Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Thursday 9 May 2013

எதியூரப்பாவால் பிஜேபிக்கு தோல்வியா? - உண்மை அதுவல்ல


ர்நாடக தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தது போலவே பிஜேபிக்கு கடும் பின்னடைவை தந்திருக்கின்றன. அதே நேரம், இந்த தோல்விக்கு எதியூரப்பாவே காரணம் என்று பிஜேபி தலைவர்கள் கூறுவதை காண முடிகின்றது. ஆனால் இது உண்மையா? நிச்சயமாக இல்லை. வெகுசில தொகுதிகளை தவிர்த்து, ஏனைய தொகுதிகளில் எதியூரப்பா கட்சி மற்றும் பிஜேபி ஆகிய இரண்டும் பெற்ற வாக்குகளை கூட்டினாலும் கூட முதலிடம் பெற்ற கட்சியை முந்தவில்லை. 

ஆதாரம்: தொகுதிவாரியாக கட்சிகள் பெற்ற வாக்குகளை தன் தளத்தில் வெளியிட்டுள்ளது தேர்தல்துறை . அதில் மேற்சொன்ன உண்மையை காணலாம் http://eciresults.ap.nic.in/ConstituencywiseS1034.htm. (இந்த சுட்டிக்கு சென்று ஒவ்வொரு தொகுதியாக கட்சிகள் பெற்ற வாக்குகளை ஒருவர் காணலாம்) 


இன்னும் சொல்ல போனால் பல தொகுதிகளில் சில ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்று பிஜேபி அசிங்கப்பட்டுள்ளது. எதியூரப்பா கட்சி இல்லாமலும் கூட காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையை பெற்றிருக்கும். எதியூரப்பா கட்சியாலேயே தாங்கள் தோற்றோம் என்ற பிஜேபியின் பிரச்சாரம் உண்மையை மறைக்கும்  கேவலமான வாய் சவடாலே அன்றி வேறொன்றும் இல்லை. ஊழல், நிலஆக்கிரமிப்பு, ஆபாசம், பெங்களூருவின் சுகாதாரமற்ற சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களுக்காக பிஜேபியை கர்நாடக மக்கள் முற்றிலுமாக புறக்கணித்துவிட்டனர் என்பதே உண்மை...

4 comments:

Anonymous said...

" ஊழல், நிலஆக்கிரமிப்பு, ஆபாசம், பெங்களூருவின் சுகாதாரமற்ற சூழ்நிலை"

ஆபாசம் ??? புரியல .....

மனிதாபிமானி said...

@ அனானி,

//ஆபாசம் ??? புரியல .....//

என்னங்க நீங்க. ஆபாச நடவடிக்கைகளுக்கு பெயர் போன ஆட்சியாச்சே கர்நாடக பிஜேபி ஆட்சி. சட்டமன்றத்திலேயே ஆபாச படம் பார்த்து மாட்டினார்களே பிஜேபி சட்டமன்ற உறுப்பினர்கள். ஆஹா என்னவொரு உறுப்பினர்கள், என்னவொரு கட்சி

Unknown said...

யாரு ஆட்சி செஞ்சாலும் நமக்கு நாமம் தான் தண்ணி தராம பிரச்னை பண்ணுவாங்க தான்

Anonymous said...

Both Congress&BJP encouraged racist SL to eliminate tamil community:Let them go to Ashes