்த முறையும் முயற்சி படுத்துக்கொண்டு விட்டது. புகழ் அனைத்தும் இறைவனுக்கே.

மைனஸ் வோட் குத்தினார்கள், அது பலனளிக்கவில்லை. முஸ்லிம்கள் மீது பழி போட வேண்டுமென்பதற்காக முஸ்லிமல்லாதவர்கள் பதிவுக்கு மைனஸ் போட்டு ஒரு தளம் மூலமாக குழப்பம் ஏற்படுத்த முயற்சித்தார்கள். அது முறியடிக்கப்பட்டது. அடுத்து, சமீப காலமாக எங்களுக்கு பிளஸ் குத்தி எதோ புத்திசாலித்தனமாக பிளான் பண்ணுவதாக நினைத்துக்கொண்டார்கள். நாங்கள் எண்ணியது போலவே இதனை வைத்து தற்போது சிறகுகள் தளம் குழப்பம் ஏற்படுத்த முயற்சித்தது. அதுவும் இப்போது இறைவனின் கிருபையால் பல்லிளித்து விட்டது. போய் மறுபடியும் எதையாவது முயற்சியுங்கள். ஆனால் தயவுக்கூர்ந்து சற்றே புத்திசாலித்தனத்துடன் முயற்சியுங்கள் :)

உங்களின் அசைவுகள் கண்காணிக்கப்படுகின்றன என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். இறைவனின் இந்த வசனம் உள்ளத்தில் இறங்கினால் எல்லாம் தெளிவாகும் 

அவர்களும் திட்டமிட்டார்கள். இறைவனும் திட்டமிட்டான். தவிரவும், திட்டமிடுதலில் இறைவனே சிறந்தவனாவான் - குர்ஆன் 3:54

Better luck next time.

கட்டுரை உதவி: ஆஷிக் அஹமத் அ 


Monday, 16 April 2012

முஸ்லிம் பெண் பதிவர்களின் அதிரடி நடவடிக்கை


பல்வேறு சவால்களையும் தாண்டி இஸ்லாம் தொடர்ந்து பலரையும் தன்பால் ஈர்த்து வருகின்றது. இஸ்லாமை ஏற்போரில் பெண்களே அதிகம் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இஸ்லாம் குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில் இதற்கான விரிவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது முஸ்லிம்களின் கடமையாகின்றது.

தற்போது இதில் ஒரு பகுதியாக, முஸ்லிமல்லாதவர்கள் பயன்பெறும் விதமாக (குறிப்பாக சகோதரிகள்) இஸ்லாமிய பெண்மணி என்ற தளம் (பார்க்க <<இங்கே>>) முஸ்லிம் சகோதரிகளால் தொடங்கப்பட்டுள்ளது. இந்த தளமானது முழுக்க முழுக்க பெண்களால் நிர்வகிக்கப்படும் தளம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பதிவுலக சகோதரிகள் மற்றும் முகப்பக்கத்தில் இஸ்லாம் குறித்து விளக்கம் அளிக்கும் சகோதரிகளால் ஒருங்கிணைத்த முயற்சியாக தொடக்கப்பட்டுள்ள இந்த தளம், இஸ்லாமில் பெண்களின் நிலை குறித்த விமர்சனங்களுக்கு பதில் அளிப்பதை முதன்மை நோக்கமாக கொண்டு செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இஸ்லாமிய அடிப்படையிலான சிந்தனைகள், விழிப்புணர்வு கட்டுரைகள், வரலாற்று பின்னணிகள் போன்றவையும் வெளிவரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இஸ்லாமில் பெண்களின் நிலை குறித்து அறிய விரும்பும் மாற்று கொள்கை சகோதர சகோதரிகளுக்கு இந்த தளம் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகின்றோம்.  முஸ்லிம்கள், இந்த தளம் பயனுள்ளதாக இருந்தால் நீங்கள் அறிந்தவர்களுக்கு கூறி இந்த முயற்சி வெற்றி பெற ஆதரவளியுங்கள் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த முயற்சியை பொருத்திக்கொண்டு, இந்த சகோதரிகள் தங்கள் பணியில் வெற்றிபெற இறைவன் உதவுவானாக...

<<இஸ்லாமிய பெண்மணி தளத்தின் அறிமுக பதிவை இங்கே காணலாம்>>

Wednesday, 4 April 2012

தமிழ்மணத்தில் உலாவும் சைக்கோ(க்கள்)


கடந்த சில நாட்களாக தமிழ்மணத்தில் பல்வேறு போலி முகவரிகளை உருவாக்கிக்கொண்டு கண்டப்படி பிளஸ் மைனஸ் என்று போட்டுக்கொண்டு உலாவும் சைக்கோ(க்கள்) குறித்து பெரியவர் வாஞ்சூர் அவர்களின் பதிவின் மூலம் அறிந்திருப்பீர்கள்.

இப்படியாக போலி முகவரிகளை கொண்டு முதன் முதலாக வோட் போட ஆரம்பிக்கப்பட்டது இத்தள பதிவில் இருந்து தான் என்பதால் இது குறித்த சில விசயங்களை கூற கடமைப்பட்டுள்ளோம்.

முஸ்லிம் பதிவர்களின் தமிழ்மண பெயர்களில் சிறு மாற்றம் செய்து முகவரிகள் உருவாக்கி பல்வேறு பதிவுகளுக்கு தாறுமாறாக வோட் போடப்பட்டது. இது படுகீழ்த்தரமான அணுகுமுறை என்பதை விட முட்டாள்தனமான அணுகுமுறை என்பதே சரியாக இருக்கும். காரணம், ஒரே ஆளே (அல்லது அவரை சார்ந்த சில ஆட்கள்) இப்படியாக செய்கின்றார் என்பது வெகு விரைவாக புரிந்துவிட்டது. பிற்பாடு வேறு பெயர்களில் முகவரிகள் உருவாக்கப்பட்ட போது அதற்கு காரணமும் இவர்களே என்பதும் எளிதாக புலப்பட்டுவிட்டது.

வோட் எப்படி உருவாக்கப்படுகின்றது என்பதற்கு ஒரு உதாரணமாக (இதுநாள் வரை உருவாக்கப்பட்டுள்ள போலி முகவரிகளின் முழு பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது),

mohaashik (original) - mohaaashik (போலி, ஒரு 'a' அதிகமாக இருப்பதை கவனியுங்கள்)
hyderali (original) - hyderalii (fake)

அதுபோல பொதுவான முஸ்லிம் பெயர்களிலும், அல்லாத பெயர்களிலும் பல முகவரிகள் உருவாக்கப்பட்டுள்ளது. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக இப்படியாக பல முகவரிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

சரி, சிலர் மீதுள்ள வெறுப்புணர்வால் இப்படி செயல்படுகின்றார்கள் என்று நினைத்தால், அங்கு தான் தங்களை சைக்கோ(க்கள்) என்று நிரூபித்தார்கள். ரைட்டர் விஜயகுமார் அவர்களின் பதிவில் முஸ்லிம்கள் பெயரில் மைனஸ் வோட் குத்தப்பட்டது. முஸ்லிம்கள் மீது தவறான அபிப்பிராயம் வர வேண்டுமென்பதற்கான சூழ்ச்சியாக இதனை காணாமல் வேறு எப்படியாக இதனை அணுகுவது?

