Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Thursday, 27 February 2014

தமிழர் நலம் - புதைத்து விடுவோம் - பாஜக


மிழர் நலம் குறித்து பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், தி ஹிந்து இதழிற்கு அளித்துள்ள பேட்டியை பாருங்கள். தமிழ் உணர்வு, இன உணர்வு என்று சொல்லிக்கொண்டு பாஜகவிற்கு கொடி பிடிப்பவர்களின் கூடுதல் கவனத்திற்கு இந்த பதிவு. மற்றவர்கள் இந்த நகைச்சுவையாளரின் பேட்டியை படித்து வயிறு குலுங்க சிரிக்கலாம். 

The Hindu: இலங்கையின் வட பகுதியை புலிகள் சுற்றிவளைத்தபோது, சந்திரிகா அரசு வேண்டுகோளுக்கு இணங்க, ‘முற்றுகையை வாபஸ் பெறவில்லை எனில், இந்திய ராணுவத்தை அனுப்புவோம்’ என மிரட்டியது வாஜ்பாய் அரசுதானே?

Rajnath Singh: நீங்கள் கேட்பது மிகவும் பழைய விஷயம். இதுபோன்ற பழைய சம்பவங்களை ஒரே அடியாகப் புதைத்துவிடுவதுதான் நல்லது. இந்த விஷயத்தில் வாஜ்பாய் அரசு என்ன முடிவு எடுத்தது எனத் தெளிவாக என் நினைவுக்கு வரவில்லை!

(ஆஹா என்னவொரு பதில்!!! ஒரேடியாக புதைத்துவிடுவது நல்லதாம். பாஜகவிற்கு ஆதரவளிக்கும் தமிழின உணர்வாளர்களே சொல்லுங்க எல்லாத்தையும் புதைத்துவிட்டு போய் விடுவோமா?...இன்று இதை சொன்னவர்கள், ஒரு வேலை ஆட்சிக்கு வந்து இனப்படுகொலை எல்லாம் பழைய சம்பவம், மறந்துவிடுவோம் என்று சொல்ல மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?..Note this point... தங்களின் முந்தைய அரசு என்ன முடிவு எடுத்ததென்று கட்சியின் தலைவரான இவருக்கே தெரியாதாம்...அட்ரா சக்க...அட்ரா சக்க...)

The Hindu: தமிழர்களின் படுகொலையில் மனித உரிமைகளை மீறிய ராஜபக்‌ஷ மீது போர்க் குற்ற விசாரணை நடத்த வேண்டும் என தமிழக பா.ஜ.க. வலியுறுத்துகிறது. இதை உங்கள் தலைமை வலியுறுத்தாதது ஏன்?

Rajnath Singh: நோ கமென்ட்ஸ்!

(சூப்பரப்பு...நீங்க நோ கமென்ட்ஸ்னு சொல்லிருக்கலாம். ஆனா அதுக்கு என்ன அர்த்தம்னு எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சு. ராஜபக்சே மேல அவ்ளோ பாசம்ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்)

The Hindu: ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் விடுதலையைத் தமிழக பா.ஜ.க. வரவேற்கிறது, தேசியத் தலைமையோ எதிர்க்கிறது. ஏன்? பல்வேறு விஷயங்களில் மாநிலத் தலைவர்களும் தேசியத் தலைவர்களும் வேறுபட்டுப் பேசுவது ஏன்?

Rajnath Singh: எங்களது ஒரு தேசிய கட்சி. இதன் மாநிலம் மற்றும் தலைமைக்கு இடையே இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. நீங்கள் கூறுவது எனக்குப் புதிய தகவலாக உள்ளது. இதுகுறித்துத் தமிழக பா.ஜ.க. தலைவர்களிடம் பேசுவோம். இனி இதுபோன்ற தகவல் தொடர்பு இடைவெளி இல்லாமல் பார்த்துக்கொள்வோம்.

(இது உலக மகா நடிப்பு சார்... ஒரு நிருபர் சொல்லி தான் உங்க மாநில கிளைல என்ன நடக்குதுன்னு தெரிந்துக்கொள்கின்ற நிலையில் இருக்கீங்க...இதுல நீங்க அந்த கட்சிக்கு தலைவர் வேற...சபாஷ். சரி விடுங்க, இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாதுல்ல, அப்ப சீக்கிரமே முடிவு பண்ணி யார் சொல்றது சரின்னு அறிக்கை விடுங்க)

The Hindu: உங்கள் அணியில் இணைந்துள்ள வைகோ, சேர இருக்கும் பா.ம.க-வும் கூட வரவேற்கிறார்களே?

Rajnath Singh: (லேசான புன்னகையுடன்) இது விஷயமாக அவர்களிடம் பேசுவோம். 

(என்னத்த பேச போறீங்க...அடங்கப்பா ஆள விடுங்க)..

