விக்கிலீக்ஸ் பெயரை பயன்படுத்தி பாஜகவினர் விளம்பரம் தேடிக்கொண்ட விவகாரம் பூகம்பமாய் வெடித்திருக்கின்றது.
"ஊழலுக்கு இடம் கொடுக்காதவர் மோடி என்பது அமெரிக்காவுக்கு தெரிந்ததால் தான் அவர்கள் மோடியை கண்டு அஞ்சுகின்றனர்" - இப்படியாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கூறியதாக பாஜகவினர் பரப்புரை செய்து வந்தனர். (அந்த படம் கீழே)
"ஊழலுக்கு இடங்கொடுக்காதவர் மோடி என்று விக்கிலீக்ஸ்சே சொல்லிவிட்டது" என்பதான பரப்புரைகளை தொடர்ந்து பாஜகவினர் கையாண்டு வந்ததால், இதுக்குறித்த விளக்கத்தை காட்டமான முறையில் ட்விட்டரில் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
"நரேந்திர மோடியின் பாஜக கட்சி, இம்மாதிரி போலியான விளம்பரங்களை பரப்பிக்கொண்டு இருக்கின்றது. ஆனால், அசாஞ்சே அப்படியான எதையும் கூறவில்லை" என்பது தான் அந்த ட்வீட். (படம் கீழே)
விக்கிலீக்ஸ்சின் இந்த அதிரடி தாக்குதல் பலரையும் கதிகலங்க வைத்துள்ளது. இதுக்குறித்து கருத்து தெரிவித்த அர்விந்த் கெஜ்ரிவால், இவையெல்லாம் போலி என்று தான் முன்பே கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார். காங்கிரசோ, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு, "போலியான விளம்பரங்களை நாங்கள் என்றுமே விரும்பியதில்லை, எங்களின் பணியே பேசும்" என்று கூறி அவர்களின் சாதகனைகளாக நினைப்பவற்றை பட்டியலிட்டு ஆயிரக்கணக்கான லைக்ஸ்சை தேற்றிக்கொண்டுவிட்டது.
இது ஒருபுறம் இருக்க, பாஜக இப்படியான விளம்பரங்களில் ஈடுபடவில்லை என்றும், விக்கிலீக்ஸ்சின் சான்றிதழ் தங்களுக்கு தேவையில்லை என்றும் லைன் கட்டி கூறிக்கொண்டுள்ளனர் பாஜக தலைவர்கள். ஒரு பொய்யை மறைக்க எத்தனை பொய்களை கூறுவீர்கள் பாஜக தலைவர்களே? புலியைக் கூட மறைத்து வைக்க முடியும், புகையை முடியுமா?
பாஜக தலைவர்களில் ஒருவரான ப்ரீத்தி காந்தி தங்களின் பெயரை பயன்படுத்தி மோடிக்கு விளம்பரம் தேடியதை ட்விட்டரும் களவுமாக அம்பலப்படுத்தியுள்ளது விக்கிலீக்ஸ்.
இதுமாட்டுல்ல, தன்னைப் பற்றி ஊழலுக்கு இடங்கொடுக்காதவர்(??) என்று விக்கிலீக்ஸ் கூறியதாக செய்தி வந்த போது இதற்கென ஒரு தனிப்பதிவே மோடியின் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியானது. அதில், இதுக்குறித்து தான் மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டிருந்தார் மோடி (பார்க்க ஆதாரம்)
விக்கிலீக்ஸ்சின் சான்றிதழ் தேவையில்லை என்றால் எதற்காக தனி போஸ்ட் & விளம்பரம்?
பித்தலாட்டங்கள் பல வகை, அதில் பாஜகவினர் செய்வது ஒரு வகை. ஆனால் என்ன, ஒவ்வொருமுறையும் அந்த முகமூடி கிழித்து தொங்கவிடப்படுகின்றது என்பது தான் அவர்களுக்கான பிரச்சனை.
கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ
நன்றி: DNA India
Tweet | ||||