Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Sunday, 29 January 2012

ஏற்றத்தாழ்வும், நாத்திகவாதிகளின் சொத்தை வாதங்களும்.......உங்கள் அனைவர் மீதும் ஓர் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகுவதாக.....

இந்த உலகத்தில் எதுவுமே தானாக வந்ததில்லை. இந்தப்பதிவை எழுத நான் உபயோகிக்கும் கீபோர்ட், இதை படிக்க நீங்கள் உபயோகிக்கும் கணினி, இண்டெர்நெட் இத்யாதி, இத்யாதி என்று எல்லாமே யாரோ ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டு அல்லது தயாரிக்கப்பட்டு, யாரோ ஒருவராகிய நாம் பயன்படுத்துகிறோம். இல்லையில்லை இதெல்லாம் தானாக தோன்றியது, யாரும் தயாரிக்கவெல்லாம் இல்லை என்று நாம் சொன்னால் நம்மை விட பைத்தியக்காரர்கள், முட்டாள்கள் யாரும் இல்லை என்று சொல்லலாம். இப்படிப்பட்ட சாதாரண பொருள்களையெல்லாம் தயாரிக்க ஒரு ஆள் தேவைப்படும்போது, இத்தனை பெரிய பிரபஞ்சம் தானாக தோன்றிற்று என்று எப்படி சொல்லமுடியும்?

இந்த பிரபஞ்சம் முழுவதும் இறைவனின் கொடைதானே தவிர, இயற்கையின் கொடையல்ல....

இந்த உலகில் படைக்கட்ட முதல் மனிதர்களான ஆதம்(ரலி)-ஹவ்வா(ரலி) முதல் அவர்களின் சந்ததியினராக இன்று பல்கி பெருகியிருக்கும் சுமார் 600 கோடி மக்களும், நமக்கு முன் வாழ்ந்து இறந்துவிட்ட எண்ணிக்கையில் அடங்காத பல கோடி மக்களும் இறைவனின் படைப்பே.....இதில் டார்வினிலிருந்து இன்றைய நாத்திகர்கள் வரை எல்லோரும் அடக்கம்.

நாத்திகர்கள் என்றழைக்கப்படும் கடவுள் மறுப்பாளர்களாகிய டார்வின் மதத்தை சேர்ந்தவர்களால் இறைவன் மீது வைக்கப்படும் சில குற்றச்சாட்டுக்களை கேட்டால் நகைப்புதான் வருகிறது. கேள்வி கேட்க பயன்படுத்தும் பகுத்தறிவில் கொஞ்சம் சிலவு செய்து யோசித்தால் பதில்களும் கிடைத்துவிடும். ஹூம்.....எங்கே?

என்னவோ சிலருக்கு பிறக்கும் போதே தொப்புள் கொடியோடு  பலகோடி ரூபாய் அடைத்த சூட்கேசையும், மற்றவர்களுக்கு ஒன்றுமேயில்லாத மஞ்சள் பையையும் இறைவன் கொடுத்தனுப்புவது போல கேட்கிறார்கள்.
இந்த உலகில் ஏற்றத்தாழ்வுகள் ஏன்?, ஏழை, பணக்காரர்கள் பேதம் ஏன் என்று கேள்வி கேட்கிறார்கள்.


இந்த உலகில் பிறக்கும் அனைவரும் பணக்காரர்களாகவே இருந்துவிட்டால் யார் வேலை செய்வது?, அல்லது ஏழையாகவே இருந்துவிட்டால் யார் வேலை தருவது?
ஏற்ற தாழ்வில்லாமல் எல்லோரும் சமமென இருந்துவிட்டால் நமக்கு உண்ண உணவும், உடுத்த உடையும், இருக்க இருப்பிடமும் கிடையாது, கிடைக்காது.

உலகில் தேவைகள் அதிகரிப்பதால் தான் உற்பத்திகள் பெருகி எல்லாம் கிடைக்கிறது. தேவைகள் இல்லாத பட்சத்தில் எந்த பொருளையும் தயாரிக்கும் அவசியம் யாருக்கும் ஏற்படாது. அப்படி எந்த பொருளும் தயாரிக்க தேவையில்லாத போது யாரும் வாழவே முடியாது.