இப்படி ஒரு பொருந்தா கூட்டணி உங்களுக்கு தேவையா வை.கோ மற்றும் தமிழின உணர்வாளர்களே? சொன்னது சு.சாமி போன்ற ஆட்கள் அல்ல, பாஜகவின் தலைமை பொறுப்பில் இருப்பவர். பாஜக ஆட்சி கட்டில் ஏறினால் தமிழினத்திற்கு விடிவு பிறக்கும் என்று சிலர் கூறுவதை பார்க்கும் போது over to Rajnath Singh and BPJ's policies என்பதை தவிர வேறு எதுவும் கூற தோன்றவில்லை. 

நன்றி: தி ஹிந்து 
கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ 

9 comments:

Barari said...

லங்கையில் காமன்வெல்த் மாநாட்டின் போது இந்தியா அதில் பங்கு பெறலாமா கூடாதா என்ற நிருபரின் கேள்விக்கு எங்கு அமெரிக்காவில் நடக்கிறதே அந்த மாநாடா என்று கேட்டு தன அறியாமையை வெளிப்படுத்திய மகா புத்திசாலியாயிற்றெ இவர். உலகில் மற்றும் தாயகத்தில் என்ன நடக்கிறது என்பதை அறியாமலிருக்கும் இவர்தான் அகில இந்திய கட்சியின் தலைவர்.இவர்களுக்கு தெரிந்தது எல்லாம் பொய் பொய் பொய் இது மட்டும்தான்

jaffer khan said...

ராஜ்நாத் சிங் டில்லி இந்தியாவின் தலைநகரம் இதுவாது தெரியுமா?????

புலவர் இராமாநுசம் said...

இலங்கைத் தமிழர் பிரச்சனையில்
வடநாட்டார் யாருக்குமே அக்கரை இல்லை! என்பதுதான் உண்மை!

சிராஜ் said...

இலங்கை பிரச்சனையை பொறுத்த வரை காங்கிரஸ் , பாஜாக இரண்டும் ஒத்த கருத்துடையவை தான்...

இதில் நான் இதை செய்வேன், அதை செய்வேன் என்பதெல்லாம் தமிழக மக்களை ஏமாற்ற சொல்லப்படுபவையே அன்றி, உணர்வுப்பூர்வமானவை இல்லை என்று அனைவருக்குமே தெரியும்...

வைகோ விற்கு வேறு வழி இல்லை... அதான் பாஜக பக்கம் போனார்... அவர் அரசியல் செல்லாக்காசு ஆகி பலவருடங்கள் ஆகிவிட்டது ப்ரோ...

ஹமீத் said...

உயிர்களோடும்,உணர்வுகளோடும் அரசியல் சதிராட்டம் ஆடுவது கேவலம்...

ஜெய்லானி said...

//Rajnath Singh: எங்களது ஒரு தேசிய கட்சி. இதன் மாநிலம் மற்றும் தலைமைக்கு இடையே இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. நீங்கள் கூறுவது எனக்குப் புதிய தகவலாக உள்ளது. இதுகுறித்துத் தமிழக பா.ஜ.க. தலைவர்களிடம் பேசுவோம். இனி இதுபோன்ற தகவல் தொடர்பு இடைவெளி இல்லாமல் பார்த்துக்கொள்வோம்//

இவரோட மொபைல் போனை யாரோ திருடிட்டாங்க .அதான் தகவல் தொடர்பு இல்லாம இருந்திட்டார் .பாவம் நிருபர் தெரியாம கேட்டுட்டார் விட்டுடுங்கோ :)

viyasan said...

காங்கிரசை விட பா.ஜ.க வுக்குத் தான் சிங்கள பெளத்த இலங்கை அரசிடம் பாசம் அதிகம். மோடி பிரதமரானால் இலங்கைத் தமிழர்களின் நிலையில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. நிலைமை இன்னும் மோசமாகலாம். பாஜகவிலுள்ள இந்துத்துவாக்களைப் பொறுத்தவரையில், பெளத்த சமயமும் இந்துமதத்தின் ஒரு அங்கம் எனக் கருதுகின்றனர். ஆனால் இலங்கையில் தமிழர்களுக்கெதிராக போர் நடத்துவதும், இந்துக் கோயில்களையும், நிலங்களையும், தமிழர்களின் வீடுகளையும் ஆக்கிரமிப்பதும், தமிழர்களின் நிலங்களில் அத்துமீறிக் குடியேறுவதும் சிங்கள புத்த பிக்குகளும், அவர்களின் ஆதரவாளர்களும் தான். சிங்கள பெளத்த பிக்குகளின் இந்து, தமிழ் வெறுப்பினால் தான், இலங்கையில் தமிழர் பிரச்சனை அறுபது வருடங்களுக்கு மேலாகத் தீர்க்கப்பட முடியாமலிருக்கிறது. சிங்கள பெளத்தத்தின் அடையாளமாகத் தான், புத்தரின் பெயரில் வரலாற்றைத் திரித்து திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை தமிழ்ப்பகுதிகளில் நடத்தி, தமிழர்களை அவர்களின் பாரம்பரிய கிராமங்களிலேயே சிறுபான்மையினராக்கும் Ethnic Cleansing நடக்கிறது.

