Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Friday, 17 February 2012

கடையநல்லூர் - வினவு தோழர் முஸ்லிம் ஆனார்கடையநல்லூர் விவகாரம் குறித்து இன்று வினவில் வந்துள்ள கட்டுரைக்கு மறுப்பே இந்த பதிவு.

முதலில் கடையநல்லூர் விவகாரத்தின் சாரம்சத்தை பார்த்துவிடுவோம்.

கடையநல்லூர் பரசுராமபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மக்கட்டி துராப்ஷா. இவரின் நடவடிக்கைகள் இஸ்லாமிற்கு எதிராக இருந்ததால், அப்பகுதி மக்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதன் தொடர்ச்சியாக இவர் இறைநிராகரிப்பாளர் என்று அறிவிக்கப்பட்டார். துராப்ஷாவிடம் இது சம்பந்தமாக கையெழுத்தும் வாங்கிக்கொள்ளப்பட்டது.

இது நடந்த சில நாட்களுக்கு பிறகு, தனது செயலுக்கு வருந்தி மனம் திருந்தி மீண்டும் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுவிட்டார். இதுக்குறித்து நெல்லை மேற்கு மாவட்ட தமிழக காஜி அவர்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை கீழே காணலாம். மேலும் இது குறித்து அறிய விரும்புபவர்கள் கடையநல்லூர் தளத்தில் இதுக்குறித்து வெளிவந்த இந்த கட்டுரையை காணலாம்.  

இப்போது வினவின் பதிவிற்கு வருவோம். மேலே கூறிய நிகழ்வுகளில் முந்தையதை மட்டுமே கூறி அடுத்ததை (அதாவது அவர் இஸ்லாமை ஏற்றதை) லாவகமாக மறந்திருக்கின்றனர்/மறைத்திருக்கின்றனர் வினவு குழுவினர். இது தான் இவர்கள் செய்தி தரும் லட்சணம்.

சொன்னதையாவது சரியாக சொன்னார்களா என்றால் அதுவும் இல்லை. துராப்ஷாவின் இஸ்லாமிற்கு எதிரான நடவடிக்கைகள் அவ்வூர் மக்களால் நன்கு அறியப்பட்டதே. ஆனால் இதற்கு வேறு சாயம் பூசி திசை திருப்ப முயல்கின்றது வினவு. அதாவது, சில பிரச்சனைகளால் ஒரு சிலருக்குள் ஏற்பட்ட காழ்ப்புணர்வே இந்த பிரச்சனைக்கு காரணமாம். வினவின் முன்னாள் "புரட்சிகர(?) இடதுசாரி(!) இயக்க தோழர் துராப்ஷா இப்போது முஸ்லிம் ஆகிவிட்டார். அந்த காட்டத்தில் ஏதேதோ உளறி கொட்டிருக்கின்றது வினவு.

இந்த விவகாரத்திற்குள் ஜமாஅத் பிரச்சனை அது இதுவென்று எதை எதையோ சேர்த்திருகின்றார்கள்.

"இது மட்டுமன்றி, வேறொரு அரசியலும் இதில் தொழிற்பட்டிருக்கிறது. முபாரக் பள்ளியில் அறிவிப்பு வெளியிடுவதற்கு முந்திய வாரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் குழுவினருக்கான பள்ளியில், இணையத்தில் சில ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் வேறொரு தோழருக்கு எதிராக, ”இஸ்லாத்தை விமர்சித்து தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார், அவரை ஊரை விட்டு விலக்கிவைக்க வேண்டும்” என்று ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். இதை செவியுற்ற முபாரக் பள்ளியும் அவர்களுக்கு முன்னதாக நாம் நடவடிக்கை எடுத்து காட்ட வேண்டும் எனும் போட்டி மனப்பான்மையுடனேயே தோழர் துராப்சாவுக்கு எதிரான அறிவிப்பை அவசரமாக வெளியிட்டிருக்கிறார்கள். அதாவது இசுலாத்தை யார் காப்பாற்றுவது என்பதில் தவ்ஹீத் ஜமாத் குழுவினருக்கும், முபாரக் பள்ளிக்கும் பெரும் போட்டி நிலவியிருக்கிறது"

ஸ்ப்ப்ப்பா...இது என்ன முட்டாள்தனமான கருத்தாக இருக்கின்றது. சரி, அப்படியே உண்மை என்று வைத்துக்கொண்டாலும் இப்போது துராப்ஷா முஸ்லிமாகிவிட்டார். இந்த ஜமாஅத்தினர்கள் இதனை எதிர்க்க போகின்றார்களா? 

