Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Tuesday 28 May 2013

இந்தியாவில் நாத்திகர்கள் அதிகரிக்கின்றனரா? 'விடுதலை' தள புரட்டுக்கு பதிலடி..


ந்தியாவில் நாத்திகர்கள் அதிகரித்து விட்டதாகவும், இறைநம்பிக்கையாளர்கள் குறைந்துவிட்டதாகவும் ஒரு ஆய்வு கூறுவதாக கூறி சமூக தளங்களில் அங்கலாய்க்கின்றனர் நாத்திகர்கள். ஆனால் இதற்கு நேர்மாறான தகவலை தான் அந்த ஆய்வு தருகின்றது என்பதை நாத்திகர்கள் உணர்ந்தால் என்ன செய்ய போகின்றார்கள்? ஈயடிச்சான் காப்பியாக மற்றவர் கூறுவதை பரப்புவதற்கு பதிலாக தெளிவாக ஆராயலாமே? உண்மை என்ன என்பதை விளக்குகின்றது இந்த கட்டுரை..

இன்று விடுதலை தளத்தில் வந்த ஒரு பதிவும், உண்மையை ஆராயாமல் அதனை அப்படியே பிரதியெடுத்து போட்ட தமிழ் ஓவியா தளத்தின் பதிவும் அதிர்ச்சியளித்தன.  

விடுதலை தளம் சொல்ல வருவது இதுதான். பிரபல ஆய்வு நிறுவனமான Gallup, ஆத்திகம் நாத்திகம் குறித்த கருத்துக்கணிப்பை பல்வேறு நாடுகளில் சென்ற ஆண்டு நடத்தியது. அதன் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. இந்தியாவில், கடவுள் நம்பிக்கையற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வு கூறுகின்றதாம். இதன் அடிப்படையில் பின்வருமாறு தலையங்கம் வெளியிடுகின்றது விடுதலை தளம்..

"இந்தியர்களிடம் கடவுள், மத நம்பிக்கை குறைந்தது"

இது உண்மையா என்பதை அறிய Gallup ஆய்வின் அதிகாரப்பூர்வ ஆவணத்தை முதலில் பார்த்து விடுங்கள். இங்கே 

உண்மை என்னவென்றால் இந்தியாவில் இறைநம்பிக்கையாளர்களின் எண்ணிக்கையெல்லாம் குறையவில்லை, மாறாக நாத்திகர்களின் எண்ணிக்கை தான் குறைந்துள்ளது. மேற்சொன்ன ஆவணத்தின் 12-ஆம் பக்கம் இந்த உண்மையை உரக்க சொல்கின்றது. கீழே பாருங்கள்.

படத்தை சுட்டி பெரிதாக காணுங்கள்

மிகத் தெளிவாக, இந்த ஆவணம், 2005-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது நாத்திகர்களின் தற்போதைய இந்திய எண்ணிக்கை 1% குறைந்துள்ளதாக பறைசாற்றுகின்றது. 

பின்னர் எப்படி விடுதலை தளம் துணிந்து இந்த பொய்யை/புரட்டை கட்டுரையாக வெளியிட்டது? ஆங்கிலத்தை தவறாக புரிந்துக்கொண்டது காரணமாக இருக்கலாம். எப்படி என்பதை பின்வருமாறு விளக்கலாம். 

நம் ஊரிலேயே மூன்று வகையான மனிதர்களை பார்த்திருப்போம். 

  • மத நம்பிக்கைகள் மீது பற்றுக்கொண்டு அதன்படி நடக்க விரும்புபவர்கள் (ஆங்கிலத்தில் இவர்களை Religious people என்பார்கள்). 
  • ஒரு மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அந்த மத கோட்பாடுகளை பின்பற்றாமல் அசட்டையாக இருப்பவர்கள். இவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தாலும், தாங்கள் சார்ந்த மத கோட்பாடுகளை பின்பற்றுவதில் அலட்சியமாக இருப்பவர்கள் (இவர்களை ஆங்கிலத்தில் Not Religious people என்பார்கள்). 
  • நாத்திகர்கள், அதாவது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் (இவர்களை Atheist என்பார்கள்). 

மேலே சொன்ன மூன்றின் அடிப்படையில் தான் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. மக்களிடம் ஆய்வில் கேட்கப்பட்ட கேள்விகள் இவை தான். 

1) Are you religious?
2) Are you not religious?
3) Are you a convinced Atheist?

இதன் அடிப்படையில் 81% இந்திய மக்கள் மத கோட்பாடுகளை பின்பற்றுவதாகவும், 13% மக்கள் மத கோட்பாடுகளை பின்பற்றுவதில்லை எனவும் (கவனிக்கவும், இவர்கள் தங்கள் மதத்தை துறந்தவர்களோ அல்லது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களோ இல்லை). 3% மக்கள் தங்களை நாத்திகர்கள் எனவும் கூறியுள்ளனர். Not religious என்பதை தான் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என்று தவறாக புரிந்துக்கொண்டுவிட்டது விடுதலை பத்திரிக்கை/தளம். 

