Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Tuesday 2 December 2014

சாத்வி நிரஞ்சன் ஜோதி உண்மையில் பேசியது என்ன?


மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி விவகாரத்தில் (சில) தமிழ் ஊடகங்கள் முழுமையான செய்தியை தரவில்லை. முஸ்லிம்களும் கிருத்துவர்களும் இராமரின் பிள்ளைகள் தான் என்று கூறியதற்காகவே இவ்வாறான சர்ச்சை வெடித்துள்ளதாக செய்தி சொல்கின்றனர்.


உண்மையில் இதையும் தாண்டிய விஷ கருத்துகளை சாத்வி தெரிவித்தது தான் உண்மை. 

அதாவது, டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில், 

"நீங்கள் யாருக்கு வாக்களிக்க விரும்புகின்றீர்கள்?, இராமரின் மகன்களுக்கா (Ramzada) அல்லது முறைகேடாக பிறந்தவர்களுக்கா (har****da)?" 

என்று விஷத்தை கக்கியது தான் இவ்விவகாரம் பூகம்பமாய் வெடித்ததற்கு காரணம். ஆதாரம் இங்கே 

"முறைகேடாக பிறந்தவர்கள்" என்ற பதத்திற்கு அவர் பயன்படுத்திய ஹிந்தி வார்த்தையை ஆங்கில ஊடகங்கள் சில கூட (நான் போட்டுள்ளது போல) *** என்று போட்டு தான் விவரிக்கின்றனர். அப்படியானால் இந்த அமைச்சரின் வார்த்தை பயன்பாடு தரத்தை நாம் புரிந்துக்கொள்ளலாம்.


காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இவ்விவகாரத்தில் எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது. மன்னிப்புடன் விடாமல் அவர் விலக வேண்டும், அவர் மீது எப்.ஐ.ஆர் போட வேண்டும் என்று பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஸ்தம்பித்து போக செய்துள்ளனர்.

எச்.ராஜா, சாத்வி போன்றவர்கள் பாஜகவின் தரத்தை நிர்ணயிக்கின்றார்கள் என்றால் அது மிகையல்ல.

கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ 
நன்றி: படங்கள் பெறப்பட்ட இணைய தளங்கள். 

5 comments:

Anonymous said...

அகமது, நீ இன்னுமாடா தமிழ் மணத்தில் இருக்கே

Aashiq Ahamed said...

ஆமா அனானி சகோ. நீங்க யாருன்னு தெரில. நலமா

உங்கள் மீது அமைதி நிலவட்டுமாக...

ஆமினா said...

//அகமது, நீ இன்னுமாடா தமிழ் மணத்தில் இருக்கே//

தமிழ்மணம் இன்னும் இருக்கா... தகவலுக்கு நன்றி...

suvanappiriyan said...

//தமிழ்மணம் இன்னும் இருக்கா... தகவலுக்கு நன்றி...//

தமிழ் மணம் என்னை நீக்கியவுடன் பார்வையாளர்கள் குறைந்து விடுவார்களோ என்று நினைத்தேன். ஆனால் முன்பை விட தற்போது அதிக பார்வையாளர்கள். :-)

Anonymous said...

http://www.faithfreedom.org/?p=10558