Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Wednesday, 23 January 2013

News Flash: விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடைசட்டம் ஒழுங்கை கணக்கில் கொண்டு அடுத்த பதினைந்து நாட்களுக்கு விஸ்வரூபம் படம் திரையிடப்பட தடை விதிப்பதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிய பிறகே தடையை நீக்குவது குறித்து அரசு முடிவெடுக்கும் என்று அறிவிப்பு.

விஸ்வரூபம் திரைப்படம் கடந்த 21-ஆம் தேதி முஸ்லிம் அமைப்புகளுக்கு திரையிடப்பட்டது. படத்தை கண்டு கடும் எதிர்ப்பை தெரிவித்த முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு, படத்தை தடை செய்வதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியது.

ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகமும் இஸ்லாமிய கூட்டமைப்பிற்கு ஆதரவாக களம் இறங்க, சமூக வலைத்தளங்கள் பரபரத்தன. முதல் கட்டமாக நேற்று கமிஷனரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதில் சென்சார் போர்ட் நடவடிக்கைகள் குறித்தும் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இது நடந்துக்கொண்டிருந்த வேலையில் வெளிநாடுகளில் இந்த படத்தை தடை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக இன்று அமீரகம், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் விஸ்வரூபம் படம் திரையிடப்படாது என்று அறிவிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக இன்று தலைமைச் செயலரை சந்தித்து இஸ்லாமிய கூட்டமைப்பு முஸ்லிம் சமுதாயத்தின் உணர்வுகளை பிரதிபலித்தது. போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பும் இன்று குதிக்க இந்த விவகாரம் மேலும் சூடு பிடித்தது. கமலின் அலுவலகத்தை முற்றுகையிட்ட போராட்டகாரர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் நீங்கள் மேலே காணும் செய்தி வந்துள்ளது.

இந்த விவகாரத்தில் விரைந்து செயல்பட்ட தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.

மிகவும் சமயோஜிதமாக இந்த விசயத்தை முஸ்லிம் அமைப்புகள் கையாண்டிருக்கின்றன.துப்பாக்கி படம் கொடுத்த ஷாக்கில் சுதாரித்த முஸ்லிம் அமைப்புகள், விஸ்வரூபம் படத்தை தங்களுக்கு திரையிட்டு காட்டப்பட்ட பிறகே வெளியிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வெற்றி கண்டிருக்கின்றன. எதிர்கால வியூகங்களுக்கு விஸ்வரூபம் விவகாரம் சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.

இந்த படத்தை முஸ்லிம்கள் எதிர்த்தவுடன், படத்திற்கு முஸ்லிம்கள் விளம்பரம் அளிக்கின்றனர் என்று கூறிவந்தவர்களின் பார்வையும் இந்த தடை மூலம் மாறும் என்று எதிர்ப்பார்க்கலாம்.

கீழ்த்தரமான எண்ணங்களில் இருந்து கமல் விடுபட்டு ஆக்கப்பூர்வமான வழியில் செயலாற்ற பிரார்த்திக்கின்றோம்.


மேலதிக தகவலுக்கு இணைந்திருங்கள்.

நன்றி: ஆஷிக் அஹமத் அ 

21 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சலாம் சகோ.மனிதாபிமானி,
நான் துப்பாக்கி வந்த சமயம் போட்ட பதிவு இது.....

////////////துப்பாக்கி'யே இறுதியாக இருக்கட்டும். சினிமாவுலகுக்கு பாடம் கற்பித்த 'துப்பாக்கி'யை சினிமா மறக்க கூடாது..! விஷயம் புரிந்தும் எதிர்காலத்தில் இன்னொரு படத்தை ரிலீஸ் பண்ணிவிட்டு, இதேபோல 'மன்னிப்பு கோரல் பிரஸ் மீட்' என்று இனி ஒன்று ஒருபோதும் நடக்கவே கூடாது..!

அப்படி நடந்தால்...?

