Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Thursday, 10 April 2014

புதிய சர்ச்சை: நான் திருமணமானவன் - ஒப்புக்கொண்ட மோடி..


தேர்தல் களத்தில் மற்றுமொரு பரபரப்பு நிகழ்வாக, தான் மணமானவன் என்பதை முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார் மோடி. 

இதுநாள்வரை தான் ஒரு பிரம்மச்சாரி என்று (பொய்) கூறி வந்த அவர், நேற்று தாக்கல் செய்த வேட்புமனுவில், ஜஷோதாபென் தன் மனைவி என்று குறிப்பிட்டுள்ளார். 2001, 2002, 2007, 2012 தேர்தல்களில் இந்த கேள்வியை வெறுமனே விட்டு வந்த மோடி, தேர்தல் துறையின் நடவடிக்கையால் பதில் சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டதே தற்போது உண்மை வெளிவந்துள்ளதற்கான காரணம். 

நேற்று காலையே வேட்புமனுவை மோடி தாக்கல் செய்துவிட்ட நிலையில், குஜராத் தேர்தல் துறையின் தளங்களில் இன்று அதிகாலை மட்டுமே இந்த படிமங்கள் பதிவேற்றப்பட்டுள்ளது மர்மமாக உள்ளது. இன்று, 14 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடப்பது இது தொடர்பில் குறிப்பிடத்தக்கது. 

Feb 17-ல், தான் ஒரு பிரம்மச்சாரி என்று டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு மோடி அளித்த பேட்டி

மோடி ஆதரவாளர்கள் முதற்கொண்டு பலரும் இதுக்குறித்து கடும் அதிருப்தியை வெளியிட்டு வரும் தருணத்தில் பின்வரும் கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

* இன்று ஒப்புக்கொள்ளும் மோடி, தன் திருமணம் குறித்த உண்மைகளை இதுநாள்வரை மறைத்து பொய் சொன்னதற்கான காரணம் என்ன?

* ஒரு மனைவிக்கான இன்ப துன்பங்களை இழந்த ஜஷோதாபென் செய்த தவறு தான் என்ன?

* ஒரு பெண்ணிற்கான மரியாதை உங்கள் அகராதியில் இதுதானா?

* தனக்கு இருப்பது இந்த வேலை மட்டுமே, மோடி குறித்து எதையேனும் கூறி தன் வேலையை இழக்க விரும்பவில்லை என்று ஜஷோதாபென் கூறினாரே அதற்கு அர்த்தம் தான் என்ன?

* தன் மனைவியை தனிமையில் வாடச்செய்வதையும் பொருட்படுத்தாமல் செயல்படும் உங்கள் கொள்கை என்ன?

* பொய் பொய் இதுதான் மோடி என்பதற்கான மறு பெயரா?


ஆதார சுட்டிகள்: 
Saturday, 5 April 2014

மோடியை கிழித்த தி எக்கனாமிஸ்ட், கொதிக்கும் பாஜக...


லகின் பிரபல ஊடகங்களில் ஒன்றான தி எக்கனாமிஸ்ட், மோடி போன்ற ஒருவர் இந்தியாவை ஆள தகுதியில்லை என்று கூறி பாஜகவை கொதிக்க வைத்துள்ளது, கூடவே மோடி ஆதரவாளர்களையும் தான். 

இதற்கு காரணமாக குஜராத் படுகொலைகளை சுட்டிக்காட்டியுள்ள தி எக்கனாமிஸ்ட், "குஜராத் படுகொலைகளுக்கான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன, இதனாலேயே இவ்வழக்கு முடிவு பெறாமல் இருக்கின்றது. தன்னுடைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்துவிட்டு, குஜராத் படுகொலைக்களுக்கான விளக்கத்தை மோடி தந்திருக்க வேண்டும். மன்னிப்பும் கேட்டிருக்க வேண்டும். ஆனால் இதுக்குறித்த கேள்விகளுக்கு மோடி பதிலளிக்க மறுக்கின்றார். முஸ்லிம்களின் அச்சத்தை போக்க முயற்சிக்காமல் அதனை ஊக்கப்படுத்திவதில் முனைப்பாக உள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான வாக்கு வங்கியை குறிவைத்து அவற்றை வளர்த்துக்கொண்டிருக்கின்றார்" என்று படுகாட்டமாக விமர்சிக்கின்றது.

