Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Monday, 21 January 2013

ஆனந்த விகடன் - நக்கீரன் - பகிரங்க விவாதத்திற்கு முஸ்லிம் அமைப்பு அழைப்பு


சவூதி அரேபிய அரசாங்கத்தால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா குறித்து ஆனந்த விகடன், நக்கீரன் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ள செய்திகள்  கட்டுக்கதைகளாகவும், உண்மைக்கு புறம்பானதாகவும் இருப்பதாக கூறியுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இஸ்லாமிய இயக்கம், இது தொடர்பான அனைவரையும் மக்கள் முன்னிலையிலான பகிரங்க பொது விவாதத்திற்கு அழைத்துள்ளது. 

கீழ்க்காணும் நபர்களுக்கு முறைப்படி விவாத அழைப்பு அனுப்பட்டுள்ளது. 

ஆசிரியர் - நக்கீரன் வார இதழ் 
ஆசிரியர் - ஆனந்த விகடன் வார இதழ் 
மனுஷ்ய புத்திரன் - C/o நக்கீரன் வார இதழ். 
ஜே.பி ஜோசப்பின் - C/o நக்கீரன் வார இதழ் 
பாரதி தம்பி - C/o ஆனந்த விகடன் வார இதழ்

விவாத அழைப்புக்கடிதம் உங்கள் பார்வைக்கு..இதுக்குறித்து சம்பந்தப்பட்ட இதழ்களை நீங்களும் கீழ்காணும் முகவரியில் தொடர்புக்கொண்டு விவாதத்திற்கு வருமாறு ஊக்கப்படுத்தலாம்.

ஆனந்த விகடன்: av@vikatan.com, editor@vikatan.com

நக்கீரன்: news@nakkheeran.in, nakkheeran@in.com, editor@nakkheeran.in

இந்த விவாதத்திற்கான செலவுகள் அனைத்தையும் தாங்களே ஏற்றுக்கொள்வதாகவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தெரிவித்துள்ளது. விவாதம் நல்ல முறையில் நடந்து மக்கள் பயன்பெற வாழ்த்துக்கள்.

நன்றி: ஆஷிக் அஹமத் அ22 comments:

sulthan mydeen said...

இன்ஷா அல்லாஹ்

DiaryAtoZ.com said...

அவர்கள் விவாதத்திற்கு வருவது சந்தேகமே.

Bala Mugundan said...

vivatham panny enna aagapogiradhu poona ueer poonathudhan veetipachu

ஹுஸைனம்மா said...

இதில விவாதிக்க என்ன இருக்கு? என்ன-எப்படி-ஏன் நடந்ததுன்னு விபரமா ஒரு முழுமையான அறிக்கைய எழுதிக் கொடுத்து, அவங்க பத்திரிகையில் போடச் சொல்லிக் கேக்கிறத விட்டுட்டு, விவாதத்துக்கு வான்னா..?!

மனிதாபிமானி said...

@ ஹுசைனம்மா,

அவங்கல்லாம் விவாதத்துக்கு அழைச்சாவெல்லாம் வர்ற ஆட்களா? அவங்கல்லாம் பரபரப்புக்கு எழுதுறவங்க... நீதி வேண்டியா எழுதுறாங்க? என்று தாங்கள் எண்ணுவது புரிகின்றது. உங்கள் கருத்தை ததஜவிற்கு பார்வர்ட் செய்கின்றேன்.

மனிதாபிமானி said...

@ பால முகுந்தன்,

சலாம் சகோ

//vivatham panny enna aagapogiradhu poona ueer poonathudhan veetipachu//

ஆமாம் சகோ உண்மைதான். நக்கீரன் ஆனந்த விகடன் செய்ததெல்லாம் வெட்டி வேலை தான். அது இல்லையென்றால் இதற்கு தேவை இருந்திருக்காது.

Nizam said...

பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு தருவது...நல்ல செயல்கள் பெரியவங்க பேசிக்கு கொள்ளுவார்கள் நாம் வேடிக்கை பார்க்கலாம் யார் சொல்லுவது சரி என்று... தேவையில்லாமல் சிறய சிறய level இருக்கிறவார்கள் கருத்துச்சன்டை நடப்பதை தவரிக்கலாம்.

