Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Wednesday, 10 October 2012

சக பதிவர் - சகோதரிக்கு - உதவி செய்ய முன்வருவீர்களா?


சில நாட்களுக்கு முன்பாக, சகோதரி ஹுசைனம்மா மூலமாக சக பதிவரான சங்கீதா சேன்யால் அவர்கள் எதிர்க்கொள்ளும் ஒரு போராட்டத்தை அறிந்துக்கொள்ள முடிந்தது. கேட்பவர் உள்ளங்களை நொறுங்கச் செய்வதாக இருந்தது அந்த நிகழ்வு. 

வாழ்வதற்கும், உயிர்பித்து மட்டுமே இருப்பதற்கும் வித்தியாசங்கள் உண்டு. இதில் இரண்டாம் நிலையில் உள்ளார் திருமதி சங்கீதாவின் சகோதரி மகளான பிரதீபா. Multiple Sclerosis எனப்படும் மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடூர நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் பிரதீபா. இந்த நோயானது நாளடைவில் சிறுகச் சிறுக உடல் உறுப்புகளை செயலிக்க செய்து நோயாளியை நடைபிணமாக மாற்றக்கூடியது. நோயாளி மட்டுமின்றி அவரை சார்ந்தவர்களையும் உளவியல்ரீதியாக நிலைக்குலைய செய்யக்கூடியது இந்த நோய்.  

இந்த நோய்க்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் மேற்கொண்டு பாதிப்பு ஏற்படுத்தாமல் தடுக்க முடியும். 


இதுவரையிலான சிகிச்சையை தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மூலமாக சமாளிக்க முடிந்த திருமதி சங்கீதா அவர்கள், மேற்கொண்டு சிகிச்சையை நடத்த சகோதர சகோதரிகளிடம் உதவி நாடியிருக்கின்றார்கள். 

முதலில் சங்கீதா அவர்கள் இதுக்குறித்து தன் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இருந்து சில பகுதிகள்:

"பிரதீபா (ப்ரீத்தி)  என் சகோதரியின் மகள் வயது 25  நடுத்தர குடும்பத்தின் மூத்தமகள் . இவள் துடிப்பான அழகான பெண். வாழ்கையை பற்றி நிறைய கனவுகளுடனும் முன்னேற்றத்தில் ஆர்வம் உடையவள். B.Com., படித்து விட்டு கடந்த இரண்டு வருடங்களாக சென்னையில் Logistics கம்பெனி ஒன்றில் பணி ஆற்றிவருகிறாள்.  பெயர்க் காரணம் போலவே எங்கள் குடும்பத்தில் ஒளி அவள். எங்கள் குடும்பத்தில் ரொம்ப நாட்களாக சந்தோஷமான நிகழ்வுகள் நடக்காத நேரத்தில் பிறந்து, எங்களுக்கு அளவில்லா சந்தோஷத்தைத் தந்தவள். 

என் சகோதரியின் திருமண வாழ்கை தோல்வியில் முடிந்து விட்டது. 1998-ல் தன் மகனையும் மகளையும் அழைத்து கொண்டு டெல்லியில் இருந்து என்னிடம் வந்து விட்டார்கள். நானும் அவர்கள் வாழ்வின் அடிப்படைவசதிகள் கொடுத்து என் அக்காவிற்கு வேலையும் வாங்கிக் கொடுத்து என்னால் இயன்ற வரை சப்போர்ட் செய்து கொண்டு வந்தேன். குழந்தைகளும் தாயின் நிலை அறிந்து நன்றாக படித்து வந்தார்கள். 

எல்லாம் நல்ல படியாக நடந்து கொண்டு இருந்தது 2010 டிசம்பர் 7-ந் தேதி வரை. அன்று காலை 10 மணி அளவில் ப்ரீத்தி இடம் இருந்து ஃபோன்கால் வந்தது. ”சித்தி, Vasan Eye Care -ல் இருந்து பேசுகிறேன்” என்றவள் என்னை உடனே வர சொன்னாள்.

