Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Sunday, 29 January 2012

ஏற்றத்தாழ்வும், நாத்திகவாதிகளின் சொத்தை வாதங்களும்.......உங்கள் அனைவர் மீதும் ஓர் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகுவதாக.....

இந்த உலகத்தில் எதுவுமே தானாக வந்ததில்லை. இந்தப்பதிவை எழுத நான் உபயோகிக்கும் கீபோர்ட், இதை படிக்க நீங்கள் உபயோகிக்கும் கணினி, இண்டெர்நெட் இத்யாதி, இத்யாதி என்று எல்லாமே யாரோ ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டு அல்லது தயாரிக்கப்பட்டு, யாரோ ஒருவராகிய நாம் பயன்படுத்துகிறோம். இல்லையில்லை இதெல்லாம் தானாக தோன்றியது, யாரும் தயாரிக்கவெல்லாம் இல்லை என்று நாம் சொன்னால் நம்மை விட பைத்தியக்காரர்கள், முட்டாள்கள் யாரும் இல்லை என்று சொல்லலாம். இப்படிப்பட்ட சாதாரண பொருள்களையெல்லாம் தயாரிக்க ஒரு ஆள் தேவைப்படும்போது, இத்தனை பெரிய பிரபஞ்சம் தானாக தோன்றிற்று என்று எப்படி சொல்லமுடியும்?

இந்த பிரபஞ்சம் முழுவதும் இறைவனின் கொடைதானே தவிர, இயற்கையின் கொடையல்ல....

இந்த உலகில் படைக்கட்ட முதல் மனிதர்களான ஆதம்(ரலி)-ஹவ்வா(ரலி) முதல் அவர்களின் சந்ததியினராக இன்று பல்கி பெருகியிருக்கும் சுமார் 600 கோடி மக்களும், நமக்கு முன் வாழ்ந்து இறந்துவிட்ட எண்ணிக்கையில் அடங்காத பல கோடி மக்களும் இறைவனின் படைப்பே.....இதில் டார்வினிலிருந்து இன்றைய நாத்திகர்கள் வரை எல்லோரும் அடக்கம்.

நாத்திகர்கள் என்றழைக்கப்படும் கடவுள் மறுப்பாளர்களாகிய டார்வின் மதத்தை சேர்ந்தவர்களால் இறைவன் மீது வைக்கப்படும் சில குற்றச்சாட்டுக்களை கேட்டால் நகைப்புதான் வருகிறது. கேள்வி கேட்க பயன்படுத்தும் பகுத்தறிவில் கொஞ்சம் சிலவு செய்து யோசித்தால் பதில்களும் கிடைத்துவிடும். ஹூம்.....எங்கே?

என்னவோ சிலருக்கு பிறக்கும் போதே தொப்புள் கொடியோடு  பலகோடி ரூபாய் அடைத்த சூட்கேசையும், மற்றவர்களுக்கு ஒன்றுமேயில்லாத மஞ்சள் பையையும் இறைவன் கொடுத்தனுப்புவது போல கேட்கிறார்கள்.
இந்த உலகில் ஏற்றத்தாழ்வுகள் ஏன்?, ஏழை, பணக்காரர்கள் பேதம் ஏன் என்று கேள்வி கேட்கிறார்கள்.


இந்த உலகில் பிறக்கும் அனைவரும் பணக்காரர்களாகவே இருந்துவிட்டால் யார் வேலை செய்வது?, அல்லது ஏழையாகவே இருந்துவிட்டால் யார் வேலை தருவது?
ஏற்ற தாழ்வில்லாமல் எல்லோரும் சமமென இருந்துவிட்டால் நமக்கு உண்ண உணவும், உடுத்த உடையும், இருக்க இருப்பிடமும் கிடையாது, கிடைக்காது.

உலகில் தேவைகள் அதிகரிப்பதால் தான் உற்பத்திகள் பெருகி எல்லாம் கிடைக்கிறது. தேவைகள் இல்லாத பட்சத்தில் எந்த பொருளையும் தயாரிக்கும் அவசியம் யாருக்கும் ஏற்படாது. அப்படி எந்த பொருளும் தயாரிக்க தேவையில்லாத போது யாரும் வாழவே முடியாது.

