Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Saturday, 24 March 2012

இலங்கைக்கு ஆதரவாக மதவாத நாடுகளாம் - உண்மை என்ன?


ஐ.நா மனித உரிமை கழக தளத்தில் வெளியாகியுள்ள அறிக்கையை அடிப்படையாக கொண்டு இந்த பதிவு எழுதப்படுகின்றது. அதனை முழுமையாக படிக்க இங்கே சுட்டவும். 

"இலங்கைக்கு ஆதரவாக மதவாத நாடுகள் - கிழித்துக் கொண்டுள்ள மனிதாபிமான முகமூடி !"

மேற்கண்ட தலைப்பில் நேற்று ஒரு பதிவை காண நேர்ந்தது. முஸ்லிம் நாடுகள் சில, ஐ.நா மனித உரிமை கழகத்தில் கொண்டு வரப்பட்ட இலங்கைக்கு எதிரான(?) தீர்மானத்தை எதிர்த்து ஓட்டளித்ததால் இப்படியான தலைப்பு. இந்த தீர்மானத்தை எதிர்த்ததால் மனிதாபிமான முகமூடி கிழிவதாக கணக்கிட்டால் சீனா, ரஷ்யா, கியூபா, காங்கோ, தாய்லாந்து, ஈக்குவடார் போன்ற  நாடுகளின் மனிதாபிமான முகமூடியும் கிழிந்ததாக அர்த்தம் கொள்ளலாம். ஏனென்றால் அந்த தீர்மானத்தை எதிர்த்ததில் இந்நாடுகளும் அடங்கும். ஆனால் இந்த நாடுகளின் மனிதாபிமானத்தை மேற்கண்ட கட்டுரை என்ன காரணத்தினாலோ கண்டுக்கொள்ளவில்லை. 

சரி விசயத்திற்கு வருவோம். மேற்கண்ட கட்டுரையானது, தீர்மானம் குறித்த உண்மை நிலைகளை சரிவர அலசி ஆராயாமல் ஒரு சமூகம் மீது கொண்டுள்ள வெறுப்புணர்வை மையமாக வைத்து எழுதப்பட்ட கட்டுரை என்பதை அம்பலப்படுத்துவதே இந்த பதிவின் நோக்கம்.   

முதலில் ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் உண்மை நிலை என்ன?  இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை இலங்கை அரசே இன்னும் தீவிரமான நடவடிக்கைகள் எடுத்து களைய வேண்டுமென்று படு சூப்பரான(?) ஐடியாவை சொல்லும் அந்த தீர்மானம் புரியவேண்டுமென்றால் சில தகவல்களை நாம் அலச வேண்டும். 

இலங்கையில் போர் முடிந்த பிறகு, போர் குற்றங்கள் குறித்து ஆய்வு செய்ய ஒரு கமிட்டியை அமைத்தது ராஜபக்சே அரசு. அதற்கு பெயர் "கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு". இந்த குழுவானது தன் அறிக்கையை மூன்று மாதங்களுக்கு முன்பாக சமர்பித்தது. அதில், 

  • இலங்கை ராணுவம் வேண்டுமென்றே மக்களை தாக்கவில்லை என்றும், 
  • புலிகள் மனித உரிமை மீறல்களை செய்ததாகவும், 
  • மக்களுக்கு சிங்கள ராணுவம் அதிகபட்ச பாதுகாப்பை தந்ததாகவும், 
  • புலிகளோ மனித உயிர்களை மதிக்கவே இல்லை என்றும்,
  • சிங்கள ராணுவம் விபத்துரீதியாக(?) மக்களை கொன்றதாகவும் (சிங்கள அரசோ அப்பாவி மக்கள் கொல்லப்படவில்லை என்று சொல்லியிருந்தது), 
  • சிங்கள ராணுவம் புரிந்த மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்கள் இருப்பதாகவும், தேவைப்பட்டால் அவை மேலும் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும்,
  • பிரச்சனைகளுக்கு காரணமாக சிங்கள அரசியல்வாதிகளையும், தமிழ் அரசியல்வாதிகளையும் சாடியும்,

என்று இப்படியாக பல்வேறு கருத்துக்களை சொன்ன அந்த குழு, இலங்கையில் அமைதி திரும்ப வழிமுறைகளை , பரிந்துரைகளை சொல்லி தன் அறிக்கையை முடித்தது. இந்த அறிக்கையின் முழு சாரம்சத்தை இங்கே படிக்கலாம்.

இந்த அறிக்கை சர்வதேச மனித உரிமை இயக்கங்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இலங்கை அரசின் கண்துடைப்பு இது என அவை குற்றஞ்சாட்டின.

ஐ.நா மனித உரிமை கழகத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இருக்கே, அது என்ன சொல்கின்றது தெரியுமா?

  • இலங்கை அரசு அமைத்த குழு, மனித உரிமை மீறல்களை சரியாக கையாளவில்லை, இது வருத்தம் அளிப்பதாகவும், 
  • இலங்கை அரசாங்கம் இது குறித்த  தீவிர சுதந்திரமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்றும், 
  • இலங்கை அரசால் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை விரைந்து செயல்படுத்த வேண்டுமென்றும், 
  • அந்த குழுவின் பரிந்துரைகளை இது வரை என்ன செயல்படுத்தி இருக்கின்றோம், இனி என்ன செய்யப்போகின்றோம் என்ற விபரங்களை இலங்கை அரசு சமர்பிக்க கோரியும், 
  • இது குறித்த செயல்பாடுகளில், ஐ.நா உடன் இணைந்து செயல்படுமாறும், 
  • இலங்கை அரசின் குழு தொடாத சில கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க கோரியும், 

- என்று இப்படியாக இருந்ததே அந்த தீர்மானம். 

தீர்மானத்தின் நோக்கமாக ஐ.நா மனித உரிமை கழகம் கூறுவது, இலங்கையில் மறுசீரமைப்பு விரைவாக நடக்கவும் நாட்டில் அமைதி திரும்பவுமே என்பதாகும். இலங்கை மக்கள் அனைவருக்குமான தீர்மானம் என்றே ஐ.நா கூறுகின்றது.

