Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Sunday, 9 February 2014

இஸ்லாமை பின்பற்றுகின்றேன் - அறிவித்தார் யுவன் சங்கர் ராஜா..


பிரபல இசையமைப்பாளரும், இளையராஜாவின் மகனுமான யுவன் ஷங்கர் ராஜா தான் இஸ்லாமை ஏற்றுக்கொண்டதாக இன்று அறிவித்துள்ளார். இதுக்குறித்த தகவல்கள் சமூக தளங்களில் சில நாட்களாக சுற்றிக்கொண்டிருந்தாலும், யுவன் இதுக்குறித்து எதுவும் தெரிவிக்காததால் வதந்தி என்றே கருதப்பட்டது. இஸ்லாமை ஏற்றுக்கொண்டு ஒரு இஸ்லாமிய பெண்ணை மூன்றாவது திருமணம் செய்துக்கொண்டார் என்றும் கூட செய்திகள் பரவியது.

இவற்றுக்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக, இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கீழ்காணும் கருத்தை தெரிவித்துள்ளார் யுவன். 

"I'm not married for the third time. That news is fake and yes I follow Islam and I'm proud about it. Alhamdhulillah"
நான் மூன்றாவது முறையாக திருமணம் செய்யவில்லை. அந்த செய்தி பொய்யானது. ஆம், நான் இஸ்லாமை பின்பற்றுகின்றேன், அதுக்குறித்து பெருமையும் படுகின்றேன். புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரிதாவதாக...

மேலும் அவர் கூறுகையில், 

"My family supports my decision and there is no misunderstanding between me and my dad."
என்னுடைய முடிவை என் குடும்பம் ஆதரிக்கின்றது. இது தொடர்பாக என் தந்தைக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு இல்லை. 


யுவன் சங்கர் ராஜாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் இங்கே 

யுவன், உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக...

நன்றி: ஆஷா பர்வீன்
ஆதாரம் சரிபார்த்தல் & கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ 

20 comments:

suvanappiriyan said...

'இறைவனின் வெற்றியும் உதவியும் வரும்போது!

முஹம்மதே! இறைவனின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது!

உமது இறைவனை புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்!'

-குர்ஆன் 110: 1,2,3

உலகம் முழுக்க இஸ்லாம் வாளால் பரவவில்லை. அதன் அழகிய நடைமுறையினாலும் குர்ஆனின் ஆளுமையினாலும்தான் என்பதற்கு யுவனின் இந்த மன மாற்றம் சிறந்த உதாரணமாக உள்ளது.

எனது தளத்தில்...

http://suvanappiriyan.blogspot.com/2014/02/blog-post_9.html

Anonymous said...

சுதந்திரமான தேசத்தில் சுதந்திரமாக தாம் விரும்பும் மதங்களை பின்பற்ற அனைவருக்கும் உரிமை உண்டு, அது அவர் தனிப்பட்ட விருப்பமும் கூட. அந்த உரிமைகளை நாம் நிச்சயம் மதிக்க வேண்டும். அவரது தனிப்பட்ட விருப்பத்தை மதித்த அவர்தம் பெற்றோரையும் பாராட்ட வேண்டும். இதே உரிமைதனை அனைத்து மத பெற்றோர் அனைத்து பிள்ளைகளுக்கும் வழங்க வேண்டும். அதே போல உலகில் உள்ள ஒவ்வொரு தேசமும் ( குறிப்பாக இஸ்லாமிய நாடுகள் ) தம் மக்கள் தாம் விரும்பும் மதங்களை பின்பற்ற அனுமதிக்க வேண்டும். ஆனால் அந்த உரிமைகளை இஸ்லாமிய தேசங்கள் மக்களிடம் இருந்து பறித்துவருவதையும் இங்கு நினைவூட்டி கொள்வதோடு மத சுதந்திரம் அனைவருக்குமானது என்பதையும் கூறி விடை பெறுகின்றேன். நன்றிகள்.

குட்டிபிசாசு said...

வெளங்கிடும்....!

Aashiq Ahamed said...

