Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Wednesday, 4 April 2012

தமிழ்மணத்தில் உலாவும் சைக்கோ(க்கள்)


கடந்த சில நாட்களாக தமிழ்மணத்தில் பல்வேறு போலி முகவரிகளை உருவாக்கிக்கொண்டு கண்டப்படி பிளஸ் மைனஸ் என்று போட்டுக்கொண்டு உலாவும் சைக்கோ(க்கள்) குறித்து பெரியவர் வாஞ்சூர் அவர்களின் பதிவின் மூலம் அறிந்திருப்பீர்கள்.

இப்படியாக போலி முகவரிகளை கொண்டு முதன் முதலாக வோட் போட ஆரம்பிக்கப்பட்டது இத்தள பதிவில் இருந்து தான் என்பதால் இது குறித்த சில விசயங்களை கூற கடமைப்பட்டுள்ளோம்.

முஸ்லிம் பதிவர்களின் தமிழ்மண பெயர்களில் சிறு மாற்றம் செய்து முகவரிகள் உருவாக்கி பல்வேறு பதிவுகளுக்கு தாறுமாறாக வோட் போடப்பட்டது. இது படுகீழ்த்தரமான அணுகுமுறை என்பதை விட முட்டாள்தனமான அணுகுமுறை என்பதே சரியாக இருக்கும். காரணம், ஒரே ஆளே (அல்லது அவரை சார்ந்த சில ஆட்கள்) இப்படியாக செய்கின்றார் என்பது வெகு விரைவாக புரிந்துவிட்டது. பிற்பாடு வேறு பெயர்களில் முகவரிகள் உருவாக்கப்பட்ட போது அதற்கு காரணமும் இவர்களே என்பதும் எளிதாக புலப்பட்டுவிட்டது.

வோட் எப்படி உருவாக்கப்படுகின்றது என்பதற்கு ஒரு உதாரணமாக (இதுநாள் வரை உருவாக்கப்பட்டுள்ள போலி முகவரிகளின் முழு பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது),

mohaashik (original) - mohaaashik (போலி, ஒரு 'a' அதிகமாக இருப்பதை கவனியுங்கள்)
hyderali (original) - hyderalii (fake)

அதுபோல பொதுவான முஸ்லிம் பெயர்களிலும், அல்லாத பெயர்களிலும் பல முகவரிகள் உருவாக்கப்பட்டுள்ளது. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக இப்படியாக பல முகவரிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

சரி, சிலர் மீதுள்ள வெறுப்புணர்வால் இப்படி செயல்படுகின்றார்கள் என்று நினைத்தால், அங்கு தான் தங்களை சைக்கோ(க்கள்) என்று நிரூபித்தார்கள். ரைட்டர் விஜயகுமார் அவர்களின் பதிவில் முஸ்லிம்கள் பெயரில் மைனஸ் வோட் குத்தப்பட்டது. முஸ்லிம்கள் மீது தவறான அபிப்பிராயம் வர வேண்டுமென்பதற்கான சூழ்ச்சியாக இதனை காணாமல் வேறு எப்படியாக இதனை அணுகுவது?

இது சமீபத்திய C.P.செந்தில்குமார் பதிவு வரை தொடர்கின்றது (ஆதாரங்கள் வேண்டுவோர் பின்னூட்டத்தில் மெயில் முகவரி கொடுத்தால் அவை அனுப்பிவைக்கப்படும்)

பதிவர்கள் ரைட்டர் விஜயகுமார், முனைவர் குணா தமிழ் முதலான சகோதரர்களிடம் எங்கள் நிலையை எழுத்து மூலமாகவும், தொலைப்பேசி வாயிலாகவும் தெளிவாக விளக்கிவிட்டோம். தமிழ்மணத்திடமும் சென்ற வாரத்தில் இது குறித்து தெரியப்படுத்திவிட்டோம்.

கடந்த சில நாட்களாக மகுடத்தில் வரும் பதிவுகளில் பெரும்பாலானவை இப்படியாக ஒரே ஆளால் வோட் குத்தப்பட்டு வருபவையே. இதனால் என்ன அங்கீகாரம் பதிவர்களுக்கு கிடைத்து விட போகின்றது? (அல்லது குறைந்து விட போகின்றது) இந்த உண்மைகளை அறியும்போது மனதால் காயப்பட்டு போகமாட்டார்களா? 

