Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Wednesday, 26 February 2014

முஸ்லிம்களே ஒருமுறை வாய்ப்பளியுங்கள் - பாஜக தொபுக்கடீர்..


"மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஒரு வாய்ப்பு அளிக்குமாறு, அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் இஸ்லாமியர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

'பிரதமர் பதவிக்கு மோடி - இலக்கு 272-ல் இஸ்லாமியர்களின் பங்கு' என்ற தலைப்பில் டெல்லியில் நடந்த கூட்டத்தில் அவர் இன்று இஸ்லாமியர்கள் மத்தியில் பேசியது:

'நான் சொல்வதை தயவுசெய்து குறித்துவைத்துக் கொள்ளுங்கள். எப்போதாவது, எங்கேயாவது எங்கள் தரப்பில் ஏதேனும் தவறு நேர்ந்திருந்தால், நாங்கள் தலை வணங்கி மன்னிப்புக் கோருவோம் என்று உறுதியளிக்கிறேன்.

பாஜக, இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல. இந்த விஷயத்தில் பாஜகவுக்கு எதிரான பிரசாரத்தை இஸ்லாமிய சமூகத்தினர் நம்ப வேண்டாம். தேச நலனைக் கருத்தில்கொண்டு, இஸ்லாமியர்கள் இம்முறை பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

எங்களை ஒருமுறைத் தேர்வு செய்து பாருங்கள். உங்களது எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை எனில், எங்களுக்கு அதன்பின் ஒருபோதும் ஆதரிக்க வேண்டாம்.

ஓர் அரசைத் தேர்ந்தெடுப்பதற்காக அல்லாமல், சகோதரத்துவமும், மனிதநேயமும் மிக்க வலிமையான தேசத்தை உருவாக்குவதற்கு இஸ்லாமிய சமூகத்தினர் பாஜகவை ஆதரிக்க வேண்டும்' என்றார் ராஜ்நாத் சிங்"

நன்றி: தி ஹிந்து. 

தேர்தல் வருவதற்குள் இன்னும் என்னென்ன கூத்தடிக்க போகின்றதோ பாஜக. 

ராஜ்நாத் சிங் அவர்களே, பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது' என்ற பழமொழி உங்களுக்கு அப்படியே பொருந்துகின்றது. செய்வதையெல்லாம் செய்துவிட்டு இப்படி பேசும் போது கொஞ்சம் கூட உங்க மனசாட்சி உறுத்தவில்லையா? 

வாய்ப்பு என்பது யாருக்கு வழங்கப்பட வேண்டியது? தேளை மடியில் வைத்துக்கொன்டு அது கொட்டாது, பயப்படாம இருங்க என்று கூறுபவர்களுக்கு வழங்கப்படுவதா வாய்ப்பு? வகுப்புவாத சித்தாந்தங்களை தன் அடிப்படையிலேயே வைத்துக்கொண்டுள்ள நீங்கள் இப்படியாக பேசும் போது கொஞ்சம் கூட யோசிக்க தோன்றாதா?

அத்வானி நடைப்பயணம், பாபர் மசூதி இடிப்பு, மும்பை கலவரம், குஜராத் இனப்படுகொலை, முஸாபர்நகர் வகுப்பு கலவரம் இத்யாதி இத்யாதி என்று வரிசையாக மக்களின் இரத்தத்தை குடித்துவிட்டு இன்று முஸ்லிம்களின் பக்கம் தொபுக்கடீர் என்று விழுகின்றீர்களே உங்களையெல்லாம் எந்த கணக்கில் சேர்த்துக்கொள்வது? 

அதிலும் மோடி போன்ற ஒருவரை பிரதம வேட்பாளராக அறிவித்து விட்டு, நீங்கள் பேசக்கூடிய தேன் தடவிய வார்த்தைகளுக்கு மயங்கும் நிலையில் எல்லாம் முஸ்லிம்கள் இல்லை. நீங்கள் ஏற்படுத்திய வகுப்புவாத காயங்களின் வடு ஆறாமல் உறுத்திக்கொண்டிருக்கின்றது. தேர்தல் களத்தில் சந்திப்போம் அய்யா. எங்களின் வேதனையை உணர்ந்த முஸ்லிமல்லாத சகோதரனோடு இந்திய முஸ்லிம் ஒவ்வொருவனும் உங்கள் தோல்விக்காக பாடுபடுவான். 

உங்கள் பேச்சை படிக்கும் போது, இம்சை அரசன் படத்தில் தியாகு சொல்லும் வசனம் தான் நினைவுக்கு வந்து தொலைகின்றது. "படுத்தே விட்டாரையா"


31 comments:

Sabareesan said...

