Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.
Showing posts with label இஸ்லாம். Show all posts
Showing posts with label இஸ்லாம். Show all posts

Sunday, 9 February 2014

இஸ்லாமை பின்பற்றுகின்றேன் - அறிவித்தார் யுவன் சங்கர் ராஜா..


பிரபல இசையமைப்பாளரும், இளையராஜாவின் மகனுமான யுவன் ஷங்கர் ராஜா தான் இஸ்லாமை ஏற்றுக்கொண்டதாக இன்று அறிவித்துள்ளார். இதுக்குறித்த தகவல்கள் சமூக தளங்களில் சில நாட்களாக சுற்றிக்கொண்டிருந்தாலும், யுவன் இதுக்குறித்து எதுவும் தெரிவிக்காததால் வதந்தி என்றே கருதப்பட்டது. இஸ்லாமை ஏற்றுக்கொண்டு ஒரு இஸ்லாமிய பெண்ணை மூன்றாவது திருமணம் செய்துக்கொண்டார் என்றும் கூட செய்திகள் பரவியது.

இவற்றுக்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக, இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கீழ்காணும் கருத்தை தெரிவித்துள்ளார் யுவன். 

"I'm not married for the third time. That news is fake and yes I follow Islam and I'm proud about it. Alhamdhulillah"
நான் மூன்றாவது முறையாக திருமணம் செய்யவில்லை. அந்த செய்தி பொய்யானது. ஆம், நான் இஸ்லாமை பின்பற்றுகின்றேன், அதுக்குறித்து பெருமையும் படுகின்றேன். புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரிதாவதாக...

மேலும் அவர் கூறுகையில், 

"My family supports my decision and there is no misunderstanding between me and my dad."
என்னுடைய முடிவை என் குடும்பம் ஆதரிக்கின்றது. இது தொடர்பாக என் தந்தைக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு இல்லை. 


யுவன் சங்கர் ராஜாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் இங்கே 

யுவன், உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக...

நன்றி: ஆஷா பர்வீன்
ஆதாரம் சரிபார்த்தல் & கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ 

Wednesday, 1 February 2012

இஸ்லாம் பற்றி பெருமையாக பெரியாரும்...அண்ணாவும் சொல்றாங்க கேளுங்க.....



இஸ்லாம் பற்றி பெருமையாக நாங்கள் சொன்னால்....அய்யோ இவர்கள் மதவாதம் பேசுகிறார்கள் என்று ஓலமிடும் டார்வின் மதத்தினரே....
இதையும் கொஞ்சம் செவிமெடுங்கள். இது சத்தியமாக எந்த இஸ்லாமியரும் பேசிய பேச்சல்ல....மாறாக, கடவுளை கும்பிடுகிறவன் காட்டுமிராண்டி, கல்லை வணங்குபவன் முட்டாள் என்றெல்லாம் நாத்திக பிரச்சாரம் செய்த தந்தை பெரியாரும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொன்ன பேரறிஞர் அண்ணாவும் பேசிய பேச்சுக்களை கேளுங்கள்.

இது அறிஞர் அண்ணா அவர்களின் பேச்சு....







இது பகுத்தறிவு பகலவன் பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் பேச்சு.