தேர்தல் களத்தில் மற்றுமொரு பரபரப்பு நிகழ்வாக, தான் மணமானவன் என்பதை முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார் மோடி.
இதுநாள்வரை தான் ஒரு பிரம்மச்சாரி என்று (பொய்) கூறி வந்த அவர், நேற்று தாக்கல் செய்த வேட்புமனுவில், ஜஷோதாபென் தன் மனைவி என்று குறிப்பிட்டுள்ளார். 2001, 2002, 2007, 2012 தேர்தல்களில் இந்த கேள்வியை வெறுமனே விட்டு வந்த மோடி, தேர்தல் துறையின் நடவடிக்கையால் பதில் சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டதே தற்போது உண்மை வெளிவந்துள்ளதற்கான காரணம்.
நேற்று காலையே வேட்புமனுவை மோடி தாக்கல் செய்துவிட்ட நிலையில், குஜராத் தேர்தல் துறையின் தளங்களில் இன்று அதிகாலை மட்டுமே இந்த படிமங்கள் பதிவேற்றப்பட்டுள்ளது மர்மமாக உள்ளது. இன்று, 14 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடப்பது இது தொடர்பில் குறிப்பிடத்தக்கது.
Feb 17-ல், தான் ஒரு பிரம்மச்சாரி என்று டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு மோடி அளித்த பேட்டி
மோடி ஆதரவாளர்கள் முதற்கொண்டு பலரும் இதுக்குறித்து கடும் அதிருப்தியை வெளியிட்டு வரும் தருணத்தில் பின்வரும் கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
* இன்று ஒப்புக்கொள்ளும் மோடி, தன் திருமணம் குறித்த உண்மைகளை இதுநாள்வரை மறைத்து பொய் சொன்னதற்கான காரணம் என்ன?
* இன்று ஒப்புக்கொள்ளும் மோடி, தன் திருமணம் குறித்த உண்மைகளை இதுநாள்வரை மறைத்து பொய் சொன்னதற்கான காரணம் என்ன?
* ஒரு மனைவிக்கான இன்ப துன்பங்களை இழந்த ஜஷோதாபென் செய்த தவறு தான் என்ன?
* ஒரு பெண்ணிற்கான மரியாதை உங்கள் அகராதியில் இதுதானா?
* தனக்கு இருப்பது இந்த வேலை மட்டுமே, மோடி குறித்து எதையேனும் கூறி தன் வேலையை இழக்க விரும்பவில்லை என்று ஜஷோதாபென் கூறினாரே அதற்கு அர்த்தம் தான் என்ன?
* தன் மனைவியை தனிமையில் வாடச்செய்வதையும் பொருட்படுத்தாமல் செயல்படும் உங்கள் கொள்கை என்ன?
* பொய் பொய் இதுதான் மோடி என்பதற்கான மறு பெயரா?
கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ
ஆதார சுட்டிகள்:
Tweet | ||||
5 comments:
@ அனானி சகோ,
கண்ணியமான வார்த்தைகளுடன் கூடிய பின்னூட்டத்தை இடவும். அதுசரி, இன்றைக்கு ஊரெல்லாம் மோடி பொய் பற்றிய செய்தியா இருக்கே, பதிவுல கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவே இல்லையே நீங்க?
இத்தன நாளா தனக்கு திருமணம் நடக்கவில்லை என்று மோடி பொய் கூறியதற்கான காரணம் என்ன?
பதில சொல்லுங்க
கட்டிய மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையை செய்யத் தெரியாத ஒருவரா.. ஒரு நாட்டு மக்களுக்கு தன் கடமை செய்வார்..?
பிரம்மச்சாரி என்றால் என்ன அர்த்தம்? எப்போது திருமணம் நடந்தது? எத்தனை நாட்கள் சேர்ந்து வாழ்ந்தார்கள்? எதுவுமே தெரியாமல் மொன்னையாகப் பேசவேண்டாம்.
தனக்கு நடந்த பொம்மைத் திருமணத்தைப் பற்றி எதையும் அவர் இதுவரை பேசவில்லை. ஆம்...இப்போது ஒத்துக்கொண்டார்.
…
…அதுக்கு என்ன இப்ப?
…
…50 வயது கடந்தபின் 10 வயது பெண்ணை மணமுடித்த காமாந்தகன் அவர் இல்லை.
வணக்கம் நண்பர்களே
உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்
Post a Comment