மதவாதிகளால் தமிழ்மணம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக ஒப்பாரி வைக்கும் அண்ணன் காவி.கே.,அவர்களுக்கு,(பெயர் காரணம் பின்னால்...)
அந்த ஓரிறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.
தமிழ்மணத்தை விட்டு விலகப்போவதாகவும் அண்ணன் காவி.கே., சொல்லியிருப்பது இது முதல்முறையல்ல....ஏற்கனவே, முற்றுப்புள்ளி என்ற பதிவின் மூலம் இதே கருத்தை
சொல்லியிருந்தார். ஆனால், போகவில்லை. எழுதுவதும், திரட்டிகளில் இணைப்பதும் அவரவர் உரிமை என்பதால் அதை விட்டுவிட்டு, அவரின் பதிவிற்கான விளக்கங்களை மட்டும் இப்போது பார்ப்போம்.
இப்போது தமிழ்மணத்தை அடைத்துக்கொண்டிருப்பது, மதப்பிரச்சாரம் செய்யும் பதிவுகள் தானென்றும், அப்படிப்பட்ட பதிவுகளே மகுடம் சூடுகிறது என்றும் தன் ஆதங்கத்தை, இயலாமையை வெளிப்படுத்தியிருக்கிறார் அண்ணன் காவி.கே. அவர்கள்.
அவர் பார்த்ததில் எது மதப்பிரச்சாரம் செய்யும் பதிவுகள் என்று தெரியவில்லை. இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிராக காழ்ப்பு உணர்ச்சியால் எழுதப்படும் பதிவுகளுக்கும்,
மதவாதிகள் அதை செய்கிறார்கள். இதை செய்கிறார்கள் என்று ஓலமிடும் போலி நாத்திக மதவாதிகளுக்கும் எதிராக விளக்கம் கொடுக்கிறார்கள் இஸ்லாமியர்கள். அப்படி விளக்கம் கொடுக்கப்படும் பதிவுகள் விரும்பியோ, விரும்பாமலோ அதிக வாக்குகளை பெற்று மகுடம் சூடிக்கொள்கிறது. இதனால் காவி.கே அவர்களுக்கு என்ன பிரச்சினை?
என் வீட்டை ஒருவன் தாக்க வந்தால், நான் எப்படி பார்த்துக்கொண்டிருப்பேன், நானும் தற்காப்பிற்கு தாக்குவேன். அதைப்போல் தான், இஸ்லாம் தாக்கப்ப்டும்போது எதிர் பதிவு போடுகிறார்கள். பதில் சொல்கிறார்கள். இது எப்படி மதப்பிரச்சாரம் ஆகும்?. நான் தாக்குவேன் அதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. ஆனால், தாக்கப்பட்ட நீ பதில் சொல்லக்கூடாது. அதற்கு உனக்கு உரிமை இல்லை என்றால் எப்படி சார்?. பதில் சொல்பவனுக்கு பெயர் மதவாதி என்றால்.....ஆரம்பித்து வைத்தவனுக்கு பெயர் என்ன சார்?
சாதரணமாக உங்கள் பெயரையே யாரும் சொல்லக்கூடாது என்று கோபமாகி ஒரு பதிவில் பின்னூட்டமாக போட்டு குவித்தீர்கள். (உங்கள் பெயரை நான் சொல்லாததற்கு காரணம் இப்போது விளங்குகிறதா?) உங்கள் பெயரை சொன்னதற்கே இவ்வளவு கோபப்பட்ட உங்களுக்கு, உலகம் முழுவதும் வேர் பரப்பி, வியாபித்திருக்கும் ஒரு மார்க்கத்திற்கு எதிராக எழுதுபோது எத்தனை பேர் பதில் சொல்வார்கள் என்று உங்களுக்கு விளங்காமல் போச்சே சார்?
அடுத்ததாக, இஸ்லாமியர் தளங்களில் மத நெடி தூக்கலாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு..... நீங்களும் இஸ்லாத்தின் பெருமைகளை எழுதமாட்டீர்கள். அவர்கள் எழுதினாலும் குற்றம் சொல்கிறீர்கள்..அப்புறம் என்ன தான் செய்ய சொல்கிறீர்கள். தானும் படுக்கமாட்டேன், தள்ளியும் இருக்கமாட்டேன் என்று அடம் பிடித்தால் எப்படி சார்?
