Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Tuesday, 8 September 2015

சிரிய மக்களுக்கு அடைக்கலம் தந்துள்ள அரபு நாடுகளின் பட்டியல்...


டந்த நான்காண்டுகளாக தொடரும் உள்ளாட்டு போர், சுமார் 90 இலட்சம் சிரிய மக்களை இடம் பெயர செய்துள்ளது. இதில் சுமார் 65% மக்கள் சிரியாவிற்குள்ளாகவே பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். 

அகதி முகாம்களில் ஒன்று 

துருக்கி, லெபனான், ஜோர்டான் ஆகிய நாடுகள், சுமார் 30 லட்சம் அகதிகளை அரவணைத்துக் கொண்டுள்ளன. அதிகப்படியான முகாம்கள் அமைக்கப்பட்டு, தன்னார்வலர்கள், குடிமக்களின் உதவியோடு அகதிகளுக்கான அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. பல மசூதிகள்/பள்ளிவாசல்கள் இம்மக்களுக்கான வசிப்பிடங்களாக திகழ்கின்றன.  

இதுவரை ஒரு லட்சம் வரைக்குமான அகதிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்துள்ளது ஜோர்டான். எகிப்து, இராக் போன்ற நாடுகள் சுமார் 1-5 லட்சம் அகதிகளை ஏற்றுக்கொண்டுள்ளன. 


130 சதுர கிலோ மீட்டர்கள் மட்டுமே அளவுள்ள காஸா, சில ஆயிரம் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது. 

அல்ஜீரியா, சுமார் 55,000 அகதிகளுக்கு புகலிடம் தந்துள்ளது. "எங்களால் முடிந்ததை நாங்கள் செய்துள்ளோம். உணவு, மருந்து, வாழ்விடம் போன்றவற்றை அமைத்துக் கொடுத்துள்ளோம். எங்களது பள்ளிகளில் சிரிய குழந்தைகள் படிப்பதற்கு அனுமதி அளித்துள்ளோம்" என்று அல்ஜீரிய செஞ்சிலுவை சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 


தங்களின் அகதிகள் கொள்கை காரணமாக, ஐக்கிய அமீரகம், சவூதி உள்ளிட்ட அரபு நாடுகள் மக்களை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டுகின்றன.  இதுவரை, சிரிய மக்களுக்கு இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை உதவி புரிந்துள்ள கத்தாரும் இதில் அடக்கம். இந்த நாடுகள், அறிவுக்கு அப்பாற்பட்ட தங்களின் வெளியுறவு கொள்கைகளை தளர்த்தி இம்மக்களுக்கு உதவ முன்வர வேண்டும். 

இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளும் மேற்கூறிய காரணத்தை கூறி மக்களை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டுகின்றன. இருப்பினும், அந்த விதிமுறைகளை மீறி, ஆயிரக்கணக்கான மக்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது ஜெர்மனி (சுமார் 20,000). ஐரோப்பிய யூனியன் நாடுகளில், இதுவரை, 85% அகதிகளுக்கு அடைக்கலம் தந்த நாடாக ஜெர்மனி திகழ்கின்றது. 'இம்மாதிரியான சமயங்களில் உதவில்லை என்றால் ஒரு தோல்வியடைந்த சமூகமாகவே நாம் எதிர்காலத்தில் கருதப்படுவோம்' என்ற ஜெர்மனி அதிபரின் கருத்து கவனிக்கத்தக்கது. 

சிரிய விவகாரம் மிக நுட்பமாக அணுகப்பட வேண்டியது. இன்று நேற்று ஆரம்பித்த பிரச்சனை அல்ல இது. ஐரோப்பிய நாடுகள் இதுநாள்வரை நிராகரித்து வந்த நிலையில், இலட்சகணக்கான சிரிய மக்களுக்கு அடைக்கலம் தந்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்தது யார் என்பதை சிந்திக்க வேண்டும். தூண்டிவிடும் அரசியலோ அல்லது இனவெறியோ பிரச்சையை அதிகப்படுத்துமே தவிர தீர்வளிக்காது. மனிதம் போற்றுவோம், மனிதர்களை காப்போம். 

கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ 

மேலே காணும் தகவல்களுக்கான ஆதாரங்கள்: 
ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் இது தொடர்பில் நடத்திய ஆய்வு, செஞ்சிலுவை சங்கம் மற்றும் Syrian Refugees இணையதளம். 


4 comments:

Nasar said...

நல்ல பதிவு...

ராஜ நடராஜன் said...

சகோ!மனிதாபிமானி! அரபு நாடுகளில் பணக்கார நாடுகளான சவுதி அரேபியா,கத்தார்,துபாய்,பஹ்ரைன்,குவைத்,ஓமன் போன்றவை எத்தனை அகதிகளை தத்து எடுத்துக்கொண்டிருக்கிறது? தவறான தகவலை தராதீர்கள் அல்லது தலைப்பை மாற்றுங்கள்.

Have a neutral opinion always.

Nasar said...

http://www.apnahub.ca/living/did-you-know-pakistan-hosts-the-highest-number-of-refugees-worldwide/

மனிதாபிமானி said...

சகோ ராஜ நடராஜன்,

உங்கள் மீது அமைதி நிலவுவதாக...

ஐக்கிய நாடுகள் சபை, ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம், செஞ்சிலுவை சங்கம் போன்றவற்றின் ஆதாரங்களை முன்வைத்தே இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. பதிவை முழுமையாக படிக்கவும்.

Have a neutral opinion always brother...