இது சமீபத்திய C.P.செந்தில்குமார் பதிவு வரை தொடர்கின்றது (ஆதாரங்கள் வேண்டுவோர் பின்னூட்டத்தில் மெயில் முகவரி கொடுத்தால் அவை அனுப்பிவைக்கப்படும்)

பதிவர்கள் ரைட்டர் விஜயகுமார், முனைவர் குணா தமிழ் முதலான சகோதரர்களிடம் எங்கள் நிலையை எழுத்து மூலமாகவும், தொலைப்பேசி வாயிலாகவும் தெளிவாக விளக்கிவிட்டோம். தமிழ்மணத்திடமும் சென்ற வாரத்தில் இது குறித்து தெரியப்படுத்திவிட்டோம்.

கடந்த சில நாட்களாக மகுடத்தில் வரும் பதிவுகளில் பெரும்பாலானவை இப்படியாக ஒரே ஆளால் வோட் குத்தப்பட்டு வருபவையே. இதனால் என்ன அங்கீகாரம் பதிவர்களுக்கு கிடைத்து விட போகின்றது? (அல்லது குறைந்து விட போகின்றது) இந்த உண்மைகளை அறியும்போது மனதால் காயப்பட்டு போகமாட்டார்களா? 

பதிவுலகில் பலரும் இந்த வோட் etc குறித்தெல்லாம் கவனம் செலுத்துவதில்லை என்ற போதிலும் ஒரு விளக்கத்திற்காகவாவது சொல்லிவிடுவது நல்லது என்று நினைக்கின்றேன். முஸ்லிம்கள் பெயரில் உங்கள் பதிவிற்கு மைனஸ் குத்தப்பட்டால் அதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை இதன் மூலமாக தெரிவித்து கொள்கின்றோம்.

முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாம் மீது அநாகரிகமான முறையில் காழ்ப்புணர்வுடன் எழுதப்படும் பதிவுகளுக்கு மட்டும் தான் ஒருகிணைந்து எதிர்ப்பு காட்டி இருந்திருக்கின்றோம். இனியும் அது தொடரும். வேறு எதற்கும் அல்ல...

அந்த சைக்கோ(க்களுக்கு) எளிமையாக ஒரே வரியில் பதில் சொல்ல விரும்புகின்றேன். இஸ்லாம் இல்லையென்றால் எங்கள் வாழ்க்கை ஒன்றுமில்லை. இறைவனை திருப்திபடுத்துவது தான் எங்கள் வேலையே அன்றி, உங்களை திருப்திபடுத்துவது அல்ல. புரிந்துக்கொண்டால் நலம்.

இதுவரையிலான போலி முகவரிகள் (update செய்யப்படும்):
muftaa08, vaanjoorappa@gmail.com, aalimbaava, abdulkader111@gmail.com, bathusha, farooq11, mustaque1515@gmail.com, mustaquee1515@gmail.com, rahman100@gmail.com, kokkaamakkaa@gmail.com, muztafa, haitharjunus, PANNAGAM3@GMAIL.COM, fazul, mohemadrias, ibrahimriyas@gmail.com, kavippuyal007@yahoo.com, hareraama, gulamnabi000@gmail.com, fatimabebehh@gmail.com, NONJOOR, kpeterson, alexm, punter, blara, superman, kattathora, iniyaa, ABDULRASHID, anvarhussain, farooq11, periyarthaasan, purampookuampalathar, kaatharbaai, MUDAMOSIYAAR, sahedmiah, VIRUMANDII, krishram1234@gmail.com, allah, palthakarey, RSSGROUP, narendramodi, moheemadrias, kungoor, sivasena, nayagan_12 etccarbonffriend, aashiiq_14, AMINAA29, hussainaamma, hajamydheeen, peermohamed.mm@gmail.com, abdulhakkimm, suvanapppiriyan, rabbanii, hyderalii, mohaaashik, PeerMhdd, naasar, askabt.islamm@gmail.com etc
 
நன்றி: சகோதரர் ஆஷிக் அஹ்மத்.

Saturday, 24 March 2012

இலங்கைக்கு ஆதரவாக மதவாத நாடுகளாம் - உண்மை என்ன?


ஐ.நா மனித உரிமை கழக தளத்தில் வெளியாகியுள்ள அறிக்கையை அடிப்படையாக கொண்டு இந்த பதிவு எழுதப்படுகின்றது. அதனை முழுமையாக படிக்க இங்கே சுட்டவும். 

"இலங்கைக்கு ஆதரவாக மதவாத நாடுகள் - கிழித்துக் கொண்டுள்ள மனிதாபிமான முகமூடி !"

மேற்கண்ட தலைப்பில் நேற்று ஒரு பதிவை காண நேர்ந்தது. முஸ்லிம் நாடுகள் சில, ஐ.நா மனித உரிமை கழகத்தில் கொண்டு வரப்பட்ட இலங்கைக்கு எதிரான(?) தீர்மானத்தை எதிர்த்து ஓட்டளித்ததால் இப்படியான தலைப்பு. இந்த தீர்மானத்தை எதிர்த்ததால் மனிதாபிமான முகமூடி கிழிவதாக கணக்கிட்டால் சீனா, ரஷ்யா, கியூபா, காங்கோ, தாய்லாந்து, ஈக்குவடார் போன்ற  நாடுகளின் மனிதாபிமான முகமூடியும் கிழிந்ததாக அர்த்தம் கொள்ளலாம். ஏனென்றால் அந்த தீர்மானத்தை எதிர்த்ததில் இந்நாடுகளும் அடங்கும். ஆனால் இந்த நாடுகளின் மனிதாபிமானத்தை மேற்கண்ட கட்டுரை என்ன காரணத்தினாலோ கண்டுக்கொள்ளவில்லை. 

சரி விசயத்திற்கு வருவோம். மேற்கண்ட கட்டுரையானது, தீர்மானம் குறித்த உண்மை நிலைகளை சரிவர அலசி ஆராயாமல் ஒரு சமூகம் மீது கொண்டுள்ள வெறுப்புணர்வை மையமாக வைத்து எழுதப்பட்ட கட்டுரை என்பதை அம்பலப்படுத்துவதே இந்த பதிவின் நோக்கம்.   

முதலில் ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் உண்மை நிலை என்ன?  இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை இலங்கை அரசே இன்னும் தீவிரமான நடவடிக்கைகள் எடுத்து களைய வேண்டுமென்று படு சூப்பரான(?) ஐடியாவை சொல்லும் அந்த தீர்மானம் புரியவேண்டுமென்றால் சில தகவல்களை நாம் அலச வேண்டும். 

