இச்சட்டத்தின் படி, ஒருவர் தகவலை பெற அவர் இந்தியராக இருத்தல் மட்டும் போதுமானது (எங்கிருக்கின்றார் என்பது அவசியமில்லை). மொபைல் நம்பர் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அதே நேரம் தகவல் கேட்பவரின் முகவரியும், மின்னஞ்சல் முகவரியும் அவசியம்.
ஆன்லைன் மூலமாக தகவலை கேட்கலாம்.
1. முதலில் இங்கு செல்லுங்கள்: https://rtionline.gov.in/index.php
2. இதில் "Submit Request" என்பதை சுட்டுங்கள்.
3. வரும் பக்கத்தில் புள்ளிகளை படியுங்கள். அப்பக்கத்திற்கு அடியில் "I have read and understood the above guidelines" என்பதை டிக் செய்து "submit" என்பதை அழுத்துங்கள்.
4. நீங்கள் கேட்க வேண்டிய தகவல் குறித்த படிமம் தோன்றும். IIT குறித்து நீங்கள் கேட்க விரும்பினால், Select Ministry/Department/Apex body என்று கேட்கும் இடத்தில் "Department of Higher Education" என்பதையும், Select Public Authority என்று கேட்கும் இடத்தில், மீண்டும் "Department of Higher Education" என்பதையும் சுட்டுங்கள்.
5. உங்கள் இந்திய முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரியை கொடுங்கள். நீங்கள் வறுமை கோட்டிற்கு கீழுள்ளவரா என்று கேட்கப்படும் இடத்தில் "இல்லை" என்பதை கொடுங்கள். பின்னர் நீங்கள் கேட்க விரும்பும் கேள்வியை "Text for RTI Request application" என்று இருக்கும் இடத்தில் கேளுங்கள். உங்கள் கேள்வி 3000 வார்த்தைகளுக்கு மேலே இருந்தால், கணிப்பொறியில் டைப் செய்து அங்கேயே கொடுக்கப்பட்டு ஆப்ஷனை கொண்டு பதிவேற்றுங்கள்.
6. அவ்வளவு தான். "Make payment" என்பதை சுட்டி ரூபாய் 10-ஐ debit அல்லது credit கார்ட் மூலமாக செலுத்துங்கள்.
7. முடிந்தது. உங்கள் கேள்விக்காக கொடுக்கப்படும் தனித்துவமான தகவல்களை சேமித்துக்கொள்ளுங்கள்.
8. ஒரு மாதத்திற்குள் பதில் அளிக்கப்பட வேண்டும். பதில் வராவிட்டால் மீண்டும் "https://rtionline.gov.in/index.php" சென்று Submit First Appeal என்பதை சுட்டி தொடர வேண்டும்.
நான் கூறியுள்ள இவற்றில் ஏதேனும் புரியாவிட்டாலோ அல்லது மேற்கொண்டு எதையும் அறிந்துக் கொள்ள விரும்பினாலோ ஸ்க்ரீன் ஷாட்கள் கொண்ட பின்வரும் pdf உங்களுக்கு பயனளிக்கலாம்.
https://rtionline.gov.in/um_citizen.pdf
ஆன்லைன் மூலமாக அல்லாமல் எழுத்து மூலமாகவும் தகவலை கேட்கலாம், அதற்கு சிற்சில மாற்றங்களுடன் நடைமுறை உள்ளது. எல்லாமே அந்த பத்து ரூபாயை எப்படி செலுத்த வேண்டும் என்பதில் தான் :-).
கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ
.
Tweet | ||||
0 comments:
Post a Comment