சில நேரங்களில் ஒரு சின்ன வார்த்தைகளால் ஊரே இரண்டுபட்டுயிருக்கிறது. பணத்திற்கும் புகழுக்கும் பத்திரிக்கை நடத்துபவர் உண்மைக்கு புறம்பாக எழுதி இதனால் ஏற்படும் விளைவுகளை அறியதவர்களாக இருக்கமுடியாது.

Anonymous said...

what is the relation between saudi govt & u?

Anonymous said...

To

Anantha vikatan, Nakkeeran Editors and Manushya Puthran:

நீங்கள் இதிலிருந்து விலகவதே உத்தமம் என்று நான் நினைக்கிறேன். சவூதி சட்டங்கள் மிகவும் பழமையானவை. அது குறித்து யாரும் கருத்து தெரிவிப்பதில்லை, காரணம் அது அவர்களின் நாடு சம்பந்தப் பட்டது. அவர்கள் நாட்டில் குற்றங்களுக்கு தண்டனைகள் கடுமையாக உள்ளது. அங்கு குற்றங்கள் குறைவாக நடப்பதற்கும் இதுவே ஒரு காரணமாக இருக்கிறது. கடுமையான தண்டனை சட்டங்களை ஆதரிப்பவன் நான். காரணம் ஒரு தீயவன் அழிந்தால் பல உயிர்கள் காக்கப் படும் எனும் கிருஷனரின் நிலைப்பாடு. இந்த வழக்கைப் பொருத்தவரை மீண்டும் தோண்டி எடுத்து பிரித்துப் பார்ப்பது என்பது எந்த விதத்திலும் யாருக்கும் உதவப் போவது இல்லை. நாளையே சவூதி அரேபியா மக்கள் இந்திய சட்டம் குறித்து கருத்து தெரிவித்துப் போராடினால் நம் நிலைமை என்ன? அவர்கள் எந்த நாடு கடந்தும் கண்டம் கடந்தும் தங்கள் சட்டங்களை செயல்படுத்தவில்லையே. அது அவர்கள் பூமி அவர்கள் சட்டம். இதில் மற்றவர்கள் வீணாக தலையை நுழைத்து மூக்கு உடைபட வேண்டாம் என்பதே என் கருத்து. மேலும் இது குறித்து நீங்கள் எடுக்கும் செயல்கள் பலரால் கண்காணிக்கப் படும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். அந்த தண்டனை நீதிக்கு உட்பட்டதா இல்லையா என்பதைக் கண்காணிக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை. நீங்கள் இதிலிருந்து பின்வாங்கினால், சந்தோஷப்படும் முதல் ஆள் நானாக இருப்பேன்.

சிராஜ் said...

// what is the relation between saudi govt & u? //

The same relationship between you and Saudi.

சிராஜ் said...

அடா..அடா.. என்னே நேர்மை?? என்னே நேர்மை??

ரிஸானாவுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் இவர்கள், மனித உரிமை பேசும் இவர்கள். சென்னையில் 5 கொள்ளையர்கள் சுடப்பட்டதும்.. "ஹேட்ஸ் ஆப் சென்னை போலிஸ்" னு மெஜேஜ விழுந்து விழுந்து பார்வர்ட் பண்னாங்க... குற்றவாளியை சென்னை போலிஸ் சுட்டா ஹேட்ஸ் ஆப்... சவுதி போலிஸ் சுட்டா(தலையவெட்னா) காட்டுமிராண்டி.... சூப்பர்...

அந்த மெஸேஜை ரசிக்காத, பார்வர்ட் செய்யாத சகோதரர்கள் மட்டும் இங்கு வந்து பதில் சொன்னால் போதும்...

Nellai.S.S.Mani said...

துணிந்து விவாதத்தில் பங்கு பெற்று பாரதியின் புதுமைப்பெண்ணாக கருத்து செறிவு இருக்கவேண்டும் .எனது வாழ்த்துக்கள்

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

////////இதில விவாதிக்க என்ன இருக்கு? என்ன-எப்படி-ஏன் நடந்ததுன்னு விபரமா ஒரு முழுமையான அறிக்கைய எழுதிக் கொடுத்து, அவங்க பத்திரிகையில் போடச் சொல்லிக் கேக்கிறத விட்டுட்டு, விவாதத்துக்கு வான்னா..?!////////

-----அப்படியே வழிமொழிகிறேன்..!

