Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Sunday 12 May 2013

சபாஷ்...கலக்கும் காரைக்கால் எம்எல்ஏ


புதுச்சேரி மாநில முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், திமுக சட்டமன்ற தலைவரும், புதுச்சேரி ஹஜ் கமிட்டி தலைவருமாகிய A.M.H.நாஜிம் குறித்து தினமலரில் சில தினங்களுக்கு முன்பாக வெளிவந்த செய்தி கவனத்தை ஈர்த்தது. முதலில் அந்த செய்தியை பார்த்துவிடுவோம். 

---     
காரைக்கால் தெற்கு தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் நாஜிம். கடந்த 25 ஆண்டுகளாக, தொடர்ந்து எம்.எல்.ஏ.,வாக வலம் வருகிறார். காரைக்கால் மாவட்ட கோரிக்கைகளுக்காக குரல் கொடுப்பதுடன், தொகுதி மக்களின் குறைகளை கேட்டு, அவற்றை தீர்த்து வைப்பதிலும், அதிக அக்கறை எடுத்துக்கொளும் நாஜிம், அட்டவணை போட்டு பொதுமக்களை நேரில் சந்தித்து வருகிறார்.

A.M.H நாஜிம் (முதலில் உட்கார்ந்திருப்பவர்)

வாரத்தில் ஒவ்வொரு நாட்களையும், ஒவ்வொரு பகுதிக்கு ஒதுக்கி உள்ளார். சனிக்கிழமை நிரவி, வெள்ளிக்கிழமை மேல ஓடுதுரை, திங்கள்கிழமை மதகடி என ஒவ்வொரு கிழமையிலும் ஒரு பகுதிக்கு சென்று, அங்கு முகாம் அமைத்து, புகார் மனுக்களை பெற்று, குறைகளை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்.

வேலைப்பளு மற்றும் அலுவலகம் செல்ல வேண்டிய நிலையில், புகார் தெரிவிப்பதற்காக, எம்.எல்.ஏ., அலுவலகத்தில் காத்திருக்க, பொதுமக்கள் பலர் விரும்புவதில்லை. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண, காரைக்கால் தெற்கு தொகுதி மக்கள் தங்களது புகார்களை தெரிவிப்பதற்காக, பிரத்யேகமான வெப்சைட் ஒன்றை நாஜிம் துவக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. www.complainbox.in என்ற இணையதளத்தில், தெற்கு தொகுதி மக்கள் தங்களது குறைகளையும், கருத்துகளையும் தெரிவிக்கலாம்.

இணையதளம் மூலம் பெறப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, ஐந்து ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தெருக்களில் மின் விளக்குகள் எரியவில்லை, சாலை குண்டும் குழியுமாக உள்ளது, குப்பைகள் அகற்றபடாமல் குவிந்து கிடக்கிறது, கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு என, பலவகையான புகார்கள் இணையதளம் மூலம் வருகின்றன.

புகார் பெறப்பட்ட உடன், அந்த பகுதிக்கு சென்று, ஊழியர்கள் பார்வையிட்டு, விபரங்களை சேகரித்து வருவார்கள். இதையடுத்து,சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நாஜிம் எம்.எல்.ஏ., பேசி, நடவடிக்கை எடுப்பார். ஒவ்வொரு புகாரும், நிவர்த்தி செய்யப்பட்ட பின், சம்பந்தப்பட்டவர்களுக்கு மொபைல் போன் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

இதுகுறித்து நாஜிம் எம்.எல்.ஏ., கூறும்போது, 'பொதுமக்கள் எளிய முறையில் புகார்களை, தங்களது எம்.எல்.ஏ.,வுக்கு தெரிவிக்கும் வகையில், புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக தனியாக ஊழியர்களையும் நியமிதுள்ளேன். பலதரப்பட்டுள்ள புகார்கள் வருகின்றன. நிவர்த்தி செய்யப்பட்டவுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது' என்றார்.
---

நாஜிம் அவர்களின் தளத்தை பார்வையிட்ட போது ரொம்பவே ஆச்சர்யப்பட்டோம். தொகுதி மக்களின் குறைகளுக்கு எம்எல்ஏ நேரடியாகவே பதில் அளிக்கின்றார். அரசியல்வாதிகள் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படும் இந்நாளில் இப்படியான சட்டமன்ற உறுப்பினரை பார்ப்பது மகிழ்ச்சியாகவே உள்ளது. 

