Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Saturday, 31 August 2013

தன் வீட்டிற்கே பெட்ரோல் குண்டு - இது பாஜகவினர் ஸ்டைல்


முதலில் நேற்று தினமணி வெளியிட்ட செய்தியை பார்ப்போம் 

"திண்டுக்கல்லில் பாஜக நிர்வாகி வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு

திண்டுக்கல்லில் பாஜக நிர்வாகியின் வீடு மீது புதன்கிழமை நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் 3ஆவது தெருவில் வசித்து வருபவர் பி. பிரவீண்குமார் (27). வேன் ஓட்டுநரான இவர், திண்டுக்கல் 10ஆவது வார்டு பாஜக கிளைக் கழகத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அந்தப் பகுதியில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யும் பணியில் பிரவீண்குமார் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், புதன்கிழமை நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவர், பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை பிரவீண்குமார் வீட்டின் மீது வீசிவிட்டு தப்பிவிட்டனர். பெட்ரோல் பாட்டில்கள் வெடித்ததில் வீட்டுக்கு அருகே சென்ற கேபிள் வயரில் தீப்பிடித்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்தில் பிரவீண்குமார் வியாழக்கிழமை புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்குப் பதிந்த போலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர். அகில உலக இஸ்லாமிய முன்னெற்ற கழகத்தை சேர்ந்த முபாரக் அபிபுலலா ஆகியோரிடம் போலீசார் விசாரித்தனர் அந்த பகுதியை சேர்ந் த பலரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்" 

இந்த செய்தியில் கடைசி பத்தியை இப்போது தினமணி தளத்தில் இருந்து காக்கா தூக்கிக்கொண்டு போய்விட்டது. சரி இது என்ன புதுசா, விடுவோம். இன்றைய தினமணி செய்தியை பார்ப்போம். 

"தனது வீட்டில் தானே குண்டு வீசிய பாஜக நிர்வாகி, நண்பர் கைது

பிரபலம் அடைய தன்னுடைய வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசிய பாஜக நிர்வாகியும், அவரது நண்பரும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

கமலக்கண்ணன் பிரவீன்குமார் 

திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் 3 ஆவது தெருவில் வசித்து வருபவர் பாஜக நிர்வாகி பி. பிரவீண்குமார். இவரது வீட்டில் புதன்கிழமை நள்ளிரவு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

அப்போது, வீட்டிலிருந்த பிரவீண்குமாரின் மனைவி சத்தியலட்சுமி, பெட்ரோல் குண்டை வீசிச் சென்ற 2 மர்ம நபர்கள் குறித்து தனது கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, பா.ஜ.க நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வியாழக்கிழமை காலை, பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்தில் பிரவீண்குமாரும் சத்தியலட்சுமியும் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்குப் பதிந்த போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சுயவிளம்பரம் தேடும் வகையிலும், போலீஸ் பாதுகாப்பு பெறுவதற்காகவும், தனது வீட்டின் மீது தானே வெடிகுண்டு வீசிய தகவலை பிரவீண்குமார் விசாரணையின்போது தெரிவித்துள்ளார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் கமலக்கண்ணன் (28) என்பவர் இதற்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, பிரவீண்குமார் மற்றும் கமலக்கண்ணன் ஆகியோரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து, மேலும் விசாரித்து வருகின்றனர்."

முதலில் காவல்துறைக்கு நன்றிகள். குற்றவாளிகள் எதிர்ப்பார்த்தப்படியே விளம்பரமும் கிடைத்துவிட்டது, போலிஸ் பாதுகாப்பும் கிடைத்துவிட்டது :-) சில நாட்களுக்கு முன்னர் தான் அனுமன் சேனா என்ற அமைப்பினர் இது போன்ற வழக்கில் சிக்கினர். ஆனால் தன் வீட்டிற்கே குண்டு வைக்கும் அளவிற்கு செல்லவில்லை என்பது சற்றே ஆறுதல். இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கிய விஷயம், தன் மனைவி உள்ளே இருக்கும் போதே வீட்டிற்கு குண்டு வைத்தவர்கள், தாங்கள் நினைத்ததை சாதிக்க எதற்கும் இறங்குவார்கள் என்பது தான். 