///அவங்கல்லாம் விவாதத்துக்கு அழைச்சாவெல்லாம் வர்ற ஆட்களா? அவங்கல்லாம் பரபரப்புக்கு எழுதுறவங்க... நீதி வேண்டியா எழுதுறாங்க? என்று தாங்கள் எண்ணுவது புரிகின்றது. உங்கள் கருத்தை ததஜவிற்கு பார்வர்ட் செய்கின்றேன்.///----------நல்ல செயல்..! நன்றி..!

Anonymous said...

அடிப்படை நாகரீகம் கூட தெரியாத ஒருவருடன் எப்படி விவாதிப்பது

http://onlinepj.com/unarvuweekly/manusyapuththirana_miruka_puththurana/

Ethicalist

Anonymous said...

மரபு மீறுவதுதான் மார்க்க அறிஞருக்கு அழகா?

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்....

முன்னுரை; அண்ணன் நோய்வாய்ப் பட்ட காரணத்தினால் அண்ணனை விமர்சிக்காமல் இருந்து வந்தோம். ஆனால் அண்ணன் தனது பணியை{!} வழக்கம் செய்து வருவதால் அவரைப் பற்றிய சில விசயங்களை அலச மீண்டும் முன் வந்துள்ளோம்.


சவூதியில் இலங்கைப்பணிப்பெண் ரிசானா நபீக் என்பவருக்கு மரணதண்டனை விதித்தது தொடர்பாக ஊடகங்களில் ஆதரவும் எதிர்ப்பும் கலந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. நம்மைப் பொருத்த வரையில் ரிசானா மீதான வழக்கில் அதன் உண்மை நிலையை அருகில் இருந்து பார்க்கவில்லை. ஊடகங்களில் வெளியான செய்தியை வைத்தும், மரணதண்டனை கைதிகளை மூன்றே மாதங்களுக்குள் தண்டனையை நிறைவேற்றும் சவூதி அரசு, ரிசானா வழக்கில் மட்டும் ஏழு ஆண்டுகள தாமதம் செய்ததை வைத்தும், சவூதி இளவரசர் சல்மான் இப்னு அப்துல் அஜீஸ் அவர்களின் சமாதான முயற்சியை கொலையுண்ட குழந்தையின் தாய் ஏற்கவில்லை என்ற செய்தியின் அடிப்படையிலும், மருத்துவ அறிக்கையை வைத்து பார்க்கும் போது ரிசானாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை சரியானது என்ற முடிவுக்குத்தான் வர முடிகிறது. அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன். அதையும் தாண்டி ரிசானாவுக்கு அநீதி இழைக்கப் பட்டிருக்குமானால் அவரது அநீதிக்கு காரணமானவர்களின் நன்மையை மறுமையில் கொள்ளையடிப்பார் இறைவன் நாடினால். இந்த விசயத்தில் இதைத் தாண்டி ஒரு முஸ்லிம் கருத்து சொல்வது ஆகுமானதும் அல்ல. அவசியமானதும் அல்ல. ஆனால் முஸ்லிம்களில் பலர் சவூதியை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் இஸ்லாமிய ஷரியாவை மாற்றார்கள் எள்ளி நகையாடும் அளவுக்கு செய்து விட்டார்கள். அண்ணனுக்கு அவர்கள் மீதெல்லாம் வராத கோபம், தனது பரம வரியான நக்கீரன் மீதும், ஆனந்த விகடன் மீதும் வந்துள்ளது.

நக்கீரன் ஆனந்த விகடன் ஆகிய இதழ்களில் ரிசானா மீதான தண்டனை குறித்து விமர்சனக் கட்டுரை எழுதியவர்களை வழக்கம் போல விவாத விளையாட்டுக்கு அழைத்துள்ள அண்ணன், அத்தோடு நின்றிருந்தால் அவரை நாமும் பாராட்டுவோம். ஆனால் அந்த கட்டுரை எழுதியவர்களுக்கு பதிலளிக்கிறேன் என்ற பெயரில் தன்னை ஒரு மார்க்க அறிஞர் என்பதை மறந்து மூன்றாந்தர நடையில் விமர்சித்துள்ளார்.