காலையில் இருந்து "Double Vision " (இரண்டிரண்டாகத் தெரிவது) இருப்பதாகவும், கண் மங்கலாகத் தெரிவதாயும் கூறினாள். டாக்டரிடம் செக் செய்த போது கண்ணில் பிரச்சனை ஏதும் இல்லை என்று, நரம்பியல் நிபுணரைப் (Neurologist) பார்க்க சொன்னார்கள். 

அங்கிருந்து ஒவ்வொரு டாக்டராகக் காட்டி, கடைசியில் 3 முறை MRI ஸ்கேன் எடுத்து, இறுதியில் அவர்கள் சொன்னது Multiple Sclerosis & De-Myelination Disorder என்றும் அதற்கு கொடுக்க வேண்டிய ஊசியின் விலை ஒரு முறைக்கு 50,000 ஆகும் என்றும் பார்வை முழுவதும் வரும் வரை போட வேண்டும் என்றும் சொன்னார்கள். நான்கு லட்சம் செலவாகியது. 5 மாத போராட்டத்திற்குப் பிறகு பார்வை மீண்டு வந்தது. ஆனாலும் உட்கொண்ட அதிக மருந்துகளினால் பக்க விளைவுகளாக எப்போதும் தலை வலி மற்றும் பல. 

இந்த சிகிச்சைக்கு பிறகு சிலருக்கு இந்த நோயின் தீவிரம் தெரிய இரண்டு மூன்று வருடம் ஆகலாம். ஆனால் ப்ரீதிக்கு செப்டம்பர் 2011 மறுபடியும் அதே பாதிப்பு relapse ஆகிவிட்டது. 

மருத்துவத்தில் இந்நாள் வரை இதற்கு குணப்படுத்த மருந்து ஒன்றும் கண்டு பிடிக்கவில்லை. "No Cause No Cure disease"   இதை மேலும் பரவுவதைக் கட்டுப்படுத்த மட்டுமே மருந்து கொடுக்கபடுகிறது.

இந்த மருந்தை ஊசி முலமாக வாரம் இரண்டு முறை எடுத்துக் கொள்ள வேண்டும். அமெரிக்காவில் எல்லாம் இந்த நோய்க்கு இன்சூரன்ஸ் coverage இருக்கிறது. ஆனால் இந்தியாவில் இன்னும் இந்த நோய் பற்றி முழுவதுமாக விழிப்புணர்வு இல்லாத நிலையில் நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டிய சூழல். எந்த வித உதவியோ, ஆதாரமோ இல்லாத நிலையில் தொடர்ந்து சிகிச்சை எடுக்க முடியாமல் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

டாக்டரின் கருத்து படி ஒரு மூன்று வருடம் தொடர்ந்து மருந்து  எடுத்து கொண்டால். நோயின்  தீவிரத்தை சில வருடங்கள் தள்ளி போட முடியும். 

நானும் என் உடன் வேலை செய்து வரும் சிலரும், ப்ரீத்தியின் நண்பர்களும் சேர்ந்து ஒரு வருட சிகிச்சையை முடித்து விட்டோம். இதைப் படிப்பவர்கள் தரும் ஒரு ருபாய் கூட உங்கள் பிரார்த்தனையோடு  சேர்ந்து கிடைக்கும் பொழுது இவள் ஒரு இயல்பான வாழ்கை வாழ உதவி செய்யும்" 

மருத்துவ சான்றிதழ்கள் மற்றும் இது தொடர்பான பல ஆவணங்களை கொண்ட சகோதரி சங்கீதாவின் பதிவை படிக்க <<இங்கே>> சுட்டவும். 

இந்த நோய் குறித்த 'தி ஹிந்து' நாளிதழின் சமீபத்திய விழிப்புணர்வு பதிவை <<இங்கே>> காணலாம். 

சகோதரி சங்கீதா கொடுத்துள்ள தகவல்களை நாங்கள் உறுதி செய்துக்கொண்டோம். இது குறித்து நேரடியாக திருமதி சங்கீதா மற்றும் பிரதீபாவை சந்திக்க விரும்புகின்றவர்கள் கீழ்காணும் எண்ணில் தொடர்புக் கொள்ளலாம். 