ஆக, கொலைக்காரன் என்று குற்றஞ்சாட்டப்பட்டவனின் கையிலேயே விவகாரங்களை கொடுத்து அவனை தண்டித்துக்கொள்ளும் பொறுப்பை அவனிடமே கொடுத்திருக்கின்றது அமெரிக்கா. இது தான் அமெரிக்கா சொல்லும் நியாயம். 

இந்த தீர்மானத்தால் இலங்கை அரசுக்கு, தன்னால் அமைக்க பெற்ற குழுவின் பரிந்துரைகளை விரைவாக செயல்படுத்த வேண்டுமென்ற அழுத்தம் அதிகமாக கொடுக்கப்படலாம் என்பது மட்டுமே உண்மை.

தீர்மானத்தை ஆதரித்த உருகுவே, சபையில் கூறிய கருத்துக்களை கவனித்தால் சில விசயங்கள் தெளிவாகும். இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பாராட்டிய உருகுவே, இம்மாதிரியான தீர்மானங்கள் மறுசீரமைப்பு பணியை சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து இலங்கை விரைவாக நிறைவேற்ற உதவும் என்று கூறி தீர்மானத்திற்கு தன் ஆதரவை தெரிவித்தது.

எதிர்ப்பு தெரிவித்த நாடுகள் இரண்டு காரணங்களுக்காக எதிர்த்தன. ஒன்று, இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட கூடாது (இம்மாதிரி தலையிடுவது ஐ.நா விதிகளுக்கு மாறானது என்று வாதாடியது சீனா).  அடுத்து, இலங்கை அரசாங்கம் அமைத்த குழு, அறிக்கை சமர்பித்து மூன்று மாதங்களே ஆகிறதென்றும், அந்த பரிந்துரைகளை செயல்படுத்த இன்னும் கால அவகாசம் இலங்கைக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பது மற்றொரு நிலை. 

கியூபா கவனிக்கப்பட வேண்டிய ஒரு தகவலை கூறியது. 1983-2009 இடையேயான காலக்கட்டத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இஸ்ரேலின் 40% ஆயுத விற்பனை வருமானம் இலங்கையிலிருந்தே வந்தது என்பது தான் அது. தற்போது இந்த தீர்மானம் நிறைவேறியுள்ள நிலையில் இலங்கைக்கான ஆயுத விற்பனையை தாராளமயமாக்கி உள்ள அமெரிக்காவின் நடவடிக்கைகள் அரசியல் வல்லுனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. 

மறுசீரமைப்பு  நடந்து வரும் நிலையில், இப்படியாக அழுத்தம் கொடுப்பது தங்களுக்கு பின்னடைவையே தரும் என்று கூறியது இலங்கை அரசு. 

ஆக, மனித உரிமை கழக தீர்மானத்தின் சாராம்சம் இதுதான். ஆதரவு நாடுகள், இலங்கை அரசாங்கம் விரைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று சொல்லி ஆதரவளித்தன. எதிர்ப்பு நாடுகள், இன்னும் இலங்கைக்கு கால அவகாசம் தரவேண்டுமென்று சொல்லி எதிர்த்தன.

இப்படியான ஒரு தீர்மானத்தில் எங்கே மதவாதம்(?) வந்தது? 

அதுமட்டுமல்லாமல், ஐ.நா மனித உரிமை கழகத்தில் உறுப்பினராக உள்ள முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் வெவ்வேறான நிலைகளையே இந்த தீர்மானத்தில் கையாண்டன. 

அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்த முஸ்லிம் நாடுகள் இரண்டு. எதிர்த்த முஸ்லிம் நாடுகள் ஏழு. ஓட்டெடுப்பில் இருந்து விலகிக்கொண்ட முஸ்லிம் நாடுகள் ஆறு (இரண்டு தரப்பிற்கும் ஆதரவு இல்லாத நிலை). 

விரிவான பார்வையோடு நோக்கப்பட வேண்டிய இந்த விசயத்தை குறுகிய பார்வையோடு அணுகுவது ஆரோக்கியமான செயல்பாடு அல்ல. மேலே கண்டது போன்ற தரம் குறைந்த பதிவுகள் சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முனையும் கீழ்த்தரமான செயலே அன்றி வேறொன்றும் இல்லை. 

சமூக நல்லிணக்கத்தை காப்போம், அழகான சமுதாயம் உருவாக வழிவகுப்போம்....



17 comments:

UNMAIKAL said...

இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி- ஆதரவு 24; எதிர்ப்பு 15!

ஆதரவளித்த நாடுகள்: ஆதரவு 24

ஆஸ்திரியா, பெல்ஜியம், பெனின், கம்ரூன், சிலி, கொஸ்தாரிகா, செக் குடியரசு, குவாத்தமாலா, ஹங்கேரி, இந்தியா, இத்தாலி,லிபியா, மொரிசியஸ், நைஜீரியா, பேரு, போலந்து, மால்டோவா, ரூமேனியா,ஸ்பெயின், சுவிஸ், அமெரிக்கா, உருகுவே

எதிராக வாக்களித்த நாடுகள்: எதிர்ப்பு 15!

பங்களாதேஷ், சீனா, கொங்கோ, கியூபா, ஈக்வடோர், இந்தோனேசியா, குவைத், மாலைதீவு, பிலிப்பைன்ஸ், கட்டார், ரஸ்யா, சவுதி அரேபியா, தாய்லாந்து, உகண்டா, மௌரித்தானியா.
=================================

“இலங்கைப் போர் குற்றம் தொடர்பான அமெரிக்கத் தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாகவும், தீர்மானத்திற்கு எதிராகவும் மதவாத நாடுகளே பெரும்பாலும் வாக்களித்துள்ளனர். “

“சில நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்திருப்பதற்கு காரணம் இலங்கைக்கு ஆதரவு என்பதை விட , இந்த தீர்மானத்தை கொண்டுவர அமெரிக்காவுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்னும் கோணத்தில் அமெரிக்காவை எதிர்க்க வேண்டும் என்பதால் ..என்பது என்னுடைய கருத்து” - கோவி.கண்ணன் -- “இலங்கைக்கு ஆதரவாக மதவாத நாடுகள் - கிழித்துக் கொண்டுள்ள மனிதாபிமான முகமூடி ! “ பதிவில் .