இஸ்லாம் குறித்த எத்தனையோ எடக்குமடக்கான கேள்விகளுக்கு கூட, ''சகோதரர் அழகான கேள்வியை கேட்டிருக்கிறார்' என்ற பீடிகையுடன் பொறுமையாக அழகாக பதில் சொன்ன அண்ணனா இப்படி தரம் தாழ்ந்து விட்டார் என்பதை நினைக்கையில் அவரை இந்த நிலைக்கு இறக்கிய மமதையிலிருந்து அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் என்று பிரார்த்திப்பதை தவிர வேறு ஒன்றும் நமக்கு தோணவில்லை.

எதிர்க்கருத்துடையவரின் கருத்தை மட்டும் எதிர்ப்பது நோக்கமாக இருக்கவேண்டுமேயன்றி, எழுதியவரை எதிரியாக பார்க்கக் கூடாது. ஆனால் அண்ணனோ, மனுஷ்ய புத்திரனை ''மிருகப் புத்திரனாக'' காட்டும் அளவுக்கு சிந்தனை வறட்சி அண்ணனுக்கு ஏற்பட்டுள்ளது.

அண்ணனின் அழகிய நடையை படித்து விட்டு நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள் ;
http://onlinepj.com/unarvuweekly/manusyapuththirana_miruka_puththurana/

நானே அகிலங்களின் இறைவன் என்று மார்தட்டிய பிர் அவுனிடம் கூட அழகிய முறையில் உபதேசம் செய்யுமாறு அல்லாஹ் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கட்டளையிடுகிறான் என்றால், மாற்றுக் கருத்துடையவர்கள் மீது அவன் இவன் என்று தொடங்கி அவர் பிறப்பு வரை அர்ஜிப்பது அண்ணனின் மறுப்பை படிக்கும் எவருக்கும் அண்ணன் சொல்லும் கருத்து மறைந்து அண்ணனின் அர்ச்சனை மட்டும் தான் மனதில் நிற்கும் என்பதை சுயமாக சிந்திக்கும் எவரும் விளங்கிக் கொள்ளலாம்.

அட விடுங்க! எதிரியை இல்லாமல் ஆக்க அண்ணன் காலம் காலமாக பயன்படுத்தும் ''தொண்டி பார்முலா'' தானே என்கிறீர்களா? அதுவும் சரிதான்!

குறிப்பு; நமது இந்த ஆக்கம், அண்ணனின் வரம்புமீறலை குறித்தது தானே தவிர, மனுஷ்ய புத்திரனின் கருத்துக்கு ஆதரவானது அல்ல என்று சொல்லி வைக்கிறோம் ஏனென்றால் பதிலில்லை எனும்போது, அண்ணனும் அவரது தம்பிகளும் திசை திருப்புவதில் வல்லவர்கள் என்பதால்.


--
அப்துல் முஹைமின்.
முடிந்தால் இந்த பின்னூட்டத்தை வெளியிட்டு பதில் கூறுங்கள்

ethicalist

Anonymous said...

அப்துல் ஹ‌மீது என்ற‌ ம‌னுஷ்ய‌ புத்திர‌னால் இஸ்லாத்திற்கு இழிவோ, தாழ்வோ ஏற்ப‌ட‌ப்போவ‌தில்லை. ஆனால் மார்க்க‌ அறிஞ‌ர் என்று சொல்லிக்கொள்கிற‌ இப்ப‌டி த‌ர‌ம் குறைந்து பேசுகிற‌ ஆட்க‌ளால்தான் மார்க்க‌த்திற்கே இழிவு ஏற்ப‌டுகிற‌து. சொல்ல‌ப்போனால் எல்லா ம‌த‌ங்க‌ளுமே முடிவில் இப்ப‌டிப்ப‌ட்ட‌ ஆட்க‌ளைத்தான் உருவாக்குகிற‌து அல்ல‌து இப்ப‌டிப்ப‌ட்ட‌ ஆட்க‌ளின் கைக‌ளில் போய் நிறுவ‌ன‌ம‌ய‌ப்ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌து. ம‌த‌ங்க‌ளிலிருந்து ஒதுங்கியிருப்ப‌தே ம‌னித‌னுக்கு ந‌ன்மையாக‌ப்ப‌டுகிற‌து.

மூலம் - Pandiarajan Kadambavanam

(ethicalist)

Anonymous said...