ஒரு மனித உயிரை காப்பாற்றினால் அது மனித சமுதாயத்தையே காப்பாற்றியதற்கு சமம் என்று குர்ஆன் கூறுகின்றது. மனித சமுதாயத்தையே காப்பாற்றும் இந்த நன்மையான செயலில் உங்களையும் பங்கு கொள்ள முன்வருமாறு பணிவன்புடன் அழைக்கின்றோம். உங்கள் உதவி மிகச் சிறிதாய் இருந்தாலும் அது மிகப் பெரிய நன்மையை பெற்றுத்தரும். 

உங்கள் பொருளாதார உதவியை நீங்கள் இரண்டு விதமாக செய்யலாம். 

ஒன்று, கீழ்க்காணும் திருமதி சங்கீதாவின் பேங்க் அக்கௌன்ட் நம்பருக்கு காசோலையாகவோ அல்லது fund Transfer-ராகவோ  செய்யலாம். 

Benificiary Name: GEETHA SURESH
Bank Name: ANDHRA BANK
Branch Name: Adyar, chennai
A/C Number: 070310011013916
Account type: Savings account (SB)
IFSC CODE: ANDB0000703
Address: Andhra Bank
ADAYAR Branch
NO 30 1st Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600 020

அல்லது, திருமதி சங்கீதா அவர்களின் வீட்டிற்கு சற்று தொலைவில் வசிக்கும் சக பதிவரான சிராஜ் அவர்களின் பேன்க் அக்கௌன்ட் நம்பருக்கு காசோலையாகவோ அல்லது fund Transfer-ராகவோ  செய்யலாம். மொத்தமாக கலெக்ட் செய்து சகோதரி அவர்களிடம் கொடுத்துவிடலாம். இந்த அக்கௌன்ட் நம்பருக்கு பணம் அனுப்புபவர்கள் மறக்காமல் அனுப்பிய தொகையை எனக்கு மெயில் மூலமாக தெரிவித்துவிடவும் (aashiq.ahamed.14@gmail.com)


Benificiary Name: SIRAJUDEEN
Bank Name: State Bank of India (SBI)
Branch: SALIGRAMAM (CHENNAI)
AC NO: 30005572107
Account type: Savings account (SB)
IFSC CODE: SBIN0006850

(or)

Benificiary Name: SIRAJUDEEN
Bank Name: CITI BANK
Branch: ANNA SALAI  OR MOUNT ROAD (CHENNAI)
Account type: Savings account (SB)
AC NO: 5013964442
IFSC CODE: CITI0000003


திருமதி சங்கீதா அவர்களை 9677035544 என்ற எண்ணில் தொடர்புக்கொள்ளலாம். நீங்கள் அனுப்பும் சிறிய தொகையும் கூட சகோதரி பிரதீபா மேலும் சில நாட்கள் சிரித்திருக்க உதவும். 

இந்த நோய் குறித்த விழிப்புணர்வை ஊட்டுவதும் நம் மீது கடமையாகின்றது. தயவுக்கூர்ந்து இந்த நோய் குறித்தும், இந்த உதவி குறித்தும் அடுத்தவர்களுக்கு, நீங்கள் அறிந்த டிரஸ்ட்களுக்கு எடுத்துச் சொல்லி இந்த சகோதரியின் வாழ்வு பிரகாசமாய் அமைய வழிவகை செய்யுங்கள்.   

நன்றி,

தகவல் உதவி: சகோதரி ஹுசைனம்மா.
தகவல்கள் சரிபார்ப்பு: ஆஷிக் அஹமத் மற்றும் சிராஜ்.

14 comments:

சிவஹரி said...

பதிவினை படித்திடுகையிலே மனம் கணத்து விட்டது. எல்லாம் வல்ல இறையோன் மீண்டும் அதே குடும்ப மகிழ்ச்சியினை தந்தருள வேண்டி நான் வணங்கும் செந்தூரானை மனமுருகிப் பிராத்திக்கின்றேன்.

இராஜராஜேஸ்வரி said...

சகபதிவர் சகோதரி விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்..

suvanappiriyan said...

