Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Wednesday, 2 May 2012

கள்ள வோட் பின்னணியில் ஈழ பதிவர்கள்?


**************************
முக்கிய செய்தி:

எதிர்தரப்பு தற்போது போட்டுள்ள பதிவில் இங்கே கேட்கப்பட்டிருக்கும் எந்த கேள்விக்கும் பதில் இல்லை. ஏமாற்றுகாரர்களை மறுபடியும் தோலுரித்து வெற்றியை அளித்த இறைவனுக்கே புகழ் அனைத்தும் உரித்தாவதாக்.
**************************

மேற்கொண்டு தொடர்வதற்கு முன் இந்த பதிவையும், இதனையும் பார்த்துவிடுங்கள்.

முஸ்லிம் பதிவர்களின் பெயரில் மாற்றம் செய்து முகவரி உருவாக்கியும், மேலும் பல முகவரிகளை உருவாக்கியும் முஸ்லிம்களின் பதிவுகளுக்கு தாறுமாறாக மைனஸ் குத்தப்பட்டது பதிவுலகை கவனித்தவர்களுக்கு தெரிந்திருக்கும். அதுபோலவே, முஸ்லிம்கள் மீது தவறான எண்ணம் ஏற்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக முஸ்லிமல்லாதவர்கள் பதிவுகளுக்கும் இந்த கள்ள வோட் ஆட்கள் மைனஸ் குத்தினார்கள். இதனையெல்லாம் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி மேலே உள்ள பதிவுகள் மூலமாக தெரிவித்தோம்.

அப்படி மைனஸ் வோட் குத்தப்பட்ட முஸ்லிமல்லாத பதிவர்களை தொடர்புக்கொண்டு எங்கள் நிலைகளை விளக்கினோம் என்பதையும் கூறியிருந்தோம். மேலும் கள்ள முகவரிகளை லிஸ்ட் போட்டு (அப்போதைய நிலைமைக்கு) தமிழ்மணத்திற்கு அனுப்பி அவற்றை நீக்க சொல்லியும் கேட்டிருந்தோம்.

இதெல்லாம் உங்களில் பலருக்கும் தெரிந்த கடந்த கால சம்பவங்கள். முஸ்லிம்களுக்கும் மற்ற பதிவர்களுக்குமிடையே குழப்பம் ஏற்படுத்த எடுக்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் பலனளிக்கவில்லை. மேலும் இந்த சூதுகளை முஸ்லிம் பதிவர்கள் சிறந்த முறையில் கையாண்டும் வந்தனர். புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக.

மைனஸ் போட்டு போட்டு ஓய்ந்து போய்விட்டார்களோ என்னவோ, கடந்த சில நாட்களாக சில வினோதமான காட்சிகளை நடத்தி காட்டினார்கள். அதாவது, இதுநாள் வரை முஸ்லிம்களின் பதிவுக்கு மைனஸ் வோட் போட்டுக்கொண்டிருந்த ஆள்(ஆட்கள்), முஸ்லிம்களின் சில பதிவுகளுக்கு பிளஸ் வோட் போட்டார்கள். அவை மகுடதிற்கும் வந்தன.

ஏதோ பிளான் செய்வதாக நினைத்துகொண்டு மறுபடியும் சறுக்கத்தான் போகின்றார்கள், பொறுத்திருந்து பார்ப்போம் என்று எண்ணினோம். இது முஸ்லிம் பதிவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. உதாரணமாக ரஜின் அவர்களின் இந்த பதிவை பாருங்கள். இதில் விழுந்த பல பிளஸ் வோட்கள் கள்ள முகவரியில் இருந்து குத்தப்பட்டவையே. இது குறித்த முஸ்லிம் பதிவர்களின் கருத்து பரிமாற்றத்தையும் அதில் கவனியுங்கள். ஆக, இதுகுறித்து முஸ்லிம் பதிவர்கள் பொதுவில் தங்கள் கருத்துக்களை முன்னமே வைத்துவிட்டார்கள்.

இதனை குழப்பம் விளைவிக்க முயற்சிக்கும் ஆள்/கும்பல் அறிந்ததாக தெரியவில்லை. அவர்களது கடந்த கால நடவடிக்கைகளை கவனிக்கையில் அவ்வளவு புத்திசாலித்தனம் அவர்களுக்கு இருப்பதாகவும் நாங்கள் கருதியதில்லை.

