இடம்: இரத்த வங்கி, இந்திரா காந்தி அரசு மருத்துவமனை பாண்டிச்சேரி.
"என்னமா?" - இரத்த வங்கி அதிகாரி.
"புள்ள முடியாம கிடக்குதுங்க. ஆப்பரஷேன் பண்ணும்னு டாக்டர் சொல்றாங்க. இரத்தம் வேணுமாம். இத கொடுத்து அனுப்புனாங்க" - எந்த வகை இரத்தம், எத்தனை யூனிட் வேண்டுமென்று எழுதப்பட்டிருந்த துண்டு காகிதத்தை நீட்டுகின்றார் அந்த இளவயது பெண்.
"சரிமா.. உங்க புருஷன வர சொல்லுங்க. அவர டெஸ்ட் பண்ணி கொடுக்க செய்யலாம்"
"அவரு 'தண்ணி' சாப்பிடுரவருங்க"
"அப்ப சொந்தகாரங்களையாவது வர சொல்லுங்க"
"இல்லங்க அவங்களும் அப்படித்தான்"
"என்னமா இப்படி சொல்றீங்க. போய் யாரைவது கூட்டிட்டு வாங்க"
"எனக்கு வேற யாரையும் தெரியாதுங்க. என் புள்ளைய காப்பாத்துங்க" - அழத் தொடங்குகின்றார்.
இது பாண்டிச்சேரி அரசு மருத்துவமனை என்றில்லை, நகரத்தின் மற்றுமொரு பிரதான மருத்துவமையமான ஜிப்மரிலும் இக்காட்சிகளை தொடர்ச்சியாக காண முடியும்.
இதனை விடுங்கள். பின்வரும் சம்பவத்தை நீங்கள் எப்படி ஜீரணிப்பீர்கள்?
அறுவை சிகிச்சை உடனடியாக செய்ய வேண்டும். அரிதான நெகடிவ் வகை இரத்தம் தேவை. பக்கத்திலேயே அந்த வகை இரத்தம் கொண்ட உறவினர் இருக்கின்றார். ஆனால், மதுவருந்தி சில மணி நேரங்கள் தான் ஆகியுள்ளதால் அவர் இரத்தத்தை ஏற்க மறுத்துவிட்டனர். எப்படி ஜீரணிப்பீர்கள் இச்சம்பவத்தை??
வேறதையும் விடுங்கள். தன் சொந்த பிள்ளைக்கு, பெற்றோருக்கு, சகோதர சகோதரிக்கு கூட பயன்படவில்லை என்றால் உயிர் இருந்தும் அந்த உடல் சவம் தானே?
இரத்தம் தேவை என்று வரும் தகவலை பார்வர்ட் செய்யும் போது, தான் அந்த பகுதியில் இருந்தும், மதுவருந்தியதால் தன்னால் கொடுக்க முடியவில்லையே என்று மனசாட்சி அழுத்துமே, அதற்கு என்ன பதில் இருக்கும்? இரத்தம் எடுக்கும் போது ஏற்படும் அந்த சின்னஞ்சிறு வலியை நாம் அனுபவிக்கவில்லை என்று மனதை ஆறுதல் தான் படுத்திக்கொள்ள முடியுமா!!!
குடி குடியை கெடுக்கும். குடி குடியை அழிக்கும்..
கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ
Tweet | ||||
3 comments:
இப்படி ஊர் முழுக்க டாஸ்மாக் வருமானமே குறி என்று இருந்தால் நாளை சமூகத்தில் யாரும் யாருக்கும் இர்த்த தானமே செய்ய முடியாமல் எந்த உயிரையும் காப்பாற்றவே முடியாமல் போகும் அபாயம் நிச்சயம் வரும். நல்லதொரு விழிப்புணர்வு எச்சரிக்கை. பகிர்வுக்கு நன்றி சகோ. ஆஷிக் அஹமத்.
வேதனைக்குறிய விடயம் இது எங்கு போய் முடியுமோ,,, அரசாங்கத்தை குறை சொல்வதைவிட சுயசிந்தனை செய்தால் மாற்றம் வரலாம்.
இவ் விசயதில் அரசாங்கத்தை
குற்றம் சொல்லி பயனில்லை, நாமே திருந்தினால் மட்டுமே வழி உண்டு...
Post a Comment