விரைவில் குணமடைய பிரார்ததிப்போம். என்னால் முடிந்த உதவியை அவசியம் அனுப்பி வைக்கிறேன்.

சிராஜ் said...

நல்ல முயற்சி ஆசிக்.... என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன்....

Unknown said...

இறைவா! மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்கி இவருக்குக் குணமளித்திடுவாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணமில்லை. நோய் அறவே இல்லாதவாறு குணமளிப்பாயாக!

அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வார்தைகள் இல்லை. ஏதேனும் ஒரு வகையில் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்.....

Nizam said...

அந்த சகோதரி உடல் நலம் சீக்கிரம் குணமடைய பிராத்திக்கிறேன். இன்ஷா அல்லாஹ் என்னால் முடிந்த உதவியை கண்டிப்பாக செய்கிறேன்.

Kanchana Radhakrishnan said...

விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்..

Anonymous said...

நல்லதொரு முயற்சி .. சகோதரிக்கும், அவரதுக் குடும்பத்தாருக்கும் என்றென்றும் எமது அன்பும், ஆதரவும் இருக்கும் .. அப் பெண் விரைவில் பூரண குணமடைய நிச்சயம் மருத்துவ உதவி மட்டுமே உதவக் கூடியது .. அதற்குத் தேவையான பணத்தை நாம் ஒன்றிணைந்தால் நிச்சயம் திரட்ட முடியும்.. என்னால் ஆன உதவி நிச்சயம் அவரைச் சென்றடையும் ..

இத் தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் !

Jafarullah Ismail said...

மனிதாபிமானியின் மனிதாபத்திற்கு
ஒரு ராயல் சல்யூட்.....
மனதை கலங்கடித்த பகிர்வு.
இந்த நோய் எதிரிக்குக்கூட வரக்கூடாது.

முடிந்த உதவியை நானும் செய்கிறேன்.

துளசி கோபால் said...

தகவல் பகிர்வுக்கு நன்றி.

நலம்பெற இறைவனை வேண்டுகின்றேன்.

வங்கி எண்களைக் குறித்துக்கொண்டேன்.

வவ்வால் said...

மனிதாபிமானி,

இச்செய்தியை சிலப்பதிவுகளில் படித்திருக்கிறேன், மிகவும் வருத்தமான ஒன்று, விரைவில் குணமடைய வேண்டும்,இறைவன் இருப்பது உண்மையானால் அவரும் உதவுவார் என நம்புகிறேன்.

பெரும்பாலும் இது போன்று படிக்கும் போது நம்மால் பெரிதாக உதவ முடியாதே என வருத்தமாக இருக்கும், இது போல பலரையும் ஒருங்கிணைத்து உதவ செய்யலாம் என நினைப்பதுண்டு, எல்லாம் மனதளவில் தான் , நீங்கள் இதனை முன்னெடுத்து செய்வது பாராட்டுக்குரிய ஒன்று, பாராட்டுக்கள்.

என்னால் பெரிதாக உதவ முடியாத நிலை எனினும் முடிந்தவரையில் செய்கிறேன், எனது ,உறவினர்கள், நண்பர்களிடையேயும் பகிர்ந்து அவர்கள் மூலமும் ஏதேனும் பங்களிப்பு செய்ய முயல்கிறேன்.

இது போன்று யாரேனும் முன்னெடுத்து செய்தால் தான் சிதறி கிடக்கும் பதிவர்களின் ஆற்றல் ஒருங்கிணையும், ஏதேனும் செய்ய இயலும், நன்றி!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

என்னால் முடிந்ததையும் செய்கிறேன்.இப்பதிவை முகநூலில் பகிர்கிறேன்.

Sangeetha said...

அனைவர்க்கும் மிக்க நன்றி உங்கள் பதில் பார்த்து நிறைய நம்பிக்கை வந்தது. உங்கள் பிரார்த்தனை கேட்டு கடவுள் அருள் புரிவர் என்ற நம்பிகையுடன் இருக்கிறோம்.

Sangeetha said...

I got a help from Mr. Charles Antony any body having his mail ID please provide, want to sent thank note to him