Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Sunday, 10 February 2013

சவூதி போதகர்-மகள் விவகாரம்: புளுகுமூட்டை ஊடகங்கள்...சில நாட்களுக்கு முன்பாக சவூதியை சேர்ந்த போதகர் (?) ஒருவர் தன் 5 வயது குழந்தையை வன்கொடுமை (rape) செய்து கொடுமைப்படுத்தியதாகவும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட லுமா என்ற பெயருடைய அந்த குழந்தை சிகிச்சை பலனளிக்காமல் இறந்ததையும் உலக ஊடங்கங்கள் பெரிய அளவில் பேசின. பேசியதற்கு மற்றுமொரு முக்கிய காரணம், அந்த போதகர் (?) ரத்த பணம் கொடுத்து தப்பிவிட்டதாக அங்கலாய்த்தன மீடியாக்கள். இந்த விவகாரத்தில் தற்போது உண்மை நிலவரங்கள் தெரியவந்துள்ளன. 

அந்த குழந்தை வன்கொடுமை செய்யப்படவும் இல்லை, கொலை செய்தவன் தண்டனையில் இருந்து தப்பவும் இல்லை. 

லுமாவின் தாய் 'தன் மகள் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று மருத்துவமனை ஆதாரங்கள் மற்றும் போலிஸ் ஆதாரங்கள் தெரிவிக்கும்போது, இப்படியான குற்றச்சாட்டுகளை தன் மகளை அசிங்கப்படுத்தும் நிகழ்வாகவே தான் கருதுவதாக' வருத்தத்துடன் கூறியுள்ளார். தன் முன்னாள் கணவர் தன் குழந்தையை துன்புறுத்தியதாக புகார் செய்த இவர், தன் மகள் வன்கொடுமை செய்யப்பட்டதாக ஊடகங்கள் பரப்பியதை மறுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த கொலைகாரன் தற்போது சிறையில் தான் உள்ளதாகவும், இவர் மீதான வழக்கு விசாரணையில் உள்ளதாகவும் சவூதி நீதித்துறை தெளிவுப்படுத்தியுள்ளது. ஊடகங்கள் ஒரு செய்தியின் உண்மை நிலையை தெளிவாக ஆராய்ந்த பிறகு செய்தி வெளியிடுவது சிறந்தது என்று நீதித்துறை அறிவுறுத்தியுள்ளது. 

நான் மேலே சொன்ன சவூதி அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தியை காண <<இங்கே>>

என்ன ஆச்சர்யம்...சவூதி நீதித்துறை செய்யாததை செய்ததாக பரபரப்பை கிளப்பிய ஊடகங்கள், சவூதி அரசாங்கத்தின் மறுப்பை அதே வீரியத்தோடு கொண்டு செல்லவே இல்லை. இன்னும் சொல்லப்போனால், இந்த மறுப்பு எத்தனை பேருக்கு தெரியும் என்பது கூட தெளிவாகவில்லை. 

உண்மை அடுத்த தெருவுக்கு செல்வதற்குள் பொய் ஊரை சுற்றி வந்துவிடும் என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது. 

கட்டுரை உதவி: ஆஷிக் அஹமத் 

நன்றி: gulf news, முஹம்மது ஆஷிக்

18 comments:

ஆன்ட்டி-இஸ்லாமோஃபோபியா said...

///என்ன ஆச்சர்யம்...சவூதி நீதித்துறை செய்யாததை செய்ததாக பரபரப்பை கிளப்பிய ஊடகங்கள், சவூதி அரசாங்கத்தின் மறுப்பை அதே வீரியத்தோடு கொண்டு செல்லவே இல்லை.///

என்னங்க நீங்க இவ்ளோ அப்பாவியா ஒலகம் தெரியாம இருக்கீங்க?

புதிய தலைமுறை பாருங்க, அதிலே மனுஷ்ய புத்திரன் இது பத்தி மக்களுக்கு தெளிவு படுத்திட்டு இருப்பாரு!

ஆனந்த விகடன் கவர் ஸ்டோரி வந்து இருக்குமே?

கிருஸ்துவ மதத்தை புண்படுத்திய கடல் படத்து எதிர்ப்புலே ஜோசபின் மூழ்கி இருப்பதால் இதுபத்தி கதைக்க நேரமில்லையாம்.

கோட்டாங்கி,
அப்புறம் அதென்னங்க?
என்னமோ உலாவும் இடம்,
எல்லாம் இந்நேரம் ஒரு மறுப்பு பதிவு போட்டு இருப்பாங்களே?

பாவம் அமரர் டோண்டுக்குத்தான் அந்த கொடுப்பினை இல்லாம பூடுச்சு. உயிரோடு இருந்திருந்தா அவருதான் முதல் மறுப்பு போட்டு உங்களை மனிதாபி மானத்துலே முந்தி இருந்திருப்பாரு. பை சான்ஸ், நீங்க முந்திக்கிட்டீங்க.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.மனிதாபிமானி,

நானே பதிவு போடணும் என்று நினைத்து இருந்தேன். 13 ம் தேதி வழக்கு விசாரணைக்கு பிறகு கொஞ்சம் ஸ்ட்ராங்காக போடலாம் என்று. நன்றி சகோ.