இந்த விவகாரம் குறித்து திண்டுக்கல் டி.எஸ்.பி., சுருளிராஜா கூறிய போது "பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக, பிரவீன்குமார் நண்பர் கமலக்கண்ணனிடம் விசாரித்தோம். அவரும், பிரவீன்குமாரும் சம்பவத்தன்று மது குடித்துள்ளனர். இருவரும் சேர்ந்து மதுபாட்டிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து, பிரவீன் வீட்டின் மீது வீசி விட்டு தப்பினர். பின்பு ஒன்றும் தெரியாதவர்கள் போல நாடகமாடி, காவல்துறைக்கு பிரவீன் தகவல் தெரிவித்துள்ளார். தனக்கு காவல்துறை பாதுகாப்பு வேண்டும், கட்சியில் விளம்பரம் வேண்டும் என்பதற்காக, அவர் நாடகமாடியுள்ளார். இவர்களது மொபைல் போன் பேச்சுகளை வைத்து, இதை கண்டுபிடித்தோம். பாரதிபுரத்தில் நடந்த சம்பவமும் நாடகம் போலவே தெரிகிறது. இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்,'' என்றார்.

ஆமாம் சார், பாரதிபுரம் மட்டுமல்ல, 'அவர் வரும் வழியில் குண்டு, இவர் வரும் வழியில் குண்டு, பாலத்திற்கு அடியில் குண்டு" போன்ற பல வழக்குகளின் தன்மையை இந்த கோணத்திலும் தீவிரமாக விசாரித்தால் பல உண்மைகள் தெரியவரும், பல அப்பாவிகளும் காப்பாற்றப்படுவார்கள். 

கட்டபஞ்சாயத்து, நிலத்தகராறு, பெண் தொடர்பு, மது போதையில் தகராறு போன்ற சங்கபரிவார பிரமுகர்களின் செய்கையில் இப்போது கடத்தல், தங்கள் குடும்பத்திற்கே பங்கம் விளைவிப்பது போன்ற கீழ்த்தரமான செயல்களையும் சேர்த்துக் கொள்ளலாம். 

காங்கிரசின் குழப்படியான ஆட்சியால் தங்களுக்கு ஒட்டு விழும் என்று மனப்பால் குடித்தால், பிஜேபி அதனை இத்தோடு மறந்துவிடுவது நலம். முன்பும் கூட காங்கிரஸ் அபாரமான ஆட்சியை கொடுத்ததில்லை. சரியான மாற்று இல்லாததாலேயே அவர்கள் தொடர்ந்து ஆட்சி கட்டிலில் அமர்கின்றனர். அந்த மாற்று தாங்கள் தான் என்று பிஜேபி நினைத்தால் மறுபடியும் மக்கள் பாடம் புகட்ட தயாராகவே உள்ளனர். 

கட்டுரை உதவி: ஆஷிக் அஹமத் அ 
நன்றி: இந்நேரம் மற்றும் தினமணி

13 comments:

ஹுஸைனம்மா said...

//தன் மனைவி உள்ளே இருக்கும் போதே வீட்டிற்கு குண்டு வைத்தவர்கள், தாங்கள் நினைத்ததை சாதிக்க எதற்கும் இறங்குவார்கள் என்பது தான். //

கண்டிப்பாக!! இவர்களின் தன்மை புரியாமல், நாட்டில் நல்லாட்சி வேண்டும், பொருளாதாரம் முன்னேற்றம் வேண்டும் என்றெல்லாம் (நடக்காத) காரணங்களைக் கூறி நடுநிலையாளர்களில் சிலரும் பிஜேபிக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். அவர்கள் வந்தால் இன்னும் மோசம்தான் ஆகும் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். இதற்கு முன்பு 5 ஆண்டுகள் செய்தபோதும் சொல்லத்தக்க முன்னேற்றம் ஒன்றும் இல்லை - வழமையான ஊழல்களைத் தவிர.