சரி....இன்றிலிருந்து ஏழை, பணக்காரன் என்ற பேதம் ஒழிந்து எல்லோரையும் சமமாக ஆக்கிவிட்டான் இறைவன் என்று வைத்துக்கொள்வோம். இதனால், என்னன்ன விளைவுகள் ஏற்படும் என்று பார்ப்போமா?

உதாரணமாக, நாம் ஒரு வீடு கட்டுவதாக இருந்தால், செங்கல், சிமண்ட், மணல் என்று எல்லாமே கிடைக்கிறது. ஆனால், கொத்தனார், சித்தாளை எங்கே பிடிப்பது? அவர்களும் எல்லோரையும் போல சம நிலையில் இருக்கிறார்களே?....

அப்படியே விவசாயத்திற்கு வருவோம்....அங்கேயும் இதுதான் நிலைமை..
எல்லோரும் சமமாக இருந்துவிட்டால், யாரும் சேற்றில் இறங்க மாட்டார்கள். உழ, விதைக்க, நீர் பாய்ச்ச, களை எடுக்க, அறுவடை செய்ய என்று எதற்குமே ஆள் கிடைக்காமல் போய் விடும். அப்படி எப்படி சாப்பிடுவதாம்? எல்லோரும் பணம், காசு என்று எதையாவது சாப்பிட்டு சாக வேண்டியதுதான். அதுவும் முடியாது. ஏனென்றால்....பணம் அச்சடிக்க பேப்பர், மை, மெசின் என்று வேண்டும்....ஆனால், ஒரு பொருளும் கிடைக்காது. அதுதான் எல்லோரும் சமமாகிவிட்டார்களே?

இன்னொரு உதாரணம், அரபு நாடுகளில்(அரபு நாடு என்றதும் டார்வின் மதத்தினர் வரிந்துகட்டிக்கொண்டு சண்டைக்கு வரவேண்டாம்....ஒரு விளக்கத்திற்காக மட்டுமே)
பெட்ரோல் எடுத்து ஏற்றுமதி செய்து தங்களின் பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்கிறார்கள். அங்கு எல்லோரும் சமமாக இருந்துவிட்டால், பொருளாதாரத்தை உயர்த்தவேண்டிய அவசியமும் இருக்காது, பெட்ரோலும் எடுக்க மாட்டார்கள். அப்புறம் என்ன எல்லோரும் நடராஜா சர்வீஸ் தான்.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

இப்போது சொல்லுங்கள் ஏற்றத்தாழ்வு நல்லதா? கெட்டதா?

அதற்காக, ஏழைகள் ஏழைகளாகவும், பணக்காரர்கள் பணக்காரர்களாகவுமே நான் இருக்க சொல்லவில்லை. அவரவர் தங்கள் தகுதிகளை வளர்த்துக்கொள்வது அவரவர் கைகளிள் தான் இருக்கிறது.
பிறக்கும்போது ஏழையாக பிறப்பது ஒன்றும் தவறில்லை. மரணிக்கும்போது அவன் ஏழையாகவே மரணித்தால் அது அவனின் தவறுதான். இறைவனின் தவறல்ல....

அடுத்ததாக விஞ்ஞானம் பற்றியும் டார்வின் மதத்தினர் பேசுகிறார்கள். இந்த விஞ்ஞான உலகில் எல்லாமே சாத்தியம், கடவுளே தேவையில்லை என்று.....

அதுசரி.....விஞ்ஞானத்தால் அனைத்தையும் படைக்கலாம் என்பதை விடுங்கள். ஒரு குழந்தையை படைத்து காட்டுங்களேன்....
டெஸ்ட் டியூப்பில் உருவாக்கலாம் என்றுதானே சொல்ல வருகிறீர்கள். உண்மைதான். டெஸ்ட் டியூப்பில் குழந்தையை உருவாக்கலாம்....அந்த குழந்தையை உருவாக்கும் மூலக்கூறான விந்தை எப்படி உருவாக்குவீர்கள்?. அதற்கு இறைவனின் படைப்பான மனிதன் தானே தேவைப்படுகிறான்.