இலங்கையில் போர் முடிந்த பிறகு, போர் குற்றங்கள் குறித்து ஆய்வு செய்ய ஒரு கமிட்டியை அமைத்தது ராஜபக்சே அரசு. அதற்கு பெயர் "கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு". இந்த குழுவானது தன் அறிக்கையை மூன்று மாதங்களுக்கு முன்பாக சமர்பித்தது. அதில், 

 • இலங்கை ராணுவம் வேண்டுமென்றே மக்களை தாக்கவில்லை என்றும், 
 • புலிகள் மனித உரிமை மீறல்களை செய்ததாகவும், 
 • மக்களுக்கு சிங்கள ராணுவம் அதிகபட்ச பாதுகாப்பை தந்ததாகவும், 
 • புலிகளோ மனித உயிர்களை மதிக்கவே இல்லை என்றும்,
 • சிங்கள ராணுவம் விபத்துரீதியாக(?) மக்களை கொன்றதாகவும் (சிங்கள அரசோ அப்பாவி மக்கள் கொல்லப்படவில்லை என்று சொல்லியிருந்தது), 
 • சிங்கள ராணுவம் புரிந்த மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்கள் இருப்பதாகவும், தேவைப்பட்டால் அவை மேலும் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும்,
 • பிரச்சனைகளுக்கு காரணமாக சிங்கள அரசியல்வாதிகளையும், தமிழ் அரசியல்வாதிகளையும் சாடியும்,

என்று இப்படியாக பல்வேறு கருத்துக்களை சொன்ன அந்த குழு, இலங்கையில் அமைதி திரும்ப வழிமுறைகளை , பரிந்துரைகளை சொல்லி தன் அறிக்கையை முடித்தது. இந்த அறிக்கையின் முழு சாரம்சத்தை இங்கே படிக்கலாம்.

இந்த அறிக்கை சர்வதேச மனித உரிமை இயக்கங்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இலங்கை அரசின் கண்துடைப்பு இது என அவை குற்றஞ்சாட்டின.

ஐ.நா மனித உரிமை கழகத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இருக்கே, அது என்ன சொல்கின்றது தெரியுமா?

 • இலங்கை அரசு அமைத்த குழு, மனித உரிமை மீறல்களை சரியாக கையாளவில்லை, இது வருத்தம் அளிப்பதாகவும், 
 • இலங்கை அரசாங்கம் இது குறித்த  தீவிர சுதந்திரமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்றும், 
 • இலங்கை அரசால் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை விரைந்து செயல்படுத்த வேண்டுமென்றும், 
 • அந்த குழுவின் பரிந்துரைகளை இது வரை என்ன செயல்படுத்தி இருக்கின்றோம், இனி என்ன செய்யப்போகின்றோம் என்ற விபரங்களை இலங்கை அரசு சமர்பிக்க கோரியும், 
 • இது குறித்த செயல்பாடுகளில், ஐ.நா உடன் இணைந்து செயல்படுமாறும், 
 • இலங்கை அரசின் குழு தொடாத சில கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க கோரியும், 

- என்று இப்படியாக இருந்ததே அந்த தீர்மானம். 

தீர்மானத்தின் நோக்கமாக ஐ.நா மனித உரிமை கழகம் கூறுவது, இலங்கையில் மறுசீரமைப்பு விரைவாக நடக்கவும் நாட்டில் அமைதி திரும்பவுமே என்பதாகும். இலங்கை மக்கள் அனைவருக்குமான தீர்மானம் என்றே ஐ.நா கூறுகின்றது.

ஆக, கொலைக்காரன் என்று குற்றஞ்சாட்டப்பட்டவனின் கையிலேயே விவகாரங்களை கொடுத்து அவனை தண்டித்துக்கொள்ளும் பொறுப்பை அவனிடமே கொடுத்திருக்கின்றது அமெரிக்கா. இது தான் அமெரிக்கா சொல்லும் நியாயம். 

இந்த தீர்மானத்தால் இலங்கை அரசுக்கு, தன்னால் அமைக்க பெற்ற குழுவின் பரிந்துரைகளை விரைவாக செயல்படுத்த வேண்டுமென்ற அழுத்தம் அதிகமாக கொடுக்கப்படலாம் என்பது மட்டுமே உண்மை.

தீர்மானத்தை ஆதரித்த உருகுவே, சபையில் கூறிய கருத்துக்களை கவனித்தால் சில விசயங்கள் தெளிவாகும். இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பாராட்டிய உருகுவே, இம்மாதிரியான தீர்மானங்கள் மறுசீரமைப்பு பணியை சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து இலங்கை விரைவாக நிறைவேற்ற உதவும் என்று கூறி தீர்மானத்திற்கு தன் ஆதரவை தெரிவித்தது.

எதிர்ப்பு தெரிவித்த நாடுகள் இரண்டு காரணங்களுக்காக எதிர்த்தன. ஒன்று, இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட கூடாது (இம்மாதிரி தலையிடுவது ஐ.நா விதிகளுக்கு மாறானது என்று வாதாடியது சீனா).  அடுத்து, இலங்கை அரசாங்கம் அமைத்த குழு, அறிக்கை சமர்பித்து மூன்று மாதங்களே ஆகிறதென்றும், அந்த பரிந்துரைகளை செயல்படுத்த இன்னும் கால அவகாசம் இலங்கைக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பது மற்றொரு நிலை. 

கியூபா கவனிக்கப்பட வேண்டிய ஒரு தகவலை கூறியது. 1983-2009 இடையேயான காலக்கட்டத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இஸ்ரேலின் 40% ஆயுத விற்பனை வருமானம் இலங்கையிலிருந்தே வந்தது என்பது தான் அது. தற்போது இந்த தீர்மானம் நிறைவேறியுள்ள நிலையில் இலங்கைக்கான ஆயுத விற்பனையை தாராளமயமாக்கி உள்ள அமெரிக்காவின் நடவடிக்கைகள் அரசியல் வல்லுனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. 

மறுசீரமைப்பு  நடந்து வரும் நிலையில், இப்படியாக அழுத்தம் கொடுப்பது தங்களுக்கு பின்னடைவையே தரும் என்று கூறியது இலங்கை அரசு. 

ஆக, மனித உரிமை கழக தீர்மானத்தின் சாராம்சம் இதுதான். ஆதரவு நாடுகள், இலங்கை அரசாங்கம் விரைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று சொல்லி ஆதரவளித்தன. எதிர்ப்பு நாடுகள், இன்னும் இலங்கைக்கு கால அவகாசம் தரவேண்டுமென்று சொல்லி எதிர்த்தன.

இப்படியான ஒரு தீர்மானத்தில் எங்கே மதவாதம்(?) வந்தது? 

அதுமட்டுமல்லாமல், ஐ.நா மனித உரிமை கழகத்தில் உறுப்பினராக உள்ள முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் வெவ்வேறான நிலைகளையே இந்த தீர்மானத்தில் கையாண்டன. 

அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்த முஸ்லிம் நாடுகள் இரண்டு. எதிர்த்த முஸ்லிம் நாடுகள் ஏழு. ஓட்டெடுப்பில் இருந்து விலகிக்கொண்ட முஸ்லிம் நாடுகள் ஆறு (இரண்டு தரப்பிற்கும் ஆதரவு இல்லாத நிலை). 