சார்..உங்களுக்கு ஒரு விளக்கம்.....
நீங்கள் சிங்கப்பூரில் இருப்பதால் அந்த நாட்டின் அருமை பெருமையெல்லாம் நீங்கள் நன்றாக அறிந்திருப்பீகள். அதனால், சிங்கப்பூர் இப்படி ஒரு அருமையான நாடு என்று பதிவு போட்டால், நீங்கள் சிங்கப்பூருக்காக பிரச்சாரம் செய்கிறீர்கள் என்றா சொல்லிவிட முடியும்? அல்லது ஒரு கம்பேனியில் வேலை செய்கிறீர்கள்...அந்த கம்பேனியின் அருமை பெருமைகளை பற்றி நீங்கள் ஒரு பதிவு போட்டால், அந்த கம்பேனிக்கு மற்றவர்களை இழுக்கப்பார்க்கிறீர்கள் என்றுதான் சொல்லிவிட முடியுமா?. அதைப்பொல்தான் இஸ்லாமியர்கள் சார்ந்திருக்கும் மார்க்கத்தை பற்றி அவர்கள் தளத்தில் எழுதுகிறார்கள். அதெப்படி மதப்பிரச்சாரம் ஆகும்?
நாங்கள் பிரச்சாரம் செய்துதான் இஸ்லாத்திற்கு ஆள் சேர்க்கவேண்டும் என்ற நிலையிலோ, நிர்பந்தத்திலோ இஸ்லாம் இல்லை.
நீங்கள் சிங்கப்பூரை பற்றி பெருமையாக எழுதும்போதும், நாங்கள் இஸ்லாத்தை பற்றி பெருமையாக எழுதும்போதும், அதைப்படிப்பவர்களுக்கு இயற்கையாகவே அவர்கள் நாட்டைப்பற்றியும், அவர்கள் சார்ந்திருக்கும் மதத்தைப்பற்றியும் ஒரு ஒப்பீடு மனதில் தோன்றும்... அதற்கு நாங்கள் என்ன செய்யமுடியும்?
அடுத்ததாக, காவி.கே., அவர்களின் பெயரிலேயே சில போலிகள் பின்னூட்டமிடுகிறார்கள் என்று குற்றம் சொல்லியிருக்கிறார்.
அப்படி உங்கள் பெயரில் பின்னூட்டம் போட்டவர்கள் யாரென்று தெரிந்தால் சொல்லுங்கள். நிச்சயம் அதை இஸ்லாமிய பதிவர்கள் கண்டிக்கிறோம். இப்படி போகிற போக்கில் அள்ளித்தெளிக்க வேண்டாம்.
உங்கள் பெயரில் கமெண்ட் போடும் சில போலிகள் போல, இஸ்லாமிய பெயர்களிலும் ஒளிந்துகொண்டு சில விஷமிகள் ஆபாசமாகவும், அருவருப்பாகவும் கமெண்ட் போடுகிறார்கள் என்பதையும் தெளிவு படுத்த விரும்புகிறேன். அப்படி இஸ்லாமிய பெயர்தாங்கி வரும் கமெண்ட்களில் எல்லாம் இஸ்லாமிய பதிவர்களால் போடப்படுவதில்லை. கண்ணியக்குறைவாக வரும் எந்த கமெண்டும் இஸ்லாமியர்கள் போடமாட்டார்கள். அப்படி போடுபவர்கள் இஸ்லாமியரும் அல்ல....
அடுத்ததாக, மதவாதிகளுக்கு பயப்படுகிறேன், அவதூறுகளுக்கு பயப்படுகிறேன் என்று பம்மியிருக்கிறார் காவி.கே., அவர்கள்.
ஒரு கருத்தை முன்வைக்கும்போது, அந்த கருத்துக்கு வரும் எதிர்கருத்தையும் எதிர்கொள்ளும் திராணியும், தைரியமும் வேண்டும். அப்படிப்பட்ட மனப்பக்குவம் இருந்தால் தான் எந்த ஒரு கருத்தையும் சொல்லவேண்டும்.