துராப்ஷாவின் நடவடிக்கைகள் இஸ்லாமிற்கு எதிராக வெளிப்படையாக இருந்ததாலேயே அவ்வூர் மக்களால் ஒருமனதோடு எதிர்க்கப்பட்டார். இதற்கு வேறு காரணங்களை கூறி திசை திருப்ப முயல்வது அப்பட்டமான பதிவுலக பயங்கரவாதம்.

இஸ்லாமிற்கு எதிராக செயல்பட்டார். நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது மனம் திருந்தி மறுபடியும் முஸ்லிமாகி விட்டார். பிரச்சனை சுமூகமாக முடிந்துவிட்டது. மீண்டும் தன் வழக்கமான சமூக பணிகளில் ஈடுபட போகின்றார் துராப்ஷா. இஸ்லாம் இதற்கு எதிரி இல்லையே? 

பிரச்சனை உச்சத்தில் இருந்தபோது இதுக்குறித்து கவலைப்படாத வினவு தற்போது பிரச்சனை சுமூகமாக முடிந்த பிறகு இதுக்குறித்து எழுதுகின்றது என்றால் என்ன காரணம்?

பார்வையாளர்களுக்கே விட்டு விடுகின்றோம். 

நன்றி:- ஆஷிக் அஹ்மத், நெத்தியடி முஹம்மத் மற்றும் அய்யூப் கான் (TNTJ கடையநல்லூர் டவுண் கிளை தலைவர்)

குறிப்பு:
நல்லூர்முழக்கம் என்ற பெயரில் வினவில் வளைத்து வளைத்து கமெண்ட் போடும் சகோதரரின் நேர்மையை பாருங்கள். வினவு தளத்தில் இப்படியாக சொல்கின்றார்,

//மனிதாபிமானி தளத்தில் நான் இட்ட பின்னூட்டம் வெளிவருமா என்பது தெரியவில்லை. அதனால் இங்கேயும் பதிந்து வைக்கிறேன்//

பொய் சொல்வதும் உங்க கொள்கைல ஒன்றா? இவர் இங்கே கமெண்ட் போட்டாராம், அது வெளிவருமான்னு தெரியவில்லையாம். இங்கே கமெண்ட் மாடரேஷனே இல்லை. அப்புறம் எங்கே நாங்க வெளியிடறது? இதெல்லாம் ஒரு பொழப்பா சகோதரர்...பித்தலாட்டகாரர்கள் என்பதை மறுபடியும் மறுபடியும் நிரூபிக்கின்றீர்கள்...

22 comments:

கார்பன் கூட்டாளி said...

//பிரச்சனை உச்சத்தில் இருந்தபோது இதுக்குறித்து கவலைப்படாத வினவு தற்போது பிரச்சனை சுமூகமான முடிந்து பிறகு இதுக்குறித்து எழுதுகின்றது என்றால் என்ன காரணம்?//

இதை தான் ரொம்ப நேரமாக யோசித்து கொண்டிருக்கிறேன். எதற்காக வினவு இப்பொழுது எழுத வேண்டும்.

எல்லாம் ஏமாற்று கார கும்பல்.

Anonymous said...

ஒருத்தன் எழுதாத கட்டுறைக்கு அவனை கூப்பிட்டு விசாரிக்கமலேயே அவன்தான் செய்தான் என்று நிருபிக்கமலேயே அவனுக்கு தண்டனை.அதையும்யார் கொடுத்தது இன்னொரு பெண் வெறியன் .இப்போ ஏதோ அவன் செய்த தவறுக்கு மண்ணிப்பு கேட்டுவிட்ட்தாக சொல்லி ஒரு கருத்து.....ந்ல்லா இஸ்லாமை வளர்கிறீங்க போங்க!