முன்பு, முஸ்லிமல்லாதவர்கள் பதிவுக்கு மைனஸ் வோட் விழுந்த போது, அதனை முஸ்லிம்கள் தான் செய்தனர் என்று திசை திருப்ப முயன்ற ஒரு தளத்தின் முயற்சிகள் இறைவனின் கிருபையால் தகர்த்தெறியப்பட்டு, புஸ்வாணமாகி பதிவுலகில் பலரும் உண்மை நிலையை அறிந்துக்கொண்டனர். அவர்களுடன் அழகான நட்பும் உருவானது.

அதே போன்ற ஒரு யுக்தியை தற்போது கையில் எடுத்திருக்கின்றது மதுரன் என்பவரது சிறகுகள் என்ற தளம். அவர் சொல்ல வருவது இதுதான். இத்தனை காலமும் இந்த செயலை செய்தது முஸ்லிம்கள் தான் என்று நிறுவ முயற்சிக்கின்றார். அதாவது, முன்பு முஸ்லிம்கள் பதிவுகளுக்கு மைனஸ் போட்டுக்கொண்டதும் முஸ்லிம்கள் தானாம். இப்போது பிளஸ் போட்டு கொள்வதும் முஸ்லிம்கள் தானாம். :)

அதற்கு அவர் கூறும் காரணங்களை கீழே விமர்சித்துள்ளேன். அதில் ஒன்றை இப்போது பார்ப்போம். அவருடைய சென்ற இஸ்லாமிய விரோத பதிவுக்கு வெகு விரைவாக மைனஸ் வோட் குத்தப்பட்டதாம். முஸ்லிம் பதிவர்களை பொருத்தவரை இஸ்லாமை கீழ்த்தரமாக விமர்சிக்கும் பதிவுகளுக்கு தவிர வேறு எந்த பதிவிற்கும் ஒருங்கிணைந்து மைனஸ் வோட் குத்துவதில்லை. இதனை முன்னமே தெரிவித்தும் இருக்கின்றோம். பதிவுலகை கவனிப்பவர்களுக்கு எளிதாக புரியும் உண்மை இது. அப்படியாக ஒரு பதிவு வந்தால் உடனடியாக பலருக்கும் தெரிவிக்கப்பட்டு விரைவாக மைனஸ் வோட் குத்தப்பட்டு எதிர்ப்பு காட்டப்படுவது இயல்பான ஒன்றே.

தன்னை தானே தொழிநுட்பம் தெரிந்தவர் என்று குறிப்பிடும் மதுரன், வெகு விரைவாக போடப்பட்ட இந்த மைனஸ் வோட்கள் யார் யார் என்ற விபரத்தை, கூடவே அதுகுறித்த தொழில்நுட்ப விபரத்தையும் வெளியிட்டால் பலரும் உண்மையை அறிந்துக்கொள்ள ஏதுவாய் இருக்கும். இதனை ஏன் சொல்லுகின்றேன் என்றால், குழப்பத்தை விளைவிக்க முயற்சி செய்யும் அந்த கள்ள வோட் ஆள்(ஆட்கள்), மதுரனின் அந்த பதிவிற்கு மைனஸ் வோட் குத்தி இருந்தனர். தொழில்நுட்பத்தில் சிறந்த(?) மதுரன், வோட் குத்திய அனைவரின் தொழிநுட்ப விபரங்களை வெளியிட்டால் இந்த குழப்பம் விளைவிக்க முயலும் ஆள் (ஆட்கள்) குறித்து நாம் அனைவரும் அறிந்துக்கொள்ளலாம். செய்வாரா மதுரன்? (அப்படி அவர் வெளியிட்டால் அடுத்து இருக்கின்றது பெரிய கச்சேரி)