அப்துல் ஹ‌மீது என்ற‌ ம‌னுஷ்ய‌ புத்திர‌னால் இஸ்லாத்திற்கு இழிவோ, தாழ்வோ ஏற்ப‌ட‌ப்போவ‌தில்லை. ஆனால் மார்க்க‌ அறிஞ‌ர் என்று சொல்லிக்கொள்கிற‌ இப்ப‌டி த‌ர‌ம் குறைந்து பேசுகிற‌ ஆட்க‌ளால்தான் மார்க்க‌த்திற்கே இழிவு ஏற்ப‌டுகிற‌து. சொல்ல‌ப்போனால் எல்லா ம‌த‌ங்க‌ளுமே முடிவில் இப்ப‌டிப்ப‌ட்ட‌ ஆட்க‌ளைத்தான் உருவாக்குகிற‌து அல்ல‌து இப்ப‌டிப்ப‌ட்ட‌ ஆட்க‌ளின் கைக‌ளில் போய் நிறுவ‌ன‌ம‌ய‌ப்ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌து. ம‌த‌ங்க‌ளிலிருந்து ஒதுங்கியிருப்ப‌தே ம‌னித‌னுக்கு ந‌ன்மையாக‌ப்ப‌டுகிற‌து.

மூலம் - Pandiarajan Kadambavanam

(ethicalist)

Anonymous said...

ரிஸானாவுக்கு சவுதிஅரசு வழங்கிய மரணதண்டனை – ஒரு அநீதி
ஹெச்.ஜி.ரசூல்

இலங்கை மூதூரைச் சேர்ந்த இருபத்து மூன்றே வயதான முஸ்லிம் பெண்ணுக்கு சவுதிஅரேபிய அரசு மரணதண்டனை வழங்கி கொலை செய்துள்ளது.சவுதிஅரேபிய குடும்பத்தில் பணிப்பெண்ணாக வேலைக்குச் சேர்ந்த சிறிது நாட்களிலேயே சவுதி எஜமானியின் நான்குமாத குழந்தைக்கு பாட்டிலில் பாலூட்டியபோது வாய்வழியாகவும்,மூக்குவழியாகவும் புரையேறி அக்குழந்தை தற்செயலாக இறந்துள்ளது.. அப்போது ரிஸானாவுக்கு பதினேழுவயது.இதற்காக 2005 இல் கைது செய்யப்பட்ட அந்த ஏழைப் பெண் ரிஸானா சவுதி அரசால் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு ஜனவரி 9 2013 அன்று மரணதண்டனை வழங்கப்பட்டு கொல்லப்பட்டாள். சவுதி அரசு ஷரீஅ சட்டப்படி இந்த தண்டனையை வழங்கியதாக கூறுகிறது.

1)தற்செயலாக நிகழ்ந்த ஒரு மரணத்தை ஷரீஅ கொலைக்குற்றமாக பார்க்க வேண்டும் என்று சொல்கிறதா…

2) பணிப்பெண் வேலைக்கு சென்ற இரண்டு வாரங்களிலேயே பதினேழுவயது சிறுமி ஒரு குழந்தையை கொன்றாள் என்றால் எதேனும் பொருத்தப்பாடு இருக்கிறதா…

3) போர்க்காலங்களில் தாக்க வரும் எதிரிகளை பழிக்கு பழியாக கொலைசெய்ய குரான் அனுமதிக்கிறது. என்றால் காபிர்களை (இஸ்லாம் அல்லாதவர்களை) அமைதிக்காலச் சுழலிலும் கொல்ல குரான் அனுமதிக்கிறதா…