தங்கள் பிரதம வேட்பாளரின் தகுதி ஆதிக்கமிக்க சர்வதேச ஊடகங்கள் வரை அசிங்கப்படுவதை அறிந்த பாஜக இதுக்குறித்து கொதித்துக்கொண்டிருக்கின்றது. இங்குள்ள நிலைமையை அறியாமல் எக்கனாமிஸ்ட் பேசுவதாக பதறுகின்றது பாஜக. ஒரு பிரதம வேட்பாளர் இவ்வளவு எதிர்மறை விமர்சனத்திற்குள்ளாக்கப்படுவது நான் அறிந்து இதுவே முதல் முறை. 

"ராகுல் காந்தி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்படுமா என்று தெரியவில்லை. ஆனால் பாதிப்பு குறைவு என்ற கருத்தோட்டத்தில் அதனையே இந்தியர்களுக்கு பரிந்துரைக்கின்றோம்" என்றும் கூறியுள்ளது எக்கனாமிஸ்ட். 

ஏற்கனவே குஜராத் முன்னேற்றம் இத்தியாதி இத்தியாதி என்று எல்லாம் அம்பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் எக்கானாமிஸ்ட்டின் இந்த கட்டுரை தேர்தல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது.. 


கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ 

Wednesday, 2 April 2014

குஜராத் முன்னேற்றம்? - பாஜகவிற்கு மற்றுமொரு பலத்த பின்னடைவு...ந்தியாவின் உற்பத்தி தொழிற்சாலைகள் & அவை ஏற்படுத்தும் வேலைவாய்ப்புகள் குறித்த சமீபத்திய ஆய்வு முடிவுகள் (2011-2012 காலக்கட்டத்திற்கானது) வெளிவந்துள்ளன. இன்னும் பொதுவில் வெளியிடப்படாத இம்முடிவுகளை தி ஹிந்து ஆங்கில இதழ் சில மணி நேரங்களுக்கு முன்பாக வெளியிட்டுள்ளது. இதன்படி, அதிமுக ஆளும் தமிழகம் முதல் இடத்திலும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான மகாராஷ்டிரா & ஆந்திரா முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களையும் பிடித்துள்ளன. பாஜக ஆளும் குஜராத்தோ நான்காம் இடத்தையே பிடித்துள்ளது. 

இதில் அதிமுகவை தவிர்த்து, காங்கிரஸ் ஆந்திராவில் கடந்த பத்து ஆண்டுகளாகவும், மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு சவாலாக திகழும் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கடந்த பதினைந்து ஆண்டுகளாகவும், குஜராத்தில் பாஜக கடந்த பதினைந்து ஆண்டுகளாகவும் ஆட்சியில் இருப்பது குறிப்பட்டத்தக்கது. உற்பத்தி தொழிற்சாலைகள் போல பணவீக்க கட்டுப்பாட்டிலும் பாஜக ஆளும் மாநிலங்கள் பின்னடைவிலேயே இருப்பதாக சில நாட்களுக்கு முன்பாக வந்த மற்றொரு ஆய்வு கூறியிருந்தது. 

ஆய்வு முடிவுகளை விளக்கும் படம். 

வகுப்புவாத கலவரங்கள் மற்றும் இன்ன பிற செயல்பாடுகளின் மூலம் மக்களை பிளவுப்படுத்தி நாட்டின் ஒற்றுமையை சீர்குலைத்து கொண்டிருக்கும் பாஜக, தொழிற்சாலைகள் & வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம், பணவீக்கத்தை கட்டுப்படுத்துவோம் என்ற முகமூடி அணிந்து இம்முறை பிரச்சாரம் மேற்கொண்டிருக்கின்றது. ஆனால், அவர்கள் ஆளும் மாநிலங்களில் தான் இந்த பிரச்சனைகள் அதிகமிருக்கின்றன. குஜராத் வளர்ச்சி என்னும் பிம்பம் ஏற்கனவே பலரால் அம்பலப்படுத்தப்பட்ட நிலையில், இந்த முகமூடியும் அந்தோ பரிதாபம் என்று கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கின்றது. 

Gujarat Development Model??? 


கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