பொய் புளுகி இஸ்லாமொஃபோபியா ஊடகங்கள்,

'அப்பன் மகளை கொன்றால் தண்டனை இல்லை என்று ஒரு ஹதீஸ் இஸ்லாமில் இருக்கு, அதன்படி சவூதியில் மகளை கொன்ற அப்பனை நாளு மாசம் ஜெயிலில் போட்டுட்டு தலையை வெட்டாம விட்டுட்டாங்க'

....என்று அப்பட்டமாக பொய் சொன்னார்களே....

அடப்பாவிகளா....
இது உண்மைன்னா...

November 27, 2010 இல் இதே போன்ற இன்னொரு கேசில் தலையை வெட்டி இருக்குதே சவூதி அரசாங்கம்...! அப்போ இந்த நியூஸ் என்னவாம்..?

// Summary: TABUK: A man was executed on Friday for killing his five-year old daughter in the northwestern town of Tabuk, a statement of the Interior Ministry said.

By ARAB NEWS

"Musleh bin Saleem Eid Al-Atawi was beheaded for beating his daughter Bayan, 5 to death with an electrical wire. //

http://www.highbeam.com/doc/1G1-243015759.html

அதுமட்டுமல்ல... அதுக்கு முன்னாடியே...

In the history of Saudi Arabia, there has only been one case in 2008 where a father and his second wife both were executed for torturing his daughter to death.

என்று முதல் கேஸ் இருந்ததே..?

மேலே உள்ள தீர்ப்பு சொன்னவங்களை விடுங்க... அதில் தலையை வெட்டுக்கு தந்தவங்களுக்கு அப்படி ஒரு ஹதீஸ் இருந்தது தெரியாதா..? தப்பிச்சு இருப்பாங்களே..?

அடப்போங்கப்பா..!
நீங்களும் உங்க இஸ்லாமிய காழ்ப்புணர்வும்..!

எதையாவது பொய் சொல்லி பொழப்பை ஓட்டுறதே பொழப்பா வச்சி இருக்காங்க.
வெறுப்பாக உள்ளது இவர்களின் எழுத்துக்களையும் வாதங்களையும் கண்டால்..!

மனிதாபிமானி said...

@ ஆன்ட்டி-இஸ்லாமோபோபியா,

விடுங்க சகோ, இஸ்லாமோபோபியாக்கள் மண்ணை கவ்வுவது இது முதல் முறையா என்ன??? கேட்க விருப்பமுள்ள மக்கள் இருப்பார்கள் அல்லவா, அவர்களுக்கு தான் நாம் சொல்ல வேண்டியது இருக்கின்றது..

மனிதாபிமானி said...

@ முஹம்மது ஆஷிக்,

வ அலைக்கும் சலாம்,

தீர்ப்பு எப்படியேனும் வரட்டும் சகோ. ஆனால் நடக்காத ஒன்றை நடந்ததாக பரப்ப வேண்டிய அவசியமென்ன வந்தது? அதனை அம்பலமாக்கவே இந்த சிறு முயற்சி..

மனிதாபிமானி said...

சகோ ஹாஜா சாதிக்,

சலாம். உங்கள் கமெண்ட்டில் "நா" என்ற வார்த்தையில் தொடங்கும் விரும்பத்தகாத வார்த்தை அடங்கியிருப்பதால் அதனை என்னால் பிரசுரிக்க இயலாது. அது தவறான வார்த்தையாக உங்களுக்கு/பலருக்கு தோன்றாமல் இருக்கலாம். ஆனால் ஒரு முஸ்லிமாக நமக்கு கண்ணியம் முக்கியம். தாங்கள் தயவுக்கூர்ந்து அந்த வார்த்தையை எடிட் செய்து விட்டு உங்க கமெண்ட்டை மறுபடியும் அனுப்பவும்..

Aathiga Tamilan said...

That muslim who killed his daughter is a gem of a person. (patharai maathu thangam pa)

Who says not?

! சிவகுமார் ! said...

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல கண்ணை மூடிக்கொண்டு இஸ்லாமிய எதிர்ப்பு சிந்தனையை இணையத்தில் உலவ விட்ட பேரறிவாளர்கள் இப்போது வாய் திறக்க சாத்தியமே இல்லை.

சுவனப் பிரியன் said...

சலாம்!

சிறந்த நெத்தியடி பதிவு.

Saha, Chennai said...

//என்ன ஆச்சர்யம்...சவூதி நீதித்துறை செய்யாததை செய்ததாக பரபரப்பை கிளப்பிய ஊடகங்கள், சவூதி அரசாங்கத்தின் மறுப்பை அதே வீரியத்தோடு கொண்டு செல்லவே இல்லை //


அவுக அடுத்த "சென்ஷேசனல் ந்யூஸ்" க்கு வெயிட்டிங். அப்ப தான கிட்டு கெடைக்கும். இதெல்லாம் போட்டா யாரு படிப்பா?

