மதவாதிகளால் தமிழ்மணம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக ஒப்பாரி வைக்கும் அண்ணன் காவி.கே.,அவர்களுக்கு,(பெயர் காரணம் பின்னால்...)
அந்த ஓரிறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.
தமிழ்மணத்தை விட்டு விலகப்போவதாகவும் அண்ணன் காவி.கே., சொல்லியிருப்பது இது முதல்முறையல்ல....ஏற்கனவே, முற்றுப்புள்ளி என்ற பதிவின் மூலம் இதே கருத்தை
சொல்லியிருந்தார். ஆனால், போகவில்லை. எழுதுவதும், திரட்டிகளில் இணைப்பதும் அவரவர் உரிமை என்பதால் அதை விட்டுவிட்டு, அவரின் பதிவிற்கான விளக்கங்களை மட்டும் இப்போது பார்ப்போம்.
இப்போது தமிழ்மணத்தை அடைத்துக்கொண்டிருப்பது, மதப்பிரச்சாரம் செய்யும் பதிவுகள் தானென்றும், அப்படிப்பட்ட பதிவுகளே மகுடம் சூடுகிறது என்றும் தன் ஆதங்கத்தை, இயலாமையை வெளிப்படுத்தியிருக்கிறார் அண்ணன் காவி.கே. அவர்கள்.
அவர் பார்த்ததில் எது மதப்பிரச்சாரம் செய்யும் பதிவுகள் என்று தெரியவில்லை. இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிராக காழ்ப்பு உணர்ச்சியால் எழுதப்படும் பதிவுகளுக்கும்,
மதவாதிகள் அதை செய்கிறார்கள். இதை செய்கிறார்கள் என்று ஓலமிடும் போலி நாத்திக மதவாதிகளுக்கும் எதிராக விளக்கம் கொடுக்கிறார்கள் இஸ்லாமியர்கள். அப்படி விளக்கம் கொடுக்கப்படும் பதிவுகள் விரும்பியோ, விரும்பாமலோ அதிக வாக்குகளை பெற்று மகுடம் சூடிக்கொள்கிறது. இதனால் காவி.கே அவர்களுக்கு என்ன பிரச்சினை?
என் வீட்டை ஒருவன் தாக்க வந்தால், நான் எப்படி பார்த்துக்கொண்டிருப்பேன், நானும் தற்காப்பிற்கு தாக்குவேன். அதைப்போல் தான், இஸ்லாம் தாக்கப்ப்டும்போது எதிர் பதிவு போடுகிறார்கள். பதில் சொல்கிறார்கள். இது எப்படி மதப்பிரச்சாரம் ஆகும்?. நான் தாக்குவேன் அதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. ஆனால், தாக்கப்பட்ட நீ பதில் சொல்லக்கூடாது. அதற்கு உனக்கு உரிமை இல்லை என்றால் எப்படி சார்?. பதில் சொல்பவனுக்கு பெயர் மதவாதி என்றால்.....ஆரம்பித்து வைத்தவனுக்கு பெயர் என்ன சார்?
சாதரணமாக உங்கள் பெயரையே யாரும் சொல்லக்கூடாது என்று கோபமாகி ஒரு பதிவில் பின்னூட்டமாக போட்டு குவித்தீர்கள். (உங்கள் பெயரை நான் சொல்லாததற்கு காரணம் இப்போது விளங்குகிறதா?) உங்கள் பெயரை சொன்னதற்கே இவ்வளவு கோபப்பட்ட உங்களுக்கு, உலகம் முழுவதும் வேர் பரப்பி, வியாபித்திருக்கும் ஒரு மார்க்கத்திற்கு எதிராக எழுதுபோது எத்தனை பேர் பதில் சொல்வார்கள் என்று உங்களுக்கு விளங்காமல் போச்சே சார்?
அடுத்ததாக, இஸ்லாமியர் தளங்களில் மத நெடி தூக்கலாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு..... நீங்களும் இஸ்லாத்தின் பெருமைகளை எழுதமாட்டீர்கள். அவர்கள் எழுதினாலும் குற்றம் சொல்கிறீர்கள்..அப்புறம் என்ன தான் செய்ய சொல்கிறீர்கள். தானும் படுக்கமாட்டேன், தள்ளியும் இருக்கமாட்டேன் என்று அடம் பிடித்தால் எப்படி சார்?
சார்..உங்களுக்கு ஒரு விளக்கம்.....
நீங்கள் சிங்கப்பூரில் இருப்பதால் அந்த நாட்டின் அருமை பெருமையெல்லாம் நீங்கள் நன்றாக அறிந்திருப்பீகள். அதனால், சிங்கப்பூர் இப்படி ஒரு அருமையான நாடு என்று பதிவு போட்டால், நீங்கள் சிங்கப்பூருக்காக பிரச்சாரம் செய்கிறீர்கள் என்றா சொல்லிவிட முடியும்? அல்லது ஒரு கம்பேனியில் வேலை செய்கிறீர்கள்...அந்த கம்பேனியின் அருமை பெருமைகளை பற்றி நீங்கள் ஒரு பதிவு போட்டால், அந்த கம்பேனிக்கு மற்றவர்களை இழுக்கப்பார்க்கிறீர்கள் என்றுதான் சொல்லிவிட முடியுமா?. அதைப்பொல்தான் இஸ்லாமியர்கள் சார்ந்திருக்கும் மார்க்கத்தை பற்றி அவர்கள் தளத்தில் எழுதுகிறார்கள். அதெப்படி மதப்பிரச்சாரம் ஆகும்?