விரிவான பார்வையோடு நோக்கப்பட வேண்டிய இந்த விசயத்தை குறுகிய பார்வையோடு அணுகுவது ஆரோக்கியமான செயல்பாடு அல்ல. மேலே கண்டது போன்ற தரம் குறைந்த பதிவுகள் சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முனையும் கீழ்த்தரமான செயலே அன்றி வேறொன்றும் இல்லை. 

சமூக நல்லிணக்கத்தை காப்போம், அழகான சமுதாயம் உருவாக வழிவகுப்போம்....Wednesday, 7 March 2012

குழந்தைகளுக்கு உதடு பிளவா? - இலவச சிகிச்சை


பிறக்கும் குழந்தைகளிடம் உதடும் மூக்கும் சேர்ந்து இருப்பதை பார்த்திருப்பீர்கள். இதனை cleft lip and cleft palate problem என்பார்கள். 


உதட்டில் இப்படியான பிளவுடன் ஆண்டுதோறும், இந்தியாவில், சுமார் 35,000 குழந்தைகள் வரை பிறப்பதாக சமீபத்திய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் செய்தியறிக்கை தெரிவிக்கின்றது. 

குழந்தைகள் வளர வளர உடல்ரீதியாகவும், உளவியல்ரீதியாகவும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த பிரச்சனையை முற்றிலுமாக குணப்படுத்த முடியும்.

தற்போது இதற்கான சிகிச்சையை இலவசமாக வழங்குகின்றது மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை. SMILE TRAIN என்ற அமைப்புடன் இணைந்து இதனை மேற்கொள்கின்றது. குழந்தையுடன் ஓரிரு ஆட்கள் தங்கலாம். மருத்துவ செலவுகள் மற்றும் மறைமுக செலவுகள் எதுவும் கிடையாது. 

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தன் தந்தைக்கு சிகிச்சை பார்த்து வரும் சகோதரர் சுல்தான் மைதீன் அவர்கள் இதனை கூறி மற்றவர்களுக்கு தெரிவிக்க சொன்னார். நாங்களும் இதுக்குறித்து மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் சம்பந்தப்பட்ட துறையை தொடர்புக்கொண்டு மேலே கூறியவற்றை விசாரித்து உறுதிபடுத்திக்கொண்டோம். 

நீங்கள் அறிந்தவர்களின் குழந்தைகள் இப்படியான பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையை தொடர்புக்கொள்ளுங்கள். நீங்களும் ஒருமுறை நன்றாக விசாரித்து கொள்ளுங்கள். நீங்கள் அறிந்தவர்களுக்கு இதுக்குறித்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். குழந்தைகளின் உளவியல்ரீதியான பாதிப்புகளை களைந்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம்.

இது குறித்து மேலும் விபரங்கள் அறிய:

Meenakshi Mission Hospital & Research Centre
Lake Area, melur Road,
Madurai, Tamil Nadu,
India - 625 107.
Phone: 0452-4263000

மற்றும் SMILE TRAIN அமைப்பு குறித்து பார்க்க: http://www.smiletrain.org


Saturday, 25 February 2012

தடையில்லா மின்சாரம் சாத்தியமே...எப்படி?


**********
தமிழக மின்சார தடை குறித்து எக்கச்சக்கமாக ஆதங்கப்பட்டு விட்டோம். நம் ஆதங்கத்தை எழுத்துக்களாக கொட்டிவிட்டோம். சரி, இதற்கு தீர்வு என்ன? மக்களாகிய நாம் இது குறித்த நம்முடைய எண்ணங்களை அரசாங்கத்திடம் பகிரலாமே? தடையில்லா மின்சாரம் சாத்தியமா?.... இம்மாதிரியான கேள்விகளுக்கு ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்வைக்க முயற்சிக்கின்றது இந்த கட்டுரை....

இதற்கு தீர்வென்று நீங்கள் கருதும் கருத்துகளையும் பின்னூட்டங்களாக வையுங்கள். இறைவன் நாடினால், அவை அனைத்தும் முதல்வருக்கும், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் அனுப்பி வைக்கப்படும்..
**********

ட்டு மணிநேர மின் வெட்டு தமிழக மக்களுக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

மின்சாரம் தமிழகத்தில் பயன்பாட்டுக்கு வந்தபோது விளக்குகள் எரிவதற்கும், மின் விசிறி சுழல்வதற்கும் மற்றும் நிலத்தடி நீரை மேலேற்றுவதற்குமே பயன்படுத்தப்பட்டு வந்தது. உபரியான மின்சாரம் இருந்தது. தனியார்களால் மின் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்ட அந்தக்கால கட்டத்தில் வீடு வீடாக வந்து மின்சாரம் வேண்டுமா என்று மின்துறை ஊழியர்கள் கெஞ்சிக் கேட்டு மின் இணைப்புக் கொடுத்தனர்.

மேலும் மின்சாரக் கட்டணத்தைக்கூட தவணை முறை வியாபாரிகளைப் போல் வீடுகளுக்கு வந்து அலைந்து வசூலித்துச் சென்றனர். மின் உற்பத்தியை விட மின் உபயோகம் குறைவாக இருந்ததால் இந்த நிலை இருந்தது. ஆனால் அடுத்தடுத்த காலகட்டங்களில் மின்சாரத்தில் இயங்கும் நவீனசாதனங்களும், சொகுசான சாதனங்களும் பயன்பாட்டுக்கு வந்தன. விளக்குகளும், விசிறிகளும் சாப்பிடும் மின்சாரத்தை விட நூறு மடங்கு ஐநூறு மடங்கு என மின்சாரத்தை அதிகம் சாப்பிடக் கூடியவைகளாக இவை இருந்தன.

ஏசி, ஹீட்டர், ஃபிரிட்ஜ், ஃபிரீஸர், வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர், மைக்ரோ ஓவன், டீவி, கம்ப்யூட்டர், மின் அடுப்பு, எலக்ட்ரிக் குக்கர், வேக்கம் கிளீனர், ஹேர் டிரையர், அயர்ன் பாக்ஸ், ஸ்டிரியோ சிஸ்டம், டோஸ்டர், டீ மேக்கர், காப்பி மேக்கர் மற்றும் அதிக சக்தி வாய்ந்த மோட்டார் பம்புகள் போன்ற அனைத்துமே மிக அதிக அளவில் மின்சாரத்தைச் சாப்பிடக்கூடியவையாகும்.

இதுவரையில்லாத அளவுக்கு திடீரென்று அதிகப் பற்றாக்குறை ஏற்பட்டதற்கு மற்றொரு சிறப்பான காரணமும் உள்ளது. தொலைக்காட்சிப் பெட்டிக்கு விளக்கை விட அதிக மின்சாரம் தேவை. அதிகமான வீடுகளில் விளக்குகளுடனும், மின் விசிறியுடனும், வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்தனர். மின் உற்பத்தி போதுமானதாக இல்லாத நம் மாநிலத்தில் அனைவருக்கும் இலவச கலர் டிவி கொடுக்கும் திட்டத்தினால் தான் பற்றாக்குறை தாறுமாறாக ஏறியது.