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
வினவு குருப்பை இன்னுமா நம்பிகிட்டு இருக்கு பதிவுலகம். ஏற்கெனவே இந்த வினவு குருப் வடக்கு அம்மாபட்டினம் தொடர்பாக ஒரு பதிவை எழுதினாங்க. அதற்கு சம்பந்தப்பட்ட நபர் சூடாக வடக்கு அம்மாப்பட்டினத்திலேயே பதில் கொடுக்க அந்த பதிவை எழுதிய வினவின் நிருபர் அலாவுதீன் என்னும் அல்லக்கை தொங்கிய முகத்துடன் காட்சியளித்தது. அதுமட்டுமில்லாமல் வினவின் தோழர்களின் தரத்தையும் அப்பட்டமாக அந்த வடக்கு அம்மாபட்டினத்துக்காரர் தோலுரித்து காட்டி விட்டார். அதன் சுட்டி இதோ
வினவு என்னும் அயோக்கிய பொருக்கி

பி.ஏ.ஷேக் தாவூத் said...

ஆனால் அப்போ அடைந்த அவமானத்தை துடைத்துக் கொண்டு இப்போது மீண்டும் வந்து வாந்தி எடுத்திருக்கிறது வினவு கும்பல். ஆனால் இந்த தடவை வினவு கும்பலை சார்ந்த துராப்ஷாவே அங்கே மன்னிப்பும் கேட்டு தான் இஸ்லாத்தை விமர்சித்தது தவறு என்ற பிறகு வினவு எழுதியிருப்பதை படித்தால் வழக்கமாக கோட்டா சிஸ்டத்தில் இஸ்லாத்தைப் பற்றி எழுத வேண்டும் என்று விதியை தனக்கு தானே வகுத்து கொண்டதால் எதையாவது எழுத்து தொலைக்க வேண்டுமென்று இதை எழுதி மொக்கை வாங்கியிருக்கிறது வினவு கும்பல்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

எனக்கு ஒரு டவுட்டு
இங்கே வந்திருக்கிற நாத்திகரோ (அல்லது) கம்யூனிஸ்ட்டோ பதில் சொல்லுங்க.
பொதுவா தன்னோட சித்தாந்தம் தான் சரியான சித்தாந்தம் என்று இணையத்தில் பீலா விடும் செங்கொடிக்கள் (அல்லது நாத்திகர்கள்) நேரடியாக இரு தரப்பு (கம்யூனிஸ்ட்டுகள் , நாத்திகர்கள் மற்றும் Vs முஸ்லிம்கள் ) பொது நபர்கள் முன்னிலையில் இஸ்லாமிய அறிஞர்களுடன் நேரடியாக கருத்து பரிமாற்றத்திற்கு அழைத்தால் "சிவப்பு" துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடி விடுகிறார்கள். அது ஏன்? ஏன் ? ஏன் ?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

முதலில் சீரியஸா சில வரிகள்:-(

'இஸ்லாத்தை எதிர்த்து எழுதினால் போலி பேரில் மறைந்து இருந்து எழுதுவோம்' என்பது பச்சையான ரவுடித்தனம். மட்டுமல்ல, கேவலமான பிழைப்புவாதம். இதை கம்யுனிசத்தின் பெயரால் நியாயப்படுத்த நினைக்கும் எவருக்கும் மனிதனாக நீடிப்பதற்கான தகுதி இல்லை.

(copy paste -க்காக நன்றி: வினவு)

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

இனி காமடி வரிகள்:-)
எல்லாரும் ஒருமுறை ஜோரா கைகொட்டி சிரிங்க.....
அடுத்து ஒரு ஜோக் ஷேர் பண்ண போறேன்...
இந்த ஜோக் சாதாரணமான ஜோக் இல்லை...
ஒரு மிகப்பெரிய "புரட்சிகர இடதுசாரி இயக்க ஜோக்"..!
(மெய்யாலுமே..! நம்புங்க. அதனால்தான் ....'?'....'!'... இதெல்லாம் இல்லாம ஷேர் பண்றேன்) இது அப்படி என்ன புரட்சி பண்ணுச்சி..?

///மறுநாள் செவ்வாய்க்கிழமை, மெல்ல மெல்ல விசயம் தெரிந்து பலரும் தோழரை தொலைபேசியில் விசாரித்திருக்கிறார்கள். ஊடகவியலாளர் கவின்மலருக்கும் விசயம் தெரிந்து, ஜூனியர் விகடனுக்கும், நெல்லை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்திருக்கிறார்.--->>>வினவு பதிவு///

ஆனால் முகநூலில் ஸ்டேடஸ் அப்டேட் கொடுத்த சில மணிநேரங்களில்
250 like, 149 share, 238 comments என்று மெகா ஹிட் ஆனது.
அந்த படத்தின் ஹீரோ தான் இந்த துரோப்ஷா..!