சரி....இன்றிலிருந்து ஏழை, பணக்காரன் என்ற பேதம் ஒழிந்து எல்லோரையும் சமமாக ஆக்கிவிட்டான் இறைவன் என்று வைத்துக்கொள்வோம். இதனால், என்னன்ன விளைவுகள் ஏற்படும் என்று பார்ப்போமா?

உதாரணமாக, நாம் ஒரு வீடு கட்டுவதாக இருந்தால், செங்கல், சிமண்ட், மணல் என்று எல்லாமே கிடைக்கிறது. ஆனால், கொத்தனார், சித்தாளை எங்கே பிடிப்பது? அவர்களும் எல்லோரையும் போல சம நிலையில் இருக்கிறார்களே?....

அப்படியே விவசாயத்திற்கு வருவோம்....அங்கேயும் இதுதான் நிலைமை..
எல்லோரும் சமமாக இருந்துவிட்டால், யாரும் சேற்றில் இறங்க மாட்டார்கள். உழ, விதைக்க, நீர் பாய்ச்ச, களை எடுக்க, அறுவடை செய்ய என்று எதற்குமே ஆள் கிடைக்காமல் போய் விடும். அப்படி எப்படி சாப்பிடுவதாம்? எல்லோரும் பணம், காசு என்று எதையாவது சாப்பிட்டு சாக வேண்டியதுதான். அதுவும் முடியாது. ஏனென்றால்....பணம் அச்சடிக்க பேப்பர், மை, மெசின் என்று வேண்டும்....ஆனால், ஒரு பொருளும் கிடைக்காது. அதுதான் எல்லோரும் சமமாகிவிட்டார்களே?

இன்னொரு உதாரணம், அரபு நாடுகளில்(அரபு நாடு என்றதும் டார்வின் மதத்தினர் வரிந்துகட்டிக்கொண்டு சண்டைக்கு வரவேண்டாம்....ஒரு விளக்கத்திற்காக மட்டுமே)
பெட்ரோல் எடுத்து ஏற்றுமதி செய்து தங்களின் பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்கிறார்கள். அங்கு எல்லோரும் சமமாக இருந்துவிட்டால், பொருளாதாரத்தை உயர்த்தவேண்டிய அவசியமும் இருக்காது, பெட்ரோலும் எடுக்க மாட்டார்கள். அப்புறம் என்ன எல்லோரும் நடராஜா சர்வீஸ் தான்.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

இப்போது சொல்லுங்கள் ஏற்றத்தாழ்வு நல்லதா? கெட்டதா?

அதற்காக, ஏழைகள் ஏழைகளாகவும், பணக்காரர்கள் பணக்காரர்களாகவுமே நான் இருக்க சொல்லவில்லை. அவரவர் தங்கள் தகுதிகளை வளர்த்துக்கொள்வது அவரவர் கைகளிள் தான் இருக்கிறது.
பிறக்கும்போது ஏழையாக பிறப்பது ஒன்றும் தவறில்லை. மரணிக்கும்போது அவன் ஏழையாகவே மரணித்தால் அது அவனின் தவறுதான். இறைவனின் தவறல்ல....

அடுத்ததாக விஞ்ஞானம் பற்றியும் டார்வின் மதத்தினர் பேசுகிறார்கள். இந்த விஞ்ஞான உலகில் எல்லாமே சாத்தியம், கடவுளே தேவையில்லை என்று.....

அதுசரி.....விஞ்ஞானத்தால் அனைத்தையும் படைக்கலாம் என்பதை விடுங்கள். ஒரு குழந்தையை படைத்து காட்டுங்களேன்....
டெஸ்ட் டியூப்பில் உருவாக்கலாம் என்றுதானே சொல்ல வருகிறீர்கள். உண்மைதான். டெஸ்ட் டியூப்பில் குழந்தையை உருவாக்கலாம்....அந்த குழந்தையை உருவாக்கும் மூலக்கூறான விந்தை எப்படி உருவாக்குவீர்கள்?. அதற்கு இறைவனின் படைப்பான மனிதன் தானே தேவைப்படுகிறான்.

