Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Monday 16 April 2012

முஸ்லிம் பெண் பதிவர்களின் அதிரடி நடவடிக்கை


பல்வேறு சவால்களையும் தாண்டி இஸ்லாம் தொடர்ந்து பலரையும் தன்பால் ஈர்த்து வருகின்றது. இஸ்லாமை ஏற்போரில் பெண்களே அதிகம் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இஸ்லாம் குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில் இதற்கான விரிவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது முஸ்லிம்களின் கடமையாகின்றது.

தற்போது இதில் ஒரு பகுதியாக, முஸ்லிமல்லாதவர்கள் பயன்பெறும் விதமாக (குறிப்பாக சகோதரிகள்) இஸ்லாமிய பெண்மணி என்ற தளம் (பார்க்க <<இங்கே>>) முஸ்லிம் சகோதரிகளால் தொடங்கப்பட்டுள்ளது. இந்த தளமானது முழுக்க முழுக்க பெண்களால் நிர்வகிக்கப்படும் தளம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பதிவுலக சகோதரிகள் மற்றும் முகப்பக்கத்தில் இஸ்லாம் குறித்து விளக்கம் அளிக்கும் சகோதரிகளால் ஒருங்கிணைத்த முயற்சியாக தொடக்கப்பட்டுள்ள இந்த தளம், இஸ்லாமில் பெண்களின் நிலை குறித்த விமர்சனங்களுக்கு பதில் அளிப்பதை முதன்மை நோக்கமாக கொண்டு செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இஸ்லாமிய அடிப்படையிலான சிந்தனைகள், விழிப்புணர்வு கட்டுரைகள், வரலாற்று பின்னணிகள் போன்றவையும் வெளிவரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இஸ்லாமில் பெண்களின் நிலை குறித்து அறிய விரும்பும் மாற்று கொள்கை சகோதர சகோதரிகளுக்கு இந்த தளம் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகின்றோம்.  முஸ்லிம்கள், இந்த தளம் பயனுள்ளதாக இருந்தால் நீங்கள் அறிந்தவர்களுக்கு கூறி இந்த முயற்சி வெற்றி பெற ஆதரவளியுங்கள் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த முயற்சியை பொருத்திக்கொண்டு, இந்த சகோதரிகள் தங்கள் பணியில் வெற்றிபெற இறைவன் உதவுவானாக...

<<இஸ்லாமிய பெண்மணி தளத்தின் அறிமுக பதிவை இங்கே காணலாம்>>

14 comments:

ரஹீம் கஸ்ஸாலி said...

வாழ்த்துக்கள்

ஆமினா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பகிர்வுக்கு நன்றி சகோ

இது மேலும் எங்களை ஊக்கப்படுத்துது

ஜஸக்கல்லாஹ் ஹைர்

சென்னை காம்மென் மேன் said...

அலைக்கும் வஸ்ஸலாம்
இது போன்ற வலைத்தளங்கள், ப்ளாக் கள். வரவேற்புக்கு உரியதே.
இது ஒரு இரு பக்கமும் கூர்மையான ஆயுதத்தை கையாளும் நேர்த்தியுடன் செய்யவேண்டும். மிக கவனத்துடன் , செய்யப்படும் பதிவுகள் நமது மார்க்க விசயத்தில் எவ்விதத்திலும் மாறுபடாமல் இருக்கிறதா ? என்பதை ஆழமாக ஆராய்ந்து, தேவையான கிதாப்கள், குரான் ஆகியவற்றை தெளிந்து அதன் பின்னரே நாம் பதிவிடல் வேண்டும். ஏன் எனில் , மாற்று சகோதரர்கள் , இதில் ஏதும் தவறு கண்டு விட்டால் அதையே காரணமாக காட்டி பல பதிவுகள் வர ஏதுவாகும்.
எனினும் தங்களின் முயற்ச்சிக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
வல்ல இறைவன் நல்லருள் புரிவானாக.

suvanappiriyan said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

வாழ்த்துக்கள்

mohamedali jinnah said...

JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
“Allâh will reward you [with] goodness.”

mohamedali jinnah said...

Please visit
http://seasonsnidur.blogspot.in/2012/04/blog-post_16.html
முஸ்லிம் பெண் பதிவர்களின் அதிரடி நடவடிக்கை

Unknown said...

வாழ்த்துக்கள் இன்னும் முன்னேற,

ribnas said...

wish u all the best

Jafar ali said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

வாழ்த்துக்கள்!!!!

ஜெய்லானி said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

வாழ்த்துக்கள்....! :-)

Flavour Studio Team said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
பயனுள்ள தகவல்....... மிக்க நன்றி சகோ..

mohamedalam said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

வாழ்த்துக்கள்....! :-)

Reply

mohamedalam said...

வாழ்த்துக்கள் இன்னும் முன்னேற,

mohamedalam said...

keep it up