Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Saturday, 25 August 2012

பதிவர் சந்திப்பு ரூல்ஸ் - HATS OFF


நாளை நடைபெறவுள்ள சென்னை பதிவர் சந்திப்புக்கான இறுதி அழைப்பிதழ் இன்று பல தளங்களில் வெளியாகியுள்ளது. பதிவர் சந்திப்பிற்கான இடத்திற்கு எப்படி வருவது என்பதில் ஆரம்பித்து முழுமையான தகவல்கள் இவற்றில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு சகோதரர் மதுமதியின் பதிவை இங்கே காணலாம்.

பதிவர்கள் பேண வேண்டிய ரூல்ஸ் ரொம்பவே கவனத்தை கவருவதாக உள்ளது. புகைபிடித்தல், மது, பெண்களை அவர்கள் அனுமதியின்றி படம் பிடிப்பது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. சபை நாகரிகத்தை பேணவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மதுமதி அவர்களின் பதிவில் இருந்து, 

1.அரங்கத்தில் புகைபிடித்தலை தவிர்த்துக் கொள்ளவும். 
2.மது அருந்திவிட்டு அரங்கிற்குள் நுழைவதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளவும். 
3.பெண் பதிவர்களின் அனுமதியின்றி அவர்களை புகைப்படம் எடுப்பதை தயவுகூர்ந்து தவிர்த்துக் கொள்ளவும்.அனுமதியோடு புகைப்படம் எடுக்கும் பட்சத்தில் அவர்கள் அனுமதியில்லாமல் வலையில் பதிவதை தவிர்த்துக் கொள்ளவும். 
4.ஒவ்வொரு பதிவரும் சபை நாகரீகத்தை கடைபிடிக்கவும்.

இதில் மூன்றாவது பாய்ன்ட் சான்சே இல்லை. செம டாப். இந்த வரையறைகளை மீறுபவர்கள் மீதான நடவடிக்கைகள் ஏற்கனவே தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது (அனுமதி மறுக்கப்படும்/அரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்).

எங்கு ஒழுக்கதிற்கான விதை தூவப்படுகின்றதோ அப்போதே அதன் வெற்றியும் ஆரம்பமாகிவிடுகின்றது. அந்த வகையில் இந்த சந்திப்பு ஒரு மிகச்சிறந்த துவக்கமாகவும், முன்னுதாரணமாகவும் இருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை.

Hats Off organisers.....Hats off....

இந்த பதிவர் சந்திப்பில் ஆக்கப்பூர்வமான முடிவுகள் எடுக்கப்பட்டு, அவை சிறந்த முறையில் பின்பற்றப்பட்டு, தமிழ் பதிவுலகம் மற்ற மொழிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்திட மனமார்ந்த பிரார்த்தனைகள்.

விழா ஒருங்கிணைப்பாளர்களே, ஆக்கப்பூர்வமான விசயங்கள் கலந்த உங்கள் உழைப்பு அருமையானது. நீங்கள் எதிர்ப்பார்த்ததை விடவும் இந்த விழா அசத்தலாக இருக்கபோகின்றது (இன்ஷா அல்லாஹ்) பாருங்கள்.....அதற்கு எங்களுடைய பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள்....

நன்றி: ஆஷிக் அஹமத்

13 comments:

அருள் said...

குடியால் அழியுமா பதிவுலகம்? பதிவுலக சண்டைக் குறித்து ஒரு நடுநிலை ஆய்வு!

http://arulgreen.blogspot.com/2012/08/blog-post_25.html

Unknown said...

நடக்க இருக்கும் இப்பதிவர் நிகழ்ச்சி இனிதே நடந்தேற இறைவனை பிரார்த்திப்பதுடன், மனமார்ந்த வாழ்த்துகள்.

NKS.ஹாஜா மைதீன் said...

என் சார்பிலும் HATS OFF

ஆமினா said...

விழா அமைப்பினருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

தமிழ்சேட்டுபையன் said...

இதில் மூன்றாவது பாய்ன்ட் சான்சே இல்லை. செம டாப். இந்த வரையறைகளை மீறுபவர்கள் மீதான நடவடிக்கைகள் ஏற்கனவே தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது (அனுமதி மறுக்கப்படும்/அரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்).
/////////////////////////
கவலைப் படாதீரும் உங்கள் சகோதரிகள் பர்தா போட்டுக் கொண்டுதான் வருவார்கள்..!

பதிவில் போடாத ஒன்று எனக்கு தனியாக போன் போட்டு சொன்னார்கள் மதவாதிகள் யாராவது வந்தால் செமத்தியாக கவனிப்பார்களாம்....!அதுதான் நீர் போகவில்லை போலும்..!