Yes, let us vote for Congress.
Good for China, Pakistan and Srilanka.

Jafarullah Ismail said...

அதிலும் மோடி போன்ற ஒருவரை பிரதம வேட்பாளராக அறிவித்து விட்டு, நீங்கள் பேசக்கூடிய தேன் தடவிய வார்த்தைகளுக்கு மயங்கும் நிலையில் எல்லாம் முஸ்லிம்கள் இல்லை. நீங்கள் ஏற்படுத்திய வகுப்புவாத காயங்களின் வடு ஆறாமல் உறுத்திக்கொண்டிருக்கின்றது. தேர்தல் களத்தில் சந்திப்போம் அய்யா. எங்களின் வேதனையை உணர்ந்த முஸ்லிமல்லாத சகோதரனோடு இந்திய முஸ்லிம் ஒவ்வொருவனும் உங்கள் தோல்விக்காக பாடுபடுவான்.

Jafarullah Ismail said...

அதிலும் மோடி போன்ற ஒருவரை பிரதம வேட்பாளராக அறிவித்து விட்டு, நீங்கள் பேசக்கூடிய தேன் தடவிய வார்த்தைகளுக்கு மயங்கும் நிலையில் எல்லாம் முஸ்லிம்கள் இல்லை. நீங்கள் ஏற்படுத்திய வகுப்புவாத காயங்களின் வடு ஆறாமல் உறுத்திக்கொண்டிருக்கின்றது. தேர்தல் களத்தில் சந்திப்போம் அய்யா. எங்களின் வேதனையை உணர்ந்த முஸ்லிமல்லாத சகோதரனோடு இந்திய முஸ்லிம் ஒவ்வொருவனும் உங்கள் தோல்விக்காக பாடுபடுவான்.

நம்பள்கி said...

+1

jaffer khan said...

சரியாக சொன்னிங்க பாய்

சிராஜ் said...

15% சதவிகித ஓட்டு என்பது சாதாரணமானது அல்லவே???

4 சதம் ஓட்டு வித்தியாசத்திலே பல ஸ்வீப்கள் நடந்து உள்ளது...

முஸ்லிம்களின் ஓட்டின் தேவை இருப்பதாலே அவர் இவ்வாறு பேசி உள்ளார்...

இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை... சதிச்செயல்களும், நயவஞ்சக பேச்சுக்களும் இவர்களுக்கு புதுசா என்ன???

Anonymous said...

"எங்களின் வேதனையை உணர்ந்த முஸ்லிமல்லாத சகோதரனோடு இந்திய முஸ்லிம் ஒவ்வொருவனும் உங்கள் தோல்விக்காக பாடுபடுவான். "

மோடிக்கு எதிராக நீங்க செயல்படுங்க. எதுக்கு எங்களை இழுக்குறீங்க...
இதுவரை காலமும் பாஜக வை கணக்கில் எடுத்திராத எங்கள் குடும்பமும் , ஊரும் இந்த முறை பாஜக வுக்கு vote போட முடிவு செய்திருக்கின்றது.
அதற்க்கு மோடி மட்டும் காரணம் அல்ல.
இஸ்லாமிய அடிப்படை வாத வெறியர்களும் காரணம் ..

நீங்கள் என்ன காரணமும் சொல்லலாம் ... (காரணங்கள் சொல்வதும் அடைப்பு குறி போடுவதும் தங்களுக்கு கைவந்த கலை என்பது எமக்கு புரியும். ஆனால் இனி நாம் உங்களிடம் ஏமாற போவதில்லை )

பூங்குன்றன்

K Gopaalan said...

ராஜ்நாத் சிங் பேசியதன் அர்த்தம்:

//எங்களுக்கு விரோதிகள் எங்க மதத்திலேயே இருக்காங்க. நீங்களும் அவங்களோட சேந்துக்கங்க.//

இஸ்லாமியரைப் பெரிதும் மதிக்கும் என்போன்றவர்களையும் இதுபோன்ற பதிவுகள் மாற்றிவிடும். குஜராத் கலவரங்களுக்கான ஒரே காரணத்தை மக்களிடம் எடுத்துரைக்க முன்வருவீர்களா. அல்லது அதையும் மோடிதான் ஏற்பாடு செய்தார் என்று இதுபோன்றே பேசுவீர்களா.

ந்ன்றி,

கோபாலன்

aashiq ahamed said...

@ சலாம் சகோ பூங்குன்றன்,

//மோடிக்கு எதிராக நீங்க செயல்படுங்க. எதுக்கு எங்களை இழுக்குறீங்க...//

உங்கள ஏன் சகோ இழுக்குறேன்? நல்லா படிச்சு பாருங்க. 'எங்கள் வேதனையை உணர்ந்த' என்று எழுதியுள்ளேன். அது நீங்கள் இல்லையென்றால் பிரச்சனை இல்லை சகோ.