இலங்கையில் பெளத்தத்துக்கும், இந்துமதத்துக்குமிடையே தான் போரே தவிர, இஸ்லாத்துடனோ அல்லது கிறித்தவத்துடனோ அல்ல. ஆனால் பாஜக விலுள்ள இந்துத்துவாக்களின் எதிரி முஸ்லீம்களும், கிறித்தவர்களும் தான் பெளத்தர்களல்ல. அந்த அடிப்படை விடயத்திலேயே, ஈழத்தமிழர்களும், பாஜகவும் ஒன்று பட முடியாது. அத்துடன், சுப்பிரமணியம் சுவாமி, சுஸ்மா சிவராஜ், சோ ராமசாமி போன்ற சிங்கள அரசு ஆதரவாளர்கள் பாஜகவில் இருக்கும் வரை, ஈழத்தமிழர்களுக்கு எந்த நன்மையையும் ஏற்படப் போவதில்லை அப்படி ஏதாவது ஈழத்தமிழர் சார்பு முடிவெடுக்க அவர்கள் விடப்போவதுமில்லை. காங்கிரசை விட பாஜக வில் பார்ப்பன ஆதிக்கம் அதிகம். அதனால் பாஜக ஆட்சியில் ஈழத்தமிழர்களின் நிலைமை இன்னும் மோசமானதாகத் தானிருக்கும்.

அதனால் ஈழத்தமிழர்களின் நலன்களைக் கருத்தில் கொள்ளும், தமிழ்நாட்டுத் தமிழர்கள் வெவ்வேறு கட்சிகளுக்கு வாக்களித்து, தமது வாக்குகளை வீணாக்காமல், ஜெயலலிதாவுக்கே 40 தொகுதிகளையும் அளித்தால், தமிழ்நாட்டுக்கும் பலம் கிடைப்பதுடன், அது ஈழத்தமிழர்களின் நலன்களைக் காக்கவும் உறுதியாகக் குரல் கொடுக்கக் கூடிய ஒரு சக்தியை உருவாக்கும். ஏனென்றால், தான் எடுக்கும் முடிவைக் கடைசி வரையில், எதற்காகவும் விட்டுக் கொடுக்காமல் கடைப்பிடிக்கும் தன்மையும், துணிச்சலும் செல்வி. ஜெயலலிதாவுக்கு இருக்கிறது போல் தெரிகிறது. அதுவும் கூட ஒரு நம்பிக்கை தான். :-)

Anonymous said...

"இலங்கை பிரச்சனையை பொறுத்த வரை காங்கிரஸ் , பாஜாக இரண்டும் ஒத்த கருத்துடையவை தான்...
"

இந்த இரண்டு தேசிய கட்சிகள் மட்டுமல்ல. தமிழக முஸ்லிம் கட்சிகளும் அதே நிலைப்பாட்டைத்தான் கொண்டிருக்கின்றன.
தமிழர்கள் விவகாரத்தில் பிஜேபியும் முஸ்லிம் கட்சிகளும் ஒரே நேர்கோட்டில் தான் நிற்கின்றன.

வேகநரி said...

//இலங்கையின் வட பகுதியை புலிகள் சுற்றிவளைத்தபோது சந்திரிகா அரசு வேண்டுகோளுக்கு இணங்க‘முற்றுகையை வாபஸ் பெறவில்லை எனில் இந்திய ராணுவத்தை அனுப்புவோம்’ என மிரட்டியது வாஜ்பாய் அரசுதானே?//
இலங்கையின் வட பகுதியை புலிகள் சுற்றிவளைத்தபோது அதை அனுமதிக்குமா உங்க சவூதி அரசு?
அல்லது பாகிஸ்தான் அரசு தான் அனுமதிக்குமா?
உலகத்தில் உள்ள எந்த ஜனநாயக நாடாவது அனுமதிக்குமா?
இந்திய தமிழக மக்களின் அத்தாவசிய பிரச்சசைனைகளை நீர்த்து போக பண்ண கிடைத்த மிக சிறந்த அற்புத கருவி ஈழம்.
அதை வைத்தே தமிழ கட்சிகள் எல்லாமே நாடகம் ஆடுறாங்க. இதே மாதிரி நீங்களும் உங்களுக்குரிய பாஜகவிற்கு எதிரான கொள்கைகள் படி இதை பயன்படுத்துறிங்க.