4) தற்செயலாக மரணமடைந்த நான்குமாத குழந்தையின் உயிரும்,பெற்றோர்களை துறந்து வறுமையின் காரணமாக அரபுநாட்டில் வீட்டு கொத்தடிமையாக பணிசெய்த இருபத்துமூன்று வயது இளம் பெண்ணின் உயிரும் சமமாகுமா…
5)கொலைக்குற்றத்திற்குதான் பாதிக்கப்பட்டோரின் மன்னிப்பும் ஈட்டுத்தொகையும். இது ஒரு தற்செயல் மரணத்திற்கு பொருந்துவதாகத் தெரியவில்லை..பிரேத பரிசோதனை அறிக்கை இல்லாமை , ரிஸானாவின் வாக்குமூலம்(மொழிபெயர்ப்புசார்ந்த புரிதல்)இலங்கைஅரசின் மெத்தனப்போக்கு, அப்படியேஆயினும் கூட கடந்து ஐந்துவருடங்களாக பாதிக்கப்பட்ட குடும்பத்தோடு மன்னிப்பை கோருவதற்கு உரிய ஏற்பாடை செய்யாமை.சவுதி அரேபிய நீதிபரிபாலனத்தில் குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதாட முடியாத உரிமையின்மை என பல் துணைக்காரணிகளும் இப்பிரச்சினையில் செயல்பட்டுள்ளன.
6)ரிஸானாவிற்கு பதிலாக ஒரு சிங்களப்பெண்ணாக இருந்தால் இலங்கை அரசு இப்படி இருந்திருக்குமா..அல்லது குற்றம் சாட்டப்பட்ட பெண் ஒரு மேற்கத்திய வெள்ளை இனப் பெண் என்றிருந்தால் சவுதி அரசு இந்த தண்டனையை நிறைவேற்றி இருக்குமா..
7)அமெரிக்க ஐரோப்பிய ராணுவ மேலாதிக்கவாதிகளின் காலடியில் ஷரியாவை அடகுவைத்திருக்கும் சவுதி மன்னராட்சி ஏகபோகிகளுக்கு சாதாரண ஏழை எளிய முஸ்லிம்களின் உயிர் ஒரு பொருட்டே இல்லை...
8)இதில்வேறு சவுதிநிதிஉதவியில் தங்கள் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் சில முஸ்லிம் சலபி/வகாபி அமைப்புகளின் ஷரியா குறித்த போலி கூக்குரல்கள் மிகவும் கீழ்மையாகவே ஒலிக்கின்றன,

Anonymous said...

9)இலங்கை தெற்கு பகுதி வடதெனிய இடத்தைச் சேர்ந்த நாற்பத்தொன்பது வயதான ஆரியவதி சவுதி அரேபிய வீட்டு பணிப்பெண்ணாக வேலை பார்த்தபோது அவள் உடல்மீது நிகழ்த்தப்பட்ட சித்தரவதை தாங்காமல் சவுதியை விட்டு தப்பி இலங்கைக்கு திரும்பிவந்திருக்கிறார். ஆர்யவதியின் உடலில் ஆணியறைந்து கொடுமைப்படுத்திய உடல்பகுதிகள் வன் கொடூரம் நிகழ்ந்துள்ளது.. ரிஸானாவிற்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை ஒட்டி சவுதிக்குள் நடக்கும் வீட்டுப் பெண்களுக்கு இழைக்கப்படும் சித்தரவதைகள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக படுபயங்கரமாய் வெளிவரத் தொடங்கியுள்ளன.சவுதி குறித்த புனிதங்களால் எழுப்பப்பட்ட பிம்பங்கள் வெகுவாக கலைந்து உதிர்ந்து விழுகின்றன.
இங்கே ஆரியவதியின் உடலில் 24 ஆணிகள் அடித்து ஏற்றப்பட்டுள்ளன.
கண் இமை நெற்றிக்கு அருகில் ஒரு கம்பி,வலது கையில் 5 ஆணிகள், ஒரு கம்பி,இடது கையில் 3 ஆணிகள் 2 கம்பிகள்,வலது காலில் 4 ஆணிகள் ,இடது காலில் 2 ஆணிகள் என நீள்கிறது.இதில் கூடிய நீளமுள்ள ஆணியின் அளவு 6.6செமீ. இலங்கைக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் திரும்பிவந்த ஆரியவதிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு 13 ஆணிகள் நீக்கப்பட்டன.
10) மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்காக சென்றவர்களில் சராசரி 20 சடலங்கள் மாதாந்திரம் இலங்கைக்கு கொண்டுவரப்படுவதாகவும் இது இயற்கைமரணம்,விபத்து மரணங்களை உள்ளடக்கிய விவரம் என்பதாக ஒரு தகவல் குறிப்பு சொல்கிறது.
11)இலங்கையர்கள் 1.8 மில்லியன் பேர் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். இதில் எழுபது சதவிகிதம் பெண்கள். சவுதியில் பணிபுரியும் 5.5 மில்லியன் வெளிநாட்டவர்களில் நான்கு லட்சம் பேர் இலங்கையர்களாக உள்ளனர்.
12) மாதாந்திரம் 18 ஆயிரம் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு செல்கின்றனர், இதில் இந்தியா இலங்கை,இந்தோனேஷியா நாடுகளைச் சேர்ந்த பெண்களே எண்னிக்கையில் மிக அதிகம். பாகிஸ்தான்,பங்களாதேஷ் அரசுகள் வீட்டு வேலைக்கு பெண்கள் செல்வதை தடை செய்துள்ளது.
13) சவுதி எஜமானர்களின் சித்தரவதையும்,துன்புறுத்தல்களையும் தாங்காமல் இலங்கைப் பணிப் பெண்கள் 400 பேர் தப்பி நாடுதிரும்ப முயன்று தோல்வியடைந்துள்ளனர்.ரியாதின் உலெய்யா முகாமிலே இவர்கள் தடுத்து வைக்க்ப் பட்டுள்ளனர்.சம்பளம் வழங்கப்படாமை ,பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட பல காரணங்களால் இப் பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் என்பதாக இலங்கை தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.
14) தன்மானமுள்ள உம்மா
மகளை கொலை செய்த சவூதியின் உதவி வேண்டாம்:ரிசானாவின் தாய்
என்னுடைய மகளைக் கொலைசெய்த சவூதி அரசாங்கத்தினதோ அல்லது அந்த நாட்டைச் சேர்ந்த நபர்களின் உதவிகளோ தங்களுக்கு வேண்டாம் என்று சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கைப் பணிப்பெண் ரிசானாவின் தாய் அஹ்மது செய்யது பரீனா தெரிவித்துள்ளார்.
அவ்வாறான எந்த உதவிகளையும் தான் பெற்றுக்கொள்ளத் தயாரில்லை என்று குறிப்பிட்டுள்ள ரிசானாவின் தாயார் சவூதியைச் சேர்ந்த பலர் தனக்கு உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் அவ்வாறான அன்பளிப்புகளை எடுத்துக் கொண்டு தன்னுடைய வீட்டுப்பக்கம் வரவேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். -
18 – 01 – 2013www.newjaffna.com

