Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Monday 24 June 2013

உத்தரகண்ட் - மோடி - பிணங்களின் மீதும் அரசியல்


மிகப்பெரிய இயற்கை பேரிடரை இந்த தேசம் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், சடலங்கள் மீது தங்கள் சந்தர்ப்பவாதத்தை நுழைக்கும் சிலரை கண்டால் 'என்ன ஜென்மமோ' என்று நினைக்கத் தோன்றுகின்றது. 

தேசிய சக்திகளின் அனைத்து பிரிவுகளும் உயிர் காக்கும் பணியில் இறக்கப்பட்டு, கடுமையான சூழ்நிலைகளை எதிர்க்கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டுக்கொண்டிருக்கின்றனர். மீட்கும் பணியில் தங்கள் உயிரையும் சில வீரர்கள் இழந்துள்ளனர். இதுவரை சுமார் 17,000 மக்கள் மீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது. 

ஆனால், இந்த சூழ்நிலையையும் சிலர் விடுவதாக இல்லை. உத்தரகண்டில் இருந்து சுமார் 15,000 மக்களை குஜராத் முதல்வர் மோடி மீட்டதாக செய்திகளை பரப்பிவிட்டனர். உண்மை என்ன என்பதை ஆராயாமல் இதனையும் சில ஊடகங்கள் வெளியிட்டன.  

ஒவ்வொரு மாநிலமும் உத்தரகண்ட்டில் சிக்கியுள்ள மக்களை மீட்க தங்களால் ஆன உதவிகளை செய்துவரும் நிலையில் இதற்கும் அரசியல் சாயம் பூசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. குஜராத்தை விட பல மாநிலங்களும் அதிகமாகவே நிதி உதவிகளை உத்தரகண்டிற்கு வழங்கியுள்ளன. ஆனால் யார் அதிகமாக செய்தது என்று பேச வேண்டிய தருணமோ அல்லது அதனை வைத்து குளிர்காய வேண்டிய சூழ்நிலையோ இதுவல்ல. 

ஆயிரமாயிரம் மக்களை மோடி காப்பாற்றியதாக வெளிவரும் தகவலை "புரளி" என்று வர்ணித்துள்ள மத்திய அரசு, அசாதரணமான இந்த சூழ்நிலையையும் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக சிலர் பயன்படுத்திக்கொள்வதாக விமர்சித்துள்ளது. 

மிக காட்டமான அறிக்கை ஒன்றை இதுத்தொடர்பாக வெளியிட்டுள்ள மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சர் மணீஷ் திவாரி, இவ்வாறான கருத்துக்களை விமர்சிக்க தனக்கு வார்த்தைகள் கூட கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறும்போது 

"உத்தரகண்ட் மாநிலத்தில், தேசிய சக்திகளின் அனைத்துப் பிரிவுகளும் இணைந்து சனிக்கிழமை 10 ஆயிரம் பேரை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தன. சனிக்கிழமை வரை 17 ஆயிரம் பேரை அரசு வெற்றிகரமாக பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றியுள்ளது. நிலைமை இப்படி இருக்க, இப்போது சிலர் ஒரு கதாநாயகனாக மாற விரும்பி, பாதிக்கப்பட்ட மாநிலத்தில் இருந்து தனியாளாக 15 ஆயிரம் பேரை மீட்டதாகக் கூறிக் கொண்டால் அது சந்தர்ப்பவாதச் செயலாகும். மேலும், ஒரு துயரச் சம்பவத்தையும் அரசியலாக்கும் முயற்சிதான் இது. இத்தகு அரசியலின் பின்னணியில் இருக்கும் மனப்போக்கு குறித்து நாடு சிந்திக்க வேண்டும்"

ஆம். நிச்சயம் சிந்திக்கப்பட வேண்டும். உத்தரகண்டில் சடலங்களை கொள்ளையடிக்கும் கும்பலுக்கும், அவற்றின் மீது அரசியல் செய்ய நினைப்பவர்களுக்கும் ஏதேனும் வித்தியாசம் தெரிகின்றதா? 

அதளபாதாளத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும் தங்கள் கட்சிக்கு முட்டுக்கொடுக்க விரும்புபவர்கள் வேறு எதையாவது கொண்டு தங்கள் உள்ளத்தை சாந்தப்படுத்திக்கொள்ளட்டும், பிணங்களின் மீது அரசியல் நடத்தியல்ல...

சுட்டிகள்: தினமணி, IBNLIVE
கட்டுரை உதவி: ஆஷிக் அஹமத்

24 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

Assalaamu alaikkum
Brother Manithabimaani,
well said..!