இறைநம்பிக்கையாளர்கள் 6% குறைந்துவிட்டதாக குறிப்பிடும் 'விடுதலை', யோசிக்க வேண்டாமா, இறைநம்பிக்கையாளர்கள் குறைந்துவிட்டனர் என்றால் நாத்திகர்களின் எண்ணிக்கையில் இந்த 6% அதிகரித்திருக்க வேண்டாமா? ஆனால் 3% தானே நாத்திகர்கள்? மிக எளிமையாக புரியும் இந்த லாஜிக்கை எப்படி கோட்டைவிட்டது விடுதலை தளம்? 

விடுதலை தளத்திலும், தமிழ் ஓவியா தளத்திலும் அவர்கள் செய்த தவறை சுட்டி காட்டி நான் இட்ட கருத்தை பின்வருமாறு முடித்திருந்தேன் 

//உங்களின் இந்த பதிவு தலைப்பும், இந்தியா பற்றிய ஆய்வு தகவல்களும் தவறான வழிகாட்டுதலாகும். இதே கட்டுரை விடுதலை பத்திரிக்கையில் வந்திருந்தால், ஆய்வு நடத்தியவர்களின் கருத்தை தவறாக சித்தரித்து அவர்களை கேலிக்குள்ளாக்கும் அணுகுமுறையாகும். நானும் என்னை போன்ற பலரும் பெரிதும் மதிக்கும் தந்தை பெரியார் அவர்கள் சார்ந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் இப்படியாக செயல்படுவது வருத்தத்தை தருகின்றது. ஆகையால் தாங்கள் இந்த பதிவை திருத்தி, உண்மைக்கு ஏற்றமாறு அமைக்கும் படி கேட்டுக்கொள்கின்றேன். 
நன்றி,  
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ //

திருத்தங்களை மேற்கொண்டு வருத்தம் வெளியிடுமா விடுதலை தளம்? பகுத்தறிவு என்பது நாத்திகம் மட்டுமே சம்பந்தப்பட்ட சொல்லாக இருந்தால் இந்திய பகுத்தறிவாளர்கள் போக வேண்டிய தூரம் அதிகரித்திருக்கின்றது என்பதையே இந்த ஆய்வு காட்டுகின்றது..

நன்றி...

15 comments:

Nasar said...

அஸ்ஸலாம் அலைக்கும் பாய் ..
நீங்கள் சொன்னபடியே தான் GALLUP ஆய்வு இருக்குது .
அவர்கள் புரிந்து கொண்ட விதத்தில் தான் தவறு நடந்திருக்கிறது .
பகுத்தறிவுக்கு ஒட்டு மொத்த குத்தகைகாரர்களா ' நாத்திகர்கள் ' ??

Peer Mohamed said...

Good Job brother. Well done

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாம் அலைக்கும் சகோ. Aashiq Ahamad.

மிக அருமையான விளக்கங்களுடன் தக்க பதில் அளித்துள்ளீர்கள். 'எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று வெற்று பரபரப்புக்காக பரப்புவோர் நாத்திகர்கள்' என்று ஆகிவிடாமல்... அவர்கள் இனியாவது சற்று நிதானத்துடன் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

ஜசாக்கல்லாஹு க்ஹைர்.

R.Puratchimani said...

இந்தியர்களிடம் மத நம்பிக்கை குறைந்துள்ளது, ஆனால் கடவுள் நம்பிக்கை குறையவில்லை என்பது நல்ல செய்தியே.

மனிதாபிமானி said...

@ புரட்சிமணி,

//இந்தியர்களிடம் மத நம்பிக்கை குறைந்துள்ளது, ஆனால் கடவுள் நம்பிக்கை குறையவில்லை என்பது நல்ல செய்தியே.//

தாங்கள் சார்ந்த மதத்தை துறந்து வெறுமனே கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல இவர்கள். மாறாக, தாங்கள் சார்ந்த மத கோட்பாடுகளை இவர்கள் பின்பற்றுவதில்லை.

இந்தியர்களிடம் மத நம்பிக்கை குறைந்திருக்கின்றது அல்லது குறையவில்லை என்பதற்குள்ளே எல்லாம் இந்த ஆய்வு செல்லவில்லை..

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

//இந்தியர்களிடம் மத நம்பிக்கை குறைந்துள்ளது, ஆனால் கடவுள் நம்பிக்கை குறையவில்லை//

இப்படி சொல்வதை விட.....

இந்தியர்களிடம் மத நம்பிக்கையும் நாத்திகமும் குறைந்துள்ளது, ஆனால் கடவுள் நம்பிக்கை கூடியுள்ளது

இப்படி சொல்வதே அந்த ஆய்வின் படி சரியாகும்.

Thamizhan said...