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த நகைச்சுவையாளர்கள் ஒரு விசயத்தை புரிந்துக்கொள்ளவில்லை. இந்த கள்ள வோட்களை லிஸ்ட் போட்டு தமிழ்மணத்திற்கு அனுப்பி அவற்றை நீக்க சொன்னவர்கள் நாங்கள். முஸ்லிம்கள் இந்த பிரச்னைக்கு காரணம் என்றால் ஏன் தமிழ்மணத்திடம் போலிக்களை ஒழிக்க சொல்லி கோர வேண்டும்? இன்றளவும் கூட என்ன என்ன பெயரில் கள்ள வோட்கள் உருவாகிக்கொண்டு இருக்கின்றன என்பதை இந்த பதிவில் அப்டேட் செய்துக்கொண்டிருக்கின்றோம். தமிழ்மணம் இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள கள்ள முகவரிகளை நீக்குமானால் மிக்க மகிழ்ச்சியே. அனைத்து பதிவர்களும் இதற்கு குரல் கொடுக்க தயாரா?

இந்த கள்ள வோட் பிரச்சனை ஆரம்பித்ததே இந்த தளத்தில் வந்த இலங்கை தீர்மானம் குறித்த ஒரு பதிவில் இருந்து தான். அந்த பதிவிற்கு முதன் முதலாக மைனஸ் குத்திய நான்கு பேரில் ஒருவர் இதே மதுரன், மற்றொருவர் இன்னொரு ஈழ பதிவரான காட்டான். மற்ற இரு முகவரிகளும் கள்ள முகவரிகள். இதனை தொடர்ந்து தான் அதே பதிவில் முஸ்லிம்கள் பெயரில் மாற்றம் செய்து வெகு விரைவாக கள்ள வோட்கள் குத்தப்பட்டது. அப்படியென்றால் இதற்கு பின்னணியில் மதுரனின் அனுமானம் படி ஈழ பதிவர்கள் தானே இருக்கின்றனர்?????

(மேலே உள்ள படத்தில் முஸ்லிம் பதிவர்கள் பெயரில் மாற்றம் செய்து வோட்கள் போடப்பட்டுள்ளதை கவனியுங்கள். அப்படியே மதுரன் மற்றும் காட்டான் இருவரது வோட்டையும் கவனியுங்கள். ஈழ பதிவர்கள் மற்றும் போலிகளை தவிர வேறு யாரும் மைனஸ் குத்தவில்லை என்பதையும் கவனியுங்கள். இது தான் போலி பிரச்சனை ஆரம்பித்த முதல் பதிவு)

அதுபோல, புலிகளின் தலைவர் பிரபாகரனை சிலாகித்து வந்த ஒரு பதிவிற்கு இந்த மைனஸ் வோட் கள்ள கும்பல் தாறுமாறாக பிளஸ் வோட் குத்தி மகுடத்திற்கு கொண்டுவந்தது. அப்படியென்றால் இதற்கு பின்னணியில் மதுரன் லாஜிக் படி யாரென்று புரிகின்றதா?????

(மேலே உள்ள படத்தில் முஸ்லிம்கள் பெயரை பயன்படுத்தி முஸ்லிம்கள் கடுமையாக வெறுக்கும் ஒரு நபரை பற்றிய பதிவிற்கு வோட்கள் போடப்பட்டிருப்பதை கவனியுங்கள். இந்த பதிவிற்கு விழுந்த அனைத்துமே பிளஸ் வோட்கள். இதில் சுமார் ஐந்து மட்டுமே பதிவர்களின் வோட்கள். மற்ற அனைத்தும் போலி வோட்கள்)

ஆக, மதுரனின் லாஜிக் படி இந்த கள்ள வோட் பிரச்சனைக்கு பின்னணியில் யார் இருப்பார்கள் என்பது புரிகின்றதா? படிப்பவர்கள் முடிவுக்கே விட்டு விடுகின்றோம். 

மதுரன் அவர்களின் கருத்துக்களுக்கு எம் பதில்கள்:

<<இதனால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தவர்கள் பதிவுலகில் மதவாதம் பேசிவந்த இஸ்லாமிய மதவாத கும்பலே>> - பாதிப்பு என்பதை எந்த அர்த்தத்தில் பயன்படுத்துகின்றீர்கள் என்று புரியவில்லை. முன்பை காட்டிலும் இன்னும் வீரியமாகவே எழுதுகின்றார்கள்.

<<பல இஸ்லாமிய பதிவர்கள் இந்த கள்ள/ போலி ஓட்டு தொடர்பாக பதிவுகளை எழுதியதோடு அந்த போலி ஐடிக்களையும் வெளிப்படுத்தினார்கள்>> - தவறு. இருவர் மட்டுமே எழுதினார்கள்.