நன்றி: 8-5-2013 தேதியிட்ட புதுச்சேரி பகுதி தினமலர் செய்தி.
செய்தி தொகுப்பு:  ஜீனத் ஆஷிக் 

9 comments:

Unknown said...

மாஷா அல்லாஹ் ...

ஆனால் புகார் பாமர மக்கள் எப்படி கொடுப்பார்கள் ...

அஸ்மா said...

சலாம் சகோ.

நாங்களும் தெற்கு தொகுதிதான் :) மக்களோடு மக்களாக பழகி குறைக் கேட்டு தீர்ப்பது, இன்ப துன்பங்களில்கூட‌ வீட்டிற்கு வந்து பங்கேற்பது, எந்த (வாகன‌)))))) பந்தாவுமின்றி சர்வ சாதாரணமாக தெருக்களில் நடந்தே வருவது.. போன்றவை நாஜிம் நானா அவர்களின் நற்பண்புகளில் உள்ளவை. ஆனால் அவருடைய அரசியலில் மார்க்கத்தை ரொம்பவே அட்ஜஸ்ட் பண்ணுவது கவலையானது :(

//அரசியல்வாதிகள் மீது கடுமையான விமர்சங்கள் வைக்கப்படும் இந்நாளில் இப்படியான சட்டமன்ற உறுப்பினரை பார்ப்பது மகிழ்ச்சியாகவே உள்ளது// எங்களுக்கு நீண்ட காலமாக பழகிவிட்ட மகிழ்ச்சி அது :)

பயனுள்ள தகவலுக்கு ஜஸாகல்லாஹ் ஹைரா, சகோதரி ஜீனத் ஆஷிக்..! உங்களின் முதல் தொகுப்பே எங்க ஊரை.. எங்க தொகுதியைப் பற்றி என்பது கூடுதல் சந்தோஷம் :-) மாஷா அல்லாஹ், கலக்குங்க :)

மனிதாபிமானி said...

@ சுல்தான் மைதீன்,

//ஆனால் புகார் பாமர மக்கள் எப்படி கொடுப்பார்கள் ...//

நல்ல நோக்கத்தில் செய்யப்படும் ஒரு செய்கையை வெளிப்படுத்துவதே இந்த பதிவின் மையம். பாமரர்கள் நேரடியாக நாஜிம் எம்எல்ஏ-வை சந்தித்து தங்கள் புகார்களை கொடுப்பதில் சிரமம் இருக்காது என்று அஸ்மா அவர்களின் பதில் மூலமாக அறிய முடிகின்றது.

கருத்திற்கு நன்றி..

மனிதாபிமானி said...

@ சகோ அஸ்மா,

வ அலைக்கும் சலாம்,

//உங்களின் முதல் தொகுப்பே எங்க ஊரை.. எங்க தொகுதியைப் பற்றி என்பது கூடுதல் சந்தோஷம்//

காரைக்கால் பக்கம் தான் அவங்க ஊரே. படித்ததும் காரைக்காலில் தான்..

தங்களின் கருத்துக்கும் நன்றி சகோ அஸ்மா

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

அல்ஹம்துலில்லாஹ். முதல் பதிவே சும்மா கலக்குறீங்க. அழகான எழுத்து நடை இன்னும் மெருகேற்றி விட்டது.

வாழ்த்துக்கள். தொடருங்கள் சகோ.

ஸாதிகா said...

சலாம் சகோ,

அரசியல்வாதிகள் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படும் இந்நாளில் இப்படியான சட்டமன்ற உறுப்பினரை பார்ப்பது மகிழ்ச்சியாகவே உள்ளது. //உண்மைதான்.சகோ ஜீனத் ஆஷிகின் முதல் பதிவே ஆக்கபூர்வமாக உள்ளது.தொடருங்கள் சகோ.