(காமடி தொடரும்...)

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

இதுதான் அந்த மெகா ஹிட காமடி:- ( கவின்மலர் வரிகள்... )
//////////நண்பர்களே! ஒரு அவசர உதவி. இஸ்லாமிய நண்பர் ஒருவர் கடையநல்லூர் பகுதியில் இருக்கிறார். அவர் இறையில்லா இஸ்லாம் என்கிற தளத்தில் இருந்து நாத்திகம் பேசும் கட்டுரையொன்றை பேஸ்புக்கில் ஷேர் செய்தார் என்பதற்காக, அவரை ஊர்விலக்கம் செய்திருக்கிறது ஜமாத். இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜமாத் கூட்டத்தின் முடிவில் அவருக்கெதிராக ‘பத்வா’ அதாவது அவரை அங்க ஹீனம் செய்யும் முடிவை எடுக்க இருக்கிறது. அவரது மனைவியையும் அவரை விவாகரத்து செய்யும்படிச் சொல்லியிருக்கிறது ஜமாத். தென்காசிக்கு அருகேயுள்ள கடையநல்லூர் பரசுராமபுரம் ஜும்மா பள்ளிவாசலில் நடக்கிறது கூட்டம். இந்த காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிராக யாராவது அவருக்கு உதவ முடியுமா? என்னால் முடிந்த வரை பத்திரிகையாளர்களுக்குத் தகவல் தந்திருக்கிறேன். பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சமூக அமைப்புகள், இயக்கங்கள் அனைவருக்குமான வேண்டுகோள் இது./////////////

அன்று இது சீரியஸ்... இன்னிக்கி படிச்சா விழுந்து விழுந்து சிரிப்பு வந்தாலும்... இப்படியா பொய் புளுகுவாய்ங்க என்று ஆத்திரம் வருகிறது..!

(எல்லாரிடமும் சொன்ன இந்த ஊடக பயங்கரவாதிகள் போலிஸிடம் மட்டும் சொல்லவில்லையே... ஏன்..?

ஏனென்றால், ////இதன்பிறகு காவல்துறை தோழரை பாதுகாப்பாக வெளியேற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறது.////---அங்கேதான் ஷா இருந்திருக்கிறார் என்று வினவு பதிவு சொல்கிறது..! எப்பூடி...?)

இங்கேதான் வினவின் 'பதிவுலக-முகநூலுலக-ஊடக பயங்கரவாதம்' வெளிப்படுகிறது..!

பாவம், இப்போது முஸ்லிம் ஆனதால் இந்த கோஷ்டிக்கு வில்லன் அல்லவா ஆகிவிட்டார் இவர்..! இப்போது இனி 'புரட்சிகரமான இவர்களிடம்' இருந்துதான் போலிஸ் பாதுகாப்பு தேவை..! கோபத்தில் இயலாமையில் ஏதும் செய்யலாம்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

"மாறுகால்... மாறுகை".... "தம் தோழருக்கு உயிருக்கே ஆபத்து".... "பத்வா"
என்று நிலைமை பற்றி எரியும்போது போது... அப்போதெல்லாம் 'கோமா'வில் கிடந்த இந்த வினவு கும்பல்...

இப்போது 'தம் தோழர் முஸ்லிம் ஆகிவிட்டார்' என்றதும் கோமாவில் இருந்து விடுபட்டு விட்டது..!

'அவர் முஸ்லிம் ஆகிவிட்டார்' என்ற செய்தியை மட்டும் மறைத்து விட்டு.... பதிவு போடுகிறார்கள்...! என்னய்யா மானங்கெட்ட பொழைப்பு இது..?

வினவு கும்பலுக்கு நாட்டில் அமைதியே புடிக்காது போல. ஏதாவது பிரச்சினை இருந்துகிட்டே இருக்கணும். இல்லைன்னா, இவங்களே உண்டாக்குவாங்க... போல இப்படி.