சரி விடுங்க..... நீங்கள் சொல்வதைப்போலவே, கடவுள் இல்லையென்று ஒரு வாதத்திற்காக வைத்துக்கொள்வோம்.
அதனால், எங்களுக்கு ஒன்றும் நட்டமில்லை. நீங்களும், நாங்களும் செத்தால் அத்தோடு எல்லாம் முடிந்துவிடும். மறுமை, தீர்ப்பு என்றும் ஒன்றுமே இல்லை.  நாம் இருவருமே தப்பித்துக்கொள்வோம்.
ஆனால், கடவுள் மட்டும் இருந்துவிட்டால்....செத்தாலும் நாங்க தப்பித்துக்கொள்வோம், நீங்க மாட்டிக்கொள்வீர்கள்.

Saturday, 28 January 2012

மகுடம் சூடிக்கொள்ளும் மதவாதிகள்- ஒரு அவதூறுக்கான விளக்கம்......


மதவாதிகளால் தமிழ்மணம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக ஒப்பாரி வைக்கும் அண்ணன் காவி.கே.,அவர்களுக்கு,(பெயர் காரணம் பின்னால்...)
அந்த ஓரிறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

தமிழ்மணத்தை விட்டு விலகப்போவதாகவும் அண்ணன் காவி.கே., சொல்லியிருப்பது இது முதல்முறையல்ல....ஏற்கனவே, முற்றுப்புள்ளி என்ற பதிவின் மூலம் இதே கருத்தை
சொல்லியிருந்தார். ஆனால், போகவில்லை. எழுதுவதும், திரட்டிகளில் இணைப்பதும் அவரவர் உரிமை என்பதால் அதை விட்டுவிட்டு, அவரின் பதிவிற்கான விளக்கங்களை மட்டும் இப்போது பார்ப்போம்.

இப்போது தமிழ்மணத்தை அடைத்துக்கொண்டிருப்பது, மதப்பிரச்சாரம் செய்யும் பதிவுகள் தானென்றும், அப்படிப்பட்ட பதிவுகளே மகுடம் சூடுகிறது என்றும் தன் ஆதங்கத்தை, இயலாமையை வெளிப்படுத்தியிருக்கிறார் அண்ணன் காவி.கே. அவர்கள்.

அவர் பார்த்ததில் எது மதப்பிரச்சாரம் செய்யும் பதிவுகள் என்று தெரியவில்லை. இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிராக காழ்ப்பு உணர்ச்சியால் எழுதப்படும் பதிவுகளுக்கும்,
மதவாதிகள் அதை செய்கிறார்கள். இதை செய்கிறார்கள் என்று ஓலமிடும் போலி நாத்திக மதவாதிகளுக்கும் எதிராக விளக்கம் கொடுக்கிறார்கள் இஸ்லாமியர்கள். அப்படி விளக்கம் கொடுக்கப்படும் பதிவுகள் விரும்பியோ, விரும்பாமலோ அதிக வாக்குகளை பெற்று மகுடம் சூடிக்கொள்கிறது. இதனால் காவி.கே அவர்களுக்கு என்ன பிரச்சினை?

என் வீட்டை ஒருவன் தாக்க வந்தால்,  நான் எப்படி பார்த்துக்கொண்டிருப்பேன், நானும் தற்காப்பிற்கு தாக்குவேன். அதைப்போல் தான், இஸ்லாம் தாக்கப்ப்டும்போது எதிர் பதிவு போடுகிறார்கள். பதில் சொல்கிறார்கள். இது எப்படி மதப்பிரச்சாரம் ஆகும்?. நான் தாக்குவேன் அதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. ஆனால், தாக்கப்பட்ட நீ பதில் சொல்லக்கூடாது. அதற்கு உனக்கு உரிமை இல்லை என்றால் எப்படி சார்?. பதில் சொல்பவனுக்கு பெயர் மதவாதி என்றால்.....ஆரம்பித்து வைத்தவனுக்கு பெயர் என்ன சார்?

சாதரணமாக உங்கள் பெயரையே யாரும் சொல்லக்கூடாது என்று கோபமாகி ஒரு பதிவில் பின்னூட்டமாக போட்டு குவித்தீர்கள். (உங்கள் பெயரை நான் சொல்லாததற்கு காரணம் இப்போது விளங்குகிறதா?) உங்கள் பெயரை சொன்னதற்கே இவ்வளவு கோபப்பட்ட உங்களுக்கு, உலகம் முழுவதும் வேர் பரப்பி, வியாபித்திருக்கும் ஒரு மார்க்கத்திற்கு எதிராக எழுதுபோது எத்தனை பேர் பதில் சொல்வார்கள் என்று உங்களுக்கு விளங்காமல் போச்சே சார்?