//அதற்க்கு மோடி மட்டும் காரணம் அல்ல.
இஸ்லாமிய அடிப்படை வாத வெறியர்களும் காரணம் ..//

ஆஹா. அப்ப சங்கரிவார கும்பல் எல்லாம் யாரு? அங்கிருந்த வந்த பாஜக யாரு? நீங்கள் சொல்ற அடிப்படைவாத வெறியர்கள் (??) எல்லா சமயத்திலேயும் தான் இருக்காங்க. அதுக்காக நீங்க எடுக்குற முடிவு லாஜிக்கா தெரிஞ்சா ரொம்ப சந்தோசம் சகோ..

நன்றி சகோ..

aashiq ahamed said...

நம்ம கள்ள வோட் ஆள் வளைச்சு வளைச்சு மைனஸ் குத்திருக்காறு...சமாதானமும் சாந்தியும் உங்கள் மீது நிலவட்டுமாக சகோ...

aashiq ahamed said...

சலாம் சகோ கோபாலன்,

//இஸ்லாமியரைப் பெரிதும் மதிக்கும் என்போன்றவர்களையும் இதுபோன்ற பதிவுகள் மாற்றிவிடும்//

சீரியஸா என்ன சொல்ல வரீங்கன்னு புரில. எந்த விதத்துல இந்த பதிவு மாற்றும்? இத்தன நாளா அட்டூழியம் புரிஞ்சிட்டு இப்ப முஸ்லிம்கள் கிட்ட மண்டியிடுறது சரியான்னு இந்த பதிவு கேட்கின்றது. இதுல என்ன குத்தம் இருக்கு சகோ?

இல்ல, பதிவுல சொன்னதெல்லாம் இல்லைன்னு சொல்ல போறீங்களா?

நன்றி சகோ

Anonymous said...

I like Modi. I like Abdul Kalam. I vote for Modi this election. Do you?

SUMAZLA/சுமஜ்லா said...

வேட்டையாடி ரத்தம் குடித்து அலுத்து போனதால் இனி அட்டையை போல் ஒட்டிக் கொண்டு உறிஞ்ச ஐடியா பிரமாதம். மோடி வித்தைக்காரனின் வித்தைகளில் இதுவும் ஒன்று என்ற்ய் எங்களுக்கு புரியாதா என்ன...!!!

Anonymous said...

எல்லா மதத்திலும் மத அடிப்படைவாதிகள் இருக்கின்றார்கள் என்பதை நீங்க சொல்லுறது நல்ல விடயம்.
பாஜக மத அடிப்படிவாதிகள் என்பதில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை.

"இதுவரை காலமும் பாஜக வை கணக்கில் எடுத்திராத எங்கள் குடும்பமும் , "
நான் முதலே குறிப்பிட்டிருக்கின்றேன் நாங்கள் முன்பு பாஜக ஆதரவு இல்லை.
நீங்களே மத வாதம் எடுக்கும் போது நாங்கள் எதுக்கு நடுவில் நிற்க வேண்டும். இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் இந்துகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை நாங்கள் இப்போது உணர்கிறோம்.

இது தனிப்பட்ட ஒரு மனிதனின் கருத்து அல்ல. பலர் இந்துகளின் உணர்வு என்பதை உணர்ந்திருப்பீர்கள். 1990 களுக்கு 1980 களுக்கு முன் இந்த நிலை இருக்கவில்லை. அது உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும்.

எந்த தொகுதியிலும் டெபாசிட் இழக்காம தோக்காத பாஜக இன்று தமிழகத்தில் துணிச்சலுடன் நிட்பதுக்கு காரணம் நிச்சயம் மோடி அல்ல. மோடி அலை குளம் எல்லாம் வட மாநிலங்களில் தான். ஆனால் அதையும் தாண்டி பாஜக மீது அபிமானம் வருகின்றது என்றால் நீங்கள் சிந்திக்க தான் வேண்டும்.

மோடியை எதிர்ப்பது உங்கள் உரிமை ஆதரிப்பது எங்கள் உரிமை. மோடியை நாங்கள் ஆதரிக்க காரணமே நாங்கள் உணரும் பாதுகாப்பின்மைதான்.

நீங்கள் மதவாதி கட்சிகளை ஆதரிக்கும் போது அதற்க்கு 1000 நியாயம் கற்பிக்கும் போது நாங்கள் இன்னொரு மதவாத கட்சியான பிஜேபியை ஆதரிப்பதில் தவறு இல்லை

பூங்குன்றன்

Anonymous said...

