Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Tuesday 18 March 2014

மோடி - விக்கிலீக்ஸ் விவகாரம்: பூகம்பமாய் வெடிக்கின்றது...



விக்கிலீக்ஸ் பெயரை பயன்படுத்தி பாஜகவினர் விளம்பரம் தேடிக்கொண்ட விவகாரம் பூகம்பமாய் வெடித்திருக்கின்றது. 

"ஊழலுக்கு இடம் கொடுக்காதவர் மோடி என்பது அமெரிக்காவுக்கு தெரிந்ததால் தான் அவர்கள் மோடியை கண்டு அஞ்சுகின்றனர்" - இப்படியாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கூறியதாக பாஜகவினர் பரப்புரை செய்து வந்தனர். (அந்த படம் கீழே)


"ஊழலுக்கு இடங்கொடுக்காதவர் மோடி என்று விக்கிலீக்ஸ்சே சொல்லிவிட்டது" என்பதான பரப்புரைகளை தொடர்ந்து பாஜகவினர் கையாண்டு வந்ததால், இதுக்குறித்த விளக்கத்தை காட்டமான முறையில் ட்விட்டரில் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. 

"நரேந்திர மோடியின் பாஜக கட்சி, இம்மாதிரி போலியான விளம்பரங்களை பரப்பிக்கொண்டு இருக்கின்றது. ஆனால், அசாஞ்சே அப்படியான எதையும் கூறவில்லை" என்பது தான் அந்த ட்வீட். (படம் கீழே)


விக்கிலீக்ஸ்சின் இந்த அதிரடி தாக்குதல் பலரையும் கதிகலங்க வைத்துள்ளது. இதுக்குறித்து கருத்து தெரிவித்த அர்விந்த் கெஜ்ரிவால், இவையெல்லாம் போலி என்று தான் முன்பே கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார். காங்கிரசோ, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு, "போலியான விளம்பரங்களை நாங்கள் என்றுமே விரும்பியதில்லை, எங்களின் பணியே பேசும்" என்று கூறி அவர்களின் சாதகனைகளாக நினைப்பவற்றை பட்டியலிட்டு ஆயிரக்கணக்கான லைக்ஸ்சை தேற்றிக்கொண்டுவிட்டது. 

இது ஒருபுறம் இருக்க, பாஜக இப்படியான விளம்பரங்களில் ஈடுபடவில்லை என்றும், விக்கிலீக்ஸ்சின் சான்றிதழ் தங்களுக்கு தேவையில்லை என்றும் லைன் கட்டி கூறிக்கொண்டுள்ளனர் பாஜக தலைவர்கள். ஒரு பொய்யை மறைக்க எத்தனை பொய்களை கூறுவீர்கள் பாஜக தலைவர்களே? புலியைக் கூட மறைத்து வைக்க முடியும், புகையை முடியுமா? 

பாஜக தலைவர்களில் ஒருவரான ப்ரீத்தி காந்தி தங்களின் பெயரை பயன்படுத்தி மோடிக்கு விளம்பரம் தேடியதை ட்விட்டரும் களவுமாக அம்பலப்படுத்தியுள்ளது விக்கிலீக்ஸ். 


இதுமாட்டுல்ல, தன்னைப் பற்றி ஊழலுக்கு இடங்கொடுக்காதவர்(??) என்று விக்கிலீக்ஸ் கூறியதாக செய்தி வந்த போது இதற்கென ஒரு தனிப்பதிவே மோடியின் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியானது. அதில், இதுக்குறித்து தான் மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டிருந்தார் மோடி (பார்க்க ஆதாரம்



விக்கிலீக்ஸ்சின் சான்றிதழ் தேவையில்லை என்றால் எதற்காக தனி போஸ்ட் & விளம்பரம்? 

பித்தலாட்டங்கள் பல வகை, அதில் பாஜகவினர் செய்வது ஒரு வகை. ஆனால் என்ன, ஒவ்வொருமுறையும் அந்த முகமூடி கிழித்து தொங்கவிடப்படுகின்றது என்பது தான் அவர்களுக்கான பிரச்சனை. 

கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ 
நன்றி: DNA India

6 comments:

ஜெய்லானி said...

மோடியின் முகமூடி கிழிந்து ரொம்ப நாளாகி விட்டது. சொந்த மாநிலத்தில் நிற்க்கவே முடியாமல் அடுத்த மாநிலத்தில் நிற்பதிலேயே தெரியவில்லையா.....:)

நட்புடன் ஜமால் said...

அல்லாஹ் இன்னும் இன்னும் அவர்களை பகிரங்கப்படுத்துவான்

Unknown said...

36 / 54 ..... இவ்வளவு ( 18 ) எதிர் வோட்டு போட்டு இருக்காயங்க ! அப்படி ஸ்டமக் கலக்கிருக்கு போல ... ஹா ஹா ஹா !!

Aashiq Ahamed said...

@ நாகூர் மீரான்,

எல்லா மைனஸ் வோட்டும் ஒரே ஆளே போட்டது சகோ.

சொல்லப்படும் கருத்து சரியானதாக இருந்தால் அதனை சீர்தூக்கி பார்ப்பதே தமிழ் சமூகத்தின் பண்பு. அதில் இந்த மைனஸ் வோட்டு ஆள் போல ஒன்று இரண்டு விதிவிலக்குகள் இருப்பது இயல்பே.

நம் சகோக்களை நீங்கள் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காகவே இந்த விளக்கம்..

நன்றி..

tamillinks360.com said...

இந்த விளம்பரத்தைப் பார்த்த உடனே ஒரு சின்ன சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது... இப்போது அது நீரூபணமாகிவிட்டது. எப்படியெல்லாம் திட்டம் போட்டு வேலை பார்க்கிறாங்கப்பா...!!!

Aashiq Ahamed said...

அனானி சகோ,

ஓரமா போய் விளையாடுங்க..:-)