Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Thursday, 1 December 2016

வசமாக சிக்கிக் கொள்ளப்போகும் மோடி அரசு...

ந்தியன் எக்ஸ்ப்ரெஸ் இணையதளம், சற்று முன்பாக, ஒரு முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ஆவணங்களை மேற்கோள் காட்டி, செல்லா நோட்டு அறிவிப்பு வெளியான நவம்பர் 8-ஆம் தேதி வரை, ரிசர்வ் வங்கியில் இருந்த கையிருப்பு தொகை 4.70 இலட்சம் கோடி ரூபாய் என்று போட்டுடைத்துள்ளது. நவம்பர் 27 வரை வங்கியில் மக்களால் டெபாசிட் செய்யப்பட்ட தொகை 8.5 இலட்சம் கோடி என்று ஏற்கனவே ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆக மொத்தம் சுமார் 13 இலட்சம் கோடி ரூபாய் தற்போது ரிசர்வ் வங்கி வசம் உள்ளது. மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்த தகவலின்படி, 500 1000 ரூபாய்களின் மொத்த மதிப்பு 15.44 இலட்சம் கோடி. அப்படியானால், மேற்கொண்டு வர வேண்டியது 2.5 இலட்சம் கோடி மட்டுமே. காலக்கெடு முடிய இன்னும் 30 நாட்கள் இருக்கும் நிலையில், குறைந்தபட்சம் இரண்டு இலட்சம் கோடியாவது வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வந்துவிட்டால், அரசுக்கு மிஞ்சப்போவது வெறும் 20-50 ஆயிரம் கோடி லாபம் மட்டுமே. கிட்டத்தட்ட எல்லா பணமும் வந்துவிட்டால் கறுப்பு பணம் எங்கே போனது? இந்த சொற்ப தொகைக்காகவா மக்களுக்கு இவ்வளவு கஷ்டங்கள் என்ற கேள்விக்கணைகள் அரசுக்கு பெரும் தலைவலியாக மாறப்போகும் தருணம் வெகு தொலைவில் இல்லை. இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் ஊடகமும், இது தொடர்பில், பெரும் அதிர்ச்சி ஒன்று அரசுக்கு காத்திருப்பதாகவே கூறுகின்றது.

செல்லா நோட்டு விவகாரம் தொடர்பாக ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் ஒருமுறை கூறிய கருத்து இங்கே கவனிக்கத்தக்கது. "செல்லா நோட்டு திட்டத்தை நான் ஆதரிக்க மாட்டேன். ஏனென்றால் கிட்டத்தட்ட எல்லா பணமும் திரும்ப வந்துவிடும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றி வங்கிகளுக்கு கொண்டுவர பல வழிகள் இருப்பதால், இத்திட்டத்தை நான் ஆதரிக்க மாட்டேன்" என்று அவர் தெரிவித்திருந்தார். அவர் கூறியப்படியே இன்று நடக்கிறது.

3 முதல் 5 இலட்சம் கோடி வரை திரும்ப வராது, நாம் ஆதாயம் பார்க்கலாம் என்றிருந்த அரசின் எண்ணத்தில் பெரும் இடி இறங்கியிருப்பதின் பிரதிபலிப்பு தான் மத்திய அரசின் சமீபத்திய தடுமாற்றங்கள். நாளைவரை மட்டுமே ஐநூறு ரூபாய் செல்லும் என்று, தாங்கள் முன்னர் அறிவித்ததற்கு முரணாக செயல்படுவதும் இந்த தடுமாற்றத்தின் ஒரு பகுதி தான். என்ன நடக்க போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கட்டுரை: ஆஷிக் அஹமத் அ

Saturday, 30 January 2016

விசித்திரமான அநாதை இல்லங்கள்...


சில மாதங்களுக்கு முன் என் சொந்தம் ஒருவருக்காக மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களை வைத்து பராமரிக்கும் இல்லம் ஒன்றை விசாரிக்கச் சென்றேன்.

சென்னை போரூர் அருகே இருக்கும் பரணிபுத்தூரில் உள்ளது அந்த இல்லம். நண்பரின் அக்காளை அங்கு சேர்ப்பது தொடர்பாக விசாரிக்கச் சென்றேன்.

மாலை மங்கி இரவு கவ்வும் நேரம் அது. ஒரு பெரிய காம்பவுன்ட் சுவற்றின் பின்புறம் அந்த இல்லம் இருந்தது. உள்ளே முழுக்க முழுக்க பெண்களின் நடமாட்டம். பெரும்பாலும் மனநலம் குன்றியவர்கள் என்பது எளிதில் புரிந்தது.

கேட் மூடி இருந்தது. நிர்வாகி போல் தெரிந்த ஒருவரைக் கண்டேன். சுவற்றிற்க்கு இந்த புறம் இருந்தே ஒரு நபரை சேர்ப்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்றேன். அவர் அங்கே இருக்கும்படி சொல்லிவிட்டு வேறு ஒரு நிர்வாகியிடம் சொன்னார். அவரும் பெண் தான்.

அந்த அநாதை இல்லத்தின் சட்ட திட்டங்கள் என்னை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கின.

1. அதாவது, அங்கு யாரையும் சேர்க்க வேண்டும் என்றால் சேர்த்ததுடன் சென்று விட வேண்டுமாம். அதன் பின் அவர்களுடன் எந்த தொடர்பும் இருக்கக் கூடாதாம்.

2. எந்த கட்டணமும் செலுத்தத் தேவை இல்லை. அனைத்தும் இலவசம்.

3. போலீஸிடம் நோ அப்ஜெக்சன் சர்டிபிகேட் வாங்கி வந்தால் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

4. இறந்தால் கூட தகவல் தர மாட்டார்களாம். அவர்களே புதைத்தோ, எரித்தோ விடுவார்களாம்.

நான் அப்டியே ஸ்டன் ஆகிட்டேன். இந்த சட்டதிட்டங்கள் என்னை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஒருபுறம் என்றால், இன்னொரு விஷயம் என்னை அதைவிட அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அது...

அங்கு எண்ணற்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் இருந்தார்கள். அப்படி என்றால் அவர்கள் பற்றி கவலைப்பட ஒருவர் கூட இல்லை என்று தானே பொருள்?

இந்த உலகம் பெரியது. ஒருவருக்கொருவர் உற்ற துணை. யாரும் தனி இல்லை என்று சொல்பவர்கள் ஒரே ஒரு முறை அங்கு சென்று வந்தால் கதறி அழுது தன் கருத்தை மாற்றிக் கொள்வார்கள்.

எனக்கும் பேரிடி இறங்கியது.

அந்த நேரம் என் மனைவியுடன் போனில் பேசி என் அதிர்ச்சியை பகிர்ந்து கொண்டேன். இல்லாவிட்டால் நிச்சயம் நானும் கதறி அழுதிருப்பேன்.

இது குறித்து நான் என் சொந்தத்திடம் சொல்லவே இல்லை. சொல்லவும் தோணவில்லை.

குறிப்பு: நம்மை எல்லாம் இறைவன் எவ்ளோ நல்லா வச்சிருக்கான் தெரியுமா?

தயவுசெய்து அது இல்லையே, இது இல்லையேன்னு வருத்தப்படாதிங்க. அங்கே பலர் யாருமே இல்லாம இருக்காங்க. நமக்கு கேவலம் பொருட்கள் தான் இல்லை.

கட்டுரை: சிராஜுதீன்