இஸ்லாம் பற்றி அவதூறு சொல்வது நீங்கள். அதற்கு பதில் விளக்கம் சொல்வது நாங்கள். ஆனால், அதை அப்படியே மாற்றி, நீங்கள் சொல்வது கருத்து என்றும், நாங்கள் சொல்லும் விளக்கத்தை அவதூறு என்றும் திரித்து விட்டீர்கள். புத்திசாலி சார் நீங்கள்.
நீங்கள் சொல்வது கருத்து என்றால்.... இஸ்லாமிய பதிவர்களாகிய நாங்கள் சொல்வது விளக்கம்.
நீங்கள் சொல்வது அவதூறு என்றாலும் நாங்கள் சொல்வது விளக்கம் மட்டுமே...
அது உங்களுக்கு அவதூறாக தெரிந்தால் உங்கள் பார்வையில்தான் கோளாறு...
உங்களுக்கு தக்காளி சட்னியே வந்தாலும் அதற்கு பெயர் ரத்தம்.... ஆனால், எங்களுக்கு ரத்த்மே வந்தாலும் அதற்கு பெயர் தக்காளி சட்னி
என்றுதானே சார் சொல்ல வருகிறீர்கள்?
என்னதான், எப்படித்தான் எழுதினாலும் உங்கள் பதிவு மகுடம் சூட வில்லை என்ற இயலாமையில் தான் இதை எழுதியிருக்கிறீர்கள் என்று விளங்குகிறது.
அது உங்கள் தவறு.... மகுடம் சூடும் அளவிற்கு தகுதியான பதிவுகளை எழுதாமல் தரங்கெட்ட பதிவுகளை எழுதும் உங்களுக்கு மைனஸ் வோட்டுதான் விழும்...வேறென்ன மலர் மாலையா விழும்?
டிஸ்கி: தயவு செய்து இதற்கு வாக்களித்து, மகுடம் சூட்டி அண்ணன் காவி.கே., அவர்களின் கோபத்திற்கும் சாபத்திற்கும் ஆளாகவேண்டாம் நண்பர்களே.....
Tweet | ||||
13 comments:
//~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...
ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,
'அவருக்கு (kovi kannan) எதிர் கருத்து கொண்டவர்கள் எவருமே அவர் தம் பதிவை பகிரும் திரட்டிகளில் இருக்கவே கூடாது' என்ற ஃபாசிஸ சித்தாந்தம் நடுநிலை எண்ணம் கொண்ட நல்லோர் எவராலும் ஏற்றுக்கொள்ள இயலாதது..!
இவரின் இந்த 'மதஎதிர்ப்பு' என்பது சிறிது சிறிதாக 'மதஎதிர்வெறி'யாகும் போது அது 'மதவெறி'யைவிட கொடுமையானதாய் ஆகலாம்.
எப்படியெனில், தம் விருப்பத்துக்கு மாறாக எழுதுவோரை இன்று திரட்டியில் இருந்து நீக்க நினைக்கும் இவர் போகப்போக... "உலகத்தில் இருந்தே இவர்களை நீக்கினால்(?) என்ன?" என்றும் கூட நினைக்க ஆரம்பிக்கலாம்..!
சமூகத்துக்கு ஆபத்தானவர்களான இவர் போன்ற 'வெறிநிலை'யில் உள்ளவர்களுக்கு, நமது இஸ்லாமிய நல்லுபதேசம் மூலம் சாராசரி சிந்தனை கொண்ட... நல்ல 'நார்மல் நிலை' மனிதர்களாக இவர்களை மாற்ற நாம் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்..! //
commented in SOURCE: http://suvanappiriyan.blogspot.com/2012/01/blog-post_28.html
//டிஸ்கி: தயவு செய்து இதற்கு வாக்களித்து, மகுடம் சூட்டி அண்ணன் காவி.கே., அவர்களின் கோபத்திற்கும் சாபத்திற்கும் ஆளாகவேண்டாம் நண்பர்களே....//
இதுக்கு கமெண்டாவது போடலாமா..!!!!! :-)))))))))))))))))))))))))))
அழகிய முறையில் சகோ கோவி கண்ணனுக்கு விளக்கம் அளித்துள்ளீர்கள். நன்றி!
http://suvanappiriyan.blogspot.com/2012/01/blog-post_28.html
கோவிக் கண்ணன் போன்ற சிறந்த பதிவர்கள் குஷ்பு போன்ற தியாகிகளை பேட்டியெடுத்து தனது பதிவின் மூலம் தமிழ்த் தொண்டாற்றும் படி கேட்டுக் கொள்கிறேன்.