பதிவுலகில் பலரும் இந்த வோட் etc குறித்தெல்லாம் கவனம் செலுத்துவதில்லை என்ற போதிலும் ஒரு விளக்கத்திற்காகவாவது சொல்லிவிடுவது நல்லது என்று நினைக்கின்றேன். முஸ்லிம்கள் பெயரில் உங்கள் பதிவிற்கு மைனஸ் குத்தப்பட்டால் அதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை இதன் மூலமாக தெரிவித்து கொள்கின்றோம்.

முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாம் மீது அநாகரிகமான முறையில் காழ்ப்புணர்வுடன் எழுதப்படும் பதிவுகளுக்கு மட்டும் தான் ஒருகிணைந்து எதிர்ப்பு காட்டி இருந்திருக்கின்றோம். இனியும் அது தொடரும். வேறு எதற்கும் அல்ல...

அந்த சைக்கோ(க்களுக்கு) எளிமையாக ஒரே வரியில் பதில் சொல்ல விரும்புகின்றேன். இஸ்லாம் இல்லையென்றால் எங்கள் வாழ்க்கை ஒன்றுமில்லை. இறைவனை திருப்திபடுத்துவது தான் எங்கள் வேலையே அன்றி, உங்களை திருப்திபடுத்துவது அல்ல. புரிந்துக்கொண்டால் நலம்.

இதுவரையிலான போலி முகவரிகள் (update செய்யப்படும்):
muftaa08, vaanjoorappa@gmail.com, aalimbaava, abdulkader111@gmail.com, bathusha, farooq11, mustaque1515@gmail.com, mustaquee1515@gmail.com, rahman100@gmail.com, kokkaamakkaa@gmail.com, muztafa, haitharjunus, PANNAGAM3@GMAIL.COM, fazul, mohemadrias, ibrahimriyas@gmail.com, kavippuyal007@yahoo.com, hareraama, gulamnabi000@gmail.com, fatimabebehh@gmail.com, NONJOOR, kpeterson, alexm, punter, blara, superman, kattathora, iniyaa, ABDULRASHID, anvarhussain, farooq11, periyarthaasan, purampookuampalathar, kaatharbaai, MUDAMOSIYAAR, sahedmiah, VIRUMANDII, krishram1234@gmail.com, allah, palthakarey, RSSGROUP, narendramodi, moheemadrias, kungoor, sivasena, nayagan_12 etccarbonffriend, aashiiq_14, AMINAA29, hussainaamma, hajamydheeen, peermohamed.mm@gmail.com, abdulhakkimm, suvanapppiriyan, rabbanii, hyderalii, mohaaashik, PeerMhdd, naasar, askabt.islamm@gmail.com etc
 
நன்றி: சகோதரர் ஆஷிக் அஹ்மத்.

11 comments:

Rabbani said...

ஸலாம் சகோ
சரியான தருணத்தில் வந்த பதிவு
பதிவுலக நண்பர்கள் உண்மையை அறியும் பொருட்டு நீங்கள் எடுக்கும் முயற்சி வீண்போகாது

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.மனிதாபிமானி,

//mohaashik (original) - mohaaashik (போலி, ஒரு 'a' அதிகமாக இருப்பதை கவனியுங்கள்)//

நம்மிடம் இருந்து அந்த 'சைக்கோக்கள்' ஆன இந்த கோட்சேக்கள் தாம் விரும்புவதை/ஆசைப்படுவதை/எதிர்பார்ப்பதை சகோ.வாஞ்சூர் பதிவின் பின்னூட்டங்கள் வாயிலாக தெள்ளத்தெளிவாக அறிந்து கொண்டேன்..!

அவையாவன:

=>தமிழ்மணத்திலிருந்து முஸ்லிம் பதிவர்கள் விலக வேண்டும்.
=>இல்லையேல் அவர்கள் மீது பொய்யாகவேனும் அவதூறு-வீண்பழி சுமத்தி கெட்டபெயர் ஏற்பட வைத்து அனைவராலும் புறக்கணிக்க வைக்கப்பட வேண்டும்.
=>உடனே முஸ்லிம் பதிவர்கள் ஓட்டுப்பட்டையை தூக்க வேண்டும்.
=>அவர்கள் இனி வேறு யாருக்கும் ஓட்டளிக்கக்கூடாது.
=>முஸ்லிம்கள் இனி பதிவு ஏதும் எழுதக்கூடாது.
=>அப்படியே எழுதினாலும் அதை தமிழ்மணத்தில் மட்டும் இணைக்கவே கூடாது.
=>அப்படியே இணைத்தாலும் அதில் சினிமா-கிரிக்கெட்-கடி ஜோக்ஸ்-சுய சொறிதல்-மொக்கை அரசியல் நையாண்டி கார்ட்டூன்-புனைவுக்கதை... இப்படி மட்டும் எதுவாகிலும் இருக்கலாம்.
=>மேற்கண்ட உயர்ந்த நன்னோக்கம் கொண்ட சமூக நலப்பதிவுகளுக்கும் கூட அது பிடித்துப்போய் எவரேனும் ஏழு பேர் ஓட்டளித்து அது வாசகர் பரிந்துரையில் கூட வந்துவிடக்கூடாது.
=>அவ்ளோதான்... இனி மைனஸ் ஓட்டு மழைதான்...

ம்ம்ம்....

ஓகே..! ஓகே..!
தெளிவாக விளன்கிக்கொண்டேன் சகோ..!

இன்ஷாஅல்லாஹ்,
எனது அடுத்த பதிவில்...
விலக்கிய தமிழ்மண ஓட்டுப்பட்டையை இவர்களுக்காகவே சேர்க்கப்போகிறேன்..!

ஹா...ஹா...ஹா...

இப்படிக்கு....
சும்மா கிடந்த ஒரு சங்கு.

G u l a m said...

சலாம்

அட ! இதுல இவ்வளவு விசயம் இருக்கா.. தெளிவா விளக்கிய சிட்டிசனுக்கு நன்றி

நல்லவேளை, நம்ம ஐடிலே இருக்கிறதே g u l a m அப்படினு 5 எழுத்துதான் அதனால் என்ன்வோ நம்மலே விட்டுடாங்க

ஹி ஹி ...

மனிதாபிமானி said...

இந்த பதிவு தமிழ்மணத்தின் சூடான இடுகைகளில் முதல் இடத்தில் உள்ளது.
http://www.tamilmanam.net/most/read/1

ஆனால் தமிழ்மணத்தின் முகப்பு பக்கத்தில் வரவில்லை.

Unknown said...

ஸலாம் சகோ.

நல்ல ஒரு விழிப்புணர்வுப்பதிவு!, பதிவர்களின் மத்தியில் உள்ள குழப்பங்களுக்கு ஒரு தீர்வு கிடைத்து விட்டது.

இந்த உலகம் மாத்திரம் நிரந்தரம் (?!) என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள், கொஞ்சம் விளையாடி விட்டுப் போகட்டும்.

முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
ரொம்ப சந்தோஷப்படாதீங்க சகோதரரே.உங்கள் ஐடியில் உள்ள ஐந்தெழுத்தை "a" என்ற ஒரு எழுத்தை சேர்த்து ஆறெழுத்தாக "Gulaam" என்று மாற்றிவிடுவார்கள்.என்னுடைய ஐடியும் ஐந்தெழுத்துதான் அதை நான் இங்கு தெரியப்படுத்தினால் என்னுடைய ஐடியில் உள்ள ஐந்தெழுத்தை ஆறாக மாற்றிவிடுவார்கள் அனேகமாக முன்னமே மாற்றியிருப்பார்களென நினைக்கிறேன்.

சிராஜ் said...

சலாம் சகோ மனிதாபிமானி,

சரியான நேரத்தில் வந்த நல்ல பதிவு. நன்றி.
நானும் என் கடைய தூசி தட்டி பதிவு போட ஆரம்பிக்கிறேன்.
ஹி...ஹி...ஹி...

தமிழ் மீரான் said...

சலாம் சகோ.,
இதுபோன்ற இழிபிறவிகளுக்கு இறைவனின் இந்த வசனம் போதுமானது

“தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகிறார்கள்-ஆனால் ஏக இறைவனை மறுப்போர் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்”.
-அல்குர்ஆன் 9:32

sri said...

Allah is more enough to judge them brother :-)

Peer Mohamed said...

It was shocking to know that my ID is also cloned. Good that you brought this to light so that other bloggers know that we are not doing this to them. Good job brother !!!

kasiyaribrahim said...

debate with sengodi
http://baranikarai-pannaiyar.blogspot.in/