ஒரு கோடி குடும்ப அட்டைகளில் 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்காவது தொலைக்காட்சிப் பெட்டிகள் கொடுக்கப்பட்டன. தொலைக்காட்சிப் பெட்டி இல்லாதவர்கள் தினமும் 16 மணிநேரம் புதிதாக பெற்ற தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கினால், எவ்வளவு பற்றாக்குறை ஏற்படும் என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். ஒரு டிவி வைத்திருந்த குடும்பம் ஒன்றுக்கு மேற்பட்ட டிவியை இயக்கும் போதும் கூடுதல் மின்சாரம் செலவாகும். இதன் பின்னர்தான் தட்டுப்பாடு தாறுமாறாக ஏறியது.

தற்போது முதல்வர் ஜெயலலிதாவும் மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் என்று கொடுத்து வருகிறார். இதன் மூலமும் மின் பயன்பாடு அதிகரிப்பதால் மின் வெட்டு எட்டு மணி நேரமாகும் நிலை ஏற்பட்டது. மேற்கண்ட சாதனங்களைப் பயன்படுத்தாமல் இருந்த மக்கள் மீது இவைகள் திணிக்கப்படுவதால் போகப்போக மின் தட்டுப்பாடு அதிகமாகிக் கொண்டுதான் வரும்.

நினைத்தவுடன் சரி செய்யும் அளவிற்கு மின்சார நிலைமை இல்லை என்பதுதான் யதார்த்தமான நிலையாகும். தமிழகம் எந்த அளவுக்கு மின் பற்றாக்குறையில் உள்ளது என்பதை அறிந்து கொண்டால் தான் இது உடனடியாக சரி செய்யக்கூடியதல்ல என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.
மின்சாரத்தை வாட் கணக்கில் அளவிடுகிறார்கள். தமிழகத்தில் அனைவருக்கும் அனைத்துத் தேவைகளுக்கும் தங்கு தடையின்றி 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க வேண்டுமானால், இப்போதைய நிலையில் 11 ஆயிரம் மெகாவாட் தேவைப்படும். (இந்த நிலையை நாம் எட்டும்போது மேலும் பல புதிய சாதனங்கள் வந்து கூடுதலாக 1000 மெகாவாட் தேவைப்படும் என்ற நிலை ஏற்பட்டுவிடும் என்பது தனி விஷயம்)

ஆனால் தமிழகத்திற்கு தற்போது கிடைக்கும் மின்சாரத்தின் அளவு சுமார் 8000 மெகாவாட் மட்டுமே.  அதாவது அவசியம் ரூ.100 தேவையுள்ளவனுக்கு ரூ.65 மட்டுமே கிடைப்பது போல் மின்சாரம் மூன்றில் ஒருபங்கு பற்றாக்குறையாக உள்ளது. அதனால்தான் 24 மணி நேரத்தில் மூன்றில் ஒரு பங்கு என்ற அடிப்படையில் எட்டு மணி நேரம் மின் வெட்டு செய்கிறார்கள். இப்போதைய நிலையில் என்னதான் தலைகீழாக நின்றாலும் 11 ஆயிரம் மெகாவாட் என்ற நிலையை எட்ட முடியாது. கூடங்குளம் மின் உலை செயல்பாட்டுக்கு வந்தால் 1000 மெகாவாட் தமிழகத்திற்குக் கிடைக்கும். இதனால் இரண்டு அல்லது மூன்று மணிநேர மின்வெட்டை சமாளிக்கலாம்.

இப்போது கிடைத்து வரும் எட்டாயிரம் மெகாவாட்  இப்படியே தொடர்ந்து கிடைக்கும் என்று சொல்ல முடியாது. மழை குறைந்து நீர் வீழ்ச்சி நின்று விட்டாலோ அணைகளில் தண்ணீர் குறைந்து விட்டாலோ நீர் மின்சாரம் மூலம் இப்போது கிடைத்து வரும் மின்சாரமும் குறைந்து போக வாய்ப்புள்ளது.

நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டால் அதன் காரணமாகவும் அனல் மின்நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமும் குறைந்து போகலாம். காற்றாலை மின்சாரத்தையும் நம்ப முடியாது. இது அடிக்கடி காலை வாரிவிடக்கூடியதாகும். புதிய புதிய திட்டங்களை இப்போதே தீட்டினால்தான் எதிர்காலத் தமிழகத்தை இருளில் இருந்து காப்பாற்ற முடியும். எவ்விதத் தட்டுப்பாடும் இல்லாமல் சூரிய ஒளியிலும் மின்சாரம் தயாரிக்கலாம். பரவலாக இதற்கான தகடுகளை அதிகமாகப் பொருத்த வேண்டும். பெரிய அளவில் இது போன்ற மின்சாரத்தை உற்பத்தி செய்ய பல்லாயிரம் ஏக்கர் என்ற அளவில் பிரம்மாண்டமான தகடுகளை அமைத்தால் பகல் முழுவதும் மின் உற்பத்தி செய்ய முடியும்.

நிலக்கரிக்கும், நீருக்கும் அண்டை மாநிலங்களை நம்பி இருப்பது போல் சூரிய ஒளிக்காக யாரையும் சார்ந்து இருக்கத் தேவையில்லை. ஆரம்பத்தில் இதற்கு அதிகபட்சமான செலவு பிடித்தாலும், அத்தியாவசியத் தேவைகளில் செலவு கணக்கைப் பார்க்க முடியாது. இதைப்பற்றி அரசிடம் எந்தத் திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை.

மேலும் இரவு பகல் என எல்லா நேரத்திலும் குறைந்த செலவில் கடல் அலைகளினால் கரையில் ஏற்படும் அழுத்தம் மூலமும் மின் உற்பத்தி செய்யலாம். தொடர்ந்து நிரந்தரமாக இதை உற்பத்தி செய்ய இயலும்.

மின் உற்பத்தியைப் பெருக்க இன்னும் எத்தனையோ திட்டங்கள் உள்ளன. அவற்றில் எல்லாம் அரசாங்கம் தன் கவனத்தைத் திருப்பினாலும் உடனடியாக மின்சாரம் கிடைக்கப்போவது இல்லை. போராட்டம் நடத்தினாலும் புரட்சியே வெடித்தாலும் இல்லாத ஒன்றை எந்த அரசாலும் தரமுடியாது என்பதுதான் யதார்த்தமான நிலை. இப்போதைய உற்பத்தியை வைத்துக் கொண்டு தடையில்லா மின்சாரம் வழங்க முடியுமா என்றால் நிச்சயமாக முடியும்.

மின் பற்றாக்குறையைச் சமாளிக்க இப்போது அரசு எடுத்து வரும் நடவடிக்கை முழுமையாகப் பயன்தராது. எட்டு மணிநேரம் மின்வெட்டு செய்வதால் மூன்றில் ஒரு பங்கு மின்சாரம் மீதமாகும் என்று அரசாங்கம் தப்புக் கணக்கு போடுகிறது. இவர்கள் விடாக்கண்டர்களாக  இருந்தால் மக்கள் கொடாக்கண்டர்களாக இருப்பார்கள் என்பதை அரசு கவனிக்கத் தவறிவிட்டது.