CLICK TO //////////// பதிவர் படம் 1 ///////////PICTURE

CLICK TO SEE ////////////// பதிவர் படம் 2 s////////////////PICTURE


CLICK TO SEE ////////பதிவர் கோவி.கண்ணன் காவடி video /////////// VIDEO

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.மனிதாபிமானி,

சகோ.ஆஷிக் அஹமதின் மிகச்சிறப்பான அரசியல் ஆய்வுடன் அமைந்த ஓங்காரமாக ஒலிக்கும் 'எதிர்க்குரல்' இது..!

பதில் சொல்லவே முடியாதபடிக்கு அத்தவறான கருத்துக்களை, இப்பதிவில் அனாயாசமாக நசுக்கியவருக்கும் அதை சிறப்பாக பகிர்ந்தவர்க்கும் நன்றிகள்..!

"மிஸ்டர்-கோவி கண்ணன்" போன்ற இஸ்லாமியோஃபோபியா நோய் தாக்கியவர்கள்...

தம் தளத்தில் 'பதிவு' என்ற பெயரில்,
தம்முடைய தரமில்லாத எழுத்தால்,
குறிப்பிட்ட சமூகத்தை தாக்கி தம் புளுகு மூட்டைகளை அவிழ்த்து,
வரலாறை தம் போக்குக்கு திரித்து,
அதற்கு மதஎதிர்வாத கொள்ளி வைத்து,
அது கொழுந்துவிட்டெறிய தம் இஸ்லாமிய காழ்ப்புணர்வை அதில் எரிபொருளாக ஊற்றுவதிலேயே...
கண்ணுங்கருத்துமாக இருந்து வருவது
நம் தமிழ் பதிவுலகிற்கு ஆரோக்கியமான சூழல் அல்ல.

குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் மீது இதுமாதியான வன்னெஞ்சங்கொண்ட நச்சு எழுத்துக்களை திரட்டிகளில் அசிங்கமாக கொட்டும் அவர்களின் கொள்கை(?)யிலாவது, குறைந்த பட்ச நேர்மையாவது அவசியம் இருந்தாக வேண்டும்.

'இதுவுங்கூட இவரிடம் சுத்தமாகவே இல்லை...' என்று மேலே 'உண்மைகளின் தொடுப்புகள்' சான்று பகர்கின்றன..!

அன்புள்ள எனது பதிவு எழுதும் சகோஸ்...
இது ஓர் அவசர நிலை பிரகடனம்..!

எழுத்துக்களை தரம்பிரித்து, தரமற்றவரை ஒதுக்க தெரிந்து கொள்வோம்..!

முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ,
வாழ்த்துக்கள் சகோ.கொஞ்ச நாளாகவே நம்ம கோவியார் இஸ்லாமியர்களை வேண்டுமென்றே வம்புக்கிழுத்து கொண்டிருக்கின்றார்.அவருடைய இந்த பதிவும்கூட இஸ்லாமியர்களை மற்றவர்கள் வெறுக்க செய்யவே.அவருக்கு அதில் என்ன லாபம் என்று தெரியவில்லை.இஸ்லாமிய சகோதரர்களின் பதிவுகள் தொடர்ந்து அதிக ஓட்டுகள் பெற்று மகுடம் சூட்டிகொண்டதை இவரால் ஜீரணிக்க முடியவில்லை என்று சில நாட்களுக்கு முன் வருத்தப்பட்டுகொண்டார்.முஸ்லிம்களை நேரடியாக எதிர்த்தால் இவருடைய முகமூடி கிழிந்து தொங்கும் என்பதை நினைவில் கொண்டு வஹாபிகளை எதிர்க்கிறேன் என்று சொல்லிகொண்டு முஸ்லிம்களை மறைமுகமாக எதிர்க்க தொடங்கினார்.
தனக்கு சப்போர்ட் மிக முக்கியம் என்றுணர்ந்த நம்ம கோவியார் சூபிகளை மடக்க பார்த்தார்."அமைதி இல்லம்" ப்ளாக் நடத்தும் சகோதரர் நாகூர் இஸ்மாயில் அவர்களின்
http://nagoreismail786.blogspot.com/2012/02/blog-post.html
"மவ்லித்‍‍** மீலாதுந் நபி நினைவு கூறல்" எனும் பதிவுக்கு நம்ம கோவியார் ஒரு பின்னூட்டமிட்டிருந்தார்
/////கோவி.கண்ணன் said...
//மீலாதும் இதே போல் தான் எங்களுக்கு - நாங்கள் ஒன்றும் அருவருக்கத்தக்க காரியங்களை செய்யவில்லை. //

அழகிய முன்மாதிரி என்று முகமது நபியை தனிச்சிறப்பு செய்திருக்கிறார் அல்லா என்று நீங்கள் சொன்னாலும் வஹாபிகள் ஏற்கமாட்டார்கள்

Monday, February 06, 2012/////////இவருடைய எண்ணங்களை தெளிவாக புரிந்துகொண்ட சகோதரர் நாகூர் இஸ்மாயில் அவர்கள் இவருக்கு ஒரு பதில் கொடுத்தார் பாருங்கள் கோவியாருக்கு சரியான‌ மூக்குடைப்பு.சகோதரர் நாகூர் இஸ்மாயிலுக்கு மிக்க நன்றி.
///// nagoreismail said...
கோவி சார்,

இஸ்லாத்தின் மீதான பதிவுகளின் மீது நீங்கள் காட்டும் அக்கறைக்கு நன்றி(?).

வஹ்ஹாபிகள் இறைவன் நபி (ஸல்) அவர்களை “அழகிய முன்மாதிரி” என்று சொன்னதை மறுக்கவில்லை.

அவர்கள் மறுப்பதெல்லாம் பெருமானார் (ஸல்) அவர்களின் மீதான அதீத அன்பையும் மவ்லித் (பிறப்பு) கொண்டாடப்படுவதையும் தான்.

இந்த பதிவில் கொண்டாட வேண்டும் என்ற எங்களின் நிலையை எடுத்து காட்ட முயற்சித்து இருக்கிறேன். அவ்வளவே...