I condemn such a cheap publicity liker politician like Modi, who even wants it in such a tragedy situation..!

/////இதற்கென 80 டோயோட்டா இன்னோவோ கார்கள் வரவழைக்கப்பட்டன. இதில் பக்தர்கள் ஏற்றி டேரோடூனுக்கு கொண்டு வரப்பட்டனர். இவர்கள் 4 விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றொரு குழுவினர் டில்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை அழைத்து வர 25 சொகுசு பஸ்கள் தயார் நிலையில் இருந்தன . மொத்தம் 15 ஆயிரம் குஜராத்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்/////

How... 80 டோயோட்டா இன்னோவோ கார்கள் capacity
= 4 விமானம் capacity
= 25 ஏ/சி சொகுசு பஸ்கள் capacity
= 15,000 people..!?!?!?!?!?!?!?!?!?!

இது.... உத்தரகாண்டில் வெள்ளத்தில் சிக்கியவர்களில் இருந்து, தமது மாநில பக்தர்களை மட்டும் தேடித்தேடிப்பிரித்து எடுத்து நர்ர்ர்றேந்திர மோட்டி மீட்டு வந்ததாக... பரவசத்துடன் புகழ்ந்துதள்ளி "பொய்மையின் உரைகல்" போட்ட 'நியூஸில்'(?) உள்ள குஜராத் மக்களின் கணக்கு..!

'தமிழன் கணக்கு தெரியாத மடையன், எதை நியூஸா போட்டாலும் நம்புவான்' என்று எண்ணுகிறார்களா..?

Disclosure :

1 -உலகின் ஆகப்பெரிய விமானத்தில் (Airbus 380 series) மொத்தமே சுமார் 600 பேருதான் போக முடியும். ஆனால், அவ்ளோ பெரிய ப்ளைட்டுக்கு குஜராத்தில் ரன்வே இல்லை. எனவே... for medium size flights... 4x450 = 1800. ஓகே..!

2 - 80 Toyota innova (1 car maximum capacity 10) so....... 80x10 = 800
3 - 25 A/C luxury coach (1 bus maximum capacity 40) so...... 40x25 = 1000

ஆக... அநியாயமா ஒரு சைபரை கூட்டிட்டிங்களேய்யா..! சைபருகளா..!

--------ஒரு விமானம்தானாம்..! அதில், rescued people 134 பேர் தானாம்..! வடநாட்டு நியூஸ் சேனல் சொல்லுது..!

//Meanwhile, a chartered flight from Dehradun today flew 134 passengers, stranded due to the devastating floods in Uttarakhand, to Ahmedabad.

A Boeing 737-700, belonging to Jet Airways and operated by aircharter firm Subha Aviation, was chartered by the Gujarat government at the instance of Chief Minister Narendra Modi, they said.

The aircraft took off from Jolly Grant airport at 0830 hours and reached Ahmedabad almost two hours later, the sources said.//


http://www.indiatvnews.com/news/india/narendra-modi-gujarat-ready-to-renovate-kedarnath-temple-comple-24053.html

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

Assalaamu alaikkum
Brother Manithabimaani,
well said..!

I condemn such a cheap publicity liker politician like Modi, who even wants it in such a tragedy situation..!

/////இதற்கென 80 டோயோட்டா இன்னோவோ கார்கள் வரவழைக்கப்பட்டன. இதில் பக்தர்கள் ஏற்றி டேரோடூனுக்கு கொண்டு வரப்பட்டனர். இவர்கள் 4 விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றொரு குழுவினர் டில்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை அழைத்து வர 25 சொகுசு பஸ்கள் தயார் நிலையில் இருந்தன . மொத்தம் 15 ஆயிரம் குஜராத்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்/////

How... 80 டோயோட்டா இன்னோவோ கார்கள் capacity
= 4 விமானம் capacity
= 25 ஏ/சி சொகுசு பஸ்கள் capacity
= 15,000 people..!?!?!?!?!?!?!?!?!?!

இது.... உத்தரகாண்டில் வெள்ளத்தில் சிக்கியவர்களில் இருந்து, தமது மாநில பக்தர்களை மட்டும் தேடித்தேடிப்பிரித்து எடுத்து நர்ர்ர்றேந்திர மோட்டி மீட்டு வந்ததாக... பரவசத்துடன் புகழ்ந்துதள்ளி "பொய்மையின் உரைகல்" போட்ட 'நியூஸில்'(?) உள்ள குஜராத் மக்களின் கணக்கு..!