'வினவு' என்ற பெயரில் பதிவு வந்தாலே பொய் பொய்யா இருக்கும். இப்போ "வினவு செய்தியாளர்" என்றால்.. கேக்கவும் வேண்டுமா... உண்மையை தேட வேண்டி இருக்கு..!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

வினவு கும்பலில் ஒரு கடையநல்லூர் காரர்... (இந்த பிரச்சினைக்கு அப்புறம் சமீபத்தில் தன் அனைத்து இஸ்லாமிய எதிர்வெறி பிளாக்குகளையும் மூடியவர்) ஒருத்தர், சவூதி ஒஜர் கம்பனி இருக்ககூடிய சவூதி அரேபியாவில்தான் இருக்கார். சவூதியில் இருக்கும் அவருக்கு, சனிக்கிழமையே (ஜனவரி 28) அன்றைக்கே விஷயம் நல்லா தெரிஞ்சிருக்கு.. ஊரில் பிரச்சினை நடப்பது பற்றி. (ஆதாரம்:தோழர் செந்தோழன்ஷா மீது பொருளாதார தடை விதித்து அவர் வயிற்றிலடிக்கிறீர்களே) என்று வேறு ஒருவருக்கு பதில் அளிக்கையில் 'தஜ்ஜால் பிளாக்கில்' கமென்ட் போட்டு இருக்கார் அவர்...!

உண்மை இப்படி இருக்க, வினவு கூசாம பொய் சொல்லுது, பிரச்சினை ஞாயித்து கிழமைத்தான் பத்திச்சின்னு. ஏன்..?

//வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியான பின்னர் அந்த அறிவிப்பு பெரிய அளவில் மக்களை ஈர்க்கவில்லை. சனிக்கிழமை தோழரின் கடையில் ஒப்பீட்டளவில் வியாபாரம் குறைந்திருந்தது என்றாலும் ஞாயிற்றுக்கிழமை அந்த பாதிப்பு மீண்டுவரத் தொடங்கியது. காலை 6 மணியிலிருந்து 9 மணி வரை நடக்கும் வியாபாரமே நாளின் மொத்த வியாபரத்தையும் தீர்மானிக்கும் எனும் வகையில் ஞாயிற்றுக்கிழமை பழையபடி வியாபாரம் மீளத் தொடங்கியிருந்தது.//

ஏன்.. இந்த பொய்..? அவர்களுக்கு பிடிக்காத ஒரு சில நபர்கள் மற்றும் ஓரிரு இஸ்லாமிய இயக்கங்கள் மீது வீண் பழி போடுவதே நோக்கம்..!

மற்றபடி "தோழர் செந்தோழன்ஷா" (மதமாற்றம் பண்ணின உடனே அவுக சிகப்பு மதத்து பேரு வச்சிட்டாங்கப்பு) எக்கேடு கெட்டால் என்ன வினவுக்கு..!

ஆனால், அவர் 'துராப்ஷா' வாக மீண்டும் முஸ்லிம் ஆனதுதான் செம கோபம். அதுக்கு யாருடைய பிரச்சாரம் காரணம் என்று பார்த்து அவர்கள் மீது அவதூறு பழி போடுகிறது இப்போது. லேட்டா நியூஸ் போட்டதுக்கு வினவின் இந்த வயித்தெரிச்சல் தான் காரணம்...!

கூப்பிடுங்கப்பா... தீ அணைப்பு வண்டியை... தண்ணி பீச்சுங்கப்பா வினவின் பற்றி எரியும் வயித்திலே...!

சிராஜ் said...

என்ன சோதனை இது..??

சுவனப்பிரியன் said...

//கூப்பிடுங்கப்பா... தீ அணைப்பு வண்டியை... தண்ணி பீச்சுங்கப்பா வினவின் பற்றி எரியும் வயித்திலே...!//

:-)))))))))))))))))))))))))))))))))))))))

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

உண்மையான தனது கொள்கைகளில் நம்பிக்கை இருக்கும் ஒருவன், 'அதனால் தனக்கும் பிறருக்கும் நன்மை இருக்கும்' என்று நம்புகின்றவன், அதை தன் சொந்த பெயரில் தைரியமாக எழுதுவான்.

ஆனால்............................