@ குட்டி பிசாசு,

சலாம் சகோ..

ஆம், இஸ்லாமை விளங்கியதால் தான் ஏற்றுக்கொண்டுள்ளார் சகோ..

Unknown said...

May almighty give him right bath by providing to do not join our partition.

Anonymous said...

To know more about the wonderful religion of Islam, please read:

www.faithfreedom.org

alisina.org

tamil.alisina.org

Anonymous said...

யுவனின் மனைவி இன்னும் இந்து மதத்தில் இருக்கின்றார். அவர் மதம் மாறும்படி இஸ்லாமிய வாகாபிய வெறியர்கள் நிற்பந்திப்பார்களா? அல்லது அவரை விவாகரத்து செய்ய தூண்டுவார்களா?

யுவனின் அப்பா , சகோதரி , அண்ணா இந்துக்கள் . காபிர்களான அவர்களுடன் எந்த நெருங்கிய தொடர்பும் அவைத்திருக்க கூடாது என்று வகாபிய வெறியர்கள் தூண்டுவார்களா ?

யுவன் சங்கர் ராஜா இந்து மதப்பெயர். இந்த பெயரை மாற்றும் படி வகாபிய வெறியர்கள் தூண்டுவார்களா ?

Anonymous said...

Why are you afraid of publishing my post.

Please tell others about Islam.

www.faithfreedom.org

alisina.org

tamil.alisina.org

truth will triumph always.

Read Thirukkural.

Nandha

இப்னு அப்துல் ரஜாக் said...

Alhamthulillah

Check this site too
www.peacetrain1.blogspot.com

For more info

Aashiq Ahamed said...

@ அனானி,

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ...

//யுவனின் மனைவி இன்னும் இந்து மதத்தில் இருக்கின்றார். அவர் மதம் மாறும்படி இஸ்லாமிய வாகாபிய வெறியர்கள் நிற்பந்திப்பார்களா? அல்லது அவரை விவாகரத்து செய்ய தூண்டுவார்களா?//

யாரையும் நிர்பந்திப்பது இஸ்லாமில் இல்லாதது. நாயகம் (ஸல்) அவர்களின் நெருங்கிய உறவினர்கள் கூட இஸ்லாமை ஏற்காமல் இருந்திருக்கின்றனர். ஆம், தம் உறவினருக்கு எடுத்து கூற வேண்டும். ஆனால் அவர்களின் மனதை திருப்ப வேண்டியது இறைவனுக்கு மட்டுமே உரித்தான ஒன்று.

நான் அறிந்த பல இஸ்லாமை தழுவியவர்கள் அவர்களின் முந்தைய பெயர்களையே தொடர்ந்துள்ளனர். அவர்களின் பெயர் இஸ்லாமின் இணை வைக்கும் கொள்கைக்கு மாறாக இல்லாத வரை ஒருவர் அதே பெயரிலேயே தொடர முடியும். ஒரு அடையாளதிற்காகவே அரேபிய/ஹீப்ரு பெயர்களை வைத்துக்கொள்கின்றனர்.

Aashiq Ahamed said...

Anony,

//Why are you afraid of publishing my post.//

Muslims afraid Only of Allah. Your commented on night and hence i didn't see it. Once i saw i published.

All those ali sina sites you mentioned pioneered myself convert into Islam more properly. Hence there is no need of any panicking.

//truth will triumph always.//

True brother. That is what happened.

//Read Thirukkural//

I do..

Anonymous said...