Idhe Ina Unarvu, Rosham, Maanam ellaaa Hindu Makkalukkum irundhal poadhum. Naam yaaridamum kaiyendha vaendiyadhu illai... Chidam

aashiq ahamed said...

சகோ பூங்குன்றன்,

மறுபடியும் உங்கள் மீது அமைதி உண்டாவதாக...

நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் வோட்டு போடலாம், அதை தடுக்க நான் யார்? நீங்கள் அதோடு சொல்லி விட்டிருந்தால் நான் பதிலே அடித்திருக்க மாட்டேனே?

நீங்க அடிப்படைவாத வெறி அது இதுன்னு சொன்னதாலே தான் திரும்ப கேட்க வேண்டி வந்தது. இந்து அடிப்படைவாதிகளால் முஸ்லிம்களுக்கு ஆபத்து, முஸ்லிம் அடிப்படைவாதிகளால் இந்துக்குகளுக்கு ஆபத்து. இது இயல்பாவே எல்லோருக்கும் தெரிவது தானே. என்ன சகோ சொல்ல வரீங்க?

அப்புறம் நாங்க மதவாதத்திற்கு ஆதரவு அளித்தோமா? முஸ்லிம் மதவாத கட்சியா அது எங்கிருக்கு? கொஞ்சம் சொல்லுங்களேன்.

aashiq ahamed said...

சகோ அனானி,

அமைதி உண்டாவதாக...

//Idhe Ina Unarvu, Rosham, Maanam ellaaa Hindu Makkalukkum irundhal poadhum. Naam yaaridamum kaiyendha vaendiyadhu illai..//

என்ன சொல்றீங்க சகோ? அப்ப ராஜ்நாத் சிங்கிற்கு இன உணர்வு ரோஷம் மானம் இதெல்லாம் இல்லாததாலே தான் முஸ்லிம்களிடம் கையேந்துகின்றார் என்கின்றீர்களா?

K Gopaalan said...

சலாம் சகோதரர் அஹமது,

எனது கேள்விகள் உங்கள் அட்டூழியம் என்ற வார்த்தை பற்றியது.

1. யாருமே தொழாத ஒரு மசூதியை தங்களது சகோதரர்களுக்காக அயோத்தியாவில் விட்டுக் கொடுத்திருக்கலாமே. என் போன்றோரின் கேள்வி அதுதான். பல மசூதிகள் கோவில்களை இடித்து உருவானவை இல்லை என்று கூறுவீர்களா.

2. குஜராத் கலவரத்தைப் பற்றி இவ்வளவு பேசும் நீங்கள் கோத்ராவில் 60 பேர் உயிர் இழந்ததைப் பற்றி ஏன் வெளியிட மறுக்கிறீர்கள். வேறு யாராவது இதுபோல செய்திருந்தால் நீங்கள் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்று சொல்லிக் கொண்டு அமைதியாக இருப்பீர்களா ஆயிரம் அப்பாவி மக்கள் உயிரிழந்த கோரமான நிகழ்வு அதிலிருந்துதானெ தொடங்கியது. .

முடிவில், உங்களைக் காக்க பாகிஸ்தானியர்கள் இருக்கிறார்கள். இந்துக்களுக்கு. ச்ங்பரிவார் இருப்பது தவறா.

ராஜ் நாத் சிங் உடைய வேண்டுகோள் ஒரு தரமற்ற கேளிக்கை. வாக்கு வாங்கக் காலில் விழுவது நமது நாட்டில் புதிதல்ல.

எனது பதிவை வெளியிட்டதற்கு ந்ன்றி. இப்போதும் தொடருமா.

கோபாலன்

aashiq ahamed said...

வஸ்ஸலாம் சகோ கோபாலன்,

பூனைக்குட்டி வெளியே வருகின்றது பாருங்க சகோ.

//1. யாருமே தொழாத ஒரு மசூதியை தங்களது சகோதரர்களுக்காக அயோத்தியாவில் விட்டுக் கொடுத்திருக்கலாமே. என் போன்றோரின் கேள்வி அதுதான். பல மசூதிகள் கோவில்களை இடித்து உருவானவை இல்லை என்று கூறுவீர்களா.//