'தமிழன் கணக்கு தெரியாத மடையன், எதை நியூஸா போட்டாலும் நம்புவான்' என்று எண்ணுகிறார்களா..?

Disclosure :

1 -உலகின் ஆகப்பெரிய விமானத்தில் (Airbus 380 series) மொத்தமே சுமார் 600 பேருதான் போக முடியும். ஆனால், அவ்ளோ பெரிய ப்ளைட்டுக்கு குஜராத்தில் ரன்வே இல்லை. எனவே... for medium size flights... 4x450 = 1800. ஓகே..!

2 - 80 Toyota innova (1 car maximum capacity 10) so....... 80x10 = 800
3 - 25 A/C luxury coach (1 bus maximum capacity 40) so...... 40x25 = 1000

ஆக... அநியாயமா ஒரு சைபரை கூட்டிட்டிங்களேய்யா..! சைபருகளா..!

--------ஒரு விமானம்தானாம்..! அதில், rescued people 134 பேர் தானாம்..! வடநாட்டு நியூஸ் சேனல் சொல்லுது..!

//Meanwhile, a chartered flight from Dehradun today flew 134 passengers, stranded due to the devastating floods in Uttarakhand, to Ahmedabad.

A Boeing 737-700, belonging to Jet Airways and operated by aircharter firm Subha Aviation, was chartered by the Gujarat government at the instance of Chief Minister Narendra Modi, they said.

The aircraft took off from Jolly Grant airport at 0830 hours and reached Ahmedabad almost two hours later, the sources said.//


http://www.indiatvnews.com/news/india/narendra-modi-gujarat-ready-to-renovate-kedarnath-temple-comple-24053.html

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

உறக்கத்தில் கனவுகள் கூட ஓரளவுக்கு நம்புகிறா மாதிரி லாஜிக்காத்தான் வருது..! ஆனால், ஊடகங்களில் வரும் மோடி ஜால்ரா நியூஸ்களில் அந்த குறைந்த பட்ச லாஜிக் கூட இருப்பதில்லை..!

ஹுஸைனம்மா said...

//தனியாளாக 15 ஆயிரம் பேரை மீட்டதாகக்//

யாருங்க அந்த தனி ஆளு? சூப்பர் மேனா, பேட் மேனா?

போக்குவரத்துக்கான சாலைகளெல்லாம் அழிந்த நிலையில் எப்படி இத்தனை கார்கள், பஸ்கள் அங்கே செல்ல முடிந்தது? ஒரே நாளில் 15,000 பேரை ஜஸ்ட் லைக் தட் எப்படி ‘காப்பாற்ற’ முடிந்தது?

ஒருவேளை வேடிக்கை பாக்கப் போனவங்களப் பிடிச்சுப் போட்டுகிட்டு வந்திருப்பாரோ?

எதுவாக இருந்தாலும், பிணங்களின் மீதான இந்த அரசியல், அஞ்சாது துஞ்சாது ஊன் உறக்கமின்றி உயிரையும் பணயம் வைத்துச் செயல்படும் இராணுவத்தினரின் சேவையை இழிவுபடுத்துவதாகும்!!

Barari said...

எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை இலாபம்.பிணத்தின் மீது அரசியல் நடத்துவதுதானே மோ(கே) டி வழக்கம்.

UNMAIKAL said...

கேதார்நாத் வெள்ளத்தில் சிக்கியோரிடம் கொள்ளையடித்தது ‘சாமியார்களே’.. திடுக்கிடும் தகவல்கள்!

கேதார்நாத்: உத்தர்காண்ட் பெருவெள்ளத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் யாத்ரீகர்களிடமிருந்து நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்தவர்கள் ‘பாபா'க்கள் என்று வணங்கப்படுகிற சாமியார்களே என்று திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தர்காண்ட் மாநிலத்தில் கடந்த 16-ந் தேதி ஏற்பட்ட இமயமலை சுனாமி என வர்ணிக்கப்படும் பெருவெள்ளத்தில் சிக்கி அம்மாநிலமே உருக்குலைந்து போனது.

