Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Wednesday, 18 September 2013

முசாஃபர் நகர் கலவரத்துக்கு மூல காரணம்... ஈவ் டீசிங் அல்ல..!


வ் டீசிங் என்ற ஒன்று நடக்கவே இல்லை என்கிறார் அதில் சம்பந்தப்பட்ட பெண் ரீது. ஈவ் டீசிங் செய்ததாக பிறரால் சொல்லப்படும் அந்த பையன் ஷாநவாஸ்கானை தான் பார்த்ததோ அல்லது பேசியதோ இல்லை என்கிறார். மேலும், சர்ச்சைக்குள்ளான பகுதிக்கு தான் சென்றதில்லை என்கின்றார் அந்த சகோதரி. 'விஷயம் கேள்விப்பட்டு நாங்கள் போய் பார்க்கும் போது அந்த முஸ்லிம் குடும்ப ஆண்கள் எல்லாம் சேர்ந்து சச்சின் & கவ்ரவ் இருவரையும் வீதியில் மிகவும் மோசமான நிலையில் கொன்று போட்டு இருந்தனர்' என்கின்றனர் சச்சின்/கவ்ரவ் வீட்டு பெண்கள்.

அப்புறம், தன் பையன் ஈவ் டீசிங் செய்பவனில்லை என்றும் அப்படி சொல்வதெல்லாமே பொய் என்றும் திடமாக மறுக்கிறார் ஷாநவாஸ்கானின் தந்தை. மேலும், சச்சின்/கவ்ரவ் மற்றும் ஷாநவாஸ் ஆகிய இருவரின் பைக்கும் மோதிக்கொண்டதில் தகராறு ஆகி, பின்னர் அவர்கள் வீடு சென்று, எட்டு பேருடன் 3 பைக்கில் சச்சினும் கவ்ரவும் திரும்பி வந்து ஷாநவாஸின் வீட்டுக்கருகில் வைத்து கத்தி மற்றும் சில ஆயுதம் கொண்டு கண்டபடி அவனை தாக்கி கழுத்து மார்பு வயிறு என உடம்பில் பல இடத்தில் வெட்டி வீதியிலேயே கொன்று விட்டனர் என்கிறார் தந்தை.

போலிஸ் ஸ்டேஷனில் சென்று விசாரித்த போது, இரு தரப்பு கொலை பற்றிய இரு FIR களிலும் ஈவ் டீசிங் பற்றி ஒன்றுமே எழுதப்படவில்லையாம்..! ஏன்..? இரு தரப்பும் என்ன சொன்னார்களோ அதைத்தான் FIR இல் எழுதினோம் என்று சொல்லும் போலிஸ் ஈவ் டீசிங் பற்றி புகார் இல்லை என்கிறது. இவ்வளவுக்கும்... ஜாட் சாதியினரும் முஸ்லிம்களும் இதுவரை சண்டை போட்டுக்கொண்ட வரலாறே இதற்கு முன்னர் இல்லையாம்..!

--- கலவர ஸ்பாட்டில் இருந்து NDTV ரிப்போர்ட்..! ஆதார சுட்டி இங்கே 


அடுத்த சமூகத்தினர் மீது வெறுப்பை கொண்டு வர தன் வீட்டிற்கே குண்டு வைத்துக்கொள்ளுதல், யாத்திரை என்ற பேரில் குழப்பம் ஏற்படுத்த முயலுதல், இல்லாத காரணத்திற்காக கலவரத்தை தூண்டுதல், கலவரத்தை பெரிதுபடுத்த போலி வீடியோவை பரப்புதல் போன்ற சம்பவங்களுக்கும் தேர்தல் நெருங்குவதிற்கும் நிச்சயம் தொடர்புண்டு. 

நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை காப்பாற்றினாரே அந்த ஜாட் இன சகோதரர், அவருடைய செயலில் உள்ளது இவை அனைத்திற்குமான பதில். தங்களின் எண்ணங்கள் நிறைவேறாதா என்று பல்வேறு வகைகளில் குட்டிக்கரணம் அடிக்கும் சங்பரிவாரங்களின் சூழ்ச்சி பலிக்க போவதில்லை, பாடம் மட்டுமே புகட்டப்பட போகின்றனர். 


6 comments:

சுவனப் பிரியன் said...

என்னதான் முயற்சித்தாலும் இந்துத்வா ஆட்சிக் கட்டில் ஏற பெரும்பான்மை இந்துக்களே ஒத்துழைக்கப் போவதில்லை. இது சம்பந்தமாக இரண்டு நாள் முன்பு நான் இட்ட பதிவு.

http://suvanappiriyan.blogspot.com/2013/09/blog-post_16.html

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

சலாம்,

ஊடகங்களின் முரட்டு கரங்களால்,முஸ்லிம்களின் கண்கள் மறைக்கப்படுகின்றன.கண்கள் மறையலாம்,உண்மைகள் மறையாது...நல்ல தகவல்

என் தளத்தில் இன்று:ஊதா கலரு ரிப்பன்
tvpmuslim.blogspot.com

சிராஜ் said...

போலியான கலவரங்களை உண்டு பண்ணி மக்களை கொல்பவர்கள் யாராக இருந்தாலும் வாழத் தகுதி அற்றவர்களே...

செத்ததும் எந்த சமூக மக்களாக இருந்தாலும் போலிஸ் அரெஸ்ட் செய்யும்பொழுது இங்க 50 பேர் அங்க 50 பேர்னு தான் பன்னுவாங்க.... கொடுமை

ஹுஸைனம்மா said...

வெள்ளைக்காரர்கள் கையாண்ட அதே "Divide and Rule" பாலிஸிதான் இவர்களும் கையாள்வது. முஸ்லிம்களுடன் இணக்கமாக இருக்கும் இந்துக்களைப் பிரிப்பதற்குக் கையாளும் சூழ்ச்சிகள். இனியும் ‘ராமர் கோயில்’ கோஷமெல்லாம் எடுபடாது என்பதால் தீட்டப்படும் சதித்திட்டங்கள். இவர்களின் பித்தலாட்டத்தை மக்கள் புரிந்துகொள்வதற்குத்தான் அவை வழிவகுக்கும்.

Anonymous said...

உண்மை யான. மதம் & மார்கம். சொல்வது பொல் கடைப்பிடிப்பானல் ...................அனைவரும் அமைதியாக வாழலாம் ...

Anonymous said...

'விஷயம் கேள்விப்பட்டு நாங்கள் போய் பார்க்கும் போது அந்த முஸ்லிம் குடும்ப ஆண்கள் எல்லாம் சேர்ந்து சச்சின் & கவ்ரவ் இருவரையும் வீதியில் மிகவும் மோசமான நிலையில் கொன்று போட்டு இருந்தனர்' என்கின்றனர் சச்சின்/கவ்ரவ் வீட்டு பெண்கள்.

Why always blame Hindu people? In TV sting operation,the police officer said ,one Muslim minister Involve in it.
Dont blame Hindus always.