இந்தியா என்ற தேசமே இல்லாத நிலையில் மன்னர்களின் மண் பிடிக்கும் ஆசைக்கு அழிந்து போன வரலாறெல்லாம் தோன்றுவீர்களா சகோ? அப்படியானால் எத்தனை எத்தனை மன்னர்கள் மற்றவன் நாட்டை பிடித்து கோவில்களை அளித்துள்ளான் அதையெல்லாம் பேசுவோமா? ஹிந்து கோவில்கள் பலவற்றிற்கும் முன்பாக புத்த விஹார்களாக இருந்ததாக ஆவணங்கள் உண்டே, அப்படியானால் அங்கே விஹார்களை நிறுவி விடலாமா சகோ. உங்கள் கருத்தில் ஏதேனும் லாஜிக் உள்ளதா? இன்றும் மசூதியை இடித்தது குற்றம் தான் மன்னித்து விட்டுகொடுத்து விடுங்கள் என்று சங்பரிவாரங்கள் கூறட்டும். என்னை போன்ற பலர் சமூக அமைதிக்காக விட்டு கொடுக்க தயாராகவே உள்ளோம். அதே நேரம் இன்று இதனைஇடித்தவர்கள் நாளை இங்கு தான் கிருஷ்ணர் விளையாடினார் என்று வேறு இடத்தை இடிக்க மாட்டார்கள் என்று உறுதி கூற உங்களால் முடியமா சகோ?

//2. குஜராத் கலவரத்தைப் பற்றி இவ்வளவு பேசும் நீங்கள் கோத்ராவில் 60 பேர் உயிர் இழந்ததைப் பற்றி ஏன் வெளியிட மறுக்கிறீர்கள். வேறு யாராவது இதுபோல செய்திருந்தால் நீங்கள் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்று சொல்லிக் கொண்டு அமைதியாக இருப்பீர்களா ஆயிரம் அப்பாவி மக்கள் உயிரிழந்த கோரமான நிகழ்வு அதிலிருந்துதானெ தொடங்கியது//

தீவிரவாதம் எந்த உருவில் இருந்தாலும் அது கண்டிக்கப்பட வேண்டியதே, வேரறுக்க பட வேண்டியதே. இதுல என்ன சொல்லனும்னு எதிர்பார்க்குறீங்க?

//முடிவில், உங்களைக் காக்க பாகிஸ்தானியர்கள் இருக்கிறார்கள்//

சுத்தம். இதுக்கு மேல என்ன பேச?

நன்றி சகோaashiq ahamed said...

//ராஜ் நாத் சிங் உடைய வேண்டுகோள் ஒரு தரமற்ற கேளிக்கை. வாக்கு வாங்கக் காலில் விழுவது நமது நாட்டில் புதிதல்ல.//

இத மறந்துட்டேன் பாருங்க. இப்படியாக வாக்குகளுக்காக எதையும் செய்ய துணியும் கேடு கேட்டவர்களுக்கு தான் வோட்டு போட சிலர் எண்ணியுள்ளனர்..ம்ம்ம்ம்

K Gopaalan said...

சலாம் சகோதரர் அஹமது,

//ஹிந்து கோவில்கள் பலவற்றிற்கும் முன்பாக புத்த விஹார்களாக இருந்ததாக ஆவணங்கள் உண்டே, அப்படியானால் அங்கே விஹார்களை நிறுவி விடலாமா சகோ. உங்கள் கருத்தில் ஏதேனும் லாஜிக் உள்ளதா? இன்றும் மசூதியை இடித்தது குற்றம் தான் மன்னித்து விட்டுகொடுத்து விடுங்கள் என்று சங்பரிவாரங்கள் கூறட்டும். என்னை போன்ற பலர் சமூக அமைதிக்காக விட்டு கொடுக்க தயாராகவே உள்ளோம். அதே நேரம் இன்று இதனைஇடித்தவர்கள் நாளை இங்கு தான் கிருஷ்ணர் விளையாடினார் என்று வேறு இடத்தை இடிக்க மாட்டார்கள் என்று உறுதி கூற உங்களால் முடியமா சகோ?/

இதில் சங்பரிவார் எங்கிருந்து வருகிறது. எந்த ஒரு இஸ்லாமிய நாட்டிலும் மற்ற மதத்தினர் இது போன்ற பதில் கூறமுடியுமா. நாங்கள் இடித்த புத்தர் சிலைகள் எங்கள் வீட்டில் இருக்கிறது. நீங்கள் இடித்த கடவுள் சிலைகள் உங்கள் இல்லத்திலே உள்ளதா என்றெல்லாம் விவாதம் திரும்பிவிடும்

//இப்படியாக வாக்குகளுக்காக எதையும் செய்ய துணியும் கேடு கேட்டவர்களுக்கு தான் வோட்டு போட சிலர் எண்ணியுள்ளனர்//.

இத்தனை ஆண்டுகள் தாங்கள் இதுபோன்ற கேடு கெட்டவர்களுக்குத்தானே ஓட்டுப் போட்டு வந்தீர்கள்.