கார்கில் வீரர்களின் சவப்பெட்டியிலும் ஊழல் மூலம் ஊழலில்தான் முன்னேற்றம்!!

சுவனப் பிரியன் said...

இந்த நாட்டில் நடக்கும் 90 சதமான குண்டு வெடிப்புகளுக்கு பின்னால் இந்துத்வாவாதிகள் இருப்பது நிமூபணம் ஆனாலும் ஆளும் வர்க்கத்தில் உள்ள சில கருப்பு ஆடுகளால் இந்த செய்திகளெல்லாம் வெளியில் வருவதில்லை. இனியாவது ஆளும் வர்க்கம் இஸ்லாமியர்களை நோக்கி கையை நீட்டாமல் இந்துத்வா பக்கம் செல்லட்டும்.

ஜாகிர்உசேன் said...

அஸ்ஸலாமு அலைக்கும்

//தன் மனைவி உள்ளே இருக்கும் போதே வீட்டிற்கு குண்டு வைத்தவர்கள், தாங்கள் நினைத்ததை சாதிக்க எதற்கும் இறங்குவார்கள் என்பது தான்.//

பிடிக்காத மனைவியை பெட்ரோல் குண்டு வீசி கொன்று விட்டு அந்த பழியை முஸ்லீம்கள் மேல் போட்டு விட்டு இரட்டை ஆதாயம் அடைய அவன் நினைத்த விஷயம் மனைவி சாகாமல் தப்பியதால் பிரபலமடைய என்று இந்த ஊடகங்கள் இப்படி செய்தியை சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள்

இது முழுக்க முழுக்க கொலை முயற்சி கேஸ் .அதை திசை திருப்புகிறார்கள் என்றே நான் நினைக்கிறன்

Saha, Chennai said...

// இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கிய விஷயம், தன் மனைவி உள்ளே இருக்கும் போதே வீட்டிற்கு குண்டு வைத்தவர்கள், தாங்கள் நினைத்ததை சாதிக்க எதற்கும் இறங்குவார்கள் என்பது தான். //

அட போங்க பாஸு, இது என்னமோ அந்த கும்பலுக்கு புதுசு மாதிரி சொல்லுறீங்க, 1948ல் காந்தி கொல்லப்பட்டது முதல் தொன்றுதொட்டு வர்ற பாரம்பரிய பழக்கம் தானே, விட்டு தள்ளுங்க.

ஆனா, கவனிக்கப்படவேண்டியது, பதவி வெறிக்காக கட்டுன மனைவி மற்றும் குழந்தையையே கொல்லுபவர்களா நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாத்துவார்கள்? இந்த மாதிரி கும்பல்கிட்டே ஆட்சி அதிகாரம் கிடைச்சா, இந்தியாவோட எதிர்காலம்???

நாகூர் மீரான் said...

அத்வானி , பிரவீன் தொகாடியா போன்ற பழைய பெருச்சாளிகள் தானாக செத்துப்போனால் கூட அவர்களின் பிணத்தையும் வைத்து கொலை செய்யப்பட்டார்கள் என்று ஒரு கலவரத்தை நடத்தவும் வாய்ப்பு இருக்கிறது ! மறுப்பதற்கில்லை !

நைல் நதிக்கரையில் said...

'ட்ரைனிங்'சரியா எடுக்காம பய புள்ளைக சொதப்பிருக்காப்ல.நம்ம 'ரேம்போ'ஜி கேடிஜி கிட்ட அனுப்பி இருந்தா ஆப்பரேஷன் பெர்ஃபெக்டா முடிஞ்சி இருக்கும். இப்ப 'ஆப்பு' ரேஷன் ஆகிப் போச்சு.

அபு முஜாஹித் said...

'ட்ரைனிங்' சரியா எடுக்காம பய புள்ளைக சொதப்பிருக்காப்ல.
நம்ம 'ரேம்போ'ஜி கேடிஜி கிட்ட அனுப்பி இருந்தா ஆப்பரேஷன் பெர்ஃபெக்டா முடிஞ்சி இருக்கும்.
இப்ப 'ஆப்பு' ரேஷன் ஆகிப் போச்சு.

அபு முஜாஹித் said...