<<எம்மை தொடர்பு கொண்ட அந்த பதிவர் கூறினார் "நாற்று குழுமம் தான் தொழில்நுட்பம் தெரிந்த குழுமம்>> - இதை யார் சொன்னார் என்று தெரியவில்லை. ஆனால் அவருடைய judgement ரொம்ம்ப தவறு. 

<<விரைவில் இந்த போலி ஓட்டு போடுபவர்களை கண்டுபிடித்து தாருங்கள் என்றும் கூறினார்>> - தவறு தான். தனிமையில் சொன்ன விசயத்தை இப்படி பொதுவில் வந்து சொல்லுகின்ற அற்புத பண்பு கொண்ட உங்ங்ங்க கிட்ட வந்து கண்டுபிடித்து தாருங்கள் என்று கூறினார் பாருங்கள், அது தவறு தான். வருத்தம் தெரிவித்து கொள்கின்றோம்.

<<தொழில்நுட்பம் தெரிஞ்சது ஒரு குத்தமாய்யா?????????>> - இதற்கு ஒரு ஸ்மைலி மட்டுமே :)

<<போலி ஐடிகளில் மைனஸ் ஓட்டு போட ஆரம்பித்தபோது இஸ்லாமிய பதிவர்களுக்கு மட்டும் கண்டபாட்டுக்கு மைனஸ் ஓட்டு விழுந்துள்ளது>> - தவறு. முஸ்லிம்கள் மீது பழி போட வேண்டும் என்பதற்காக முஸ்லிமல்லாத பதிவர்களுக்கும் விழுந்துள்ளது. மேலே முதல் வரியில் கொடுக்கப்பட்டுள்ள சுட்டிகளை பாருங்கள்.

<<அதன் இன்னொரு முயற்சிதான் போலிகளை வெளிப்படுத்தி போட்ட பதிவுகள். இந்த முயற்சியில் அவர்கள் வெற்றியும் பெற்றார்கள்>> - அப்படியா. புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக. நன்றி.

<<முதலாவது விடயத்தில் சரியாக அடித்தாடியவர்கள் அடுத்தடுத்து கோட்டை விட ஆரம்பித்தார்கள்>> - அப்படியா. இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் இதிலும் அடித்தாடினார்கள் என்று சொல்லும் நிலை வரும்.

<<இங்கே நடந்துகொண்டிருப்பது என்னவென்றால் இந்த மதவாதிகளின் பதிவுகள் 7 வாக்கு பெறும்வரை எந்த போலி ஐடியும் மைனஸ் வாக்கு அளிப்பதில்லை>> - அறிவுக்கு ஒத்துவராத அவசரபுத்தி கருத்து. இந்த போலிகள் மைனஸ் போட ஆரம்பித்த காலத்திலிருந்து எங்களுடைய பதிவுகள் பல ஏழு வோட் வாங்குவதற்கு முன்னமே மைனஸ் வோட்களை இவர்களால் வாங்கியிருக்கின்ரன. இதற்கு சமீபத்திய சுவனப்பிரியன் பதிவு வரை உதாரணம் இருக்கின்றது. சாம்பிளுக்கு ஒன்று இங்கே. கடந்த இரண்டு மாதங்களில் எங்கள் பதிவுகளை கணக்கெடுத்து கொள்ளுங்கள். பின்னர் அதில் எத்தனை பதிவுகள் தமிழ்மண வாசகர் பரிந்துரையில் வந்திருக்கின்றன என்று பார்த்து சொல்லுங்கள். சும்மா வாய்க்கு வந்ததை பேசக்கூடாது. உங்கள் தலைவர் மீது நீங்கள் வைத்துள்ள மதிப்பு உண்மையென்றால் உங்கள் கருத்தை நிருபியுங்கள்.