Wednesday, February 08, 2012/////////////
உண்மையான‌ கோவியாரை காண்பித்த‌ சகோதரர் "உண்மைகள்" அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

suvanappiriyan said...

சலாம் சகோ மனிதாபிமானி!

முன்பெல்லாம் கோவிக் கண்ணன் பதிவுகள் பல செய்திகளை சொல்லும். அவர் என்று பூனையை கடவுளாகக் கொண்டு :-)(எலி கருடனைப் போல்) கொள்கையை மாற்றிக் கொண்டாரோ அவருடைய பதிவுகள் காமெடிப் பதிவுகளாக மாறி விட்டது. இதைப் போய் அதிக சீரியஸாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

இந்துத்வாவில் ஏதும் முக்கிய பதவி கிடைக்க இஸ்லாத்தை தொடர்ந்து தாக்கி பதிவிடுங்கள் என்று யாரோ ஐடியா கொடுத்திருப்பார்கள் போல. பாவம். அவரை கறி வேப்பிலைப் போல் பயன்படுத்திக் கொண்டு வர்ணாசிரம கோட்பாட்டால் அவரை தூரமாக்கும் போது தெரியும் இஸ்லாத்தின் மகிமை.

அதுவரை சகோ உண்மைகள் கொடுத்த லிங்கில் உள்ளது போல் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிக் கொண்டிருக்கட்டும்.

UNMAIKAL said...

இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா.வில் அதிரடி- தனிமைப்படுத்தப்பட்டது அமெரிக்கா

இஸ்ரேலிய குடியேற்றங்கள் - சர்வதேச விசாரணைக்கு ஐ.நா உத்தரவு: ஜெனீவாவில் தீர்மானம்

ஜெனீவா: இஸ்ரேலிய குடியேற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை நடத்த உத்தரவிடும் தீர்மானம் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய குடியேற்றத் திட்டங்கள், பாலஸ்தீனர்களின் உரிமைகளை மீறுகிறதா என்பதை ஆராய்வதற்கான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்

என்பது உட்பட இஸ்ரேலுக்கு எதிரான 5 தீர்மானங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

எல்லைப் பகுதியில் இஸ்ரேலிய குடியிருப்புகளை அமைக்கும் இத்திட்டத்தின் மூலம் தங்களது பகுதியை ஆக்கிரமிக்கிறது என்பது பாலஸ்தீனத்தின் குற்றச்சாட்டு.

இது தொடர்பான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இஸ்லாமிய நாடுகள் சார்பில் பாகிஸ்தான் முன்வைத்தது.

கியூபா, வெனிஸுலா நார்வே, இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட 36 நாடுகள் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன.

இத்தாலி, ஸ்பெயின், உட்பட 10 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

அமெரிக்கா மட்டுமே இஸ்ரேலுக்கு ஆதரவாக அதாவது தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தது.

இத்தகைய தீர்மானங்களை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு நிராகரித்துள்ளார். தங்களது பிரதேசத்தில் இத்தீர்மானம் பதற்றத்தை அதிகரிக்கும் என்பதும் இஸ்ரேலின் கருத்து.


SOURCE: http://tamil.oneindia.in/news/2012/03/24/world-un-rights-body-launches-probe-into-israeli-colonies-aid0216.html
========================

கோவிக்கண்ணன் தன்

“இலங்கைக்கு ஆதரவாக மதவாத நாடுகள் - கிழித்துக் கொண்டுள்ள மனிதாபிமான முகமூடி ! “ பதிவில் .


“ஒரு மதவாதி இன்னொரு மதவாதியால் தாக்கப்படும் போது அங்கே மனிதாபிமானம் பேசுபவர்களுக்கு வேலை இல்லை,

எதையும் மத அரசியல் கண் கொண்டு பார்த்துவிட்டு ஒதுங்கிக் கொள்வதே நல்லது

என்பதைத் தான் மதவாதிகள் அவ்வப்போது நினைவுபடுத்திவருகிறார்கள்,

மோடி அரசின், இஸ்ரேல் அரசின் மதவாத நடவடிக்கைகளைக் கூட நாம் கண்டு கொள்ளாமல்

அதை வெறும் மதவாத அல்லது இரு மதங்களுக்கு இடையே நடக்கும் போராட்டங்கள் என்ற அளவில் தான் பார்க்க வேண்டும்

என்பதை நமக்கு மதவாதிகள் தான் சொல்லிக் கொடுக்கின்றனர்." _-- கோவிக்கண்ணன்.



-----------------------------------------
கோவிக்கண்ணன் தன் நிலைகளில்

CLICK TO //////////// கோவிக்கண்ணன் படம் 1 ///////////PICTURE

CLICK TO SEE //////////////
கோவிக்கண்ணன் படம் 2
////////////////PICTURE

CLICK TO SEE ////////கோவி.கண்ணன் காவடி video /////////// VIDEO


.

UNMAIKAL said...

PAGE 1.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றது.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஒரு வழியாக ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்து ஓட்டளித்த செய்தி அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம்.

தமிழ்நாட்டு ஊடகங்களைத் தவிற வடநாட்டு ஊடகங்கள் அனைத்தும் இதற்காக மத்திய அரசை கடுமையாக சாடி எழுதி இருந்தன.

கலைஞர் கருனாநிதி அவர்கள் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து சாதித்து விட்டதாகவும் சாடி இருந்தன.