'துப்பாக்கி'யில் காட்டிய நமது ஒருங்கிணைந்த எதிர்ப்பு... அப்படியே, தனன்று கொண்டே இருந்து... அடுத்த விஸ்வரூபம் எடுத்து... அது அப்படியான படத்தை திரையிட 'தடை உத்தரவு' என்ற உடனடி நீதிமன்ற அதிரடி இடைக்கால தீர்ப்பில்தான் முடியவேண்டும்..!

அப்பாவி ரசிகர்களை ஏமாற்றி கிரிக்கெட்டில் மேட்ச் ஃபிக்சிங் செய்தோருக்கான நீதி, 'கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை' என்றால்... சினிமாவின் மூலம் அப்பாவி மக்கள் மத்தியில் கருத்து ஃபிக்சிங் செய்யும் இவர்களுக்கும், அந்த படத்துக்கும், நீதி மன்றம்... 'படம் எடுக்க-திரையிட வாழ்நாள் தடை' எனும் தீர்ப்பு தந்தால்தான் என்ன..?

என்னது...? செலவு பண்ணி எடுத்த படத்தை திரையிடாமல் என்ன செய்வதா...? ஏன்..? ஆர்.கே. செல்வமணியின் 'குற்றப்பத்திரிக்கை' கோமாவுக்கு சென்ற இடத்துக்கே அவையும் செல்லட்டுமே..! என்ன இப்போ..? நாட்டின் ஒற்றுமையை விட, சமூக நல்லிணக்கத்தை விட, மக்கள் அமைதியை விட பெரிதாக விஸ்வரூபம் எடுத்துவிடுமா உங்கள் பாக்ஸ் ஆபீஸ் கல்லாப்பெட்டி..? ஸாரி.... நோ மோர் ச்சான்ஸ் ஃபார் யு கய்ஸ்..!/////////////

அல்ஹம்துலில்லாஹ்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அல்ஹம்துலில்லாஹ்.

தமிழக வரலாற்றில் முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு ஒரே நாளில் கிடைத்த உடனடி பரிசு இதுதான்..!

ஒரேநாளில்
ஒரு கோரிக்கையை ஆரம்பித்து
ஒரே அலைவரிசையாக
ஒரே குரலில் ஓங்கி ஒலித்து
ஒற்றுமையாக கைகோர்த்து நின்று
ஒப்பற்ற வெற்றியை சட்டப்படி அடைந்து காட்ட முடிந்து இருக்கிறது.

ஆமினா said...

எல்லா புகழும் இறைவனுக்கே :-)

M.Thameem Ansari said...

அல்லாஹு அக்பர்!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

:-)
தக்க சமயத்தில்
தகுந்த நடவடிக்கையை
தப்பாது எடுத்த
தமிழக அரசுக்கு
தன்மையான நன்றிகள் பல
விஸ்வரூபமெடுக்கின்றன..!

Nizam said...

என் சமுகத்திலும் சில பேர் இருக்கிறார்கள். விஸ்வரூபம் ஓடவில்லை என்றால் கமலுக்கு 101 கோடி நஷ்டம் என்று சொல்லகூடியவர்கள். 500 கோடி மக்களின் நெஞ்சில் விஷத்தை விதைத்தும். 160 கோடி முஸ்லீம்களின் நெஞ்சில் ஈட்டி வைத்து குத்தினால் பாரவயில்லையாம்.

சமூகம் எக்கெடுகெட்ட போனால் எனக்கு என்ன நம்மா பாக்கெட் நிறைந்தால் போது என்றா கூத்தாடிகளுக்கு இது ஒரு சமுட்டியடி.

எக இறைவனுக்கே எல்லாப் புகழும்

சிராஜ் said...

:) :-)) :-)))

சிராஜ் said...