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

Why this double standard dear onlinepj.com...?

ரிசானா விஷயத்தில் ஒரே மாதிரியான தவறான புரிதலில் உள்ளவார்களான கருணாநிதிக்கு எழுதப்பட்ட உங்கள் இடுகையில் நாகரிகமான வார்த்தைகள்..!

மனுஷ்யபுத்திரன், நக்கீரன், ஜோசபின், விகடன் மற்றவர்களுக்கு எழுதப்பட்ட பதிவுகளில் படிக்கவே கூசும் அளவுக்கு எங்கெங்கும் அநாகரீக வார்த்தைகள்..!

அந்த இடுகைகளின் எழுத்துக்களின் ஊடே இஸ்லாமிய நன்னெறியை காணவில்லை. சத்தியத்தின் பக்கம் இருக்கும் கர்வமும் வீணாப்போன அரசியலும்தான் நிறைந்துள்ளது..!

இது போன்ற எழுத்து நடையை படிப்போர்... விவாத அழைப்பை ஏற்று எப்படி வருவார்கள் விவாதத்துக்கு...?

இத்தகைய தரம் தாழ்ந்த வார்த்தை பிரயோகங்கள் எல்லாம்.... உண்மையை மக்களிடம் உணர்த்துவதற்கு பதில், மனுஷ்ய புத்திரன் நக்கீரன் விகடன் ஜோசபின் போன்றவர்கள் மீது தேவையற்ற பட்சாதாபத்தை ஏற்படுத்தி, ஆன்லைன் பீஜே தள கட்டுரையில் உள்ள சத்தியத்தையே கொன்று புதைத்து விடுகிறது.

அவ்வளவு எழுதி எல்லாமே விழலுக்கு இறைத்த நீராகி விட்டதையே காண்கிறேன்.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.

-----------எல்லாருக்கும்தான் இது..!

Nizam said...

மிருகப்புத்திரன் என்று சொல்லுவது கண்டிக்கத்தாக்குது. ஆனால் மிருக்கத்தில் இருந்து மனிதன் வந்தான் என்று டார்வின் கோட்ப்பட்டை நம்பக்ககூடியவர்களுக்கு இந்த வார்த்தை சரியாக பொறுந்தக்ககூடியது.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

@ Nizam,

ஆனால், //மிருக்கத்தில் இருந்து மனிதன் வந்தான்// என்பதை நம்பாத நாம் அப்படி சொல்லவே கூடாது சகோ..!