தங்களது தரமான நேர்மையான பதில்களுக்கு மிக்க ந்ன்றி.

கோபாலன்


aashiq ahamed said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோ கோபாலன்...

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

நரேந்திர மோடியை டெல்லியில் முஸ்லிம்கள் அதிகம் நடமாடும் ஒரு நடுததெருவில் ஓடவிட்டு கதற கதற அவரை செருப்பால் அடித்து மூஞ்சியில் காரி துப்பி உள்ளார் ராஜ்நாத் சிங்...! பதிலுக்கு மோடி நாளை இதே வேலையை ராஜ்நாத் சிங் மீது செய்வார் என்று எதிர்பார்க்கிறேன். எனக்கு இப்படித்தான் தோன்றுகிறது..!

குஜராத்தில் முஸ்லிம்கள் மோடிக்கு ஓட்டு போட்டதும் போதும்... காற்றில் எரிந்து கரிந்து கரும் புகைகளாக கலந்ததும்... மண்ணில் கண்டம் துண்டமாக வெட்டி எறியப்பட்டு பிணங்களாக புதையுண்டதும் போதும்..! போதும்..! இந்தியா ஒரு குஜராத்தாக இனி ஒருக்காலும் மாறவே வேண்டாம்..! இன்னும் எத்தனை முறைதான் படிப்பினை பெறுவதாம்..? முட்டாள்களா இந்திய முஸ்லிம்கள்..? அடப்போங்கடா... பச்சோந்திகளா..! உங்களை இதுவரை நம்பிக்கொண்டு இருந்த உங்கள் காவிக்கூட்டமே இனி காறித்துப்புவார்களடா..!

சுவனப் பிரியன் said...

பலரையும் சிந்திக்க வைக்கும் பதிவு!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

//யாருமே தொழாத ஒரு மசூதியை தங்களது சகோதரர்களுக்காக அயோத்தியாவில் விட்டுக் கொடுத்திருக்கலாமே. என் போன்றோரின் கேள்வி அதுதான்.//

உங்கள் மகளின் கணவனை நீங்களே குத்தி கொலை செய்து விட்டு... "தாலியறுத்த கழுத்தை காண சகிக்கலைடி மூலியே" என்று உங்கள் மகளை பார்த்து தினமும் ஏளனப்பாட்டு பாடுவீர்களா சகோ. கோபாலன்..???

இன்னும் எத்தனை காலம் தான் இப்படி பொய் சொல்லிக்கொண்டே இருப்பீர்கள் சகோ. கோபாலன்..???

உங்களின் திருட்டுப்பொருக்கி அண்ணன் மார்கள் சிலர் மிட்நைட்டில் பாபர் மஸ்ஜிதின் பூட்டிய கதவை உடைத்து உள்ளே புகுந்து இமாம் நிற்கும் மிம்பரில் ராமன் சிலையை வைப்பதற்கு சில மணி நேரம் முன்னர் வரை தினமும் ஐவேளை பாங்கு சொல்லி காமத் சொல்லி அயோத்தி முஸ்லிம்களின் தொழுகை நடந்து கொண்டே இருந்து வந்தது சகோ. கோபாலன்..!!!

அந்த போக்கிரி பொறம்போக்கு கழிசடை குற்றவாளிகள் வைத்த ராமர் சிலையை அடுத்த நாள் அதிகாலை பஜ்ர் தொழுகைக்கு வந்த அயோத்தி முஸ்லிம்கள்....

சிறுபான்மையினருக்கு மட்டும் நீதி நெறி தவறும் சட்டமும், அநீதி இழைக்கும் கோர்ட்டும், கிள்ளுக்கீரையாக எள்ளி நகையாடும் அரசும் கோலோச்சும் நாட்டில்...

அன்று போலீசிடம் போயி கம்ப்ளைண்டு கொடுத்து FIR போட வைக்காமல்...

நைய்சாக அந்த சிலையை கண் காணாத இடத்தில் தூக்கி கடாசி விட்டு... கண்ணும் காதும் வச்சா மாதிரி... ஒன்னுமே நடக்காத மாதிரி... பஜ்ர் தொழுது விட்டு... பள்ளியின் கதவை ரிப்பேர் பண்ணி புதிய தாழ்ப்பாள் போட்டு... இன்னும் பல பூட்டு போட்டு... தினமும் காவலுக்கு பலசாலிகள் சிலர் ஆயுதங்களுடன் பாபர் மஸ்ஜித் வாசலில் படுத்திருந்தால்....

இறைவன் மீது சத்தியமாக.. சொல்கிறேன் சகோ. கோபாலன்.....