எட்டு மணிநேரம் மின்வெட்டால் விளக்கு, விசிறி, ஏசி ஆகிய மூன்றுதான் செயல்படாது. வாஷிங் மெஷின், ஓவன், கிரைண்டர், மோட்டார் பம்ப் உள்ளிட்ட எல்லா மின் சாதனங்களையும் மின்சாரம் வந்தபின் பயன்படுத்துவார்கள். ஓரளவு வசதி இருந்தால் ஒரு இன்வெர்ட்டர் மூலம் மின்சாரத்தை உறிஞ்சி மின்வெட்டின் போது விளக்கையும் விசிறியையும் இயக்கிக் கொள்வார்கள். எட்டு மணிநேர மின்வெட்டால் ஒரு மணிநேர மின்வெட்டின் பயன்தான் அரசுக்குக் கிடைக்கும்.

மண்டையைப் பிய்த்துக் கொண்டு பின்னர் பத்து மணி, 12 மணி என்று நீடித்துக் கொண்டே போவார்கள். இது பயனற்றதாகும். மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். நாம் முன்னரே சொன்னபடி அவசியத் தேவைக்கான மின்சாரம், சொகுசுத் தேவைக்கான மின்சாரம் எனற இரு வகைகளில் நமக்கு மின்சாரம் தேவைப்படுகிறது. இதை மட்டும் அதிகார வர்க்கம் சரியாகப் புரிந்து கொண்டால் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க இயலும்.

விளக்கோ விசிறியோ இல்லாமல் மனிதனால் வாழ முடியாது. ஏசியோ ஃபிரிட்ஜோ இல்லாமல் வாழ முடியும். இந்த அடிப்படையைக் கவனத்தில் கொண்டு பின் வரும் யோசனைகளை அரசு செயல்படுத்தலாம். சில மணிநேர மின் வெட்டு இருந்த காலத்தில் அல்லது மின்வெட்டே இல்லாத காலங்களில் ஒரு வீட்டில் எவ்வளவு யூனிட் செலவானதோ அதில் முப்பது முதல் நாற்பது யூனிட் வரை குறைத்து இதுதான் உங்களுக்கான அளவு என்று ரேஷன் முறையைக் கொண்டு வரவேண்டும். அதாவது மின் வெட்டு இல்லாத நேரங்களில் 200 யூனிட் பயன்படுத்தி இருந்தால், அவர்களின் மின்சார ரேஷன் 140 யூனிட்டுகள்தான் என்று நிர்ணயிக்க வேண்டும்.

மின் ஊழியர்கள் 10 நாள்களுக்கு ஓரு முறை வீடு வீடாகச் சென்று உங்கள் ரேஷனில் இவ்வளவுதான் மீதம் உள்ளது என்று சொல்ல வேண்டும். அவர்கள் உபயோகிக்க வேண்டிய அளவை அடைந்துவிட்டால் அந்த மாதத்தில் எஞ்சிய நாட்களுக்கு அவர்களுக்கு மட்டும் மின்சாரத்தை நிறுத்தலாம். ஊருக்கே நிறுத்த வேண்டியதில்லை. 

இதை கம்ப்யூட்டர் புராக்ராம் மூலமும் (gsm, micro-controller அல்லது வேறு எந்த யுக்திகளை கொண்டும்) செய்ய முடியும். அல்லது ஊழியர்களின் கண்காணிப்பு மூலமும் செய்யலாம். இப்படி ரேஷன் முறையை அமுல்படுத்தினால் குடும்பத்தவர்கள் இரவில் நிம்மதியாகத் தூங்கவும், பிள்ளைகள் படிக்கவும் தேவையான அளவுக்கு மட்டுமே மின்சாரத்தைப் பயன்படுத்தி சொகுசு சாதனங்களை தாங்களாகவே இயக்காமல் நிறுத்திக் கொள்வார்கள், அல்லது குறைத்துக் கொள்வார்கள்.

சொகுசு வாழ்க்கைக்கு மின்சாரம் இல்லை என்பதால் யாரும் புரட்சி செய்ய மாட்டார்கள். அடிப்படைத் தேவைக்கே இல்லாவிட்டால்தான் புரட்சி வெடிக்கும். எனவே மின்சாரம் 24 மணிநேரமும் வந்து கொண்டே இருக்கும். பயன்படுத்துவோர் சுயக்கட்டுப்பாடு செய்து கொள்வார்கள். இதன் மூலம் இருக்கும் மின்சாரத்தை வைத்தே மின்வெட்டு இல்லாமல் சமாளிக்கலாம்.

வர்த்தக நிறுவனங்கள் பொருள்களைக் கவர்ச்சியாகக் காட்டவும், விளம்பரத்துக்காகவும், தாறுமாறாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்கள். அவர்களையும் இந்த ரேஷனில் கொண்டு வர வேண்டும். அப்படிக் கொண்டு வந்தால், அதிக மின்சாரத்தை இழுத்துக் கொள்ளும் நியான், மெர்குரி போன்ற விளக்குகளைத் தவிர்த்துக் கொண்டு தங்களுக்கான ரேஷன் அளவுக்குள் அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்.

தொழிற்சாலைகள், உற்பத்தி சார்ந்தவை மற்றும் மேலதிகச் செலவுவகை என இரு வகைகளில் மின்சாரத்தைச் செலவிடுகின்றன. தொழிற்சாலைகள் இயங்காவிட்டால் பலரது வேலைவாய்ப்பு பறிபோகும் என்பதால் தொழிற்சாலைகளுக்கு 20 சதவிகிதம் அளவுக்கு குறைத்து ரேஷன் நிர்ணயிக்கலாம். இதனால் உற்பத்திக்கு மட்டும் மின்சாரத்தைப் பயன்படுத்துவார்கள். தொழிலாளிகள் வேலை இழக்கும் நிலை இதனால் ஏற்படாது.

விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இது அவசியமானதுதான். ஆனால் இரண்டு மணி நேரம் மோட்டார் இயங்கினால் போதும் என்ற நிலையில் 24 மணிநேரமும் மின் மோட்டார் இயங்கி தண்ணீரும்,  மின்சாரமும் வீணாவதை யாரும் மறுக்க முடியாது.

ஒரு ஏக்கருக்கு எத்தனை யூனிட் என்று நிபுணர்களைக் கொண்டு மதிப்பிட்டு ஒவ்வொரு இணைப்பிற்கும் எத்தனை யூனிட்டுகள் என்பதை நிர்ணயித்துக் கொள்ளலாம். அதற்கு மேல் பயன்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்தலாம். அதுபோல் அரிசி கோதுமை போன்ற அத்தியாவசியப் பொருள்களின் உற்பத்திக்கு மட்டும் இலவச மின்சாரத்தை வழங்கிவிட்டு மற்ற பணப் பயிர்களுக்கு கட்டணத்தை நிர்ணயிப்பதுடன் அவற்றிற்கும் உரிய ரேஷனை நிர்ணயிக்கலாம்.