வடை பஜ்ஜில பதிவு போட்டதால அரசு பயந்து இருக்குமோ??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

jaffer khan said...

allahu akbar allahu akbar allahu akbar
ethey pola ottrumai ealla visayankalilum vara vendum enru allah'vidam dua seiyukiren

ஹைதர் அலி said...

அல்ஹம்துலில்லாஹ்

Ayushabegum said...

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்

அல்ஹம்துலில்லாஹ்...

ஆர்.கே. செல்வமணியின் 'குற்றப்பத்திரிக்கை' கோமாவுக்கு சென்ற இடத்துக்கே அவையும் செல்லட்டுமே..! என்ன இப்போ..? நாட்டின் ஒற்றுமையை விட, சமூக நல்லிணக்கத்தை விட, மக்கள் அமைதியை விட பெரிதாக விஸ்வரூபம் எடுத்துவிடுமா உங்கள் பாக்ஸ் ஆபீஸ் கல்லாப்பெட்டி..? ஸாரி.... நோ மோர் ச்சான்ஸ் ஃபார் யு கய்ஸ்../// :) :)

AZAD R.PURAM said...

நம்முடைய ஒற்றுமை மற்றும் சமயோஜிதமாக செயல் பாட்டால் இதை தடுக்க முடிந்திருக்கிறதுவடை பஜ்ஜில பதிவு போட்டதால அரசு பயந்து இருக்குமோ??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்///ஹஹ்ஹஹ (அங்கிங்கெனாதபடி எங்கும் பரவிருக்கும் போலயே)

AZAD R.PURAM said...

நம் ஒற்றுமை மற்றும் சமயோஜித செயல் பாட்டினால் இத்தகைய வெற்றியை அடையா முடிந்திருக்கிறது இதே ஒற்றுமை நம்மிடம் என்றும் தொடரனும்.///////வடை பஜ்ஜில பதிவு போட்டதால அரசு பயந்து இருக்குமோ??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஹஹஹஹ அங்கிங்கெனாதபடி எங்கும் இது வியாபித் திருக்கிறது.

Saha, Chennai said...

// ~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அல்ஹம்துலில்லாஹ்.

தமிழக வரலாற்றில் முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு ஒரே நாளில் கிடைத்த உடனடி பரிசு இதுதான்..! //

இதே ஒற்றுமையை ஏனைய ஆககப்பூர்வ விஷயங்களிலும் காண்பித்திருந்தால் இஸ்லாமிய சமுதாயம் தமிழகத்தில் / இந்தியாவில் இழி நிலைக்கு சென்றிக்காது. இனியேனும் உணர்வார்களா?

ஷர்மிளா ஹமீத் said...

அல்லாஹு அக்பர் :)

DiaryAtoZ.com said...

முஸ்லிம்களின் முயற்சிக்கு கிடைத்தா விஸ்வரூப வெற்றி?

UNMAIKAL said...

முஸ்லிம்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்?

இன்று உலகின் எந்த பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினாலும் சில குழப்பவாதிகள் (குறிப்பாக இணையங்களில்) எழுப்பும் கேள்வி: " இவர்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்?"

போராட்டக்காரர்களுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தரும் கேள்வி இதுதான்.

உண்மையில் போராட்டக்காரர்கள் ஆரம்பத்திலிருந்தே போராட்ட களத்தில் நின்றிருப்பார்கள். ஆனால் அந்த வரலாறெல்லாம் தெரியாமல் கணினியும் இணையதள வசதியும் வைத்துக்கொண்டு கேள்விக்கணை தொடுப்பார்கள்.

இதுபோன்று பல கேள்விகளை வரலாறு தெரியாமல் கேட்டுக்கொண்டு குழப்பத்தை விளைவித்துக்கொண்டே இருப்பதுதான் இவர்கள் வேலை.

தானும் போராட களத்திற்கு வரமாட்டார்கள். போராடுபவர்களையும் ஆதரிக்கமாட்டார்கள்.