ஆதிரா said...

ம்ம்..நானும் அந்த தொகுதி தான்..மதம் ஜாதி பார்க்காமல் இவர் எல்லாருக்கும் உதவுவதை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன்.என் தோழியின் சகோதரர் புற்று நோய் மருத்துவச் செலவிற்கு ஒரு லட்சம் வரைக் கொடுத்து உதவியவர்.இவர் தொடர்ந்து எல்லா முறையும் அவர் தொகுதியில் ஜெயிப்பதற்கு ஜாதி மத ஓட்டுக்கள் என்று எந்த காரணமுமில்லை.அவர் தொகுதி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பதே காரணம்.நான் பார்த்து வியக்கும் ஒரே ஒரு DMK M L A.

Unknown said...

நல்ல பதிவு! ஒரு நல்ல அரசியல்வாதியை பற்றி !

எளிமையானவர் இவர், இனிமையாக அனைவருடனும் பழக கூடியவர். தொகுதி மக்களின் குறைகளை தீர்க்க உடனுக்குடன் தன்னால் இயன்றதை செய்பவர். அதனால் தான் தனது தொகுதியில் தொடர்ந்து, வெற்றி வாகை சூடி வருகிறார்.
சாதி பேத்மின்றி அனைத்து மக்களையும் அரவணைத்து செல்லும் அரசியல்வாதி இவர். திருவிழா காலங்களில் பிறர் அழைப்பின் பேரில் மாற்று மத் வழிபாட்டு தலங்களுக்கும் சென்று வருபவர்
அதனாலே லோக்கல் மார்க்க பந்துக்களின் வெறுப்பை சம்பாதித்து கொண்டவர் :)

மனிதாபிமானி said...

@ சகோ கரிகாலன்,

//திருவிழா காலங்களில் பிறர் அழைப்பின் பேரில் மாற்று மத் வழிபாட்டு தலங்களுக்கும் சென்று வருபவர்
அதனாலே லோக்கல் மார்க்க பந்துக்களின் வெறுப்பை சம்பாதித்து கொண்டவர் :)//

உங்களின் தவறான புரிதலுக்கு நாஜிம் பொறுப்பேற்க முடியாது சகோ. ஆட்சியாளர்கள் முஸ்லிம்களாக இருந்தால், தங்கள் தொகுதிக்கு உட்பட்ட மாற்றமத வழித்தலங்கலுக்கு செல்ல கூடாது என்றில்லை. பொதுமக்களுக்கான ஆட்சியாளர் மத பேதமின்றி அனைவருக்கும் உதவவே கடமைப்பட்டுள்ளார். அவர் தான் சரியான முஸ்லிமாகவும் இருக்க முடியும்.

மகாத்மா காந்தி ஆசைப்பட்ட உமர் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் கூட கிருத்துவ வழிபாட்டு தளங்களுக்கு உமர் (ரலி) சென்றுள்ளார். முஸ்லிம் ஆட்சியாளர்கள் தங்கள் ரோல் மாடலை இங்கிருந்தும் எடுத்துக்கொள்கின்றனர்.

நீங்கள் குறிப்பிடும் மார்க்க பந்துகளின் (?) வேதனை என்னவாக இருக்க முடியும் என்றால், தனிப்பட்ட முறையில் சரியான முஸ்லிமாக இருப்பதில் இருந்து நாஜிம் தவறுவதாக இருக்கலாம். உதாரணம், அவருடைய தர்கா மீதான நம்பிக்கை.

நேற்றைய செய்தி, புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சுமார் 30 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்த ஹஜ் யாத்திரைக்கான அனுமதியை நாஜிம் தலையிட்டு 197 பேர் இந்த வருடம் ஹஜ் செய்ய அனுமதி வாங்கி தந்துள்ளார்.

வருகைக்கு நன்றி..