Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Monday, 29 December 2014

அமீர்கானின் பிகே - சொல்லும் செய்தியும், சர்ச்சைகளும்...


வேற்று கிரகத்திலிருந்து பறக்கும் தட்டில் வந்து பூமியில் இறங்குகிறார் பிகே (அமீர்கான்)! அது இறங்கிய இடம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம். அந்த பறக்கும் தட்டின் சாவி அவர் கழுத்தில் ஜொலிக்கிறது. பூமியில் அனைவரும் தங்கள் உடம்பை மறைத்துக் கொண்டு கண்ணியமாக செல்வதை ஆச்சரியத்தோடு பார்க்கிறார். அந்த வழியே வந்த ஒரு வழிப்போக்கன் இவரது கழுத்தில் ஜொலிக்கும் அந்த சாவியை ஏதோ விலையுயர்ந்த ஆபரணம் என்று தவறாக கருதி பிகேயிடமிருந்து பிடிங்கிக் கொண்டு ஓடி விடுகிறார். அந்த சாவி இல்லாமல் அவரது கிரகத்துக்கு திரும்ப முடியாது. எனவே அந்த சாவி எவ்வாறு கிடைக்கப் பெற்று திரும்பவும் தனது கிரகத்துக்கு செல்கிறார் என்பதுதான் கதை.

பூமியில் மக்களிடம் பேசுவதற்காக போஜ்பூரி பாஷையை கற்றுக் கொள்கிறார் பிகே. அந்த மக்களிடம் தனது சாவி எங்கு கிடைக்கும் யாரைப் பார்க்கலாம் என்று கேட்க, 'கடவுளை பார்.. அவரிடம் கோரிக்கை வை' என்கின்றனர் எல்லோரும். 

ஒரு கடைக்கு செல்கிறார். 

'எனக்கு கடவுள் வேண்டும்'

'15 ரூபாய், 25 ரூபாய், 50 ரூபாய் எந்த கடவுள் வேண்டும்?' கடைக்காரர் சாமி சிலைகளை காட்டி கேட்கிறார்.

'எனது கோரிக்கை ஒன்றுதான். எல்லா கடவுளும் ஒன்றுதான் எனும் போது எனக்கு விலை குறைந்த கடவுளை தரவும்'

'அப்போ 15 ரூபாய் கடவுளை தருகிறேன்' 

கடைக்காரர் சிலையை தர வாங்கிக் கொள்கிறார் பிகே. 

அடுத்து கதாநாயகி ஒரு பாகிஸ்தானிய முஸ்லிமை (அஃப்ராஸ்) பெல்ஜியத்தில் காதலிக்கிறாள். இந்த செய்தியை தனது பெற்றோருக்கு தெரிவிக்கிறார். 'இந்துவாக எங்கள் குடும்பத்தில் பிறந்த நீ ஒரு முஸ்லிமை காதலிப்பதா? கூடாது இதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்' என்று எதிர்க்கின்றனர் பெற்றோர். கதாநாயகியின் தந்தை தனது குருவான துறவியிடம் இந்த செய்தியை கொண்டு செல்கிறார். 

'பாகிஸ்தானிகள் நம்பிக்கை துரோகம் செய்து விடுவார்கள். உனது வாழ்வு வீணாகி விடும்' என்று அந்த துறவி கதாநாயகியை மிரட்டுகிறார். 'இல்லை! எனது காதலன் எனக்கு நம்பிக்கை துரோகியாக மாட்டான். நான் அவனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன்' என்று கண்டிப்புடன் கூறி தொடர்பை துண்டிக்கிறாள் கதாநாயகி.

அந்த துறவி சொன்னது போல் நம்மை இந்த பாகிஸ்தானி ஏமாற்றி விடுவானா என்ற யோசனையில் ஆழ்ந்த போது காதலனும் அருகில் வருகிறான். 