ஒரு மூலையில் கணினியில் அமர்ந்து கொண்டு சேகுவேரா ரேஞ்ச்சுக்கு புரட்சி செய்வார்கள் (சேகுவேரா மன்னிக்கவும்)
இப்போது விசயத்துக்கு வருவோம்.
விஸ்வரூபம் திரைப்படத்தை எதிர்க்கும் இஸ்லாமிய அமைப்புகள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்?
இதுதான் இப்போது பல அதிமேதாவிகளின் கேள்வி.
அந்த அதிமேதாவிகளுக்கு பதில் நான் சொல்கிறேன்.

சொடுக்கி படிக்கவும் >>>>> முஸ்லிம்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்?
.

UNMAIKAL said...

விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட இலங்கை அரசு தற்காலிக தடை விதித்தது


கொழும்பு: கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட இலங்கை அரசு தற்காலிகமாக தடை விதித்திருக்கிறது.

கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படமானது இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்துகிறது என்று பல அமைப்புகள் போர்க்கொடி தூக்கியதால் தமிழக அரசு தடைவிதித்திருக்கிறது.

பல்வேறு வெளிநாடுகளிலும் விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்தப் பட்டியலில் இலங்கையும் சேர்ந்திருக்கிறது.

விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட்டால் என்ன பிரச்சனைகள் வரும் என்பதை ஆராயும் வகையில் அந்தப் படத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருப்பதாக இலங்கை செய்தித் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.

இதனிடையே விஸ்வரூபம் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை வெட்டிவிட்டதாக இலங்கை திரைப்பட தணிக்கைத் துறையும் கூறியுள்ளது. இருப்பினும் தற்காலிகத் தடை நீடிக்கும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது

Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/01/vishwaroopam-screening-suspended-168525.html

UNMAIKAL said...

புதுச்சேரியிலும் விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடத் தடை!

Posted by: Mathi Published: Thursday, January 24, 2013, 17:26 [IST]

புதுச்சேரி: தமிழ்நாடு, இலங்கையைத் தொடர்ந்து கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட்ட புதுச்சேரியிலும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தில் இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்தும் வகையில் காட்சிகள் இருக்கின்றன என்பது பல அமைப்புகளின் குற்றச்சாட்டு.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் 2 வார காலத்துக்கு விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட தமிழக அரசு தடை விதித்திருக்கிறது.

இதேபோல் இலங்கையிலும் எதிர்ப்பு கிளம்பியதால் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது,

இந்நிலையில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் தீபக் குமார் வெளியிட்ட உத்தரவு ஒன்றில், புதுச்சேரியிலும் 2 வார காலத்துக்கு திரையரங்குகளில் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார்.

Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/01/puducherry-also-bans-vishwaroopam-168529.html

Anonymous said...

This shows the intolerance of the community and also challenges very democriatic setup of the country.

This is where the commmunity differs from majority community.

Think about the insults done by EVR to Ganesh and ram, did hindus do anything major?
Da vinci code is released in the entire western world, no one has shown their physical protest.

in a democratic setup, there is a place of two thoughts.
in monarchy , what ever the king says that is the rule.

india is going towards monarchy
let Allah save india from radicals

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

SALAM,

முஸ்லிம்கள் இனி எதில் கவனம் செலுத்தவேண்டும்-கருத்துகணிப்பு:
இஸ்லாமிய சகோதர சகோதரிகளே நாம் இனிவரும் காலங்களில் எதிர்வரக்கூடிய பிரச்சனைகளை எதிர்கொள்ள சரியான வழிகாட்டுதலுடன் தான் முன் செல்கிறோமா?உங்களின் கருத்துகளை அவசியம் பதிந்து நம் சமுகத்திற்கு நேரான வழியில் செல்ல உதவுங்கள்.

கருத்துக்களை இக்கட்டுரையில் பதியவும்:http://tvpmuslim.blogspot.in/2013/01/muslimkal-ethil-kavanam-seluththavendum-tamil-survey.html