அடுத்தவனை பற்றியும் அடுத்தவன் கொள்கைகளை பற்றியும் அவதூறு எழுதுவதற்காகவே பல தளங்கள் ஆரம்பித்து வெட்டி பரபரப்பு அரசியல் உள்நோக்கத்தோடு பொய்களை மட்டுமே அவற்றில் எழுதுதுபவன் பொய்யான பெயரில்தான் மறைந்திருந்து எழுதுவான்.

தான் எழுதியதற்கு வேறு எவனோ ஒருவன் அப்பாவியாக மாட்டிக்கொண்டாலும் கூட எனக்கு ஒன்றுமே தெரியாது என்று தப்பி விடுவான்.

-----இதுதான் இன்றைய பதிவுலக நிதர்சனம்...!

சிராஜ் said...

//** சகோ நல்லூர் முழக்கம்,

/* மனிதாபிமானி தளத்தில் நான் இட்ட பின்னூட்டம் வெளிவருமா என்பது தெரியவில்லை. அதனால் இங்கேயும் பதிந்து வைக்கிறேன். */

நீங்க மனிதாபிமானி தளத்தில் இந்த பின்னூட்டத்த போட்டீங்களா??? அது வரலையா?? ஏன் பிரதர் இப்படி பொய் சொல்றீங்க????? மனிதாபிமானி தளத்தில

கமெண்ட் மட்டுறுத்தல் இல்லவே இல்லை. அப்புறம் எப்படி வராமல் இருக்கும் ?

இதிலிருந்தே தெரியுது உங்கள் நேர்மை????? ஹி..ஹி..ஹி…

**//

இதுக்கும் பதில் சொல்லலாமே சகோ செங்கொடி alias நல்லூர் முழக்கம்!!!

சிராஜ் said...

சகோஸ்,

நல்லூர் முழக்கம் என்ற பெயரில் வினவின் தளத்தில் விவாதம் செய்யும் செங்கொடி ஒரு பொய்யர். வினவு தளத்தில் ஒரு பின்னூட்டத்தை பதிந்து விட்டு அதில் கூறி இருந்தார், இதை நான் மனிதாபிமானி தளத்திலும் போட்டுள்ளேன், ஆனால் வெளியிடுவார்களா என்று தெரியாது,
அதானாலே இங்கேயும் போடுகிறேன் என்று.

அதற்க்கு நான் கேட்டேன் மனிதாபிமானி தளத்தில் பின்னூட்ட மட்டறுத்தல் இல்லவே இல்லை, பின் எப்படி உங்கள் பின்னூட்டம் வராமல் இருக்கும் என்று.
(பார்க்க எனது முந்தய பின்னூட்டத்தை...)

அதற்க்கு செங்கொடி மீண்டும் வாய் கூசாமல் பொய் சொல்லி உள்ளார் பின்வருமாறு...
/* தடுத்து வைத்திருக்கும் உங்களுக்கல்லவா பதில் தெரியும் */

மீண்டும் சொல்லிக்கொள்கிறோம் சகோதரர்களே, மனிதாபிமானி தளத்தில் பின்னூட்ட மட்டுறுத்தல் ஆரம்பித்தில் இருந்தே இல்லை. ஆகவே, செங்கொடி இங்கு பின்னூட்டம் போடவே இல்லை. மாறாக போட்டதாக வாய் கூசாமல் பொய் சொல்லி உள்ளார், வினவின் தளத்தில். ஆகவே வினவின் தளத்தில் வாதம் செய்வது வீண். எவ்வளவு குரூர மாணவனிடம் வேண்டும் என்றாலும் மோதலாம். ஆனால் பொய்யர்களிடம் மோதி வென்றோ அல்லது தோற்றோ ஆகப்போவது ஒன்றும் இல்லை.

ஆகவே, விடு ஜூட்.......

NKS.ஹாஜா மைதீன் said...

எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுவதை கேள்விப்பட்டு இருக்கிறேன் ....எரிந்து போன சாம்பலில் வினவு ஏன் எண்ணையை ஊற்ற பார்க்கிறது...அப்பா வாங்கி கட்டிக்கொள்ள வேண்டியதுதான்...

sirippousingaram said...

அட போங்கப்பா..என்னவோ நடக்குது......வேற வேல இல்லியா

Abdullah said...