அடுத்து மத சம்பந்தமாக நிறைய பதிவுகள் வருவதாகவும் தான் இதைக் கண்டு பயப்படுவதாகவும் கூறியிருக்கிறார். எனவே இனி நானும் நடிகரகளின் நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையைப் பற்றியும், பல ருசிகரமான செய்திகளை பகிரலாம் என்று எண்ணம் வருகிறது.
இல்லை என்றால் ஈழத்தமிழர்கள் சிறந்தவர்களா, தமிழ்நாட்டு தமிழர்கள் சிறந்தவர்களா? என்ற ரீதியில் பல பதிவுகளையும் எழுதலாம் என்றிருக்கிறேன். அதை விட தமிழர்களின் சாதியில் தற்போது எந்த சாதி சிறப்பாக வர்ணாசிரமத்தைக் கடைபிடிக்கிறது என்பதை பற்றியும் பல பதிவுகள் எழுதலாம்.
இதை எல்லாம் பிடிக்கவில்லை என்றாலும் இனி என்னைப் போன்றவர்கள் என்னென்ன தலைப்புகளில் எழுத வேண்டும் என்று கோவிக் கண்ணன் ஒரு லிஸ்டை கொடுத்து விட்டால் இன்னும் சுலபமாக இருக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
டிஸ்கி: தனிப்பட்ட நபர்களின் தாக்குதல் இல்லாமல் ஆபாசம் இல்லாமல் உலக நடப்புகள் அனைத்தையும் ஒருவன் தெரிந்து கொள்ள முயற்ச்சிப்பது தவறா?
இந்து மதத்தின் பெருமையை பல பதிவர்கள் இன்று வரை வெளியிட்டு வருகிறார்கள். கிறித்தவ மதமும் பகுத்தறிவு பிரசாரமும் இவ்வாறே!
யாரும் இதை எதிர்த்து குரல் கொடுக்கவில்லையே!
இஸ்லாத்தை பற்றி பல இடங்களில் விமர்சனம் வைக்கப்பட்டதாலேயே அதற்கு விளக்கம் கொடுக்க அவசியம் உண்டாகிறது. இது போன்று பிறந்ததுதான் அனேக பதிவுகள்.
பதிவுகளில் தவறுகள் இருந்தால் அதை சுட்டிக்காட்ட வேண்டும். அல்லது அதை விளக்கி அவரும் பதிவுகள் எழுதலாம். அதை விடுத்து அழுகினி ஆட்டம் என்று அழுது மூக்கை சிந்துவது அழகுடைய செயலா?
http://suvanappiriyan.blogspot.com/2012/01/blog-post_28.html
சுவனப்பிரியன் said...
திரு கோவிக் கண்ணன்!
சமீப காலமாகவே உங்கள் பதிவுகளில் நிறைய தடுமாற்றம். ஏன் இப்படி? பழைய கோவி கண்ணன் எங்கே? வாரத்தில் சில பதிவுகள் மத சம்பந்தமானவை இடம் பிடிப்பதில் ஏன் இவ்வளவு பொறாமை உங்களுக்கு?
இதற்கு முன் நாத்திக பதிவுகளும், ஆபாச பதிவுகளும் இஸ்லாமிய எதிர்ப்பு பதிவுகளும் மகுடத்தை எட்டிய போதும் சூடான இடுகைகளில் வந்த போதும் யாரும் இவ்வாறு பொங்கவில்லையே!
எதிர்க் கருத்து சொல்வதற்கு உங்களிடம் சரக்கு இல்லை என்பதை இப்படிப் பதிவு எழுதி போட்டு உடைத்திருக்க வேண்டாம்.