கடவுள் மத நம்பிக்கையில்லாதவர்களில் நாத்திகர் மட்டுமன்றி ,கடவுள் மத மறுப்பாளர்களும் அடங்கலாம்(Agnostics).கடவுள் மத நம்பிக்கையாளர்கள் குறைந்துள்ளனர் என்பது தவறான முடிவில்லை.கடவுள் மத நம்பிக்கை குறைந்துள்ளதா என்பது அந்த 6 விழுக்காட்டிற்கே வெளிச்சம்.

Thamizhan said...

கடவுள் மத நம்பிக்கையில்லாதவர்களில் நாத்திகர் மட்டுமன்றி ,கடவுள் மத மறுப்பாளர்களும் அடங்கலாம்(Agnostics).கடவுள் மத நம்பிக்கையாளர்கள் குறைந்துள்ளனர் என்பது தவறான முடிவில்லை.கடவுள் மத நம்பிக்கை குறைந்துள்ளதா என்பது அந்த 6 விழுக்காட்டிற்கே வெளிச்சம்

Anonymous said...

Yes it is TRUE: where all ur Gods went on during May 18th of 2009?
went on MASS medical leave?

மனிதாபிமானி said...

@ சகோ தமிழன்,

கண்ணாடி அறையில் இருந்து கல்லெறிந்து விட்டு அவஸ்தைபடுவது புரிகின்றது. எப்படி தங்களின் பதிவு உண்மைக்கு புறம்பாக இருந்ததோ அதுபோலவே தங்களின் பதிலும் உண்மைக்கு புறம்பாக இருக்கின்றது. Agnostics என்பவர்கள் தாங்கள் கூறுவது போல கடவுள் மத எதிர்ப்பார்கள்கள் கிடையாது. கடவுளை ஒருவர் மறுத்தார் என்றாலே அவர் நாத்திகர் தான். Atheist, Agnostic நேரெதிரானவை. ஒருவனை பார்த்து அவன் நெட்டை என்றும் குட்டை என்றும் கூறமுடியுமா? ஒன்று அவன் நெட்டையாக இருக்க முடியும் அல்லது குட்டையாக இருக்க முடியும். அதுபோல தான் நாத்திகமும் agnostic-க்கும் ஒன்றாக முடியாது. இவை இரண்டும் ஒரே பிரிவுக்குள் வரவும் முடியாது. மேலும் agnostic குறித்த கருத்துகணிப்பும் இது கிடையாது. தாங்கள் கூகிள் தேடலில் Religious என்றால் என்ன மற்றும் Not religious என்றால் என்ன தேடினாலே உங்களின் அறியாமைக்கு பதில் கிடைத்துவிடும்.

"இருக்கலாம்" "அடங்கலாம்" என்ற லாம்-கெல்லாம் பத்திரிக்கை துறையை அடமானம் வைத்துவிட வேண்டாம். உண்மையை ஆதாரங்களுடன் தெளிவாக எடுத்து சொன்னாலும் விதண்டாவாதம் புரிவதில் தந்தை பெரியார் அவர்கள் வழிவந்தவர்களும் விதிவிலக்கல்ல என்பதை இப்போது புரிந்துக்கொண்டேன்.

கருத்துரிமைக்காக குரல் கொடுக்கும் திக-வினர் விடுதலை தளத்தில் நான் பதிந்த கருத்தை வெளியிடலாமே, அங்கேயே உங்களின் இந்த பதிலையும் பதியலாமே. அய்யா வழி வந்தவர்கள் என்று கூறிக்கொள்வதால் தான் பதில் அளிக்கின்றேன். இல்லையேல் தங்களின் இந்த அசட்டை பதிலை கண்ட நிமிடம் "ஒ அவங்களா நீங்க" என்று புன்னகை புரிந்து விட்டு சென்றிருப்பேன்.

நன்றி...

Jeevanantham Paramasamy said...

http://www.dailymail.co.uk/news/article-2250096/You-wouldnt-believe-atheism-worlds-biggest-faith-Christianity-Islam.html

this will help you to understand in details.

மனிதாபிமானி said...

@ ஜீவா பரமசாமி,

தாங்கள் கொடுத்துள்ள லிங்க் மூலமாக என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று புரியவில்லை. நீங்கள் கொடுத்துள்ள லின்க்கில் உள்ள ஆய்வில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள் வேறு. விடுதலை தளம் குறிப்பிட்டள்ள ஆய்வில் உள்ள கேள்விகள் வேறு.

தெளிவாக உங்கள் கருத்தை கூறினால் நன்றாக இருக்கும்..

நன்றி..

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

அல்ஹம்துலில்லாஹ். நல்ல விரிவான அலசல். பத்திரிக்கை துறையில் இருப்பவர்கள் சிறிது ஆராய்ந்து எழுதுவது நலம். பகுத்தறிவை ஆராய்ந்து எழுதுங்கள்.

Unknown said...

Hi sir,
We are from neeya naana doing an show regarding atheism can you plz give me your number..
OR contact me
Maxim 9940081964

Unknown said...

Hi sir,
We are from neeya naana,we are makin an show regarding atheism..
Can you plz contact me in this number
Maxim 9940081964
Or give us number
Thanks