இன்று நம் இந்தியா அமைதிப் பூங்காவாக திகழ்ந்து கொண்டு இருந்திருக்கும் சகோ.கோபாலன்..!!!

பாஜக என்ற சனியன் ஒன்று இல்லாமலே போயி இருந்திருக்கும் சகோ. கோபாலன். அத்வாணி மோடி தொகாடியா போன்ற சைத்தான்களை நம் நாட்டில் நீங்கள் நான் வேறு உட்பட எவருக்கும் தெரிந்திருக்காது சகோ. கோபாலன்.

அந்த சம்பவத்துக்கு பிறகு எத்தனை ஊர்களில் எத்தனை மஸ்ஜிதுகளில் இப்படி அக்கிரம சம்பவம் நடத்து... மஸ்ஜிதில் வைக்கப்பட்ட சிலைகள் தூர தூக்கி வீசப்பட்டு யாருக்கும் தெரியாமல் போனதோ தெரியலை சகோ. கோபாலன்..!

இது முஸ்லிம்களுக்கு ஒரு படிப்பினை என்றாலும்... படு ஸ்ட்ராங்கான படிப்பினை இது சகோ.கோபாலன்...!

இது தீயினால் இதயத்தில் வார்க்கப்பட்ட ஆறா ரணமான காயம் சகோ.கோபாலன்..! உங்களால் முடிந்தால் மருந்திடுங்கள் சகோ.கோபாலன்..! இல்லை எனில்... இது போல காயத்தின் மீது ஆசிடை ஊற்றாதீர்கள் சகோ.கோபாலன்..! ப்ளீஸ்... ப்ளீஸ்... ப்ளீஸ்....

Anonymous said...

"அப்புறம் நாங்க மதவாதத்திற்கு ஆதரவு அளித்தோமா? "

உங்கள் மட்டும் குறித்து போட்டது அல்ல. பொதுவாக இஸ்லாமிய சமுதாயம் என்ற வகையில் குறிப்பிடப்பட்டது

Anonymous said...

மத வாத கட்சிகள் என்றால் பலவற்றை சொல்ல முடியும். அதை பின்பு கிளருகின்றேன்.
அதற்க்கு முன் உங்கள் கட்சியான தவ்ஹீத் ஜாமாத் கட்சி மரண தண்டனை கைதிகள் மூவர் விடுதலைக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றது. (குறிப்பாக பிஜே )
மரண தண்டனை உங்கள் மதத்தில் அனுமதிக்கப்பட்டது என்பதால் கண்டனம் தெரிவிப்பதா ?
ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருகின்ரது அதை வேண்டும் என்றால் உங்கள் மத அடிப்படியில் ஆதாரிக்கலாம் அல்லது நியாயப்படுத்தலாம்.
ஆனால் தண்டனை குறைப்பை எப்படி கண்டனம் தெரிவிப்பார்கள் என்பது என் கேள்வி ? தண்டனை குறைப்பை பெற்றவன் இந்து என்பதால் தான் இந்த கண்டன ஊர்வலாமா ? இந்த 7 பேரில் யாராவது முஸ்லிம் இருந்தா இந்த கண்டன அறிக்கை வந்திருக்குமா ? கொஞ்சமாவது சிந்தியுங்கள்.

பிஜே இன் தமிழின எதிர்ப்பு க்கு இன்னொரு சான்று
"இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரிக்க முடியாது: பி.ஜெய்னுலாப்தீன்"
மனித நேயத்தைப் பற்றிப் பேசக் கூடிய கட்சி என்று பொய் வேடம் போட்டுகொண்டு இருக்கும் இந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏன் இதுபோன்று அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை என்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

அப்சல் குரு தூக்கில் போட்ட போது பிஜே போட்ட வேடம் வேறு என்பதனை நினைவு படுத்துகின்றேன்.

தண்டனை கைதிகளை விடுவிக்க ஆதரவு தரவேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. உங்கள் மதவெறி அரசியலுக்காக அதை எதிர்ப்பது நியாயமா ?

aashiq ahamed said...

சகோ அனானி,

முதலில் இந்த கேள்வியை நீங்க தவ்ஹீத் ஜமாத்திடம் தான் கேட்கணும். நாங்க அந்த அமைப்பை சேர்தவர்களோ அல்லது அவர்களது முடிவுகளை அப்படியே ஏற்பவர்களோ கிடையாது. அவங்க எந்த அடிப்படையில் இதை சொன்னார்கள் என்பதும் எனக்கு தெரியாது.

அப்சல் குரு விவகாரத்தை பொறுத்தமட்டில், ஆதாரங்களின் அடிப்படையில் அல்லாமல் கூட்டு மனசாட்சியின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டதாலேயே எதிர்த்ததாக ததஜ விளக்கமளித்ததை நீங்க அறியவில்லையா?