இந்நிலையில்தான் வெள்ளத்தில் சிக்கிய பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்குள்ளாக்கப்படுவதாகவும் அவர்களின் நகைகள் கொள்ளையடிக்கப்படுவதாகவும் மீட்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

தற்போது இத்தகைய படுபாதக கொடூரச் செயல்களில் ஈடுபட்டவர்கள் பாபாக்கள் என்று யாத்ரீகர்கள் இறைவனுக்கு சமமாக வணங்கக் கூடிய சாமியார்கள் என்பதை மீட்புப் பணியில் ஈடுபட்டோர் அம்பலப்படுத்தியுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இப்படி சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடிய சாமியார்களிடம் இருந்து சுமார் சேறும் சகதியுமாக நனைந்து போய் இருந்த ரூ1.25 கோடி பணம் கைப்பற்றபட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

கேதார்நாத்தில் இருந்த ஒரே ஒரு வங்கியும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

பெரும்பாலான வர்த்தக நிறுவனங்களின் பணப்பெட்டிகளும் வெள்ளம் வாரிச் சுருட்டியது.

கேதார்நாத் கோயிலின் உண்டியலும் பொக்கிஷங்களும் கூட வெள்ளத்தால் திறந்துவிடப்பட்டன.

இந்நிலையில் மீட்புப் பணிக்காக வரிசையில் காத்திருந்த பல சாமியார்களிடம் புது நோட்டுகளும் இதுவரை பயன்படுத்தாத நோட்டுகளும் ஏராளமாக இருந்தன.

அவற்றைப் பரிசோதித்துப் பார்த்ததில் பல ரூபாய் நோட்டுகள் கேதார்நாத் வங்கிக்குரியது என தெரியவந்தது என்கிறார் மீட்புப் பணியில் ஈடுபட்ட ஒருவர்.

இதேபோல் ஒரு பாபாபா தன்னுடைய டோலக் எனப்படும் டிரம்மில் ரூ62 ஆயிரம் பணத்தை பதுக்கி வைத்திருந்திருக்கிறார்.

மற்றொருவர் பிரசாத பாக்கெட்டில் ரூ10ஆயிரத்தை பதுக்கி வைத்திருந்தாராம்..

மற்றொரு சாமியார் தம்முடைய துணிகளுக்கு இடையே ரூ1.2 லட்சத்தை பதுக்கி இருந்திருக்கிறார்.

இன்னும் சில சாமியார்கள் வழக்கத்துக்கு மாறாக ஏராளமான நகைகளையும் வளையல்களையும் அணிந்து நடமாடியுள்ளனர்.

பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவை அனைத்துமே யாத்ரீகர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்டவையே என ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.

இதில் உச்சகட்ட கொடூரம் என்னவெனில் சில சாமியார்கள் யாத்ரீகர்களின் விரல்களை வெட்டி நகைகளைக் கொள்ளையடித்திருக்கின்றனர் என்பதுதான்! இவர்களை எப்படி வணங்குவது?



SOURCE: Read more at: http://tamil.oneindia.in/news/2013/06/24/india-religious-men-held-with-rs-1-cr-stolen-money-177722.html




Read more at: http://tamil.oneindia.in/news/2013/06/24/india-religious-men-held-with-rs-1-cr-stolen-money-177722.html


Read more at: http://tamil.oneindia.in/news/2013/06/24/india-religious-men-held-with-rs-1-cr-stolen-money-177722.html

ராஜி said...

அங்க போய்ட்டீங்க. இங்க நம்ம ஜெயா டிவி பாருங்க.., ஊருக்கு திரும்பி வந்தவங்கலாம் அம்மா புகழ் பாடுறதை! எந்த ஆட்சியாளாரா இருந்தாலும் இத்தகைய நடவடிக்கை எடுத்து காப்பத்தியாகனும்ன்ற அடிப்படை விசயமே இவங்களுக்கு தெரியலியே! தேர்தல் நெருங்க நெருங்க என்னலாம் நடக்க போகுதோ!?

ஜாஹிர் ஹுஸைன் said...

பிணங்களின் மீதும் அரசியல் என்பது தவறு சகோதரா .பிணங்களின் மீது மட்டுமே அரசியல் நடத்தும் நரபலி மோடி என்பதே சரி .

ஒரு இரயில் எரிப்பு சம்பவம் (யார் எரித்தது?) இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம்களை கொன்று அரசியல் செய்பவன்

இன்று உத்திரகண்ட் மாநிலத்தில் இயற்கை பேரிடர் .இதிலும் முற்றும் துறந்த முனிவர்கள் கொள்ளை அடித்து கொண்டு இருக்கிறார்கள் ஆசைகளை துறந்தவன் முனிவன் என்று சொல்வார்கள்.இவர்கள் துறந்தது என்னவோ உடைகள் மட்டுமே !

Anonymous said...

மோடி சொன்னா கரெக்டா இருக்கும்.

டோயோட்டா இன்னோவோ வுல குஜராத் வரைக்கும் ட்ரிப் அடிக்க வேணாம். பிரச்சனைக்குரிய இடத்துல இருந்து வெளியில கொண்டு வந்து விட்டா போதும் .