இனிவரும் காலங்களிலாவது ராணுவம் அப்பாவி மக்கள் மீது இது போன்று வரம்பு மீறுவது ஓரளவு குறைவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையலாம்

ஆனால் அமெரிக்காவுக்கு மட்டும் அமையாது ஐ.நா.வில் இயற்றப்படும் மனித உரிமை சம்மந்தமான சட்டங்கள் நெறிமுறைகள் அனைத்தும் பிற நாட்டவர்களுக்கு மட்டும் தான் அமெரிக்காவுக்கு மட்டும் கிடையாது இல்லை என்றால்

இலங்கையை விடாது விரட்டிய அமெரிக்கா தனது ராணுவம் ஈராக்கின் அப்பாவி மக்கள் மீது வரம்பு மீறி அட்டூழியம் புரிந்ததற்காக கடும் நடிவடிக்கையை மேற்கொண்டிருக்கும்

அல்லது ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சிலாவது அமெரிக்காவை குற்றவாளிக் கூண்டில் நிருத்தி நடவடிக்கை எடுக்க வைத்திருக்கும் அதற்கு அபுகிரைப் சிறைச்சாலை சித்ரவதை ஒன்றுப் போதுமானதாகும்


மீதமுள்ளவைகள் இந்த கட்டுரையில் பட்டியல் இட முடியாத அளவு நீளமானதாகும்)

கண்களை கசியச் செய்யும் நிகழ்வுகள்.

இலங்கையின் அப்பாவி மக்கள் (நிராயுதபாணிகள்) மீது இலங்கை ராணுவம் இறுதிகட்டப் போரில் நடத்திய அட்டூழியங்கள் காண சகிக்காதது.


மீண்டும் புலிகள் வரள மாட்டார்களா ?

இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகளை நோக்கி இந்த ஆதரவு தீர்மானத்தால் மீண்டும் புலிகள் வளர மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதத்தை அளிக்கிறீர்கள் என்று இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் இலங்கைக்கான ஐ.நா உறுப்பினர் ஐ.நா.சபையில் எழுப்பியக் கேள்வி ஓட்டளித்த நாடுகளை சிந்திக்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

காரணம் போருக்கு முன்னும் பின்னும் புலிகளில் ஏராளமானோர் வெளிநாடுகளுக்கு அகதிகள் போல் தப்பிச் சென்று விட்டனர் இவ்வாறு சென்றவர்கள் இலங்கையில் மீண்டும் ஒருப் போரை வக்கிரமாக நடத்துவதற்கு தீவிர முயற்சியில் ஈடுப்பட்டு வருவதாக ஃப்ரான்ஸில் இயங்கும் பிரபல asies பத்திரிகை கடந்த வருடம் தகவல் வெளியிட்டிருந்தது.

கடந்த வருடம் புலிகளில் முக்கியமானோர் 500 பேர் அகதிகள் போல் கனடாவுக்குள் நுழைய முயன்றவர்களை கனடா அரசு கைது செய்து இலங்கைக்கு திருப்பி அனுப்பியதும் நினைவிருக்கலாம்.

இவர்கள் கனடாவில் வாழும் தமிழீழப் பிரிவினைவாதிகளுடன் இணைந்து இயக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் புறப்படுவதாக தகவல் அறிந்தே கனடா அரசு இவர்களை கைது செய்து திருப்பி அனுப்பியதாகக் காரணம் கூறியது.

இது ஒரு புறம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் வேலையில் பழம் நழுவி பாலில் விழுந்ததைப் போல் இறுதிக்கட்ட யுத்தத்தில் இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டப் புலிகள் சிறிது சிறிதாக விடுதலையாகி இறுதியாக 2011 அக்டோபர் 1 ம் தேதி 1800 புலிகளை விடுவித்து அவர்களின் வேலையை சுலபமாக்கி விட்டது இலங்கை அரசு.

அதனால் இலங்கைக்கான ஐ.நா தூதரின் கேள்வி சிந்திக்கக் கூடியது. இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகள் இது விஷயமாக சிந்தித்து இலங்கை அரசுக்கு உதவ முன் வர வேண்டும்.

தமிழ்நாட்டில் செல்லாக் காசான புலிகள்

தமிழ்நாட்டில் விடுதலை புலிகள் நடத்திய கோரத் தாண்டவத்தால் தமிழ்நாட்டு மக்கள் அப்பொழுதே அவர்களை வெறுத்து விட்டனர் (ஜெயலலிதா, சோ உட்பட).

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இலங்கை தமிழர்களும் கூட புலிகளின் கொடூர குணத்தை அறிந்து அவர்களை விட்டு விலகியே இருந்தனர்

ஆனாலும் இலங்கை ராணுவத்தின் நெருக்குதலை அறிந்த புலிகள் இந்த தடவை ராணுவம் நம்மை சும்மா விடாது என்பதை அறிந்து பல பகுதிகளிலிருந்தும் மக்களை துப்பாக்கி முனையில் அழைத்துச் சென்று தங்களுக்கு கேடயமாக்கினர்.

Continued…….

UNMAIKAL said...

PAGE 2 ………

அப்பாவி தமிழர்கள் அதிகமாக கொல்லப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம்.

புலிகள் போரில் ஒடுக்கப்படுவதற்கு முன்னரே உலகம் முழுவதும் புலிகளுக்கான ஆதரவு குரல் ஒய்ந்து விட்டது

இந்தியாவில் மட்டும் பிரபாகரனை இரகசியமாகச் சென்று சந்தித்து வந்த வை.கோ போன்றவர்களினால் அவ்வப்பொழுது ஒலித்துக் கொண்டிருந்தது இதில் புதிதாக சீமான் இணைக்கப்பட்டார்.

இதற்கெல்லாம் வெளிநாட்டில் வாழக்கூடிய புலிகள் ஆதரவு அமைப்பினர் பொருளாதார ரீதியில் உதவி வருகின்றனர் என்பதற்கு சான்றாக சமீபத்தில் கனடாவில் உள்ள கர்நாடக தமிழர் பேரவை அமைப்பினர் இந்தியா ஓட்டளித்து விட்டது என்று ஒதுங்கி விடாமல் இலங்கை மக்களுக்கான மறுவாழ்வு கிடைக்கும் வரை இந்தியாவில் போராட்டத்தை கடந்த காலத்தைப் போலவே வீரியப்டுத்துங்கள் என்று அறிவித்து உள்ளது.

இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகளை நோக்கி மீண்டும் புலிகள் வளர மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதத்தை அளிக்கிறீர்கள் என்று இலங்கைக்கான ஐ.நா உறுப்பினர் ஐ.நா.வில் கேள்வி எழுப்பியது ஆழ்ந்து கவனிக்கத் தக்கது.