பொதுக்கூட்டமோ மாநாடுகளோ எந்தக் கட்சி நடத்தினாலும், கொக்கி போட்டோ அல்லது இணைப்புப் பெற்றவரிடம் அனுமதி பெற்றோ மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றனர். ஜெனரேட்டர் வழியாகத் தவிர வேறு வகையில் மின்சாரம் பயன்படுத்தக்கூடாது என்று கடுமையான உத்தரவு பிறப்பிக்க வேண்டும். கட் அவுட்டுகள் மற்றும் சீரியல் விளக்குகளுக்கும் இதையே சட்டமாக்க வேண்டும். ஏனென்றால் இது பலரிடம் வசூல் செய்யப்படுவதால் இதற்கு ஆகும் அதிக செலவு பொதுமக்களைப் பாதிக்காது.

மின் நிலைமை சீராகும் வரை, திருமண மண்டபங்களுக்கு ஜெனரேட்டர் மூலம் மட்டுமே மின்சாரம் பயன்படுத்த உத்தரவிடலாம். கல்யாண மண்டபத்துக்கு லட்சக்கணக்கில் செலவு செய்வோர், மின்சாரத்துக்காக சில ஆயிரங்களைச் செலவு செய்ய தயங்கமாட்டார்கள். சாப்பிடவும், படிக்கவும், தூங்கவும் தடையில்லாத மின்சாரம் 24 மணி நேரமும் கிடைப்பதை உறுதி செய்தால் மக்கள் நிலைமையைப் புரிந்து கொள்வார்கள்.

முட்டை பல்பு எரிக்க வேண்டாம் என்றும், எல்.இ.டி. விளக்குகளையும் எல்.இ.டி. டிவிக்களையும் பயன்படுத்துங்கள் என்றும் நாம் பிரச்சாரம் செய்யத் தேவையில்லை. ரேஷன் முறையைக் கொண்டுவந்தால் பொதுமக்களே தாமாக முன் வந்து குறைந்த மின்சாரம் செலவாகும் சாதனங்களை வாங்கும் நிலை ஏற்படும்.

இதன் மூலம் அவர்களின் பொருளாதாரத்தில் சேமிப்பு ஏற்படுவதால் சிலர் வாழ்த்தினாலும் ஆச்சரியமில்லை. தமிழக அரசும், மின்வாரியமும் இதைக் கவனத்தில் கொள்ளுமா?
உறவினருக்கும் ஏழைக்கும் நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண் விரயம் செய்து விடாதீர்! விரயம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான் - திருக்குர்ஆன் 17:26,27

நன்றி: உணர்வு வாரப்பத்திரிக்கை (edited and posted)

Friday, 17 February 2012

கடையநல்லூர் - வினவு தோழர் முஸ்லிம் ஆனார்கடையநல்லூர் விவகாரம் குறித்து இன்று வினவில் வந்துள்ள கட்டுரைக்கு மறுப்பே இந்த பதிவு.

முதலில் கடையநல்லூர் விவகாரத்தின் சாரம்சத்தை பார்த்துவிடுவோம்.

கடையநல்லூர் பரசுராமபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மக்கட்டி துராப்ஷா. இவரின் நடவடிக்கைகள் இஸ்லாமிற்கு எதிராக இருந்ததால், அப்பகுதி மக்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதன் தொடர்ச்சியாக இவர் இறைநிராகரிப்பாளர் என்று அறிவிக்கப்பட்டார். துராப்ஷாவிடம் இது சம்பந்தமாக கையெழுத்தும் வாங்கிக்கொள்ளப்பட்டது.

இது நடந்த சில நாட்களுக்கு பிறகு, தனது செயலுக்கு வருந்தி மனம் திருந்தி மீண்டும் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுவிட்டார். இதுக்குறித்து நெல்லை மேற்கு மாவட்ட தமிழக காஜி அவர்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை கீழே காணலாம். மேலும் இது குறித்து அறிய விரும்புபவர்கள் கடையநல்லூர் தளத்தில் இதுக்குறித்து வெளிவந்த இந்த கட்டுரையை காணலாம்.  

இப்போது வினவின் பதிவிற்கு வருவோம். மேலே கூறிய நிகழ்வுகளில் முந்தையதை மட்டுமே கூறி அடுத்ததை (அதாவது அவர் இஸ்லாமை ஏற்றதை) லாவகமாக மறந்திருக்கின்றனர்/மறைத்திருக்கின்றனர் வினவு குழுவினர். இது தான் இவர்கள் செய்தி தரும் லட்சணம்.

சொன்னதையாவது சரியாக சொன்னார்களா என்றால் அதுவும் இல்லை. துராப்ஷாவின் இஸ்லாமிற்கு எதிரான நடவடிக்கைகள் அவ்வூர் மக்களால் நன்கு அறியப்பட்டதே. ஆனால் இதற்கு வேறு சாயம் பூசி திசை திருப்ப முயல்கின்றது வினவு. அதாவது, சில பிரச்சனைகளால் ஒரு சிலருக்குள் ஏற்பட்ட காழ்ப்புணர்வே இந்த பிரச்சனைக்கு காரணமாம். வினவின் முன்னாள் "புரட்சிகர(?) இடதுசாரி(!) இயக்க தோழர் துராப்ஷா இப்போது முஸ்லிம் ஆகிவிட்டார். அந்த காட்டத்தில் ஏதேதோ உளறி கொட்டிருக்கின்றது வினவு.

இந்த விவகாரத்திற்குள் ஜமாஅத் பிரச்சனை அது இதுவென்று எதை எதையோ சேர்த்திருகின்றார்கள்.

"இது மட்டுமன்றி, வேறொரு அரசியலும் இதில் தொழிற்பட்டிருக்கிறது. முபாரக் பள்ளியில் அறிவிப்பு வெளியிடுவதற்கு முந்திய வாரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் குழுவினருக்கான பள்ளியில், இணையத்தில் சில ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் வேறொரு தோழருக்கு எதிராக, ”இஸ்லாத்தை விமர்சித்து தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார், அவரை ஊரை விட்டு விலக்கிவைக்க வேண்டும்” என்று ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். இதை செவியுற்ற முபாரக் பள்ளியும் அவர்களுக்கு முன்னதாக நாம் நடவடிக்கை எடுத்து காட்ட வேண்டும் எனும் போட்டி மனப்பான்மையுடனேயே தோழர் துராப்சாவுக்கு எதிரான அறிவிப்பை அவசரமாக வெளியிட்டிருக்கிறார்கள். அதாவது இசுலாத்தை யார் காப்பாற்றுவது என்பதில் தவ்ஹீத் ஜமாத் குழுவினருக்கும், முபாரக் பள்ளிக்கும் பெரும் போட்டி நிலவியிருக்கிறது"

ஸ்ப்ப்ப்பா...இது என்ன முட்டாள்தனமான கருத்தாக இருக்கின்றது. சரி, அப்படியே உண்மை என்று வைத்துக்கொண்டாலும் இப்போது துராப்ஷா முஸ்லிமாகிவிட்டார். இந்த ஜமாஅத்தினர்கள் இதனை எதிர்க்க போகின்றார்களா? 

துராப்ஷாவின் நடவடிக்கைகள் இஸ்லாமிற்கு எதிராக வெளிப்படையாக இருந்ததாலேயே அவ்வூர் மக்களால் ஒருமனதோடு எதிர்க்கப்பட்டார். இதற்கு வேறு காரணங்களை கூறி திசை திருப்ப முயல்வது அப்பட்டமான பதிவுலக பயங்கரவாதம்.