உங்க முஸ்லிம்களுக்கு மோடி நா ஆகாது . ஆனா ஹிந்துக்களுக்கு ரொம்ப புடிக்கும்.we love him so much .

Rafik said...

சரியான நேரத்தில் ஒரு சரியான பதிவு. ஜசகல்லாஹைர்.

இது ஒன்றும் புதிதல்ல. இதைப் படித்தபோது ஒரு நண்பர் சுவரில் பகிர்ந்த இந்த செய்தி தான் ஞாபகம் வந்தது.

"2010 ஆம் ஆண்டு பிகாரில் வெள்ளபெறுக்கு ஏற்பட்டபோது அதற்க்கு ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய மாநிலங்கள் உதவிசெய்தது எந்த மாநிலமும் அதனை செய்தியாக்கவில்லை.ஆனால் நரேந்திரமோடி வெறும் 5 கோடிரூபாய் உதவிசெய்துவிட்டு அதனை பத்திரிக்கைகளை அழைத்து விளம்பரம் தேடினார்.

அதுமட்டுமல்லாமல் நரந்திரமோடியின் உதவிப்பணத்தை வாங்கினால் பிகாரில் வாழும் முஸ்லீம்கள் மனது வேதனைப்படும் என்று கருதியதாலும் அந்த தொகையை மோடியிடமே திருப்பியனுப்பிவிட்டேன்....(நிதீஷ்குமார்)" - முஹம்மது புகாரி.

விளம்பர வெறி, (பிரதமர்) பதவி வெறி ஏறிவிட்டால் இப்படியெல்லாம் பேரிடர்களில் கூட (பொய்யான) விளம்பரம் செய்யத் செய்யத் தோன்றும். இதெல்லாம் ஒரு பிழைப்பா..?

மனிதாபிமானி said...

@ அனானி,

//டோயோட்டா இன்னோவோ வுல குஜராத் வரைக்கும் ட்ரிப் அடிக்க வேணாம். பிரச்சனைக்குரிய இடத்துல இருந்து வெளியில கொண்டு வந்து விட்டா போதும்//

பிரச்சனைக்குரிய இடத்துக்கு இன்னோவா எப்படி போகும்? அப்படி போக முடிந்தா, பாதுகாப்பு படை எல்லோரையும் எளிதா காப்பாற்றி இருக்காதா? மோடிய ஏன் பலரும் விமர்சிக்கின்றார்கள் என்பதை உங்களின் இந்த கமென்ட் பார்த்தா புரிஞ்சிக்குலாம்.

அப்புறம், மோடியை தீவிரமாக எதிர்ப்பவர்கள் ஹிந்து சகோதரர்கள் தான்..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

UNMAIKAL said...

கிழிந்து தொங்கும் ரேம்போ கோவணம்!

மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட உத்தரகாண்ட் மாநிலத்துக்குச் சென்ற குஜராத் முதல்வர் ரேம்போ மோடி, இரவு ஒரு மணி வரை கண் விழித்துத் திட்டம் தீட்டி உத்தரகாண்டில்
தவித்த குஜராத்தைச் சேர்ந்த 15000 பக்தர்களை ஒரே நாளில் மீட்டு வந்தார் என்று ஆங்கில மற்றும் தமிழ் செய்தித் தளங்களில் செய்தி வெளியாகி இருந்தது.


இழவு வீடு என்றாலும் அங்கும் நான் தான் பிணமாக இருக்க வேண்டும் என்று சிலர் விரும்புவார்கள்.

அதே நிலையில் தான் தற்போது குஜராத் முதல்வரும் இருக்கிறாரோ என்ற அச்சமே நமக்கு ஏற்பட்டுள்ளது.

இஸ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் சிபிஐ பிடி இறுகுவதால் சில நாட்களாக ஊடகங்களில் தம் பெயர் நாறி வருவதைத் தடுக்கும் நோக்கில் இவ்வாறு ஒரு மலிவான விளம்பரம் தேடிக் கொள்ளும் வேலையில் அவர் ஈடுபட்டுள்ளாரோ என்றே எண்ணத தோன்றுகிறது.


என்ன கதை விட்டாலும் அதை நம்பிப் போற்றவும் பலர் நம்மில் உள்ளனர் என்பது மோடிக்குத் தெரியாதா என்ன?

ஊடகங்களின் பொய்ப் புரட்டுகளை நம்பி எந்திரன் ரஜினி லெவலுக்கு நரேந்திர மோடியைப் கற்பனை செய்யும் எவரும் உண்மை நிலை என்ன என்பதை அறிய விரும்புவதில்லை.