அடுத்ததாக, இஸ்லாமியர் தளங்களில் மத நெடி தூக்கலாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு..... நீங்களும் இஸ்லாத்தின் பெருமைகளை எழுதமாட்டீர்கள். அவர்கள் எழுதினாலும் குற்றம் சொல்கிறீர்கள்..அப்புறம் என்ன தான் செய்ய சொல்கிறீர்கள். தானும் படுக்கமாட்டேன், தள்ளியும் இருக்கமாட்டேன் என்று அடம் பிடித்தால் எப்படி சார்?

சார்..உங்களுக்கு ஒரு விளக்கம்.....
நீங்கள் சிங்கப்பூரில் இருப்பதால் அந்த நாட்டின் அருமை பெருமையெல்லாம் நீங்கள் நன்றாக அறிந்திருப்பீகள். அதனால், சிங்கப்பூர் இப்படி ஒரு அருமையான நாடு என்று பதிவு போட்டால்,  நீங்கள் சிங்கப்பூருக்காக பிரச்சாரம் செய்கிறீர்கள் என்றா சொல்லிவிட முடியும்? அல்லது ஒரு கம்பேனியில் வேலை செய்கிறீர்கள்...அந்த கம்பேனியின் அருமை பெருமைகளை பற்றி  நீங்கள் ஒரு பதிவு போட்டால், அந்த கம்பேனிக்கு மற்றவர்களை இழுக்கப்பார்க்கிறீர்கள்  என்றுதான் சொல்லிவிட முடியுமா?. அதைப்பொல்தான் இஸ்லாமியர்கள் சார்ந்திருக்கும் மார்க்கத்தை பற்றி அவர்கள் தளத்தில் எழுதுகிறார்கள். அதெப்படி மதப்பிரச்சாரம் ஆகும்?

நாங்கள் பிரச்சாரம் செய்துதான் இஸ்லாத்திற்கு ஆள் சேர்க்கவேண்டும் என்ற நிலையிலோ, நிர்பந்தத்திலோ இஸ்லாம் இல்லை.

நீங்கள் சிங்கப்பூரை பற்றி பெருமையாக எழுதும்போதும்,  நாங்கள் இஸ்லாத்தை பற்றி பெருமையாக எழுதும்போதும், அதைப்படிப்பவர்களுக்கு இயற்கையாகவே அவர்கள் நாட்டைப்பற்றியும், அவர்கள் சார்ந்திருக்கும் மதத்தைப்பற்றியும் ஒரு ஒப்பீடு மனதில் தோன்றும்... அதற்கு நாங்கள் என்ன செய்யமுடியும்?

அடுத்ததாக, காவி.கே., அவர்களின் பெயரிலேயே சில போலிகள் பின்னூட்டமிடுகிறார்கள் என்று குற்றம் சொல்லியிருக்கிறார்.
அப்படி உங்கள் பெயரில் பின்னூட்டம் போட்டவர்கள் யாரென்று தெரிந்தால் சொல்லுங்கள். நிச்சயம் அதை இஸ்லாமிய பதிவர்கள் கண்டிக்கிறோம். இப்படி போகிற போக்கில் அள்ளித்தெளிக்க வேண்டாம்.

உங்கள் பெயரில் கமெண்ட் போடும் சில போலிகள் போல, இஸ்லாமிய பெயர்களிலும் ஒளிந்துகொண்டு சில விஷமிகள் ஆபாசமாகவும், அருவருப்பாகவும் கமெண்ட் போடுகிறார்கள் என்பதையும் தெளிவு படுத்த விரும்புகிறேன். அப்படி இஸ்லாமிய பெயர்தாங்கி வரும் கமெண்ட்களில் எல்லாம் இஸ்லாமிய பதிவர்களால் போடப்படுவதில்லை. கண்ணியக்குறைவாக வரும் எந்த கமெண்டும் இஸ்லாமியர்கள் போடமாட்டார்கள். அப்படி போடுபவர்கள் இஸ்லாமியரும் அல்ல....

