இந்தியாவின் உற்பத்தி தொழிற்சாலைகள் & அவை ஏற்படுத்தும் வேலைவாய்ப்புகள் குறித்த சமீபத்திய ஆய்வு முடிவுகள் (2011-2012 காலக்கட்டத்திற்கானது) வெளிவந்துள்ளன. இன்னும் பொதுவில் வெளியிடப்படாத இம்முடிவுகளை தி ஹிந்து ஆங்கில இதழ் சில மணி நேரங்களுக்கு முன்பாக வெளியிட்டுள்ளது. இதன்படி, அதிமுக ஆளும் தமிழகம் முதல் இடத்திலும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான மகாராஷ்டிரா & ஆந்திரா முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களையும் பிடித்துள்ளன. பாஜக ஆளும் குஜராத்தோ நான்காம் இடத்தையே பிடித்துள்ளது.
இதில் அதிமுகவை தவிர்த்து, காங்கிரஸ் ஆந்திராவில் கடந்த பத்து ஆண்டுகளாகவும், மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு சவாலாக திகழும் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கடந்த பதினைந்து ஆண்டுகளாகவும், குஜராத்தில் பாஜக கடந்த பதினைந்து ஆண்டுகளாகவும் ஆட்சியில் இருப்பது குறிப்பட்டத்தக்கது. உற்பத்தி தொழிற்சாலைகள் போல பணவீக்க கட்டுப்பாட்டிலும் பாஜக ஆளும் மாநிலங்கள் பின்னடைவிலேயே இருப்பதாக சில நாட்களுக்கு முன்பாக வந்த மற்றொரு ஆய்வு கூறியிருந்தது.
ஆய்வு முடிவுகளை விளக்கும் படம்.
வகுப்புவாத கலவரங்கள் மற்றும் இன்ன பிற செயல்பாடுகளின் மூலம் மக்களை பிளவுப்படுத்தி நாட்டின் ஒற்றுமையை சீர்குலைத்து கொண்டிருக்கும் பாஜக, தொழிற்சாலைகள் & வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம், பணவீக்கத்தை கட்டுப்படுத்துவோம் என்ற முகமூடி அணிந்து இம்முறை பிரச்சாரம் மேற்கொண்டிருக்கின்றது. ஆனால், அவர்கள் ஆளும் மாநிலங்களில் தான் இந்த பிரச்சனைகள் அதிகமிருக்கின்றன. குஜராத் வளர்ச்சி என்னும் பிம்பம் ஏற்கனவே பலரால் அம்பலப்படுத்தப்பட்ட நிலையில், இந்த முகமூடியும் அந்தோ பரிதாபம் என்று கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கின்றது.
Gujarat Development Model???
ஆதாரம்:http://www.thehindu.com/business/Economy/nonbjp-states-ahead-in-manufacturing/article5860203.ece
கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ
Tweet | ||||
0 comments:
Post a Comment