காரணம் நரேந்திர மோடி பற்றி ஒரு செய்தி வெளி வந்தால் அது உண்மையாகத் தான் இருக்கும் என்ற குருட்டு நம்பிக்கை போல.

15000 பேரை -- அதுவும் குஜராத்தைச் சேர்ந்த பக்தர்களை மட்டும் -- தேடிப்பிடித்து ஒரே நாளில் மீட்பது சாத்தியமா? என்று அறிவுப் பூர்வமாக கேள்வி எழுப்பினால், "இவர்களும் செய்ய மாட்டார்கள் செய்றவனையும் செய்ய விட மாட்டார்கள்" என்று விமர்சனம் வேறு.

என்னதான் ஊடகங்கள் கதை விட்டாலும் அரசு இது போன்ற விசயங்களில் கதை விட முடியாது.

காரணம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் யாராவது கேள்வி எழுப்பினால் கோவணம் கிழிந்து தொங்கும்.

உத்தரகாண்டில் சனிக் கிழமை இயக்கப் பட்ட முதல் விமானம் மூலம் மீட்கப் பட்டு குஜராத் வந்து சேர்ந்தவர்களின் பட்டியல் இதோ.

மீட்கப் பட்டு டெஹ்ராடூன் மருத்துவமனியில் சிகிச்சை பெரும் குஜராத் பக்தர்களின் பட்டியல் இதோ.

இது ஏதோ மோடிமீது வெறுப்பு கொண்டு, காங்கிரஸ் கட்சி தயாரித்து அளித்த பட்டியல் அல்ல.

குஜராத் மாநில அரசின் இணைய தளத்தில் வெளியிடப் பட்டுள்ள விவரங்களே இவை.

சனிக் கிழமையன்று வந்திறங்கிய முதல் விமானத்தில் வெறும் 124 பேர் மட்டுமே குஜராத் வந்து சேர்ந்ததாக குஜராத் அரசே தெரிவித்துள்ளது.

அப்படி என்றால் 15000 பேரை மீட்டுக் கொண்டு வர குறைந்த பட்சம் 115 முறையாவது அந்த விமானத்தை இயக்க வேண்டும். இது தான் உண்மை நிலை. ஒரே நாளில் 115 முறை இயக்கப்பட்ட விமான சர்வீஸா?! மோடி அரசின் வித்தை போலும்!

குஜராத் அரசும் அதன் இணைய தளத்தில் எந்த இடத்திலும் 15000 பேரை மீட்டுக் கொண்டு வந்ததாக உறுதிப் படுத்தவில்லை.

பிறகு ஏன் இந்த வெட்டி விளம்பரம்?

இந்திய திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் காக்கி கலரில் அரைக் கால் டவுசர் அணிந்து வெள்ளம் பாதிக்கப் பட்ட இடங்களில் மீட்புப் பணிகளைச் செய்து வரும் நிலையில் அதைத் தாங்கள் செய்வது போன்று ஆர்.எஸ்.எஸ் விளம்பரம் செய்து வரும் நிலையில் இதில் ஆச்சர்யப் படவும் ஒன்றுமில்லை.


உத்தரகாண்ட் அரசுக்கு நிவாரண நிதியாக தமிழ்நாடு, பீகார், ஜார்கண்ட் முதலான மாநில அரசுகள் தலா ரூ 5 கோடி வழங்கிய நிலையில் முன்னேறிய குஜராத் ரூ 2 கோடி மட்டுமே வழங்கியுள்ளது.

இறுதியாக ஒரு ஒரு விஷயம். குஜராத் முதல்வர் அநாயாசமான திட்டங்கள் தீட்டி ஒரே நாளில் 15000 குஜராத் பக்தர்களை மீட்டு இருந்தாலும்கூட அதன் பெருமைக்குரியவர்கள் யார்?

தம் உயிரையும் பணயம் வைத்து 15000 பேரை மீட்ட இந்திய திபெத் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் தாமே?

அவர்களின் உழைப்பைத் திருடி மலிவான அரசியல் செய்யும் இது போன்றவர்கள் நாளை பிரதமரானால் நினைத்துப் பார்க்கவே பயமாக உள்ளது.


SOURCE: http://www.inneram.com/inneram-specials/editorial/614-rambo-modi.html

Anonymous said...

you dont worry about modi he is hero

Unknown said...

