Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Sunday 23 February 2014

சிறு தானிய உணவு திருவிழா...


"ஐந்திணை மற்றும் தளிர்கள், தர்மபுரியில் ஏற்பாடு செய்திருந்த சிறு தானிய உணவு திருவிழாவில் நேற்று நான் கலந்திருந்தேன், அருமையான நிகழ்வாக அமைந்திருந்தது. நல்ல கூட்டம், நான் இவ்வளவு கூட்டத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. நல்ல விடயங்களை கேட்க கட்டணம் செலுத்தி இவ்வளவு மக்கள் வந்திருந்தது ஆச்சரியமான ஒன்றாக இருந்தது. அதில் அதிகமான பெண்கள் என்பது இன்னும் ஆச்சரியம் தான். நாம் மக்களை அணுகும் போது இன்னும் நேர்மறையாக அணுக வேண்டும் என உணர்ந்து கொள்ள முடிந்தது.



நம் தமிழ் மண்ணுக்கும் தமிழனுக்கும் ஏற்ற உணவுகள் சிறு தானியங்கள் (கம்பு, சாமை, திணை, சோளம், குதிரைவாளி மற்றும்....) தான் என அழகாகவும் உறுதியாகவும் கூறப்பட்டது, மாற்று வாழ்வியலுக்கான அடிப்படை தேவைகளான மாற்று உணவு (மரபு உணவு), மாற்று மருத்துவம், மாற்று கல்வி முறை மற்றும் மாற்று பொருளாதார கொள்கை போன்றவற்றை பற்றிய தெளிவான பார்வையை புரிய முடிந்தது. 

நாட்டில் நடக்கும் அனைத்து கொள்ளைகளுக்கும், கொலைகளுக்கும், வள சூறையாடல்களுக்கும் இங்குள்ள ஒவ்வொரு தனி மனிதனும் பொறுப்பேற்று கொள்ள வேண்டும் கூறிய செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ் அவர்களின் வார்த்தைகள் இன்று நாம் ஒவ்வொருவரும் எந்த அளவுக்கு சுயநலவாதியாக மாறிபோய் உள்ளோம் என உணர்த்தியது. இன்று தண்ணீரின் தேவையை கொண்டும் மின்சாரத்தின் அவசியத்தை கொண்டும் ஆளும் அரசாங்கங்கள் மக்களை எவ்வாறெல்லாம் அடக்கி ஒடுக்குகின்றன என்பதையும் அதன் பின்னாடி நடைபெறும் பன்னாட்டு அரசியலை பற்றியும் தெளிவாக முன் வைத்தார். 



அடைக்கபட்ட சூழலில், அடக்கு முறையால் கல்வியை கற்று தரும் மெக்காலேயின் கல்வி முறை அவர்களுக்கு தேவையான அடிமைகளை உருவாக்கி தரலாம், டாக்டர்களை, எஞ்சினியர்களை உருவாக்கலாம் ஆனால் சமூகத்து தேவையான நல்ல மனிதர்களை ஒரு நாளும் உருவாக்காது, இயற்கையை ஒட்டிய சுதந்திரமான சிந்தனையை வளர்க்கும் கல்வியே காலத்தின் தேவை, என்று முழக்கமிட்ட மீனாட்சி உமேஷின் வார்த்தைகள் ஆழமான அர்த்தத்தை கொண்டவை. 

மாற்று மருத்துவம் குறித்து உரையாற்றிய உமர் பாரூக், இன்றைய தேவை என்பது மாற்று அல்ல மரபு வாழ்வியலே, அது நம்மிடம் தான் உள்ளது, நமக்குள்ளே உள்ளது. இன்றைய அலோபதி மருத்துவம் என்பது மேலை நாடுகளின் மருந்து வியாபாரம் தானே தவிர மனித நலம் சார்ந்தது அல்ல என கூறி இன்றைய அலோபதி டாக்டர்களின் வியாபார முகத்தையும், தேசம் பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் சந்தையாக இருப்பதையும் தோலுரித்தார்.

இறுதியாக செந்தமிழனின் உரை அமைந்திருந்தது, நிலைக்கு திரும்புவோம் எனும் உரையில் மரபு வாழ்வியலின் அவசியத்தையும், இயற்கை சார்ந்து வாழ்வதையும் அதனை போற்றி பாதுகாப்பதையும் இல்லையேல் நாளைய தலைமுறை உணவுக்காக தேடி திரியும் நிலை ஏற்படும் என உணர்த்தினார், இன்றைக்கு நாமெல்லாம் எந்த அளவுக்கு பணம் தயாரிக்கும் இயந்திரங்களாக, சுயநலவாதியாக, சுயசார்பு அற்றவர்ளாக மாற்றபட்டுள்ளோம் என்பதையும் கூறினார், மரபுக்கு திரும்புதலே உண்மை பகுத்தறிவு எனவும், இதனை ஏற்காத நவீன சிந்தனையாளர்களும் பகுத்தறிவுவாதிகளும் ஒருவேளை இதனை பிற்போக்குதனம் என கருதும்பட்சத்தில், இந்த நவீனமும், பகுத்தறிவும் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் சமூகத்துக்கும் தராத மகிழ்ச்சியை, வாழ்வின் இன்பத்தை அத்தகைய பிற்போக்கு தனம் தருகிறதெனில் அத்தகைய பிற்போக்குவாதியாக இருப்பதில் மகிழ்ச்சியே என கூறியது! உண்மையாகவே பட்டது நமக்கும்! 

அப்புறம் என்ன? லட்டு, அல்வா, ஜூஸ், தோசை, பக்கோடா, முறுக்கு, பாயாசம், பொங்கல், பிரியாணி என (சிறு தானியங்களில் செய்யபட்டவை) எதையும் விடவில்லை! செம டேஸ்ட்... ஆஆவ்! ஏப்பம் சார்!"

நன்றி: சகோ அஹ்மத் இஸ்மாயில்

1 comments:

ஹுஸைனம்மா said...

ஆனாலும் நீங்களே போயிட்டு வந்த மாதிரியே காமிச்சுட்டு, கடசில வேற ஆளு பேரப் போட்டுட்டீங்க!!