பொய்ய சொன்னாலும் நம்புரமாரி சொன்னாங்கல்ல, தத்ரூபமா சொன்னாங்கல்ல, குறிப்பா, அந்த ஓபனிங் காட்சி, ஒரு சண்ட (விவாதம்), என்னா கிட்டு.. என்ன நடந்ததுனு புரிஞ்சிக்க சுலோ மோசன்ல வேற படிச்சு காட்ராங்கலாமே. ப்ப்பா... என்னா கல நயம், காச்சி செட்டிங்... எல்லாம் நல்லா இருந்துச்சு, போயி நேரா பாத்து எழுதுனமாறி இருந்துச்சு. நல்லா விசுவரூபமெடுத்து ஆடுது. இதுக்கு ஆஸுகாரு இல்லாட்டியும் ஒரு அம்பாசிடரு காராச்சும் கெடக்கிமா? (பிலாக்குகெல்லாம் குடுப்பாங்களா?)

Anonymous said...

இது போன்ற சம்பவங்கள் நம்ம நாட்டில் ஒரு நானைக்கு 100க்கு மேல் நடக்கிறது. இஸ்லாமொஃபோபியா பிடித்து இது போன்று சம்பவங்களை பொய்யாக ஊடகங்கள் வெளியிடுவதை பார்த்தால். யாரோ சொல்லி இருக்கிறார்கள் பேரன் லவ்லி போட்டால் அம்மை தழும்புகள் மறையும் மென்று

Peer Mohamed said...

I dont think people who were spreading this news will even ask for a sorry.

Anonymous said...

Pls post the post mortem report. The mother might be forced to save the honor of the the cleric by denying the accusation.

Pebble said...

Assalamualikum Brother,
Can you please share this in the Face book please.
Jazak Allah Khair.

மனிதாபிமானி said...

Dear Pebble,

wa alaikum salaam, i already done it.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

// ஷரியா சட்டம் பற்றிய தனது முந்தைய தவறான பதிவுக்கு இன்று ஒரு மறுப்பு பதிவும் போட்டு... அதில் அழகிய முறையில் மன்னிப்பும் கோரி உள்ளார்..! என்ன ஒரு அழகிய நேர்மையாளர் இவர்..!

கண்கள் பனிக்க உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நெகிழ்வோடு கூறுகிறேன்...

...மிகவும் நன்றி சகோ.மாயன்..!//பதிவருள் பத்தரைமாற்றுத்தங்கம் சகோ.மாயன்:அகமும் புறமும்


~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சவூதி டிவி மத போதகர்-மகள் கொலை- ஷரியா சட்ட விஷயத்தில் முழு விபரம் அறிய....சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி : ஊடகங்களின் திரித்தல் அம்பலம்!


....இங்கே சென்று நடந்ததை சற்று ஆழமாக படித்தறிந்து கொள்ளுங்கள் சகோஸ்..!

ஜாகிர்உசேன் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
முக்கியமாக அனைத்து பத்திரிக்கையும் அவனை மதபோதகர் என்று அலறியது அவர்களுக்கு இந்த செய்தியை சொல்ல வேண்டும்
//ஃபய்ஹான் அல் காமிதி என்பவன், இறந்தவர்களைக் குளிப்பாட்டும் தொழிலாளி. மூன்றாம் வகுப்புவரை மட்டுமே கல்வி பயின்ற ஃபய்ஹான், மதபோதகன் அல்லன். சிறுவயதில், தான் சீரழிக்கப்பட்டதையும் போதைக்கு அடிமையாகிக் கிடந்து, இஸ்லாத்தின் போதனைகளால் போதைப் பழக்கத்திலிருந்து மீண்டு வந்ததையும் தொலைக்காட்சி அமர்வுகள் சிலவற்றில் விவரித்திருக்கிறான்//

UNMAIKAL said...

இது இந்தியர்கள் எத்தனை பேருக்கு தெரியும்.?

தாயின் முன் மகளையும், மகனின் முன் தாயையும் பாலியல் வதைகள் செய்யலாம். யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கொலை செய்யலாம். பெண்களை கைது செய்து தொடர் வன்புணர்வுக்கு உட்படுத்தலாம் .

புதிய ஆயுதங்களை பரிசித்து பார்க்க இந்த மக்களை கொல்லலாம் .

இன்னும், இன்னும் எது வேண்டுமானாலும் செய்யலாம் .

யாரும் கேட்க மாட்டார்கள் .

இந்தியாவை எந்த மேற்குலக அரசும் அது பற்றி கேட்காது .

CLICK >>>>>
காஷ்மீர். காஷ்மீரிகளின் கண்ணீர் கொடுமைகள்…. காஷ்மீரிகளின் வார்த்தைகளில்….