அதெல்லாம் சரிதான்.. இங்க முக்கியமான சிலர் அடுத்து பிரதமராகனும்னு கனவோட ஸ்பெயினுக்கோ இத்தாலிக்கோ பிரேசிலுக்கோ போயிருக்கறதா சொல்றாங்களே? ஒருவெளை அங்கருந்தே சிலபல திட்டங்களை தீட்டி அத அப்புடியே இங்க இருக்குற அவங்க அசிஸ்டண்டுகளுக்கு அனுப்பி 2 நாளா மழைய நிப்பாட்டிட்டாங்களோ?

Kamalan said...

Dear Ashique,
Can't you identify the people who are doing politics over the died people from the comments?

நிஜாம் கான் said...

பேரிடர் நடந்த அடுத்த மாநிலத்திற்குள் அவசரமாக மூக்கை நுழைத்து 15 ஆயிரம் குஜராத் மக்களை காப்பாற்றி விட்டார் நவீன ஸ்பைடர்மேன் மோடி. உத்ரகாண்டில் பாதிக்கப்பட்டவர்கள் குஜராத்தியர்கள் மட்டும்தானா என்ற கேள்வி இங்கே எழுகிறது. கர்ணமகராசா மோடி 2 கோடி ரூபாயை அள்ளித்தந்து விட்டார் என இந்தியாவின் அனைத்துப் பத்திரிகைகளும் மாய்ந்து மாய்ந்து எழுதுகின்றன. எழுதுகின்றன என சொல்வதைவிட மோடியை விளம்பரப்படுத்தும் காண்டிராக்டை எடுத்தவர்கள் செய்திகளை அள்ளித் தெளிக்கிறார்கள். அடப்பாவிகளா! உபி முதலமைச்சர் அகிலேஷ்யாதவ் நிவாரண நிதியாக 25 கோடி கொடுத்திருக்கிறார். அதைப்பற்றி ஒரு பயலும் எழுதவில்லை. ஆனால் மோடியை பிரதமராக்கியே தீருவது என கங்கணம் கட்டிக்கொண்டு காவி ஊடகங்கள் வேலை செய்வது தெளிவாகிறது.
அதெல்லாம் சரி! வெள்ளப்பேரிடர் வந்த அடுத்த மாநிலத்தில் மறுநாளே ஓடோடிச் சென்ற மோடி, தன் சொந்த மாநிலம் குஜராத்தில் பல்லாயிரம் முஸ்லிம்களை வேட்டையாடிய போது ஒரு வாரம் முழுவதும் எங்கே போனார்? அவரது அரசாங்கம், போலீசெல்லாம் எங்கே போனது? யார் இதற்கு பதில்சொல்வது?

அதிரைக்காரன் said...

இனி எங்காவது சுனாமியோ அல்லது வேறுபேரிடர்களோ வந்தால் மோடியைக் கூப்பிடுங்கப்பா.

Anonymous said...

//தன் சொந்த மாநிலம் குஜராத்தில் பல்லாயிரம் முஸ்லிம்களை வேட்டையாடிய போது ஒரு வாரம் முழுவதும் எங்கே போனார்?//


நூறு வருஷத்துக்கு முன் கஜினி முஹம்மது வேட்டையாடிணப்ப நீ எங்க போயிருந்த ?

Anonymous said...

தான் 15000 பேரை காப்பாற்றியதாக மோடி சொன்னாரா ?
அல்லது அவரது ஊடக பேச்சாளர் சொன்னாரா ?

இதையே ஒரு முல்லா சொல்லியிருந்தா ஆமா போட்டிருப்பீங்க.

பாபு சிவா

Anonymous said...

முக்கிய விடயம் குஜராத் மீண்ட மக்களை கொண்டு செல்லத்தான் இன்னோவா பயன்பட்டது.
ஆனால் மீட்கப்பட்ட பயணிகள் எண்ணிக்கை தான் 15000.

BABU SIVA

Anonymous said...

15000 பக்தர்கள் குஜராத் மீண்டனர் என்று பேச்சுக்கு வைப்போம் தம்மாதுண்டு நோவா கப்பலில் கோடிக்கணக்கான உயிரினங்கள் பயணம் செய்திருக்கையில்
80 இநோவாவில் 15000 பேர் போக முடியாதா ?

ஹஹாஹா

Anonymous said...

மீட்புபணியில் நீங்க விரோதியாக பார்க்கும் RSS அமைப்பு களத்தில் ஈடுபட்டது. எந்த முஸ்லிமாவது களப்பணியில் ஈடுபட்டிருக்கின்றாரா ?

UNMAIKAL said...