'நாம் நாளை திருமணம் முடிக்கிறோம்' - இது நாயகி

'ஏன் என்ன அவசரம்?' -பாகிஸ்தானி

'அதெல்லாம் ஒன்றுமில்லை. நாளை நமது திருமணம் ரிஜிஸ்டர் ஆபிஸில் நடக்கிறது. மறக்காமல் வந்து விடு'

மறுநாள் ரிஜிஸ்டர் ஆபிஸில் கதாநாயகி காத்திருக்கிறாள். ஆனால் சிறுவனொருவன் ஒரு காகிதத்தை கொடுக்கிறான். அதில் 'மன்னிக்கவும். திருமணம் முடிக்கும் மன நிலையில் நான் இல்லை' என்று எழுதியிருந்தது. தனது பெற்றோரும் துறவியும் சொன்னது சரியாகி விட்டதே என்று எண்ணி அழுதவளாக இந்தியா திரும்புகிறாள். ஆனால் இந்த பெண்ணை குடும்பத்தில் பெற்றோர் சேர்க்கவில்லை. எனவே ஒரு செய்தி சேனலில் ரிப்போர்ட்டராக சேருகிறார். 

அங்குதான் பிகேயை சந்திக்கிறாள். அதன் பிறகு பாகிஸ்தானி அவளை ஏமாற்றவில்லை, அந்த துண்டு சீட்டு வேறொரு பெண்ணுக்கு வந்தது, தவறாக கதாநாயகியிடம் கொடுக்கப்பட்டது என்பதை பிகே வெளிப்படுத்தி எல்லா நாட்டிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே உள்ளனர் என்பதை விளக்குகிறார்.

இந்து, கிறித்தவம், இஸ்லாம் என்ற மூன்று மதத்தையும் இந்த படத்தில் ஒரு பிடி பிடிக்கிறார் இயக்குனர். மூன்று மதங்களிலும் புரோகிதம் எந்த அளவு வேரூன்றியுள்ளது என்பதை அழகாக விவரிக்கிறார். 'பெண்கள் கல்வி கற்கக் கூடாது' என்று இஸ்லாம் சொல்லவில்லை. பிறகு ஏன் பெண்கள் கல்வி கற்பதை எதிர்க்கிறீர்கள்? அந்த அதிகாரத்தை உங்களுக்கு கொடுத்தது யார்?' என்ற கேள்வியையும் வைக்கிறார் டைரக்டர். இந்த கேள்வியானது, தாலிபானிய மனப்போக்கு கொண்டவர்களை பார்த்து கேட்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. 

கடவுளுக்கு நாம் கோரிக்கை வைக்க இடையில் இந்த இடைத்தரகர்களான புரோகிதர்கள் எதற்கு என்று பல இடங்களில் கேள்வி கேட்கிறார். "ஒரு தாய் தனது குழந்தைக்கு பசியறிந்து சோறு ஊட்டுகிறாள். அதற்கு காணிக்கை எதுவும் வாங்குவதில்லை. தாயை விட மேலான இறைவனிடம் கோரிக்கை வைக்க உண்டியலில் பணத்தை போடச் சொல்கிறீரே! இப்படி உண்டியலில் பணம் போடச் சொல்லி கடவுள் உங்களுக்கு கட்டளையிட்டாரா?' - சரியான கேள்வி தான். 

இப்படத்தை தடை செய்ய வேண்டுமென்றும், மக்கள் பார்க்க கூடாதென்றும் சிலர் சர்ச்சைகளை ஏற்படுத்துவது கவலைக்குரியது. இன்று நாட்டின் சில இடங்களில் திரையரங்குகள் நொறுக்கப்பட்டுள்ளன. சமயங்களில் சொல்லப்படாத பழக்கங்களை விட்டொழிப்பது தான் ஆரோக்கியமான நல்வாழ்விற்கு வழிவகுக்கும். இதற்கு எந்த மதமும்/மார்க்கமும் விதிவிலக்கல்ல. 

8 comments:

Nasar said...

அஸ்ஸலாம் அலைக்கும் சகோ ...
சினிமாவுக்கும் எனக்கும் வெகு தூரம்.
 விமர்சனம் நன்றாக இருப்பதால் PK பார்பதற்கு முயற்சி செய்கிறேன் ..

mohamedali jinnah said...