சரி விடுங்க..... நீங்கள் சொல்வதைப்போலவே, கடவுள் இல்லையென்று ஒரு வாதத்திற்காக வைத்துக்கொள்வோம்.
அதனால், எங்களுக்கு ஒன்றும் நட்டமில்லை. நீங்களும், நாங்களும் செத்தால் அத்தோடு எல்லாம் முடிந்துவிடும். மறுமை, தீர்ப்பு என்றும் ஒன்றுமே இல்லை.  நாம் இருவருமே தப்பித்துக்கொள்வோம்.
ஆனால், கடவுள் மட்டும் இருந்துவிட்டால்....செத்தாலும் நாங்க தப்பித்துக்கொள்வோம், நீங்க மாட்டிக்கொள்வீர்கள்.

10 comments:

முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ் said...

அஸ்ஸலாமு அலைக்கும் நல்ல நருக் கேள்விகள்தான் சகோ.தங்களின் அனுமதியுடன் என் தரப்பிலிருந்து நானும் ஒரு கேள்வியை கேட்டுகொள்கிறேன் . கடவுள் இல்லை கடவுள் இல்லைனு சொல்லும் நாத்திகவாதிகளே கடவுள் இல்லாமல் மருத்துவத்திலும்,அறிவியலிலும் எல்லாவற்றையும் சாதிக்கிறார்கள் என்று சொல்கின்றீர்களே.அந்த சாதனையை வைத்து மரணமே இல்லாமல் ஆக்குங்களேன் பார்க்கலாம்.
"ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை" (அல் குர்ஆன் 3:185) இந்த வசனத்தை பொய்யாக்குங்களேன் உங்கள் கூட்டத்தில் நானும் ஒருவனாக வருகின்றேன்.

சுவனப்பிரியன் said...

சலாம் சகோ!

//சரி விடுங்க..... நீங்கள் சொல்வதைப்போலவே, கடவுள் இல்லையென்று ஒரு வாதத்திற்காக வைத்துக்கொள்வோம்.
அதனால், எங்களுக்கு ஒன்றும் நட்டமில்லை. நீங்களும், நாங்களும் செத்தால் அத்தோடு எல்லாம் முடிந்துவிடும். மறுமை, தீர்ப்பு என்றும் ஒன்றுமே இல்லை. நாம் இருவருமே தப்பித்துக்கொள்வோம்.
ஆனால், கடவுள் மட்டும் இருந்துவிட்டால்....செத்தாலும் நாங்க தப்பித்துக்கொள்வோம், நீங்க மாட்டிக்கொள்வீர்கள்.//

நறுக்கென்ற கேள்வி!

ஒ.நூருல் அமீன் said...

"என்னவோ சிலருக்கு பிறக்கும் போதே தொப்புள் கொடியோடு பலகோடி ரூபாய் அடைத்த சூட்கேசையும், மற்றவர்களுக்கு ஒன்றுமேயில்லாத மஞ்சள் பையையும் இறைவன் கொடுத்தனுப்புவது போல கேட்கிறார்கள்." என்பதை படித்ததும் சிரிப்பு வந்தது. தொடர்ந்து எழுதுங்கள்.நன்றி!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சலாம் சகோ.மனிதாபிமானி,
அருமையான அடிப்படையான விளக்கம்.:-)
ஆனால், பகுத்தறிவாளர்களுக்கு மட்டுமே விளங்கும். :-(

VANJOOR said...

சூப்பர்!!!

G u l a m said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

// என்னவோ சிலருக்கு பிறக்கும் போதே தொப்புள் கொடியோடு பலகோடி ரூபாய் அடைத்த சூட்கேசையும், மற்றவர்களுக்கு ஒன்றுமேயில்லாத மஞ்சள் பையையும் இறைவன் கொடுத்தனுப்புவது போல கேட்கிறார்கள்.
இந்த உலகில் ஏற்றத்தாழ்வுகள் ஏன்?, ஏழை, பணக்காரர்கள் பேதம் ஏன் என்று கேள்வி கேட்கிறார்கள். //

ஹா... ஹா... ஹா

உண்மைதான் சகோ உலகமெங்கும் பரிணமித்திருக்கும் நாத்திக வாதிகளுக்கு தமிழகத்தில் மட்டும் பெயர் "பகுத்தறிவாளர்கள்..."? இதுதான் இங்கு விந்தையான செய்தி!

ஆயிரம் முறை பதிலளிக்கப்பட்டாலும் ஆயிரத்து ஒன்றாம் முறையாக மீண்டும் தூசிதட்டி அதே கேள்வியை கொண்டு வருவது தான் அவர்களின் மரபு.

