Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Thursday, 7 November 2013

முஸாபர் நகர்: தந்தையை கொன்று குல்லாவை வீசி சென்ற மகன்..


டந்த அக்டோபர் இரண்டாம் தேதி, உத்திர பிரதேச மாநிலத்தின் சஹாரன்பூர் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான சந்திர பால் சிங் சுட்டு கொல்லப்பட்டார். கொலை செய்யப்பட்ட இடத்தில் முஸ்லிம்கள் அணியும் தொப்பியும் கிடந்தது. முஸாபர்நகர் வகுப்பு கலவரம் அருகில் உள்ள பகுதிகளுக்கும் பரவியுள்ளதால் இந்த சம்பவம் நடந்திருக்கும் என்று எண்ணியது காவல்துறை. 

கொல்லப்பட்ட சந்திரபால் சிங்கின் மனைவியும், மகன் ஜோகேந்திராவும், பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஒருவர் தான் இந்த சம்பவத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டினர். 

இதை தொடர்ந்து நடந்த விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் வெளிவந்துள்ளன. சத்திர பால் சிங்கை கொன்றது வேறு யாருமல்ல, அவருடைய மகன் ஜோகேந்திராவே என்று தெரியவந்துள்ளது. கலவர இழப்பீட்டு தொகையான பத்து லட்சத்தை பெறுவதற்காக தன் தந்தையை தானே கொன்றது அம்பலமாகியுள்ளது. முஸ்லிம்கள் கொன்றது போன்ற பிம்பத்தை ஏற்படுத்த குல்லாவை அங்கு விட்டு சென்றதும் தெரியவத்துள்ளது. ஆதாரம் <<இங்கே>>

இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்று எண்ண வைக்கும் இந்த சம்பவம் ஒரு புறம் இருக்க, உண்மையை கண்டுபிடித்து தெளிவை உண்டாக்கிய காவல்துறைக்கு மனமார்ந்த நன்றிகள். ஒரு சிலரின் சுய லாபத்திற்கு மட்டுமே இந்த கலவரங்கள் என்பதை உணர்ந்து இவற்றில் இருந்து விடுபட சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும். 

தமிழ்நாட்டிலும், முஸ்லிம்கள் மீது பழியை போட தன் வீட்டின் மீதே குண்டு போட்டுக்கொண்ட பாஜக நிர்வாகி கைதானது நினைவிருக்கலாம். பதவி/பணம் வெறி பிடித்த சிலர் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள எப்படியும் இறங்குவர் என்பதற்கு இந்த சம்பவங்கள் உதாரணம். இதனை உணர்ந்துக் கொண்டு தூண்டுதலுக்கு பலியாகாமல் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். 

5 comments:

ஸாதிகா said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.வருந்ததக்க சம்பவமாயினும் மகக்ளை விழித்தெழ வைக்கும் சம்பவம்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ. மனிதாபிமானி,

இப்படியுமா செய்வார்கள்..? அதிர்ச்சியாக உள்ளது..! அடப்பாவி..! ஜோகேந்திரா... கோட்சேவின் புதிய பரிணாம வளர்ச்சியாகவே உன்னை நான் காண்கிறேன்.

நீங்கள் டெக்கான் ஹீரால்டில் படித்த இந்த செய்தியை, நான்... இந்தியா டுடேயில் படித்தேன்.

அதில்...

உபி அரசின் கலவர இழப்பீட்டு தொகையான ரூபாய் 10 லட்சத்தையும், இன்ஷுரன்ஸ் பணமான 15 லட்சத்தையும் பெறுவதற்காகவும், முஸ்லிம்கள் மீது பழி போடவும், தன்னை பெற்ற தந்தையை தானே கொலை செய்து விட்டு... அவரின் பிணத்தின் அருகே குல்லாவையும் போட்டு மதக்கலவர செட்டப் நாடகம் ஆடியது IANS விசாரணையில் அம்பலமாகியுள்ளது..!

Source : http://indiatoday.intoday.in/story/muzaffarnagar-riots-muzaffarnagar-violence-riots-man-kills-father-muzaffarnagar-riots-compensation/1/322005.html

ஆக,

முஸ்லிம்கள் மீது பழியை போட எண்ணி, உள்ளே மனைவி இருக்கும் போதே... தன் வீட்டின் மீதே... குண்டு வீசிக்கொண்ட கோவை சங் பரிவார நிர்வாகி களின் முந்திய பரிணாமமான...

ஸ்கூட்டர் எங்கும் அரபி குர்ஆன் ஸ்ட்ரிக்கர்கள் & உருதுவில் முஸ்லிம் பெயர் எழுதி ஒட்டி, அதில் ராணுவத்தில் இருந்து தருவித்த ஆர் டி எக்ஸ் பாம்ஐ பொருத்தி பல அப்பாவி மாலேகான் இந்தியர்களை கொன்றுவிட்டு, தப்பித்து முஸ்லிம்கள் மீது பழி போட எண்ணிய பிரக்யா சிங் சாத்வி & கர்னல் ஸ்ரீகாந்த் ப்ரோஹித் ஆகியோரின் முந்திய பரிணாமமான...


"இஸ்மாயில்" என கையில் பச்சை குத்திக்கொண்டு தங்கள் எதிரியான காந்தியை கொன்று பிடிபட்டு முஸ்லிம்கள் மீது பழி போட எண்ணிய... நாதுராம் கோட்சேக்களின் புதிய பரிணாமம்தான்...

இந்த... #ஜோகேந்திரா..!

அவ்வப்போது,
நேர்மையாளர் ஹேமந்த் கர்கரே வழியில் அதிரடியாக துப்பு துலக்கும் IANS-க்கு எனது மகிழ்வான வாழ்த்துகள்..!

வலைப்பூவில் இதை பதிந்த தங்களுக்கு மிகவும் நன்றி சகோ.மனிதாபிமானி.

jaffer khan said...

கோட்சோக்கள் இன்னும் இறக்கவில்லை :-(

enrenrum16 said...

தெரிந்தே இத்தனை அநியாயங்கள்!!!! இன்னும் வெளிவராத, காவல்துறை வெளிக்கொண்டுவர இயலாத/ வெளிக்கொணர விரும்பாத எத்தனை அநியாயங்களோ... இறைவனுக்கே வெளிச்சம்.

IANS க்கு எனது நன்றிகள்.

sulthan mydeen said...

IANS க்கு எனது நன்றிகள்