கொலைவெறியும், இரத்த தாகமும்.
புலிகள் கொலைவெறியும், இரத்த தாகமும்

பிடித்தவர்கள் இலங்கையின் பல பிரதமர்களை முக்கிய அதிகாரிகளை கொன்றுள்ளனர்

இலங்கையில் அப்பாவி புத்த மக்கள் வாழும் பலப் பகுதிகளில் குண்டுகளை வீசி கொன்றவர்கள், இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றவர்கள்,

1990 ஆகஸ்டு 1ம் தேதி அக்கரைப் பற்று கிராமத்தில் 40 முஸ்லீம்கள் கைகள் பிணைத்து கட்டப்பட்டு தலையில் சுட்டு வீழ்த்தியவர்கள்.

அதே ஆகஸ்டு 2ம் தேதி அதே பாணியில் மஜீத் புரத்தில் 15 முஸ்லீம்களை சுட்டு வீழ்த்தியவர்கள்.

அதே ஆகஸ்டு 3ம் தேதி காத்தான்குடி மீரா ஜூம்ஆ பள்ளியில் இஷாத் தொழுகையில் ஈடுபட்ட 103 முஸ்லீம்களை குருவிகளை சுடுவதுபோல் சுட்டு வீழத்தியவர்கள்.

தொடர்நது இடைவிடாமல் மூன்று நாட்கள் கொலைவெறி புலிகளால் நடத்தப்பட்ட அப்பாவி முஸ்லீம்கள் மீதான வெறியாட்டததை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளோம்.

1985ல் தொடங்கி இலங்கை ராணுவத்தினரின் கிடிக்கிப் படிக்குள் புலிகள் சிக்கும் வரை அவர்களால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லீம்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

1987ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி யாழ்பானத்திற்குள் நுழைந்து முஸ்லீம்களுக்கு 2 மணிநேரம் மட்டும் கால அவகாசம் கொடுத்து உடுத்திய ஒருத் துணியுடன் கையில் ஐம்பது ரூபாய் மட்டும் எடுத்துக்கொண்டு வெளியேற்றியவர்கள். 1990ல் மன்னார் முஸ்லீம்களை இதே பாணியில் வெளியேற்றியவர்கள்.


இதெல்லாம் அமெரிக்காவுக்கு தெரியாமலில்லை, இலங்கைக்கு எதிராக ஓட்டளித்த நாட்டவருக்கும் தெரியாமலில்லை, தமிழ்நாட்டு வை.கோ.வுக்கும் தெரியாமலில்லை, சீமானுக்கும் தெரியாமலில்லை. கலைஞருக்கும் தெரியாமலில்லை, ஆனாலும் இனம் இனத்துடன் இணைந்தது

இவர்களுக்கு உள்ள இன உணர்வும் கூட புலிகளுக்குக் கிடையாது அவர்களிடத்தில் ஊட்டப்பட்டது எல்லாம் கொலைவெறியும், இரத்த தாகமும் தான் அவர்களை எதிர்த்தால் யாராக இருந்தாலும் வேட்டையாடி விடுவார்கள் கோடிக் கணக்கில் பணம் கொடுத்து புலிகள் அமைப்பை நிறுவிய எம்.ஜி.ஆர் எதிர்த்திருந்தாலும் கூட சுட்டுத் தள்ள முயற்சி எடுத்திருந்திருப்பார்கள்

இவர்களின் குணத்தை அறிந்து பணம் போனாலும் பரவா இல்லை தலை தப்பினால் போதும் என்று எம்.ஜி.ஆர் சும்மா இருந்து விட்டார்.

தமிழீழ விடுதலை எனும் ஒரே சிந்தனையில் செயல்பட்ட மாத்தையா, சபாரத்தினம், பத்மநாபா, அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் என்று இந்த காட்டுமிராண்டிகளால் படுகொலை செய்யப்பட்டோர் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.


அதனால் இந்த ஆதரவு தீர்மானத்தால் கொலைவெறிப் பிடித்த இந்த காட்டுமிராண்டிகள் மீண்டும் வளர மட்டார்கள் என்பதற்கு உலக நாடுகளின் ஆதரவை இலங்கைக்கு எதிராக திரட்டிய அமெரிக்கா உத்தரவாதத்தை அளிக்க வேண்டும்.

இது தான் அப்பாவி தமிழர்கள் இலங்கையில் மீண்டும் நிம்மதியாக வாழ வழி வகுக்கும்.

புலிகள் மீண்டும் வளர விடாமல் தடுப்பதற்கான திட்டத்தை வகுத்து இலங்கை அரசிடம் ஐ.நா. கொடுக்க வில்லை என்றால் மீண்டும் இலங்கை இரத்த பூமியாவதை எத்தனை நூரு அமெரிக்கா தலையிட்டாலும் தடுக்க முடியாது.

அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்.

UNMAIKAL said...

ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட, இன அழிப்பு செய்யப்பட்ட‌ இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த‌ நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்

புலிகளின் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றி வளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்படும் வரை தொடர்ந்தது என்பதே கசப்பான உண்மை . .


சானல் 4 தொலைக்காட்சி காண்பிக்காத முஸ்லீம்களுக்கு எதிரான புலிகளின் போர்க்குற்ற ஆதாரங்கள்.

இதுவரையிலும் ஊட‌க‌ங்க‌ளில் க‌ண்டிராத‌வை

அந்த போர்க்குற்றங்களை இங்கு ஆதாரத்துடன் முன்வைக்கிறோம்..!

சிறுபான்மையினர் போராட்டமாக உருவெடுத்த விடுதலைப் புலிகள் அமைப்பு, பின்னர் மற்றொரு சிறுபான்மை இனமான முஸ்லிம் சமூகத்தின் மீது கொடுமைகளையும் படுகொலைகளையும் கட்டவிழ்த்து விட்டமையே அதன் அழிவுக்குக் காரணமாயமைந்தது.

விடுதலைப் புலிகள், முஸ்லிம் சமூகத்தை நசுக்க ஆரம்பிக்கும் வரைக்கும், அவர்களது போராட்டத்துக்கு தமது உடல், பொருளால் முஸ்லிம்கள் பெரும் உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கி வந்துள்ளார்கள்.