வினவு வெளியிட்ட அந்தக்கட்டுரையை பார்த்த வுடனே மனதில் வேதனையும் வலியுமாய் இதனை எவ்விதம் எதிர்கொள்வது.... இவர்கள் வேண்டுமென்றே ஒரு அமைதியான ஊரை அதன் கண்ணியமான மக்களின் கூட்டமைப்பை தூற்ற நினைத்துத் திட்டமிட்டே தூற்றுகிறார்கள் என உணர்ந்து, இவர்களின் தளத்தை இதுவரை நாம் கண்ணுற்றது என் பொன்னான காலங்களை கழிப்பறைக்குள் இட்டு பூட்டியதைப் போல் உணர்ந்து, வேண்டுமென்றே உண்மையை தெரிந்தும் பொய் சொல்லி மக்களை திசை திருப்பும் இந்த உண்டியல் ஏந்தி சிகப்புச் சாயமிட்ட அரசியல் பிச்சைக் காரர்களிடம் இருந்து ஒதுங்குவதே மேல என ஒதுங்கிவிட்டேன்....

S.Ibrahim said...

நல்லூர் ஒப்பாரி ////ஒன்றை கவனிக்கலாம். வெட்டணும், கொல்லணும், புண் பட்டு விட்டது, கருத்துரிமையின் எல்லை என்றெல்லாம் கதை பேசியவர்கள் வாருங்கள் அது குறித்து பேசுவோம் என்றதும் கள்ள மௌனம் சாதிக்கிறார்கள் .////
அது குறித்து பேசுவோம் ? பீஜே வுடன் விவாதம் என்றால் என்னை அடையாளம் கண்டு கொன்னுவிடுவார்கள் என்று சால்ஜாப்பு சொல்லும் நீங்கள் மற்றவர்களை மட்டும் பேச அழைப்பது ஏன்? அவர்களை எழுத்து விவாதத்திற்குத்தான் அழைத்தேன் என்று கதையை திருப்பக் கூடாது. எழுத்து விவாதம் என்பது மாத கணக்கில் இழுத்துக் கொண்டு செல்லும்.உங்களைப் போல் எல்லோரும் சோம்பேறிகள் இல்லை .வேலை இல்லாதவர்களும் இல்லை .ஆயின் நேரடி விவாதத்தில் ஓரிரு நாளில் பேசி யாரிடம் உண்மை உள்ளது என்பது மக்களுக்கு தெரிந்துவிட்டு போகட்டும்
உங்களை அடையாளம் கண்டுகொள்வார்கள் என்றால் பர்தா அணிந்து வாருங்கள்

S.Ibrahim said...

ஒடிந்த செங்கொடி , உங்களது ஸ்டாலின் ஆட்சியில் கம்யுனிசத்திற்கு எதிராக மூச்சுவிட்டவர்கள் கூட சைபீரியா காட்டுக்கு அனுப்பபட்டர்களா ?இல்லையா? ஸ்டாலின் ஆட்சியில் உங்களது புதிய ஜனநாயகத்தில் எத்தனை பேர் தனது கருத்துக்களை சுதந்திரமாக பேசினார்கள்? என்னவெல்லாம் பேசினார்கள் ?என்பதை முதலில் சொல்லுங்கள்.அப்புறம் கடையநல்லூர் ஜமாஅத் செய்தது காட்டுமிராண்டித்தனமா ?அல்லது கம்யுனிஸ்ட்கள் காட்டுமிராண்டிகளா? என்று பார்ப்போம் .
இஸ்லாத்திற்கு எதிராக சவுதிய்ளிருந்து எழுதிய உங்களை முஸ்லிம்கள் உங்கள் கம்பெனியிடம் வந்து உங்களை வெளியேற்ற சொன்னார்கள்.ஆனால் இதுவே உங்களது உண்மை கம்யுனிச நாடாக இருந்தால் கம்யுனிசத்திற்கு எதிராக எழுதியிருந்தால் அங்கிருந்தே சைபீரியா குளிர்காட்டுக்கு அனுப்பி உறைந்த ரத்தம் கூட கடைய நல்லூருக்கு வந்து சேராது

செங்கொடி said...
This comment has been removed by the author.
செங்கொடி said...

இந்த இடுகையின் எதிர்வினை பதிவிடப்பட்டுள்ளது.பதிலைஎதிர்பார்க்கிறேன்.

http://senkodi.wordpress.com/2012/03/01/kdnl-argument/#comment-6945