// சரி விடுங்க..... நீங்கள் சொல்வதைப்போலவே, கடவுள் இல்லையென்று ஒரு வாதத்திற்காக வைத்துக்கொள்வோம்.
அதனால், எங்களுக்கு ஒன்றும் நட்டமில்லை. நீங்களும், நாங்களும் செத்தால் அத்தோடு எல்லாம் முடிந்துவிடும். மறுமை, தீர்ப்பு என்றும் ஒன்றுமே இல்லை. நாம் இருவருமே தப்பித்துக்கொள்வோம்.
ஆனால், கடவுள் மட்டும் இருந்துவிட்டால்....செத்தாலும் நாங்க தப்பித்துக்கொள்வோம், நீங்க மாட்டிக்கொள்வீர்கள். //

இது தான் இங்கே பாயிண்ட்!

ஏற்றதாழ்வு - மறுமைக்குறித்து இந்த பதிவுகளும் ஏனையோருக்கு உதவலாமென நினைக்கிறேன்.
இன்ஷா அல்லாஹ்


கடவுள் படைப்பில் மனிதர்களிடையே ஏற்ற தாழ்வு ஏன்?
http://iraiadimai.blogspot.com/2010/06/blog-post_15.html


'வாழ்வை பூஜ்யமாக்கும்' மறுமைக்கோட்பாடு.
http://iraiadimai.blogspot.com/2011/09/blog-post_28.html

துரைடேனியல் said...

கடவுள் உண்டு என்ற கருத்தில் மட்டும் உங்களோடு உடன்படுகிறேன். ஏற்றத்தாழ்வு அவசியமே. அருமையான கருத்துக்கள் கட்டுரையில் உள்னன. வாழ்த்துக்கள்!

சார்வாகன் said...

ஹா ஹா ஹா
கொஞ்ச நேரம் கூட ஆத்திகன் என்ற போர்வையில் இஸ்லாமிய பிரச்சார்கரால் இருக்க முடியவில்லையே.அது நல்லத்தானே இருந்தது. இனி அதிகம் இஸ்லாமியர் என்ற பெயரில் எழுத முடியாது.உங்க ஆளுங்களே உங்களை எதிர்ப்பார்கள்.எ.கா நீங்க சொன்ன விவரம் எல்லாம் குலாம் பதிவுகளில் உள்ள விவரம்தான். இதுக்கு ஆம் அல்லது இல்லை என்றாலும் பிரச்சினைதான்!!!!!!!!!!!!

சரி ஏற்கெனவே உள்ள பல் ஆட்களுடன் போட்டி போடவே உங்களுக்கு சரியாக இருக்கும் போது நாம் எதற்கு இதை போய் விமர்சனம் பண்ணிக் கொண்டு.இஸ்லாமிய பதிவர்களின் பதிவுகள் போல் உங்களுக்குள்ளே பின்னூட்ட +ஓட்டு கும்மி அடிக்க்க வேண்டியதுதான்.
உங்க்ளின் நறுக்கென்ற கேள்வி[நன்றி சுவனன்] பாஸ்கல் வேஜர் என்பது அனைவருக்கும் தெரியும்.
இருந்தாலும் இஸ்லாமிய சுவனம் இருக்கும் கிடைக்கும் என ஆவலுடன் இருக்கிறீர்கள்.எல்லாமே இதுக்குதானா!!!!!!!!!!!!!.
வாழ்த்துக்கள்

NKS.ஹாஜா மைதீன் said...

நச்சுன்னு சொல்லி இருக்கீங்க கடைசி வரிகளில்....அருமை...

UNMAIKAL said...

சார்வாகன் இதுதான் உமது சொர்க்கமா?

click to read

>>>>>>>> 1. உடலுறவுக்கு மோட்சத்தில் கட்டுபாடில்லை. தட்டுபாடில்லை. வேண்டும் எண்ணிக்கைகளில் உனக்கு அனுபவிக்க தேவடியாள்கள் வேண்டுமா? நீ விரும்பிய பெண்கள் வேண்டுமா? <<<<<<<


>>>>>>>>> 2. 32 கன்னிப்பெண்கள் கர்த்தருக்கு பங்கா? - <<<<<


.