இஸ்லாமிற்கு எதிராக செயல்பட்டார். நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது மனம் திருந்தி மறுபடியும் முஸ்லிமாகி விட்டார். பிரச்சனை சுமூகமாக முடிந்துவிட்டது. மீண்டும் தன் வழக்கமான சமூக பணிகளில் ஈடுபட போகின்றார் துராப்ஷா. இஸ்லாம் இதற்கு எதிரி இல்லையே? 

பிரச்சனை உச்சத்தில் இருந்தபோது இதுக்குறித்து கவலைப்படாத வினவு தற்போது பிரச்சனை சுமூகமாக முடிந்த பிறகு இதுக்குறித்து எழுதுகின்றது என்றால் என்ன காரணம்?

பார்வையாளர்களுக்கே விட்டு விடுகின்றோம். 

நன்றி:- ஆஷிக் அஹ்மத், நெத்தியடி முஹம்மத் மற்றும் அய்யூப் கான் (TNTJ கடையநல்லூர் டவுண் கிளை தலைவர்)

குறிப்பு:
நல்லூர்முழக்கம் என்ற பெயரில் வினவில் வளைத்து வளைத்து கமெண்ட் போடும் சகோதரரின் நேர்மையை பாருங்கள். வினவு தளத்தில் இப்படியாக சொல்கின்றார்,

//மனிதாபிமானி தளத்தில் நான் இட்ட பின்னூட்டம் வெளிவருமா என்பது தெரியவில்லை. அதனால் இங்கேயும் பதிந்து வைக்கிறேன்//

பொய் சொல்வதும் உங்க கொள்கைல ஒன்றா? இவர் இங்கே கமெண்ட் போட்டாராம், அது வெளிவருமான்னு தெரியவில்லையாம். இங்கே கமெண்ட் மாடரேஷனே இல்லை. அப்புறம் எங்கே நாங்க வெளியிடறது? இதெல்லாம் ஒரு பொழப்பா சகோதரர்...பித்தலாட்டகாரர்கள் என்பதை மறுபடியும் மறுபடியும் நிரூபிக்கின்றீர்கள்...

Saturday, 11 February 2012

சர்தார்ஜிக்களை விட்டுருவோமே...ப்ளீஸ்

நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

சர்தார்ஜி ஜோக்குகள் - இன்றைய காலக்கட்டத்தில் இவை குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவது மிகுந்த மகிழ்ச்சியை தந்தாலும், பேஸ்புக் போன்ற சமூக தளங்களில் இன்றும் இம்மாதிரியான நகைச்சுவைகள் வந்துக்கொண்டு தான் இருக்கின்றன. ஆகையால், நமக்கெல்லாம் ஒரு நினைவூட்டலாக இந்த பதிவு. 

நம்மில்  பலரும் அறியாமையால் தான் இன்றும் சர்தார்ஜி நகைச்சுவைகளை பகிர்ந்துக்கொண்டு இருக்கின்றனர்.  அதாவது இது தவறென்று தெரியாமலேயே.

இதனை பகிர்பவர்கள் இதன் பின்னணியை அறிந்திருக்கின்றார்களா என்று தெரியவில்லை.  வரலாற்று ஆசிரியர்களின் கருத்துப்படி, பதினெட்டாம் நூற்றாண்டில் நாதிர் ஸா மன்னனின் படைகளிடம் இருந்து பெண்களை காக்க நள்ளிரவு நேரத்தில் கொரில்லா யுத்தம் செய்து பெண்களை விடுதலை செய்வனராம் சீக்கியர்கள். அவர்கள் குறைந்த அளவில் இருந்ததே இந்த நள்ளிரவு தாக்குதலுக்கு காரணம். ஆனால் இன்றோ இந்த வரலாற்றை அறியாத நம்மவர்கள் சீக்கியர்களை வைத்தே '12 மணி' ஜோக்குகள் என்று ஒன்றை உருவாக்கி அவர்களை கேலி செய்துக்கொண்டிருக்கின்றார்கள். 

அதுமட்டுமல்லாமல், சீக்கியர்கள் மீதான ஈகோவும் இம்மாதிரியான நகைச்சுவைகள் தோன்ற காரணமாக இருந்திருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். 

சரி போகட்டும். சர்தார் நகைச்சுவைகளை எப்படி கையாள்வது. இது சரியா??

"எல்லா மனிதர்களும் ஆதாம், ஏவாள்லிருந்தே வந்தனர். ஒரு அரபி, அரபி அல்லாதவரை காட்டிலும் உயர்ந்தவரல்ல. அதுபோலவே ஒரு அரபி அல்லாதவர், அரபியரை விட உயர்ந்தவரல்ல. மேலும், வெள்ளையர் கருப்பரை விடவோ அல்லது கறுப்பர் வெள்ளையரை விடவோ உயர்ந்தவரல்ல" - நாயகம் (ஸல்) அவர்கள், தன்னுடைய இறுதி பேருரையில்..

எல்லா இனத்தவரும் சமமே. சீக்கியர்களின் அறிவுத்திறனை பகடி செய்தே சர்தார்ஜி நகைச்சுவைகள் வருகின்றன. இன்னொரு இனத்தவரை நம்மை விட அறிவுத்திறனில் தாழ்ந்தவராக எண்ணுவது இறைநம்பிக்கையாளர்களுக்கு அழகல்ல. அப்படியிருக்க எப்படி ஒரு இறைநம்பிக்கையாளர் இன்னொரு இனத்தவரை கேலி செய்ய முடியும்?

அதுமட்டுமல்லாமல், நமக்கு என்ன விரும்புகின்றோமோ அதனையே அடுத்தவருக்கும் விரும்ப சொல்கின்றது இஸ்லாம். தமிழ் என்னும் நம் இனம், அறிவுத்திறனில் தாழ்ந்த இனமாக கருதப்பட்டு கேலிச் செய்யப்படுவதை நாம் விரும்ப மாட்டோம். பிறகு எப்படி நமக்கு விரும்பாத ஒன்றை அடுத்தவருக்கு செய்துக்கொண்டிருக்கின்றோம்? 

நான்  முன்னமே சொன்னது போன்று சர்தார்ஜி நகைச்சுவைகளை பலரும் அறியாமையால் தான் பகிர்ந்து வருகின்றனர். சும்மா நகைச்சுவைக்காக தானே என்று நினைத்து தான் பகிர்ந்து வருகின்றனர். நகைச்சுவை என்ற காரணத்தை சொல்லி ஒரு இனத்தையே கேலிக்குள்ளாக்குவது ஏற்புடையதா? 

அறியாமல் செய்த காலங்கள் போகட்டும். இனியும் நாம் இதனை தொடர்ந்தால் இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டி வரும் என்பதை நினைவில் கொண்டு இந்த செய்கைகளை கைவிடுவோம். சர்தார் நகைச்சுவைகளை பகிர மாட்டோம் என்று உறுதிக்கொள்வோம்.
நன்றி: ஆஷிக் அஹ்மத்