காலம் கடந்து விடவில்லை. இனிமேலாவது மத வாதிகள் வைக்கும் வாதத்தை தர்க்க ரீதியாக பதிவிட்டு முறியடிக்க முயற்சி பண்ணுங்கள்.
SOURCE;http://suvanappiriyan.blogspot.com/2012/01/blog-post_28.html
அன்பு சகோ
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அருமையாக விளக்கமிட்டு இருக்கிறீர்கள்.
இதுவே தெளிவான மறுப்பாகவும் -விளக்கமாகவும் இருக்கும் என நினைக்கிறேன்.
அவரது நிலைப்பாடிற்கு.
பொறுத்திருப்போம்.,
அவரது கருத்தை அறிய
இன்ஷா அல்லாஹ்
எப்பா மனிதாபிமானி,
ஆனாலும் நீங்க ரொம்பத்தான் ஸ்பீடு. இப்பதான் கோவி கண்ணன் அவர்களுடைய தளத்தில் மாற்றுப் பதிவு போடுகிறேன் என்று சொல்லிவிட்டு T . Nagar போயிட்டு வந்தேன்
அதுக்கிடையில முந்திகிட்டீங்களே. ஒரு பதிவும் ஒரு மகுடமும் போச்சே????
இருங்க இருங்க English Smell அண்ணன்கிட்ட சொல்றேன். ரொம்பத்தான் வேகமா இருக்கிய.
எச்சூஸ்மி,
எனக்கு காவிகளின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளாக ஆசை :-)
எல்லாத்துக்கும் காரணம் வயித்தெரிச்சல் ஒன்றே..
#பதில் சொல்பவனுக்கு பெயர் மதவாதி என்றால்.....ஆரம்பித்து வைத்தவனுக்கு பெயர் என்ன சார்?#
நறுக்குன்னு ஒரு கேள்வி...சூப்பர்...
அஸ்ஸலாமு அலைக்கும் சூப்பர் சகோ இவர்களின் கேள்விக்கு பதில் கொடுத்தால் வந்துவிட்டார்கள் வக்காலத்து வாங்கனு சொல்வாங்க.இவர்களுக்கு என்னதான் பதில் சொன்னாலும் இவர்கள் காது கொடுத்து கேட்பது கிடையாதுனு நாம் ஒதுங்கி போனால் இவர்களிடம் வரும் கமென்ட் என்ன தெரியுமா?எங்கே சென்று ஓடி ஒளிந்துவிட்டார்கள் மதத்தை தூக்கிபிடிக்கும் மதவாதிகள்.இவர்களுக்கு பதில் சொன்னாலும் தப்பு, சொல்லாமல் போனாலும் தப்பு.என் மார்க்கத்தை இவர்கள் விமர்சனத்துக்கு உள்ளாக்குவார்களாம் என் மார்க்கத்திலுள்ள பயன்களை பிறருக்கு நான் தெளிவுபடுத்தகூடாதாம்,என்ன கொடுமை?உங்களுக்கு எப்படி நாத்திகம் சரின்னு படுதோ அதுபோலத்தான் எங்களுக்கு ஏக இறைக்கொள்கை சரின்னு படுது.போலி நாத்திகர்கள்தான் மதப்பிரச்சாரக்கூடமாக தமிழ்மணம் மறிக்கொண்டிருக்கின்றது என்று சொல்கின்றார்களே ஒழிய உண்மையான நாத்திகர்கள் சொல்வதாக தெரியவில்லை.
ஸலாம் சகோ.மனிதாபிமானி,
அவதூறுக்கான விளக்கம் அருமை சகோ.
அடுத்து, இனிமேல் இவர் போன்றவர்களுக்கு என்ன தீர்வு என்பது பற்றி ஓர் அலசல் பதிவு போட்டு இருக்கிறேன்...
'மதஎதிர்வாதி' -- ஓர் அறிமுகம்
படித்து விட்டு கருத்து சொல்லுங்கள் சகோ.மனிதாபிமானி.
சலாம்.அருமையான விளக்கம் சகோ
Post a Comment