<<மகுடத்திற்கு கொண்டுவரப்படும் இந்த மதவாத பதிவுகள் ஆச்சரியப்படும்விதமாக முதல் நாள் ஒரு மைனஸ் கூட இல்லாமல் இருக்கின்றன. ஆனால் இரண்டாம் நாள் மாத்திரம் குறிப்பிட்ட சில நேரத்திற்குள் மைனஸ் வாக்குகள் அளிக்கப்படுகின்றன.மைனஸ் வாக்குகளை அளித்தவர்களின் நோக்கம் இஸ்லாமிய பதிவுகளை ஓரம்கட்டுவதாக இருந்தால் மைனஸ் வாக்குகளை முதல் நாளே அல்லவா போட்டிருக்கவேண்டும்>> - நான் மேலே சொன்னது போன்று சமீப காலங்களாக தான் இம்மாதிரி நடக்கின்றது. முஸ்லிம்களின் அதிக வாக்குகள் பெற்ற முந்திய பதிவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். அவை மகுடத்தில் ஏறி இருக்கின்றவா என்று சொல்லுங்கள். சாம்பிளுக்கு ஒன்று இங்கே. ஒன்று மகுடத்தில் ஏறும் முன் மைனஸ் குத்தி ஏற விடாமல் தடுக்கப்படும். அல்லது வந்த சில நிமிடங்களில் மைனஸ் குத்தப்பட்டு இறக்கப்படும்.

<<இஸ்லாத்துக்கு எதிராக எழுதப்படும் பதிவுகள் அனைத்துக்கும் சரமாரியாக மைனஸ் வாக்கு அளிக்கப்படும்>> - தவறு. இஸ்லாமை கீழ்த்தரமாக விமர்சிக்கும் பதிவுகளுக்கு மட்டுமே இதுவரை ஒருங்கிணைத்து மைனஸ் குத்தப்பட்டிருக்கின்றது. ஆரோக்கியமான விமர்சனங்களை என்றுமே வரவேற்கின்றோம்.

<<குறிப்பிட்ட சிலரே பல ஐடிக்களில் இட்டிருக்கிறார்கள்>> - தவறு. உங்கள் மண்ணை உண்மையிலேயே நேசிக்கும் ஆளாக இருந்தால் இதனை நிரூபியுங்கள்.

<<அடுத்த விடயம் இவர்களை சார்ந்தவர்களால் தங்கள் மதம் சம்மந்தமாக விளக்கம் கொடுப்பதற்கென ஆரம்பிக்கப்பட்ட புது ப்ளாக். இந்த ப்ளாக் ஆரம்பித்ததும் அதை அறிமுகப்படுத்தவேண்டிய தேவை இருக்கிறது அல்லவா. அதற்கு தமிழ்மணம் மகுடம் சிறப்பான வழி. வாக்குகள் அனைத்தும் ப்ளஸ் ஆக அளிக்கப்பட்டன. பதிவும் மகுடத்துக்கு வந்தது. வாக்களித்தவர்களின் லிஸ்டை பார்த்ததும் ஆச்சரியம். காரணம் ஒரு மைனஸ் வாக்கு கூட இல்லாதிருந்த நிலையில் போலி ஐடிகள் முழுக்க அந்த லிஸ்டில் இருந்தன>> - அறிவுக்கு கொஞ்சமும் ஒத்துவராத கருத்து. மேலே இதற்கான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் புது ப்ளாக்கிற்கு மட்டுமல்ல, பதிவர் ரஜின் பதிவிற்கும் இந்த போலி ஆள் (ஆட்கள்) பிளஸ் போட்டிருக்கின்றார்/கள். மேலே பார்க்கவும்.

உங்கள் லாஜிக் படி, முஸ்லிம்களின் பதிவுக்கு இந்த கள்ள வோட் ஆள் (ஆட்கள்) பிளஸ் வோட் குத்தியிருப்பதால் இந்த போலிகளுக்கு பின்னணியில் முஸ்லிம்கள் இருக்கின்றனர் என்றால், அதே போல பிரபாகரனை போற்றி போட்ட பதிவு மகுடத்திற்கு வருவதற்கும் இந்த போலிகளே காரணம். ஆக, இந்த போலிகளுக்கு பின்னணியில் ஈழ பதிவர்கள் இருக்கின்றனர். சரிதானே? என்னே ஒரு அற்புத லாஜிக்?