அருமையான கட்டுரை
விளக்கமான பதிவு
வாழ்த்துகள்

Anonymous said...

Good view.

Seshan dubai

suvanappiriyan said...

பதிவை தளத்தில் கொடுத்ததற்கு நன்றி சகோ ஆஷிக்!படத்தில் இரண்டு காட்சிகள் சற்று விரசமாக வருகின்றன. அதை தவிர்த்து விட்டுப் பார்த்தால் மிகச் சிறந்த படம் பிகே!

suvanappiriyan said...

அகமதாபாத்: இந்துக் கடவுள்களையும், இந்து மத நம்பிக்கையையும் இழிவு படுத்தும் விதமாக காட்சிகள் அமீர்கானின் 'பிகே' படத்தில் இருப்பதாகக் கூறி அந்த திரைப்படம் ஓடும் தியேட்டர்கள் மீது பஜ்ரங்தள் அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

எந்த காட்சிகளும் நீக்கப்படாது: சென்சார் போர்டு திட்டவட்டம்

இதனிடையே இந்து அமைப்புகளின் கோரிக்கையின்படி பிகே திரைப்படத்தின் எந்த ஒரு காட்சியும் நீக்கப்படாது என மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

"ஒவ்வொரு படமும் யாரோ சிலரின் மத உணர்வுகளை புண்படுத்தக்கூடும். அதே சமயம் தேவை இல்லாமல் எந்த ஒரு காட்சியையும் எங்களால் நீக்க முடியாது. பிகே படத்திற்கு ஏற்கனவே நாங்கள் தணிக்கை சான்று வழங்கிவிட்டோம். பொதுமக்களும் பலர் அதனை கண்டு களித்துவிட்டனர்,எனவே அதில் எந்த ஒரு காட்சியையும் எங்களால் நீக்க முடியாது" என மத்திய திரைப்பட தணிக்கை வாரிய தலைவர் லீலா சாம்சன் தெரிவித்துள்ளார்.

தகவல் உதவி
விகடன்
30-12-2014

விஸ்வரூபம் படத்துக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது பொங்கி எழுந்த அதி மேதாவிகள் தற்போது வாய் மூடி மவுனமாக வேடிக்கை பார்க்கின்றனர். இது தான் இந்தியா! இது தான் தமிழகம். :-(

Unknown said...

khan என்றாலே ayusha22 aashiq_14 rabbani ashfa shareef2000 peersadik@gmail.com ipeace48 yunus alimustaq jeenathnisha r_abdul peermohamed.m@gmail.com syedabthayar721 இத்தனை khanகள் வோட்டு விழுந்துவிடும் போலிருக்கே !

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

படம் நன்றாக வந்திருக்கிறது போய்ப்பார் என்று பெங்களுருவிலிருந்து வந்த என் தம்பி சொன்னான். எங்களுருக்கு இன்னும் வரலயே? வந்தவுடன் நிச்சயம் பார்ப்பேன். தங்கள் விமர்சன அறிமுகத்திற்கு நன்றி.

syedabthayar721 said...

\\\ khan என்றாலே ayusha22 aashiq_14 rabbani ashfa shareef2000 peersadik@gmail.com ipeace48 yunus alimustaq jeenathnisha r_abdul peermohamed.m@gmail.com syedabthayar721 இத்தனை khanகள் வோட்டு விழுந்துவிடும் போலிருக்கே !///

ஒரு பதிவுக்கு வோட்டு போடுவது அவ்வளவு பெரிய குற்றமா பகவான்ஜி . பிடித்த பதிவுக்கு வோட்டு போடுகிறேன் . Dr. நம்பல்கி பதிவுக்கும் தான் நிறையதடவை வோட்டு போட்டுள்ளேன். அப்போது எல்லாம் தாங்கள் சொல்லவில்லையே . இதற்க்கு ஏதும் உள்நோக்கம் உள்ளதோ என்று சந்தேகமாக உள்ளது ?? நான் கான் அல்ல. 100% தமிழ் மட்டுமே தெரிந்த தமிழ் முஸ்லிம்.

நன்றி
M. செய்யது
Dubai.