அடுத்ததாக, மதவாதிகளுக்கு பயப்படுகிறேன், அவதூறுகளுக்கு பயப்படுகிறேன் என்று பம்மியிருக்கிறார் காவி.கே., அவர்கள்.
ஒரு கருத்தை முன்வைக்கும்போது, அந்த கருத்துக்கு வரும் எதிர்கருத்தையும் எதிர்கொள்ளும் திராணியும், தைரியமும் வேண்டும். அப்படிப்பட்ட மனப்பக்குவம் இருந்தால் தான் எந்த ஒரு கருத்தையும் சொல்லவேண்டும்.

இஸ்லாம் பற்றி அவதூறு சொல்வது நீங்கள். அதற்கு பதில் விளக்கம் சொல்வது நாங்கள். ஆனால், அதை அப்படியே மாற்றி, நீங்கள் சொல்வது கருத்து என்றும், நாங்கள் சொல்லும் விளக்கத்தை அவதூறு என்றும் திரித்து விட்டீர்கள். புத்திசாலி சார் நீங்கள்.

நீங்கள் சொல்வது கருத்து என்றால்.... இஸ்லாமிய பதிவர்களாகிய நாங்கள் சொல்வது விளக்கம்.
நீங்கள் சொல்வது அவதூறு என்றாலும் நாங்கள் சொல்வது விளக்கம் மட்டுமே...
அது உங்களுக்கு அவதூறாக தெரிந்தால் உங்கள் பார்வையில்தான் கோளாறு...

உங்களுக்கு தக்காளி சட்னியே வந்தாலும் அதற்கு பெயர் ரத்தம்.... ஆனால், எங்களுக்கு ரத்த்மே வந்தாலும் அதற்கு பெயர் தக்காளி சட்னி
என்றுதானே சார் சொல்ல வருகிறீர்கள்?

என்னதான், எப்படித்தான் எழுதினாலும் உங்கள் பதிவு மகுடம் சூட வில்லை என்ற இயலாமையில் தான் இதை எழுதியிருக்கிறீர்கள் என்று விளங்குகிறது.
அது உங்கள் தவறு.... மகுடம் சூடும் அளவிற்கு தகுதியான பதிவுகளை எழுதாமல் தரங்கெட்ட பதிவுகளை எழுதும் உங்களுக்கு மைனஸ் வோட்டுதான் விழும்...வேறென்ன மலர் மாலையா விழும்?

டிஸ்கி: தயவு செய்து இதற்கு வாக்களித்து, மகுடம் சூட்டி அண்ணன் காவி.கே., அவர்களின் கோபத்திற்கும் சாபத்திற்கும் ஆளாகவேண்டாம் நண்பர்களே.....

Tuesday, 24 January 2012

நாத்திகர்கள் vs ஆத்திகர்கள்.....சில விளக்கங்கள்மதம் என்பதே மனிதனுக்கு தேவையில்லை. கடவுளை மறுத்தால் இம்மண்ணில் சொர்க்கத்தை படைக்கலாம் என்று சொல்லிவருகிறார்கள் நாத்திகர்கள். அவர்கள் இந்த மண்ணில் சொர்க்கத்தை படைக்கலாம் என்று சொல்வதன் அர்த்தம் அவர்கள் சொர்க்கமாக நினைக்கும் மது, மாது போன்றவற்றை தடையின்றி அணுகலாம் என்பதால்தான். மதத்தில் இருந்தால் இதையெல்லாம் தொட தடையிருக்கிறதே?

எப்படியும் வாழலாம் என்றிருப்பவர்களை இப்படித்தான் வாழ வேண்டும் என்று பக்குவப்படுத்துவதே மதங்களின் குறிக்கோள் நோக்கம் எல்லாம்.
யாருமே நம்மை பார்க்கவில்லை, கண்காணிக்கவில்லை என்றால் நம்மிடம் தவறுகள் மேலோங்கிவிடும். ஆனால், நம்மை கண்கானிக்க ஒருவன் இருக்கிறான் என்றால்....

உதாரணமாக, ஒரு அலுவலகத்தில் நாம் வேலை செய்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். நம் தலைக்கு மேல் ஒரு கேமராவை பொருத்தி நாம் ஒழுங்காக வேலை செய்கிறேனா என்று நம் முதலாளி என்னை கண்காணித்துக்கொண்டிருக்கிறார். அப்போது நமக்கு என்ன தோன்றும்?
நம்மை முதலாளி பார்த்துகொண்டே இருக்கிறார். நாம் எதாவது தவறுசெய்தால் தொலைந்தோம் என்ற எண்ணத்தில் நம்மிடம் ஒரு ஒழுங்கு இருக்கும்.