<<எதையுமே ப்ளான் பண்ணி செய்யனும் என்கிறது முக்கியமில்ல.. போடுற ப்ளான பக்காவா போடனும்.. இல்லாட்டி இப்பிடித்தான்...>> - ஆம். வோட் போடும் போலிகள் இப்படிதான் எதையாவது சொதப்பிவிட்டு விடுகின்றனர். எங்கள் மத்தியில் இவர்களுக்கு காமெடி பீஸ்கள் மற்றும் எதையும் உருப்படியாக செய்யாதவர்கள் என்ற செல்லப்பெயர்(?) உண்டு.

மொத்தத்தில் எதையோ பிளான் பண்ணி செய்வதாக நினைத்துக்கொண்டு சொதப்ப போகின்றார்கள் என்று பேசிக்கொண்டோம். அது தான் நடந்திருக்கின்றது. இந்த முறையும் முயற்சி படுத்துக்கொண்டு விட்டது. புகழ் அனைத்தும் இறைவனுக்கே.

மைனஸ் வோட் குத்தினார்கள், அது பலனளிக்கவில்லை. முஸ்லிம்கள் மீது பழி போட வேண்டுமென்பதற்காக முஸ்லிமல்லாதவர்கள் பதிவுக்கு மைனஸ் போட்டு ஒரு தளம் மூலமாக குழப்பம் ஏற்படுத்த முயற்சித்தார்கள். அது முறியடிக்கப்பட்டது. அடுத்து, சமீப காலமாக எங்களுக்கு பிளஸ் குத்தி எதோ புத்திசாலித்தனமாக பிளான் பண்ணுவதாக நினைத்துக்கொண்டார்கள். நாங்கள் எண்ணியது போலவே இதனை வைத்து தற்போது சிறகுகள் தளம் குழப்பம் ஏற்படுத்த முயற்சித்தது. அதுவும் இப்போது இறைவனின் கிருபையால் பல்லிளித்து விட்டது. போய் மறுபடியும் எதையாவது முயற்சியுங்கள். ஆனால் தயவுக்கூர்ந்து சற்றே புத்திசாலித்தனத்துடன் முயற்சியுங்கள் :)

உங்களின் அசைவுகள் கண்காணிக்கப்படுகின்றன என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். இறைவனின் இந்த வசனம் உள்ளத்தில் இறங்கினால் எல்லாம் தெளிவாகும் 

அவர்களும் திட்டமிட்டார்கள். இறைவனும் திட்டமிட்டான். தவிரவும், திட்டமிடுதலில் இறைவனே சிறந்தவனாவான் - குர்ஆன் 3:54

Better luck next time.

கட்டுரை உதவி: ஆஷிக் அஹமத் அ 


10 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சலாம் சகோ.மனிதாபிமானி,

நன்றி சகோ.ஆஷிக் அஹமத்.

இதையும் இங்கேயும் சொல்லி விடுவோம்..!

கள்ளபெயரில் மைனஸ் போடும் திருட்டு பேர்வழிகள்...

abdulhakim என்ப‌தை abdulhakkimm என‌வும்
AMINA29 என்ப‌தை AMINAA29 என‌வும்
askabt.islam@gmail.com என்ப‌தை askabt.islamm@gmail.com என‌வும்
hajamydheen என்ப‌தை hajamydheeen என‌வும்
hussainamma என்ப‌தை hussainaamma என‌வும்
hyderali என்ப‌தை hyderalii என‌வும்
mohaashik என்ப‌தை mohaaashik என‌வும்
nasar என்ப‌தை naasar என‌வும்
PeerMhd என்ப‌தை PeerMhdd என‌வும்
peermohamed.m@gmail.com என்ப‌தை peermohamed.mm@gmail.com என‌வும்
rabbani என்ப‌தை rabbanii என‌வும்
suvanappiriyan என்ப‌தை suvanapppiriyan என‌வும்
vanjoor என்ப‌தை vaanjoorappa@gmail.com என‌வும்
VANJOOR என்ப‌தை NONJOOR என‌வும்

....இதுபோன்ற தில்லுமுல்லு பயனர் பெயர்களும்உருவாக்கி துஷ்பிரயோகம் செய்து வருகிறார்கள்.