//Anonymous said...
மீட்புபணியில் நீங்க விரோதியாக பார்க்கும் RSS அமைப்பு களத்தில் ஈடுபட்டது. எந்த முஸ்லிமாவது களப்பணியில் ஈடுபட்டிருக்கின்றாரா ?//

டேராடூன்: உத்தர்காண்ட் பெருவெள்ளத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற களமிறங்கிய இந்திய விமானப் படையின் முதலாவது மீட்பு அணியின் கமாண்டராக பணியாற்றியவர் எஸ்.எம்.யூனூஸ் என்ற முஸ்லீம்..

இமயமலை சுனாமியில் சிக்கியோ இந்து யாத்ரீகர்களை மீட்ட யூனூஸின் மகத்தான சேவை ஒரு இந்தியனாக பெருமை கொள்ள வைக்கும்..

ஜூன் 14-ந் தேதி முதல் உத்தர்காண்ட் மாநிலத்தில் மழை...

ஜூன் 16-ந் தேதி சரஸ்வா விமானப்படை முகாமில் இருந்த 152வது ஹெலிகாப்டர் யூனிட்டில் கமாண்டர் அதிகாரியாக இருக்கும் யூனுஸுக்கு முதலில் தகவல் கிடைக்கிறது..

மிகப் பெரும் பேரழிவை மழை உருவாக்கிவிட்டிருக்கிறது என...

ஜூன் 17-ந் தேதி டேராடூனின் ஜோலிகிராண்ட் ஹெலிகாப்டர் தளத்தில் தரை இறங்குகிறார் யூனூஸ்..

மறுநாள் காலை 9 மணிக்கு தமது மிக்-17 வி5 ஹெலிகாப்டர் மூலம் கேதார்நாத் பகுதிக்கு செல்கிறார்.

இந்த ஹெலிகாப்டர் 3 டன் எடையை சுமக்கக் கூடியது..

கேதார்நாத்தில் இருந்து குப்தகாசிக்கு 20 பேரை முதலில் மீட்டு வருகிறார் யூனூஸ்...

இப்படியாக மொத்தம் 500 இந்து யாத்ரீகர்களை மீட்டவர் யூனூஸ் என்ற முஸ்லீம்...

இவரது மீட்புப் பணி ஜூன் 18, 19 என தொடர்ந்து கொண்டே இருந்தது..

கேதார்நாத்தில் தாம் முதலில் சென்ற போது அங்கிருந்த ஹெலிபேட் அப்படியேிவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருந்தது..

கேதார்நாத் மீட்புப் பணியை முடித்துவிட்டு ஜூன் 20 பத்ரிநாத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டோம்..

தொடர்ந்தும் மீட்புப் பணிகள் நடைபெற்றே வருகின்றன என்கிறார் யூனூஸ்.

பீகாரின் பகல்பூரைச் சேர்ந்த 38 வயதான யூனூஸ் இந்திய விமானப் படையில் 1995ஆம் ஆண்டு இணைந்தார். அப்போது பைலட் அதிகாரி என்ற பதவியில் இணைந்தார்.

தற்போது அப்பதவி இல்லை. தமது மீட்புப் பணிகள் பற்றி கருத்து தெரிவித்த யூனூஸ், இந்திய விமானப்படை எங்களுக்குக் கற்றுக் கொடுத்த ஒரே மதம் இந்தியன் என்பதுதான்.. அப்படித்தான் நாங்கள் பயிற்றுவிக்கப்பட்டோம்.. என்கிறார்....

Read more at: http://tamil.oneindia.in/news/2013/06/25/india-air-force-pilot-yunus-is-proud-be-indian-177873.html

Anonymous said...

மீட்புபணியில் நீங்க விரோதியாக பார்க்கும் RSS அமைப்பு களத்தில் ஈடுபட்டது. எந்த முஸ்லிம்அமைப்பு களப்பணியில் ஈடுபட்டிருக்கின்றாரா ?

உத்தர்காண்ட் பெருவெள்ளத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற களமிறங்கிய இந்திய விமானப் படையின் முதலாவது மீட்பு அணியின் கமாண்டராக பணியாற்றியவர் எஸ்.எம்.யூனூஸ் என்ற இந்தியன்.கமாண்டர் அதிகாரி

\\எந்த முஸ்லிம்அமைப்பு பணியாற்றியது\\\

இமயமலை சுனாமியில் சிக்கியோ இந்து யாத்ரீகர்களை மீட்ட யூனூஸின் மகத்தான சேவை ஒரு இந்தியனாக பெருமை கொள்ள வைக்கும்..