ஆனால், எந்த்க்கேமராவும் தலைக்கு மேலில்லை. கண்கானிக்க யாரும் இல்லை என்றால் நாம் ஒழுங்காகவா வேலை பார்ப்ப்போம்?. நம்மை பார்க்க ஆளில்லை என்ற எண்ணத்தில் நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் அல்லவா? அதுபோல் தான் கடவுள் நம்பிக்கையும்....

நாம் செய்பவற்றை கடவுள் கண்கானித்துக்கொண்டிருக்கிறார். நாம் ஏதேனும் தவறிழைத்தால் கடவுளிடம் மாட்டிக்கொள்வோம் என்ற நினைப்பில் ஒருவன் இருந்தால் அவன் விபச்ச்சாரம், திருட்டு, குடி, போன்ற அனாச்சாரங்களிலிருந்து ஒதுங்கியே வாழ்வான். மேற்கண்ட தவறுகளை ஒருவன் செய்யாமலிருந்தால் அவனுக்குத்தானே நன்மை.

அதைப்போல, கடவுள் என்ற ஒரு சக்தி இல்லை என்ற நினைப்பிலிருப்பவன் மேற்கண்ட செயல்களை எவ்வித தடையுமின்றி செய்வான். அதனால் அவனுக்கும் அவனை சார்ந்தவர்களுக்கும் தீமையே....

இன்னும் ஒரு உதாரணம்....
ஒருவன் உள்ளூரில் இருக்கும்போது மதுவின் பக்கம் நெருங்கவே மாட்டான். அதே...அவன் வெளியூர் சென்றானென்றால் மது, மாது என்று தலைகீழாக இருப்பான். அவன் ஏன் அப்படி உள்ளூரில் ஒரு மாதிரியும், வெளியூரில் ஒரு மாதிரியும் இரட்டைவேடம் போடுகிறான் என்று பார்த்தால்....அவன் உள்ளூரில் மது அருந்திவிட்டு அவன் வீட்டிற்கு சென்றால் தாய், தந்தை, மனைவி என்று யாரிடமாவது மாட்டிக்கொள்வான். அதே வெளியூரென்றால், தன்னை கண்கானிக்க தாய், தந்தை, மனைவி என்று யாருமே இல்லை என்ற அசட்டு துணிச்சலில் மது, மாது மீது நாட்டம் கொள்கிறான். கடவுள் பக்தி இருப்பவன் உள்ளூரில் இருப்பவன் போன்றவன் எதையும் செய்ய பயப்படுவான்.
கடவுள் பக்தி இல்லாதவன் வெளியூர் செல்பவன் போல....அவன் யாருக்கும் பயப்பட தேவையில்லை.

ஒரு மனிதனை கட்டுப்பாட்டுடன் வாழவைப்பதில் கடவுள் பக்தி பெரும்பங்கு வகிக்கிறது. கடவுள் பக்தியுடனும், கட்டுப்பாட்டுடனும், ஒழுங்குடனும் வாழ்பவனுக்கு பெயர் மதவாதி என்றால்.....அவன் மதவாதியாகவே இருந்துவிட்டு போகட்டுமே அதனால் நாத்திகர்களுக்கு என்ன பிரச்சினை?.

டிஸ்கி:  மற்றவர்களின் நம்பிக்கையை மூட நம்பிக்கை என்று பழித்துவிட்டு, தன் நண்பனுக்கு அதே (மூட) நம்பிக்கையின் அடிப்படையில் திருமணம் செய்துவைத்த போலி நத்திகர்களை போல ஆத்திகர்களிலும் சில விதிவிலக்குகள் உண்டு.

சுயசொறிதல்

நானும் ரொம்பநாளா பார்த்துக்கு இருக்கேன். சிலர் நல்லா எழுதுறாங்க..சிலர் மொக்கையா எழுதுறாங்க....சினிமாவை எழுதுறாங்க, அரசியல் எழுதறாங்க...விளையாட்டு எழுதறாங்க....மதம் பற்றி எழுதுறாங்க...அதுதான் நானும் அதைப்ற்றி எழுத வந்துட்டேன். இனி இங்கு கலவையா சரக்கு கிடைக்கும் உங்கள் ஆதரவை தந்தாலே  போதும் நானும் கொஞ்சம் வளருவேன்