மேலும்.....

abdulkader111,
abdulkader111@gmail.com,
alexmbathusha,
blara
farooq11,
fatimabebehh@gmail.com,
fazul,
gulamnabi000@gmail.com,
haitharjunus,
hajamydheen,
hareraama,
ibrahimriyas@gmail.com, kavippuyal007@yahoo.com, kokkaamakkaa@gmail.com,
kpeterson, mohemadrias,
muftaa08,
mustaquee1515@gmail.com,
muztafa,
PANNAGAM3@GMAIL.COM,
punter
rahman100@gmail.com,
superman

---இவர்கள் எல்லாரும் மைனஸ் பார்ட்டிகள் தான்,.

(தகவலுக்கு நன்றி : வாஞ்சூர் தளம்)

சுவனப்பிரியன் said...

சலாம் சகோ!

உண்மையை இந்த அளவு அலசி விளக்கி பதிவு இட்டால் பாவம் அவர்கள் அடுத்து என்ன செய்வார்கள்? ரூம் போட்டு யோசிப்பார்களோ... யோசிக்கட்டும்..... :-)

திரும்பவும் தோல்வி. வேதாளம் திரும்பவும் முருங்கை மரம் ஏறும். இது ஒரு தொடர்கதை :-)

ஹைதர் அலி said...

1827-ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் இருந்த தமிழ் மக்களின் எண்ணிக்கை 99.24 சதவீதம். சிங்களவர்கள் வெறும் 0.53 சதவீதம்.

பிறகு 81-ல் தமிழர்கள் 74.61-ஆகக் குறைக்கப்பட்டார்கள்.

2011-ல் நிலைமை தலைகீழ்.

மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை உள்ளிட்ட கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்களைச் சேர்ந்து வெறும் 34 சதவீதம் பேர்தான் இப்போது இருக்கிறார்கள். இதில், இஸ்லாமியர்கள், தனி ஈழத்துக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதில்லை.

மொத்தத்தில், தமிழர் நிலத்தில் உள்ள 9 மாவட்டங்களையும் சேர்த்து தமிழ் மக்களின் எண்ணிக்கை 50 அல்லது அதற்கும் குறைவான சதவிகிதம் என்கிற அளவில்தான் உள்ளது.

எனவே, வாக்களிப்பில் வெற்றிபெற வேண்டுமானால் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் தாயகத்துக்கு திரும்பவேண்டும் அல்லது தத்தமது குடியிருப்புகளில் இருந்தே வாக்களிக்கவேண்டும். கெனடாவுல விஜய் படம் பார்த்துகிட்டே வாக்களிக்க பெரும்பாலும் வாய்ப்பில்லை.

எனவே, வாக்களிப்பு ஈழம் கிடைக்கப்போகிறது என்றால், விஜய் படத்தை விட்டுவிட்டு, வருவார்களா அவர்கள்?

இதெல்லாம் தெரியாமல், அல்லது தெரிந்தும் காட்டிக்கொள்ளாமல், சும்மா சும்மா கருணாநிதி சாவணும்னு கத்தினா என்ன அர்த்தம்?
கிழக்கு மாகான மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் தனி ஈழத்துக்கு எதிராக, காட்டிக்கொடுத்த கருணாவுக்கும் பிள்ளையானுக்கும்தான் இப்போதுவரை பல்லக்குத் தூக்குகிறார்களாம்.

முதலில் இந்த 40 சதவீதம்... வேண்டாம். இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.

ஐரோப்பாவில் ஒக்கந்து கிட்டு இப்படி மொக்கையா கள்ள ஓட்டு போட்டு இருக்குறதுக்கு பதில் இதை செய்யலாம்

சிராஜ் said...

சகோ மதுரன்,

நீங்க போட்ட பதிவு சரியானது என்றால்.... நீங்கள் உண்மையாளராக இருந்தால்...
நாங்கள்(இஸ்லாமிய பதிவர்கள்) தான் கள்ள வோட்டு போட்டோம் என்று நிரூபியுங்கள்.
நாங்கள் அனைவரும் பதிவுலகை விட்டே நின்று விடுகிறோம்....
நிரூபிக்காவிட்டால் நீங்கள் ஒரு பொய்யர், அவதூறு கூற வேண்டும் என்பதற்காகவே பதிவு போட்டீர்கள் என்று இந்த பதிவுலகம் தெரிந்து கொள்ளட்டும்...