இந்த கமெண்டை நீர் பப்ளிஸ் செய்யவில்லை என்றால் பரவாயில்லை முகப்புத்தகத்தில் போடுவேன்!

சதீஷ் செல்லதுரை said...

முயற்சி எடுத்த உழைத்த அனுபவிக்க போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...அதோடு இந்த பதிவின் படி நடக்க வேண்டுகிறேன்....http://tamilmottu.blogspot.in/2012/08/blog-post.html

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சலாம் சகோ.மனிதாபிமானி,

///விழா ஒருங்கிணைப்பாளர்களே, ஆக்கப்பூர்வமான விசயங்கள் கலந்த உங்கள் உழைப்பு அருமையானது. நீங்கள் எதிர்ப்பார்த்ததை விடவும் இந்த விழா அசத்தலாக இருக்கபோகின்றது (இன்ஷா அல்லாஹ்) பாருங்கள்.....அதற்கு எங்களுடைய பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள்....///---ஆமீன்.

மிக நல்ல எண்ணங்கள்தானே இந்த பதிவு..?

இது எதற்கு யாரோ இரண்டு மைனஸ் மண்டைகளுக்கு பிடிக்கவில்லை..? பதிவர் சந்திப்பின் எதிரிகளா இவர்கள்..?

Unknown said...

SALAAM

நன்றாக இருக்கு ரூல்ஸ் ...

நல்ல முடிவு ...

மனிதாபிமானி said...

@ தமிழ் சேட்டு பையன், முஹம்மது ஆஷிக், ராவணன்,

பதிவர் சந்திப்பு முடியும் வரை, விவாதத்தை வளர்க்கும்விதமான பின்னூட்டங்கள் நிறுத்திவைக்கப்படுகின்றன. விழா முடிந்தததும் இன்ஷா அல்லாஹ் உங்கள் கமெண்ட்கள் பிரசுரிக்கப்படும்...

@ தமிழ் சேட்டு பையன்,

உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் :-) :-)

Flavour Studio Team said...

//எங்கு ஒழுக்கதிற்கான விதை தூவப்படுகின்றதோ அப்போதே அதன் வெற்றியும் ஆரம்பமாகிவிடுகின்றது. அந்த வகையில் இந்த சந்திப்பு ஒரு மிகச்சிறந்த துவக்கமாகவும், முன்னுதாரணமாகவும் இருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை.//

வாழ்த்துக்கள்..!

மனிதாபிமானி said...

@ தமில்செட்டுபையன்,

//கவலைப் படாதீரும் உங்கள் சகோதரிகள் பர்தா போட்டுக் கொண்டுதான் வருவார்கள்..!//

ஆமா பாஸ், முழுமையான ஹிஜாப்ள தான் வந்தாங்க...

//பதிவில் போடாத ஒன்று எனக்கு தனியாக போன் போட்டு சொன்னார்கள் மதவாதிகள் யாராவது வந்தால் செமத்தியாக கவனிப்பார்களாம்....!அதுதான் நீர் போகவில்லை போலும்..!//

போயிட்டு வந்துட்டேன் சார். இப்படி யாராவது சொல்லிப்பார்களா நம் பதிவுலகில் என்பது சந்தேகமே. உங்கள் குழு நண்பர்கள் சொன்னார்களோ என்னவோ. அப்படி இருந்தால் அட்டைக்கத்திகளும், காகித புலிகளும் தான் நினைவுக்கு வருகின்றனர்.

ஒரு உண்மையான முஸ்லிமிற்கு அச்சம் என்பது இறைவனிடத்தில் மட்டுமே இருக்க முடியும்.

//இந்த கமெண்டை நீர் பப்ளிஸ் செய்யவில்லை என்றால் பரவாயில்லை முகப்புத்தகத்தில் போடுவேன்!//

போடுங்க. இப்ப நான் கொடுத்திருக்குற பதிலையும் முடிந்தா சேர்த்து போடுங்க...

மனிதாபிமானி said...

@ முஹம்மது ஆஷிக்,

முதல் இரண்டு மைனஸ் வோட்கள் ஒரு உணர்ச்சி வேகத்தில் போடப்பட்டவை. ஆகையால் லூஸ்ல விடுங்க..

அருள் said...

பதிவர் சந்திப்பு முதல் நிகழ்வு போன்று இல்லை. சிறப்பான நிகழ்வை நடத்தியவர்களுக்கு நன்றி. நான் பங்கேற்ற முதல் பதிவர் நிகழ்வும் இதுதான்.

மது, மதம், சாதி: மிகத் தீமையானது எது?

http://arulgreen.blogspot.com/2012/08/blog-post_27.html