ஆரம்ப கட்டங்களில், புலிகளின் முன்னணி வீரர்களாக நின்று போராடியவர்கள் முஸ்லிம்களே.

புலி உறுப்பினர்களை, இந்திய இராணுவத்திடமிருந்தும் இலங்கை இராணுவத்திடமிருந்தும் பாதுகாத்துக் காப்பாற்றி வந்தவர்களும் முஸ்லிம்களே.

புலிகள் வருமானமின்றி நாதியற்றுத் திரிந்த காலப்பகுதிகளில், தமது மாடுகள், வயல் விளைச்சல்கள், வர்த்தகப் பண்டங்கள், பொருளாதாரங்கள், ஆளணியினர் என பலவகையிலும் உதவியவர்கள் முஸ்லிம்களே.

எனினும், முஸ்லிம்களை தமது இனமொன்றாகக் கருதாது, அவர்களை இரண்டாந்தரமாகவே கருதி வந்த புலிகள், கிடைத்த சந்தர்ப்பங்களில் அவர்கள் மீது படுகொலைகளையும் கொடுமைகளையும் கட்டவிழ்த்து விட்ட போதே, முஸ்லிம்கள் விழித்துக் கொண்டனர்.

புலிகளுக்கான தமது ஆதரவையும் ஒத்துழைப்பையும் முழுமையாக வாபஸ் பெற்றனர்.

அதன்பின், முஸ்லிம்களின் பகிரங்க விரோதிகளாகிப் போன புலிகள், அம்முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விட்ட கொடுமைகளும் வன்முறைகளும் மிகக் குரூரமானவை.

வடகிழக்கிலுள்ள முஸ்லிம்களிடமிருந்து கப்பம், ஆட்கடத்தல், கொள்ளை, திருட்டு என புலிகள் சேகரித்துள்ள பொருளாதாரத்தின் மொத்தத் தொகை, 550 கோடிகளையும் தாண்டுவதாக ஒரு கணிப்பீடுள்ளது.

அதேவேளை, வடக்கிலிருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட மக்களிடமிருந்து புலிகள் அபகரித்துக் கொண்ட பொருளாதாரத்தின் மொத்தத் தொகை 1135 கோடிகளையும் தாண்டும் என்பது சரிகாணப்பட்ட புள்ளிவிபரமாகும்.

எத்தனை குழந்தைகள் துப்பாக்கிகளுக்கும் கூறிய வாள்களுக்கும் இரையாகின.

எத்தனையோ ஒரு வயது , இரண்டு வயது , மூன்று வயது நான்கு வயது பிஞ்சுகள் சற்றும் இறக்கம் இன்றி படுகொலை செய்யப்பட்டனர்.

ஏன் பிறந்து ஒரு வாரம் கூட ஆகாத பிஞ்சுகள் சில மாதங்களே ஆன எத்தனை பிஞ்சுகள் பிச்சு ஏறியப்பட்டனர், நிறை மாத தாயின் கருவறை அறுக்கப்பட்டு சிசு வெளியில் எடுக்கப்பட்டு மரத்தில் அடித்து சிதறடிக்கப்பட்ட கோர சம்பவம் கூட ”சூரியதேவனின்” வரலாற்றில் பதிவாகியுள்ளது


இதில் மிக வேதனைக்குறிய விடையம்

இளம் கற்பிணி தாய் ஒருவரை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெளியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் என்பதுதான்

சொடுக்கி >>>>>1. படுகொலைகளும் அட்டூழியங்களும் - போட்டோ, வீடியோ ஆதாரங்களுடன்... <<<<<< படியுங்கள். SEE PHOTOS , VIDEOS………………….


இங்கு கிளிக்செய்து >>>>> 2. கொலைவெறி புலிகளின் இன‌ஒழிப்பு (படங்கள் = விடியோ) <<<< பார்வையிடவும். ……………………

சொடுக்கி >>>>>3. சிசுக்களின் கோரப் படுகொலை <<<< படியுங்கள்………….

Nasar said...

அஸ்ஸலாம் அலைக்கும் சகோஸ்,
@மனிதாபிமானி SAID:
// இப்படியான ஒரு தீர்மானத்தில் எங்கே மதவாதம்(?) வந்தது? //
எனக்கு, ஐநாவாது , தீர்மானம்மாவது அதன் மேல் நம்பிக்கையில்லை ...
இப்போ தேவை "நைனா கோவியார் " மட்டும்தான்...SO
"அரண்டவன் கண்ணுக்கு(கோ.வி.கண்ணன்) மிரண்டதெல்லாம் பேய்" என்று
சொல்வதெல்லாம் கோவியாருக்கு சாலப்பொருத்தம் .....
ஐய்யா கோவியாரே, உங்களுக்கு மிக பரிட்சயமான " கக்குஸ்,சாக்கடை"
சப்ஜெக்டுகளை தவிர்த்து இந்தப்பக்கம் ஏன் வந்தீங்க ???
மதவாதிகள் என்றாலே சாக்கடைகள் என்று சொல்லும் கோவியின்
இரட்டைவேடம் படம் 1 மற்றும் 3 இல் அப்பட்டமாக தெரிகிறதே !!??
படம் 2 இல் கோவியின் " கில்மா படம் " உங்க PROFILE சூப்பர் உவ்வே .....
இனி எங்கேயும் மகாத்மா வேடம் போடாதீங்க .....
போட்டிங்கன்னா அங்கெல்லாம் வந்து "நுங்கு" எடுப்பேன் ......
கோவியின் படம் போட்டு உதவியதற்கு சூப்பர் தேங்க்ஸ் Mr. மனிதாபிமானி ..

சிராஜ் said...

சலாம் சகோ ஆசிக்,

கொஞ்ச நாளா கோவியோட தளம் ஈ ஓட்டிகிட்டு இருக்கு. அத கொஞ்சம் பூஸ்ட் பண்ணத்தான் இது மாதிரிலாம் அவர் எழுதுறார். அவரோட நடுநிலை முகமூடி கிழிஞ்சு ரொம்ப நாள் ஆச்சு.
சகோ பின்னூட்டவாதி முகமது ஆசிக் சொன்னது போல அவர லூஸ்ல விட்ருவோம். நீங்க வேணும்னா பாருங்க அவர் கடைசியா இஸ்லாத்த தழுவுவாறு, இன்ஷா அல்லாஹ்.