'ட்ரைனிங்' சரியா எடுக்காம பய புள்ளைக சொதப்பிருக்காப்ல.
நம்ம 'ரேம்போ'ஜி கேடிஜி கிட்ட அனுப்பி இருந்தா ஆப்பரேஷன் பெர்ஃபெக்டா முடிஞ்சி இருக்கும்.
இப்ப 'ஆப்பு' ரேஷன் ஆகிப் போச்சு.

faizeejamali said...

இந்த தேச துரோகி வீட்டிலேயே வெடி குன்டு த்யாரித்திருப்பான் அதை அவனது அப்பாவி மனைவி தட்டிகேட்டிருப்பாள் என்கே குட்டு வெலிபட்டு விடுமோ என்ட்ருஅஞ்ஜி மனவியை கொன்ட்ரு முஸ்லிம்கள மீது பழி போட நினைதிருப்பான்

Jafarullah Ismail said...

கட்டிய மனைவியின் உயிரையே துச்சமாக நினைக்கும் இந்த காவிகளா இந்த நாட்டை காப்பாற்றுவார்கள்..?

உதயம் said...

இந்த கேடு கெட்ட காலிகள் அரசு செலவில் போலிஸ் பாதுகாப்பு பெறுவதற்கு தான் இந்த குறுக்கு புத்தி நாடகங்கள். எனவே அரசாங்கம் இது போன்ற பித்தலாட்டங்களை கருத்தில் கொண்டு போலிஸ் பாதுகாப்பை கேலிகூத்தாக்கி மக்களின் வரிப்பணத்தை வாரியிறைக்க வேண்டாம். ஆடிட்டர் ரமேஷ் கொலையை தொடர்ந்து சங்பரிவாரங்கள் எங்களுக்கு பாதுகாப்பில்லை என்ற வழமையான பொய்யாட்டம் ஆடி போலிஸ் பாதுகாப்பை பெற்று நடமாடி வருகின்றனர். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்புகளை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். குற்றவாளிகளை அரசே பாதுகாக்கிறது என்ற அவப்பெயர் ஏற்படாதவாறு அரசாங்கம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். உணர்வுகளை தூண்டி அரசியல் நடத்துபவர்கள் தான் இந்துத்துவவாதிகள் என்பது உலகறிந்த ரகசியமாக இருக்கும் போது அவர்களின் தூண்டிலுக்கு அரசாங்கம் இறையாகாமல் அவதானிப்புடன் இருக்க வேண்டும்.

பூங்குன்றன் said...

அந்த பாஜக உறுப்பினர் செய்தது குற்றம் தான்.
ஆனால் அதையே சாக்காக வைத்து உதயம் "வழமையான பொய்யாட்டம் ஆடி போலிஸ் பாதுகாப்பை பெற்று நடமாடி வருகின்றனர். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்புகளை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்."
பாஜக உறுப்பினர்களின் பாதுகாப்பை மீள பெறவேண்டும் என்று கோருவது "அவர்களை போட்டு தள்ள " வசதி செய்து தருமாறு கோருவது போல் உள்ளது. தமிழ் இணைய உலகில் கொலைகாரர்கள் உலாவருகின்றார்கள் என்ற சந்தேகம் என்னை போன்ற பாஜக வை ஆதரிக்காத பல கோடி இந்துகளின் மனதில் உதயத்தின் கருத்து சந்தேகத்தை விதைக்கின்றது

Mathi said...

அபு முஜாஹித்said...
'ட்ரைனிங்' சரியா எடுக்காம பய புள்ளைக சொதப்பிருக்காப்ல.
நம்ம 'ரேம்போ'ஜி கேடிஜி கிட்ட அனுப்பி இருந்தா ஆப்பரேஷன் பெர்ஃபெக்டா முடிஞ்சி இருக்கும்.
இப்ப 'ஆப்பு' ரேஷன் ஆகிப் போச்சு


அப்ப சரியா ட்ரைனிங் எடுத்வனுங்க எவ்வளவு கலவரத்த உண்டு பன்னியிருப்பனுங்க? thanks to TN police

Mathi
Singapore