இந்திய சட்ட விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு இந்த விடுதலை நடந்திருந்தால் நாம் செய்ய முடியும். முஸ்லிம்களில் பலர் இதனை வரவேற்றிருந்தனர். என்னால் பல லிங்க்குகளை தர முடியும். இதுமட்டுமல்ல, இவர்களுக்கு மட்டுமா, விசாரணை இன்றி தவிக்கும் மற்றும் இது போல உள்ள அனைவருக்கும் விடுதலை அளிக்க வேண்டும் என்று தற்போது முஸ்லிம்கள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.

அட அத விடுங்க, இதுக்கெல்லாம் நீங்க மதசாயம் பூசிநீங்க பாருங்க அங்க நிக்குறீங்க சகோ. முஸ்லிம்கள விடுங்க, அருண் ஜெட்லி போன்ற பாஜக இந்து தலைவர்கள் எதிர்த்தார்கலே அதுக்கு என்ன சொல்ல போறீங்க?

Anonymous said...

'முதலில் இந்த கேள்வியை நீங்க தவ்ஹீத் ஜமாத்திடம் தான் கேட்கணும். நாங்க அந்த அமைப்பை சேர்தவர்களோ அல்லது அவர்களது முடிவுகளை அப்படியே ஏற்பவர்களோ கிடையாது. அவங்க எந்த அடிப்படையில் இதை சொன்னார்கள் என்பதும் எனக்கு தெரியாது. '

நீங்க சொல்லி தப்பிக்கலாம். ஆனால் பிஜே யின் கூற்றுக்கு எந்த இஸ்லாமிய அமைப்பும் கண்டனம் தெரிவிக்கவில்லை. அதை நியாயப்படுத்தினார்கள்.
எந்த இஸ்லாமிய குடிமகனும் அதை கண்டிக்கவில்லை. பலர் நியாயப்படுத்தினார்கள். இன்று கூட நீங்க அதை கண்டிக்க விரும்பவில்லை. அதற்க்கு ஏதாவது காரணம் இருக்கும் என்று உங்க சமூக தரப்பை நியாயப்படுத்த முயல்கின்றீர்கள்.

இன்று ஒரு இந்து மத சார்ந்த தலைவர் மத அடிப்படைவாத கருத்தை உதிர்த்தால் முதலில் கண்டிப்பது இந்து தலைவர்கள் தான் ஆனால் ஒரு இஸ்லாமிய இமாம் cum அரசியல் தலைவர் மதம் சார்ந்து அடிப்படைவாதியாக இருக்கும் போது அவர் உதிர்க்கும் மதம் சார்ந்த அடிப்படிவாத கருத்துக்களை எந்த இஸ்லாமியனும் அமைப்புகளும் கண்டிப்பதில்லை.
சிறந்த மத நல்லிணக்கம்

இன்று உண்ணா நோன்பு இருக்கும் ரஹீம் என்ற இஸ்லாமிய சிறைவாசிக்கு ஆதரவாக பல தமிழ் அமைப்புகள் ஈடுபடுகின்றன
பல இஸ்லாமிய அமைப்புகள் பங்கேற்கவில்லை என்பது கூடுதல் செய்தி.

ஆனால் இஸ்லாமிய அமைப்புகளுக்கு நன்றி உணர்ச்சி கிடையாது

Anonymous said...

"அட அத விடுங்க, இதுக்கெல்லாம் நீங்க மதசாயம் பூசிநீங்க பாருங்க அங்க நிக்குறீங்க சகோ. முஸ்லிம்கள விடுங்க, அருண் ஜெட்லி போன்ற பாஜக இந்து தலைவர்கள் எதிர்த்தார்கலே அதுக்கு என்ன சொல்ல போறீங்க?"

எமக்கு இரண்டு அடையாளங்கள் உண்டு
ஒன்று தமிழர்
இரண்டாவது இந்துக்கள்

தமிழர் என்ற அடையாளத்தை பிஜேபி , காங்கிரஸ் தேசிய தலைமைகள் ஏற்கவில்லை.
ஆனால் இந்து என்ற அடையாளத்துக்கு பிஜேபி நிச்சயம் எதிராக இருக்காது.

ஆனால் இந்து என்ற அடையாளத்துக்கும் தமிழன் என்ற அடையாளத்துக்கும் இஸ்லாமிய தரப்பு என்றுமே எதிராகத்தான் இருக்கும் கடந்த கால வரலாறும் அதைத்தான் தெளிவாக காட்டுகின்றது

Anonymous said...

பூக்குன்றன்