Aashiq Ahamed said...

எல்லோருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்,

இங்கு கோவி.கண்ணன் என்பவரது கட்டுரையின் மையக்கருத்துக்கு மட்டுமே பதில் அளிக்கப்பட்டுள்ளது. அவர் போன்றவர்களை லூசில் விடுவோம் என்பது சரிதான் என்றாலும், இது போன்ற மிக சென்சிடிவ்வான விசயங்களில் உண்மை நிலையை எடுத்துரைப்பது நம் கடமை என்றே எண்ணுகின்றேன்.

நன்றி...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

சிராஜ் said...

/* இது போன்ற மிக சென்சிடிவ்வான விசயங்களில் உண்மை நிலையை எடுத்துரைப்பது நம் கடமை என்றே எண்ணுகின்றேன். */

உங்களுடைய இந்த கருத்து மிகச் சரியானது தான் சகோ ஆசிக் அஹமத். நான் ஏற்றுக்கொள்கிறேன். அழகிய முறையில் விளக்கம் கொடுப்பது நமது கடமை தான்.

Aashiq Ahamed said...

சகோதரர் புரட்சிமணி,

உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

//அவர்கள் விரைவில் நடவடிக்க எடுக்க வேண்டும் என்கிறார்கள்...இவர்கள் கால அவகாசம் தர வேண்டும் என்கிறார்கள். இரண்டும் ஒன்றுதானே....எனக்கு புரியல சகோ.....//

அமெரிக்கா உள்ளிட்ட தீர்மானத்தை ஆதரித்த நாடுகள், இலங்கை அரசின் குழு பரிந்துரைத்த நடவடிக்கைகளை உடனடியாக செய்யவேண்டுமென்று சொல்கின்றார்கள். எதிர்த்த நாடுகளோ, குழுவின் பரிந்துரை வந்து மூன்று மாதங்கள் தான் ஆவதால், இலங்கைக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டுமென்று சொல்கின்றார்கள். இந்த இரண்டும் ஒன்று போல உங்களுக்கு தெரிந்தால் அது உங்களுடைய கருத்து. தனிப்பட்ட முறையில் நானும் அப்படியே நினைக்கின்றேன்.

மற்றப்படி, உங்கள் கமெண்ட் அழிக்கப்பட்டதிற்கான காரணங்களை நீங்களே அறிவீர்கள். இறைத்தூதர்கள் குறித்து குறிப்பிடப்பட வேண்டிய பதிவு இதுவல்ல. இது ஒரு சமூக பதிவு. இறைத்தூதர்கள் குறித்து உங்களுக்கு கேட்க விருப்பமிருந்தால் என் தளத்திற்கு வாருங்கள்.

புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகின்றேன்..

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Unknown said...

சற்றுமுன் கிடைத்த செய்தி!

//புதுடில்லி: ஐ.நா., மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட அமெரிக்க தீர்மானத்தில், நடுநிலைத்தன்மையை உறுதி செய்ய இந்தியா பாடுபட்டதாக, இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.//

என்ன கொடுமை இது?, நல்ல வேலை இந்த செய்தி இன்று வெளியாகியது, இல்லைன்னா கோவி. வேறு மாதிரி இல்ல தலைப்பை வச்சிருப்பாரு!. பரவாயில்லை நாட்டின் ஒற்றுமையை குலைக்க நல்லாவே சந்துல சிந்து பாடுறாங்க!.

Unknown said...
This comment has been removed by the author.
UNMAIKAL said...

அமெரிக்காவின் இரட்டை நிலை.

80களில் விதித்த இலங்கைக்கான ஆயுத விற்பனை கட்டுப்பாடுகளை தளர்த்தியது அமெரிக்கா!


வாஷிங்டன்: 1980களில் விடுதலைப் புலிகளுடன் இலங்கை ராணுவ் மோதலைத் தொடங்கியபோது விதிக்கப்பட்ட ஆயுதக் கட்டுப்பாடுகளை தற்போது திடீரென தளர்த்தியுள்ளது அமெரிக்க அரசு.

ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றிய கையோடு இந்த ஆயுத விற்பனை கட்டுப்பாடுகள் தளர்த்தல் என்பது அமெரிக்காவின் இரட்டை நிலையை உணர்த்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

ஆனால் இந்த இரண்டுக்கும் இடையே எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை விளக்கியுள்ளது.

ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை முக்கியமாக வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானம் நேற்றுதான் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் இலங்கைக்கான ஆயுத விற்பனை கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு தடாலடியாக தளர்த்தியுள்ளது.

இருப்பினும் இது கொள்வனவு செய்யும் ஆயுதங்களுக்கேற்றப்படி மாறும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வியாழக்கிழமை முதல் இந்த கட்டுப்பாடு தளர்வு அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய உத்தரவுப்படி, இலகுரக விமானங்கள், கண்காணிப்பு கேமராக்கள், அதுதொடர்பான பொருட்களை அமெரிக்காவிலிருந்து இலங்கை வாங்கிக் கொள்ள முடியுமாம்.

குறிப்பாக வான் மற்றும் கடல் மார்க்கமான கண்காணிப்புக்குத் தேவையான உபகரணங்களை இனி அமெரிக்காவிடமிருந்து இலங்கை பெற முடியும்.

கடந்த 80களில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கைப் படையினருக்கும் இடையே போர் வெடித்ததைத் தொடர்ந்து ஆயுத விற்பனைக்கு கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்தது.

தற்போதுதான் அதில் முதல் முறையாக தளர்த்தலை அது மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


http://tamil.oneindia.in/news/2012/03/23/world-us-eases-restrictions-on-defense-sales-sl-aid0091.html

மவுலாசா said...

நல்ல விளக்கம். கோவி.கண்ணனின் கருத்துக்கு - விளக்கமளிப்பதற்கு தனிப்பதிவு இட்டதோடு - அவரின் வலைப்பூவில் பின்னூட்டம் இட்டித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.