Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Wednesday 7 March 2012

குழந்தைகளுக்கு உதடு பிளவா? - இலவச சிகிச்சை


பிறக்கும் குழந்தைகளிடம் உதடும் மூக்கும் சேர்ந்து இருப்பதை பார்த்திருப்பீர்கள். இதனை cleft lip and cleft palate problem என்பார்கள். 


உதட்டில் இப்படியான பிளவுடன் ஆண்டுதோறும், இந்தியாவில், சுமார் 35,000 குழந்தைகள் வரை பிறப்பதாக சமீபத்திய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் செய்தியறிக்கை தெரிவிக்கின்றது. 

குழந்தைகள் வளர வளர உடல்ரீதியாகவும், உளவியல்ரீதியாகவும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த பிரச்சனையை முற்றிலுமாக குணப்படுத்த முடியும்.

தற்போது இதற்கான சிகிச்சையை இலவசமாக வழங்குகின்றது மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை. SMILE TRAIN என்ற அமைப்புடன் இணைந்து இதனை மேற்கொள்கின்றது. குழந்தையுடன் ஓரிரு ஆட்கள் தங்கலாம். மருத்துவ செலவுகள் மற்றும் மறைமுக செலவுகள் எதுவும் கிடையாது. 

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தன் தந்தைக்கு சிகிச்சை பார்த்து வரும் சகோதரர் சுல்தான் மைதீன் அவர்கள் இதனை கூறி மற்றவர்களுக்கு தெரிவிக்க சொன்னார். நாங்களும் இதுக்குறித்து மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் சம்பந்தப்பட்ட துறையை தொடர்புக்கொண்டு மேலே கூறியவற்றை விசாரித்து உறுதிபடுத்திக்கொண்டோம். 

நீங்கள் அறிந்தவர்களின் குழந்தைகள் இப்படியான பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையை தொடர்புக்கொள்ளுங்கள். நீங்களும் ஒருமுறை நன்றாக விசாரித்து கொள்ளுங்கள். நீங்கள் அறிந்தவர்களுக்கு இதுக்குறித்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். குழந்தைகளின் உளவியல்ரீதியான பாதிப்புகளை களைந்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம்.

இது குறித்து மேலும் விபரங்கள் அறிய:

Meenakshi Mission Hospital & Research Centre
Lake Area, melur Road,
Madurai, Tamil Nadu,
India - 625 107.
Phone: 0452-4263000

மற்றும் SMILE TRAIN அமைப்பு குறித்து பார்க்க: http://www.smiletrain.org


12 comments:

NKS.ஹாஜா மைதீன் said...

நல்ல விசயம்

ஆமினா said...

சலாம்

தகவலுக்கு நன்றி சகோ

மனிதாபிமானி said...

@ சகோ ஆமினா, வ அலைக்கும் ஸலாம்

VANJOOR said...

.
.
பயனுள்ள தகவல்

இங்கே சொடுக்கி >>>>>> குழந்தைகளிடம் மாறுகண் பார்வை என்பது சிறு வயதிலேயே கவனிக்கப்பட வேண்டிய ஒரு குறைபாடு . அதிர்ஷ்டம் என பலர் நம்பும்(!) மாறுகண் பார்வை குறைபாட்டுக்கு சிகிச்சை என்ன? <<<<< படியுங்கள்

.

VANJOOR said...

குழந்தைகளுக்கு இலவச இருதய சிகிச்சை

இவ்விடத்திலும்

1. இங்கு சொடுக்கி >>>>>
ஏழை குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகச்சை !!!
<<<<< விபரம் காணுங்கள்..

****************************

இவ்விடத்திலும்

குழந்தைகளுக்கு இலவச இருதய சிகிச்சை

2. சென்னை மியாட் மருத்துவமனை இருதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக இலவச இருதய சிகிச்சையை CHIME என்ற trust மூலம் அளிக்கிறது...

Congenital Heart disease' ஆல் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விவரம் தெரியவந்தால்
தொடர்புகொள்க...

Contact Details: +(91)-(44)-22491188 / chime@miothospitals.com


.
.

தமிழ்வாசி பிரகாஷ் said...

மீனாட்சி மிஷனில் அன்னப்பிளவு சிகிச்சை சிறப்பாக செய்யப்படுகிறது என்பதை நான் அறிவேன். உங்கள் பதிவால் இன்னும் பலருக்கு விஷயம் சென்றடையும்.

Rabbani said...

Good post
for more detail about this birth defect
please visit
http://emedicine.medscape.com/article/1279283-overview

கூடல் பாலா said...

மீனாக்ஷி மிஷன் மற்றும் ஸ்மைல் ட்ரைனுக்கு வாழ்த்துக்கள் .....

dfgtrdefg said...

வணக்கம் பதிவுலக நண்பர்களே உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக தமிழ் திரட்டி இணையத் தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் palani.muruganandam.nilavaithedi@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து
பிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான சேவையாகும்.

G u l a m said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

பயன்மிக்க பதிவு

Nimal said...

நண்பனே ஏன் என் காரணத்தினால் உதடு பிளவுபட்ட,ஒட்டின வடிவங்களுடன் குழந்தைகள் பிறப்பதேன்?

Aashiq Ahamed said...

சகோதரர் macall,

சலாம்,

//நண்பனே ஏன் என் காரணத்தினால் உதடு பிளவுபட்ட,ஒட்டின வடிவங்களுடன் குழந்தைகள் பிறப்பதேன்?//

இந்த லிங்கில் கூறப்பட்டுள்ளது, பாருங்கள் சகோதரர்

http://articles.timesofindia.indiatimes.com/2012-02-24/pune/31094944_1_cleft-spreading-smiles-orthodontic-problems

நன்றி