நாங்கள் பிரச்சாரம் செய்துதான் இஸ்லாத்திற்கு ஆள் சேர்க்கவேண்டும் என்ற நிலையிலோ, நிர்பந்தத்திலோ இஸ்லாம் இல்லை.
நீங்கள் சிங்கப்பூரை பற்றி பெருமையாக எழுதும்போதும், நாங்கள் இஸ்லாத்தை பற்றி பெருமையாக எழுதும்போதும், அதைப்படிப்பவர்களுக்கு இயற்கையாகவே அவர்கள் நாட்டைப்பற்றியும், அவர்கள் சார்ந்திருக்கும் மதத்தைப்பற்றியும் ஒரு ஒப்பீடு மனதில் தோன்றும்... அதற்கு நாங்கள் என்ன செய்யமுடியும்?
அடுத்ததாக, காவி.கே., அவர்களின் பெயரிலேயே சில போலிகள் பின்னூட்டமிடுகிறார்கள் என்று குற்றம் சொல்லியிருக்கிறார்.
அப்படி உங்கள் பெயரில் பின்னூட்டம் போட்டவர்கள் யாரென்று தெரிந்தால் சொல்லுங்கள். நிச்சயம் அதை இஸ்லாமிய பதிவர்கள் கண்டிக்கிறோம். இப்படி போகிற போக்கில் அள்ளித்தெளிக்க வேண்டாம்.
உங்கள் பெயரில் கமெண்ட் போடும் சில போலிகள் போல, இஸ்லாமிய பெயர்களிலும் ஒளிந்துகொண்டு சில விஷமிகள் ஆபாசமாகவும், அருவருப்பாகவும் கமெண்ட் போடுகிறார்கள் என்பதையும் தெளிவு படுத்த விரும்புகிறேன். அப்படி இஸ்லாமிய பெயர்தாங்கி வரும் கமெண்ட்களில் எல்லாம் இஸ்லாமிய பதிவர்களால் போடப்படுவதில்லை. கண்ணியக்குறைவாக வரும் எந்த கமெண்டும் இஸ்லாமியர்கள் போடமாட்டார்கள். அப்படி போடுபவர்கள் இஸ்லாமியரும் அல்ல....
அடுத்ததாக, மதவாதிகளுக்கு பயப்படுகிறேன், அவதூறுகளுக்கு பயப்படுகிறேன் என்று பம்மியிருக்கிறார் காவி.கே., அவர்கள்.
ஒரு கருத்தை முன்வைக்கும்போது, அந்த கருத்துக்கு வரும் எதிர்கருத்தையும் எதிர்கொள்ளும் திராணியும், தைரியமும் வேண்டும். அப்படிப்பட்ட மனப்பக்குவம் இருந்தால் தான் எந்த ஒரு கருத்தையும் சொல்லவேண்டும்.
இஸ்லாம் பற்றி அவதூறு சொல்வது நீங்கள். அதற்கு பதில் விளக்கம் சொல்வது நாங்கள். ஆனால், அதை அப்படியே மாற்றி, நீங்கள் சொல்வது கருத்து என்றும், நாங்கள் சொல்லும் விளக்கத்தை அவதூறு என்றும் திரித்து விட்டீர்கள். புத்திசாலி சார் நீங்கள்.
நீங்கள் சொல்வது கருத்து என்றால்.... இஸ்லாமிய பதிவர்களாகிய நாங்கள் சொல்வது விளக்கம்.
நீங்கள் சொல்வது அவதூறு என்றாலும் நாங்கள் சொல்வது விளக்கம் மட்டுமே...
அது உங்களுக்கு அவதூறாக தெரிந்தால் உங்கள் பார்வையில்தான் கோளாறு...
உங்களுக்கு தக்காளி சட்னியே வந்தாலும் அதற்கு பெயர் ரத்தம்.... ஆனால், எங்களுக்கு ரத்த்மே வந்தாலும் அதற்கு பெயர் தக்காளி சட்னி
என்றுதானே சார் சொல்ல வருகிறீர்கள்?
என்னதான், எப்படித்தான் எழுதினாலும் உங்கள் பதிவு மகுடம் சூட வில்லை என்ற இயலாமையில் தான் இதை எழுதியிருக்கிறீர்கள் என்று விளங்குகிறது.
அது உங்கள் தவறு.... மகுடம் சூடும் அளவிற்கு தகுதியான பதிவுகளை எழுதாமல் தரங்கெட்ட பதிவுகளை எழுதும் உங்களுக்கு மைனஸ் வோட்டுதான் விழும்...வேறென்ன மலர் மாலையா விழும்?
டிஸ்கி: தயவு செய்து இதற்கு வாக்களித்து, மகுடம் சூட்டி அண்ணன் காவி.கே., அவர்களின் கோபத்திற்கும் சாபத்திற்கும் ஆளாகவேண்டாம் நண்பர்களே.....
| Tweet | ||||