இந்து மதத்துக்குள் வர விரும்பும் அந்நிய நாட்டவர்களை எந்த சாதிக்குள் இணைத்துக் கொள்வது என்ற குழப்பம் உள்ளது போலவே, இஸ்லாமில் சேருவோர் எப்பிரிவில் சேர்வது என்ற குழப்பமும் உள்ளது. அதிலும் பெற்றோ டாலர் தேசங்கள் தமது அரசியல் நலனுக்காய் உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்களை தம் பிரிவுக்குள் உள் மதமாற்றம் செய்தும், அமைதி வழியை பற்றிய சூபிக்களை அழிக்கும் போக்கினையும் செய்து வருவதோடு, மண் சார்ந்த கலாச்சாரங்களை துறக்கச் செய்து இறக்குமதி செய்யப்பட்ட புர்கா, குறுந்தாடி என பகட்டுத்தனமான மத அடையாளங்களினால் தம் ரத்த பந்தங்களான சொந்த தேசத்தவரோடு பிணக்காகி உரசல் போக்குகளும் வலுத்துவருகின்றதை நினைவில் கொள்ள வேண்டும். அரசியல் கட்சிக்கு ஆள் சேர்பதை போல விளிம்புநிலை மக்களை பொருளாதாரம் கொண்டும், புகழ்பெற்றோரை வேறு வகையிலும் மதம்மாற்றி விளம்பரம் செய்யும் போக்கும் அதிகரித்துள்ளது வருந்த தக்கது. மத உள் மதமாற்றங்கள் தொடர்ந்து இந்து இஸ்லாம் கிறித்தவ பிரிவுகளில் நடத்தப்பட்டும் விள்ம்பரபடுத்தப்படுவது ஜனநாயகத்தை பயன்படுத்தி அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி பணநாயகம் செய்யவே என்ற ஐயமும் எழுகின்றது. நன்றிகள்.

Aashiq Ahamed said...

@ விவரணன் நீலவண்ணன்,

//இந்து மதத்துக்குள் வர விரும்பும் அந்நிய நாட்டவர்களை எந்த சாதிக்குள் இணைத்துக் கொள்வது என்ற குழப்பம் உள்ளது போலவே, இஸ்லாமில் சேருவோர் எப்பிரிவில் சேர்வது என்ற குழப்பமும் உள்ளது//

தங்களின் இஸ்லாமிய அறியாமை என்னை வியப்பில் ஆழ்த்துகின்றது சகோ...

Anonymous said...
This comment has been removed by the author.
வேகநரி said...

//தங்களின் இஸ்லாமிய அறியாமை என்னை வியப்பில் ஆழ்த்துகின்றது சகோ..//
இங்கே நீங்க என்ன சொல்ல வாறிங்க?
இஸ்லாமில் சூபி,சியா,அக்மதி,வஹ்ஹாபி என்றேல்லாம் பிரிவு இல்லை என்றா, அல்லது வஹ்ஹாபி தான் இஸ்லாம் என்றா?

Aashiq Ahamed said...
This comment has been removed by the author.
Aashiq Ahamed said...

@ விவரணன் நீலவண்ணன்,

//தாங்கள் நினைப்பதை விட எமக்கு இஸ்லாம் குறித்து நன்றாகவே தெரியும்//

நல்லது சகோ. அப்படியென்றால் சொல்லுங்கள். இஸ்லாமின் மூலம் குர்ஆன். இஸ்லாமில் பிரிவுகள் இருந்தால் அவை நிச்சயம் குர்ஆனில் விவரிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி விவரிக்கப்பட்டிருந்தால் தான் நீங்கள் சொல்லும் பிரிவுகள் 'இஸ்லாமில்' உள்ளன என்று ஏற்றுக்கொள்ள முடியும். சகோ துவங்குங்கள், குர்ஆனில் இருந்து நான் கேட்டதை கொண்டு வாருங்கள்...

@ வேகநரி, இதனையே நீங்களும் எடுத்துக்கொள்ளுங்கள்...

நன்றி..

Unknown said...

டேய், நான் உன்னை ரெண்டு பழம் வாங்கிட்டு வர சொன்னேன். ஒரு பழ்ம் இங்கிருக்கு ரெண்டாவது பழம் எங்கேடா ?

அது தானே இது !

Sabareesan said...

Poor Illayaraja.

Let Lord Shiva, the only God pardon Yuvan Shankar Raja.

Om Nama Shivaya.

Anonymous said...

ISLAM LA 72 PRIVUGAL VARUM ENDRU SONNA MUHHAMAD POI SONNAR ENDRU SOLLURINGALA.