Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.
Showing posts with label பொய் புரட்டு. Show all posts
Showing posts with label பொய் புரட்டு. Show all posts

Wednesday, 18 September 2013

முசாஃபர் நகர் கலவரத்துக்கு மூல காரணம்... ஈவ் டீசிங் அல்ல..!


ஈவ் டீசிங் என்ற ஒன்று நடக்கவே இல்லை என்கிறார் அதில் சம்பந்தப்பட்ட பெண் ரீது. ஈவ் டீசிங் செய்ததாக பிறரால் சொல்லப்படும் அந்த பையன் ஷாநவாஸ்கானை தான் பார்த்ததோ அல்லது பேசியதோ இல்லை என்கிறார். மேலும், சர்ச்சைக்குள்ளான பகுதிக்கு தான் சென்றதில்லை என்கின்றார் அந்த சகோதரி. 'விஷயம் கேள்விப்பட்டு நாங்கள் போய் பார்க்கும் போது அந்த முஸ்லிம் குடும்ப ஆண்கள் எல்லாம் சேர்ந்து சச்சின் & கவ்ரவ் இருவரையும் வீதியில் மிகவும் மோசமான நிலையில் கொன்று போட்டு இருந்தனர்' என்கின்றனர் சச்சின்/கவ்ரவ் வீட்டு பெண்கள்.

அப்புறம், தன் பையன் ஈவ் டீசிங் செய்பவனில்லை என்றும் அப்படி சொல்வதெல்லாமே பொய் என்றும் திடமாக மறுக்கிறார் ஷாநவாஸ்கானின் தந்தை. மேலும், சச்சின்/கவ்ரவ் மற்றும் ஷாநவாஸ் ஆகிய இருவரின் பைக்கும் மோதிக்கொண்டதில் தகராறு ஆகி, பின்னர் அவர்கள் வீடு சென்று, எட்டு பேருடன் 3 பைக்கில் சச்சினும் கவ்ரவும் திரும்பி வந்து ஷாநவாஸின் வீட்டுக்கருகில் வைத்து கத்தி மற்றும் சில ஆயுதம் கொண்டு கண்டபடி அவனை தாக்கி கழுத்து மார்பு வயிறு என உடம்பில் பல இடத்தில் வெட்டி வீதியிலேயே கொன்று விட்டனர் என்கிறார் தந்தை.

போலிஸ் ஸ்டேஷனில் சென்று விசாரித்த போது, இரு தரப்பு கொலை பற்றிய இரு FIR களிலும் ஈவ் டீசிங் பற்றி ஒன்றுமே எழுதப்படவில்லையாம்..! ஏன்..? இரு தரப்பும் என்ன சொன்னார்களோ அதைத்தான் FIR இல் எழுதினோம் என்று சொல்லும் போலிஸ் ஈவ் டீசிங் பற்றி புகார் இல்லை என்கிறது. இவ்வளவுக்கும்... ஜாட் சாதியினரும் முஸ்லிம்களும் இதுவரை சண்டை போட்டுக்கொண்ட வரலாறே இதற்கு முன்னர் இல்லையாம்..!

--- கலவர ஸ்பாட்டில் இருந்து NDTV ரிப்போர்ட்..! ஆதார சுட்டி இங்கே 


அடுத்த சமூகத்தினர் மீது வெறுப்பை கொண்டு வர தன் வீட்டிற்கே குண்டு வைத்துக்கொள்ளுதல், யாத்திரை என்ற பேரில் குழப்பம் ஏற்படுத்த முயலுதல், இல்லாத காரணத்திற்காக கலவரத்தை தூண்டுதல், கலவரத்தை பெரிதுபடுத்த போலி வீடியோவை பரப்புதல் போன்ற சம்பவங்களுக்கும் தேர்தல் நெருங்குவதிற்கும் நிச்சயம் தொடர்புண்டு. 

நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை காப்பாற்றினாரே அந்த ஜாட் இன சகோதரர், அவருடைய செயலில் உள்ளது இவை அனைத்திற்குமான பதில். தங்களின் எண்ணங்கள் நிறைவேறாதா என்று பல்வேறு வகைகளில் குட்டிக்கரணம் அடிக்கும் சங்பரிவாரங்களின் சூழ்ச்சி பலிக்க போவதில்லை, பாடம் மட்டுமே புகட்டப்பட போகின்றனர்.