இது உங்களுக்கு ஒரு சவால் மதுரன்....நிரூபியுங்கள்......உங்கள் டெக்னிகல் அறிவை வைத்து நிரூபியுங்கள்...

பி.ஏ.ஷேக் தாவூத் said...

@ஹைதர் அலி,
சும்மா நச்சுன்னு சொல்லிருக்கிங்க. ஈழம் வேண்டுமெனில் முதலில் ஈழத்தை வைத்து வெளிநாட்டு குடியுரிமை வாங்கிய புலம்பெயர் தமிழர்கள் தங்களுடைய வெளிநாட்டு குடியுரிமை அனைத்தையும் துறந்து விட்டு இலங்கை திரும்ப வேண்டும் என்று சட்டம் போட்டால் இந்த டுபாகூர்களும் டோமர்களும் இருக்கிற இடம் தெரியாமல் தலைதெறிக்க ஓடி விடுவார்கள். இப்படி ஒரு சட்டம் போட்டால் புலம்பெயர் தமிழர்களின் சல்லியை வைத்து அரசியல் நடத்தும் காகிதப்புலிகளான நெடுமாறன், வைகோ, சீமான் போன்ற அரசியல் வியாதிகள் வாயை மூடி அமைதியாக இருந்து விடுவார்கள். ஏனெனில் வருமானம் வரும் வழியில் கையை வைத்தால் அவர்கள் என்ன தான் செய்ய முடியும். இப்போது காலம் போன காலத்தில் மஞ்சள் துண்டுக்காரரும் அவர் பங்கிற்கு ஈழம் என்று கொமெடி பண்ணிக் கொண்டிருக்கிறார்.

மவுலாசா said...

சகோதரர்களே! மதுரன் தான் செய்த தவறுக்கு நம்மவர்களிடம் வசமாக மாட்டி வீங்குமளவிற்கு வாங்கி கட்டிக்கொண்டு - தமிழ்மணத்தில் வந்து ஒப்பாரி வைக்கிறார் அந்தோ பரிதா பம். மதுரனை போன்றவர்களுக்கு ஒரு விசயத்தை மட்டும் தெளிவாக புரியவைப்போம். உங்களைப் போன்ற நேர்மையல்லாதவர்கள்தான் - புராணக்கதைகளில் வருவதைப்போல ஒரே நபர் பல IDக்களின் மூலம்'அவதாரம்'எடுத்து வரமுடியும். நாங்களெல்லாம் ஓரிறை - ஒர் மறை என்று வாழ்பவர்கள் - அதனால் ஒரேயொரு 'ஐடி'யுடன் தான் வருவோம். போலி அடையாளங்களுடன் வரும் உம்மையும் - அடிவருடிகளையும் - வாய்மையை ஆயுதமாகக்கொண்டு ஓடஓட விரட்டுவோம்..

மனிதாபிமானி said...

மவ்ளாசா சகோ,

அஸ்ஸலாமு அலைக்கும்

ஒன்றே சொன்னீர், அதனை தெளிவாக நன்றே சொன்னீர்.

முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
அந்த கடைசி வார்த்தை ///////தயவுகூர்ந்து சற்றே புத்திசாலித்தனத்துடன் முயற்சியுங்கள்/////
ரிப்பீட்......ட்.....ட்ட்.....ட்...டுடூ.
இன்னும் இன்னும் கேவலப்பட்டுகொண்டேதான் இருப்பார்கள்.

Usman said...

மதுரனின் சிறகுகளில் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களில் நபிகள் நாயகம் (ஸல்)அவர்களை ஒருமையிலும் அவமரியாதையான முறையிலும் குறிப்பிட்ட விஷயம் மனதை மிகவும் வருத்தகூடியதாக இருந்தது. இதற்கு மிக சரியான முறையில் இவர்களின் பல்லை பிடுங்க வேண்டும் என்ற ஆதங்கமும் ஏற்பட்டதை தவிர்க்க முடியவில்லை. முஸ்லிம் பதிவர்கள் இஸ்லாத்திற்கு ஏதிரான இத்தகைய சூழ்சிக்காரர்களின் சூழ்ச்சியை ஒருங்கிணைத்து முறியடிக்கவேண்டும் இறைவன் அதற்கு நமக்கு உதவி புரிய வேண்டும்.

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in