Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Wednesday, 9 May 2012

தமிழ்மணம், பதிவர்கள், வாசகர்கள் கவனத்திற்கு


பதிவிற்குள் போகும் முன்பாக, இராமம்பாளையம் அரசு பள்ளி மேம்பாட்டுக்கு உதவ முன்வந்த/வரவிருக்கும், தகவலை கொண்டு சேர்த்த/சேர்த்துக்கொண்டிருக்கின்ற அனைவருக்கும் முதற்கண் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம். பள்ளி சார்பாக ஆசிரியர் பிராங்க்ளின் அவர்களும் தன் நன்றியை தெரிவித்துள்ளார்.

பதிவிற்குள் செல்வோம். சமீப காலமாக தமிழ்மணத்தில் உலாவி வரும் சைக்கோ கள்ள வோட் ஆள்மாறாட்ட ஆள்/ஆட்கள் இன்று ஒரு கீழ்த்தரமான செய்கையை நிகழ்த்தி காட்டியிருகின்றனர். இன்று மகுடத்தில் இருந்த கழுகு தளத்தின் விழிப்புணர்வு பதிவை மைனஸ் வோட் போட்டு கீழிறக்கி இருக்கின்றனர்.

முஸ்லிம் பதிவர்கள் பெயரில் (சிறு) மாற்றம் செய்து போடப்படுள்ள அந்த கள்ள மைனஸ் வோட்கள் பின்வருகின்றன.

  
கள்ள வோட்கள்: hussainaamma, suvanapppiriyan, abdulhakkimm, peermohamed.mm@gmail.com, mohaaashik, hajamydheeen, AMINAA29 (முஸ்லிம் பதிவர்களின் தமிழ்மண முகவரியில் ஒரு எழுத்தை சேர்த்து கள்ள வோட் போட்டிருப்பதை கவனிக்கவும்)

இந்த ஆள்/கும்பல் இத்தோடு நிற்கவில்லை. கையோடு கையாக சுவனப்பிரியனின் இன்றைய பதிவிற்கு இதே பாணியில் பிளஸ் வோட் போட்டிருக்கின்றது. தற்போது வரை சுவனப்பிரியன் பதிவிற்கு விழுந்துள்ள 24 பிளஸ் வோட்களில் சுமார் 14 இந்த கள்ள வோட் கும்பல் போட்டதே.

அந்த கள்ள வோட் விபரங்கள் பின்வருகின்றன.


கள்ள வோட்கள்: rabbanii carbonffriend mustaquee1515@gmail.com suvanapppiriyan PeerMhdd AMINAA29 askabt.islamm@gmail.com hajamydheeen gulaam nayagan_12 peermohamed.mm@gmail.com mohaaashik hussainaamma abdulhakkimm

ஆக, பதிவர்களிடையே குழப்பத்தை உண்டாக்குவதே இந்த ஆள்/கும்பலின் நோக்கம்.

குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக காழ்ப்புணர்வு வரவைப்பதற்காக, கழுகு தளத்தின் மிக சிறப்பான விழிப்புணர்வு பதிவை மைனஸ் குத்தி கீழிரக்குவது எல்லாம் மனிதத்தன்மையற்ற செயல். இம்மாதிரியான தீய எண்ணங்களை கொண்டவர்கள் தங்கள் எண்ணத்தில் நிச்சயம் வெற்றி பெறவும் முடியாது.

இதுக்குறித்து தன் பதிவில் முக்கிய அறிவிப்பு என்று குறிப்பிட்டு சுவனப்பிரியன் கூறியுள்ளதாவது:

"இன்று கழுகு தளத்தில் சென்று இஸ்லாமியர்கள் பெயரில் மைனஸ் கள்ள ஓட்டுக்களைப் போட்டு அந்த பதிவை தமிழ்மண மகுடத்திலிருந்து இறக்கி எனது பதிவில் வந்து அதே போல் கள்ள பிளஸ் ஓட்டுக்களைப் போட்டு மகுடத்தில் ஏற்றியிருக்கிறார்கள். இதன் மூலம் மற்ற பதிவர்களும் வாசகர்களும் இஸ்லாமிய பதிவுகளின் மீது காழ்ப்புணர்வு கொள்ள வேண்டும் என்ற நோக்கில் செய்யப்பட்டுள்ளது. இது பற்றி விளக்கி தமிழ் மணத்துக்கும் கடிதம் எழுதியுள்ளேன். ஒரு பதிவு வாசகர்களை அதிகம் சென்றடைவது அந்த பதிவின் நம்பகத் தன்மையினாலும் எழுதுபவரின் எழுத்து திறமையினாலுமே ஆகும். இது போன்ற குறுக்கு வழிகளை நானோ மற்ற எந்த இஸ்லாமிய பதிவர்களோ இதுவரை செய்ததில்லை: இனியும் செய்யப்போவதில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்"

இன்று இப்படியான ஒரு கேடுகெட்ட செயலை பார்த்த உடனேயே மேலும் ஒரு குழப்பம் வரவழைக்க முயல்கின்றார்கள் என்று புரிந்துவிட்டது. மேலும், உடனடியாக இது குறித்து சுவனப்பிரியன், கழுகு, தமிழ்மணம் போன்றவர்களுக்கு தெரிவித்தாகிவிட்டது. 

இந்த கள்ள வோட் குறித்து ஏற்கனவே தமிழ்மணத்திடம் தெரிவித்து அவற்றை நீக்க சொல்லி கேட்டிருக்கின்றோம். என்னென்ன பெயரில் கள்ள முகவரிகள் உருவாக்கப்படுகின்றன என்பதை இந்த இடத்தில் அப்டேட் செய்தும் கொண்டிருக்கின்றோம்.

மத துவேஷ பதிவுகள் விசயத்தில் சிறப்பான முடிவை எடுத்து அனைவரது பாராட்டுகளையும் பெற்ற தமிழ்மணம் இந்த கள்ள ஆள்மாறாட்ட ஆள்/கும்பல் குறித்தும் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம்.

14 comments:

சுவனப்பிரியன் said...

சலாம் சகோ!

//மத துவேஷ பதிவுகள் விசயத்தில் சிறப்பான முடிவை எடுத்து அனைவரது பாராட்டுகளையும் பெற்ற தமிழ்மணம் இந்த கள்ள ஆள்மாறாட்ட ஆள்/கும்பல் குறித்தும் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம்.//

தமிழ் மணம் நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்போம்.

மனிதாபிமானி said...

வில்லங்க விக்னேஷ்,

உங்கள் மீது அமைதி நிலவுவதாக...

கண்ணியம் குறைவான வார்த்தைகள் கொண்ட பின்னூட்டங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. உங்கள் கருத்தை கண்ணியமான முறையில் மாற்றியமைத்து மறுபடியும் போடுங்கள்.

பீர் | Peer said...

சாந்தி நிலவட்டும், மனிதாபிமானி!

நான் பதிவுகளில் ஆக்டிவாக இருந்த போதே தமிழ்மணம் பக்கம் எப்போதாவது தான் போவேன். இப்போ என் பெயரிலும் போலி.

என்னுடையது PeerMhd
போலி; PeerMhdd

தமிழ் மீரான் said...

இது போன்ற தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடும் மூடர்களின் எண்ணம் தோல்வியடையட்டும் இறைவா.! அவர்களுக்கு நேர் வழியைக் காட்டுவாயாக!
நன்றி சகோ. தங்கள் விளக்கத்திற்கு.

மனிதாபிமானி said...

தமிழ்மணம் தன் தளத்தில் கள்ள வோட் தொடர்பாக பதில் கூறியுள்ளது. அது பின்வருமாறு,

===
தமிழ்மணம் on May 9th, 2012 11:12 am
பதிவர் ஆஷிக் அஹமத் & சுவனப்பிரியன்
இருக்கும் தமிழ்மணம் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலே, தனித்துவமான ஒரு பதிவர் கணக்கோடும் ஒரு மின்னஞ்சலோடும் ஒருவர் தமிழ்மணத்திலே பதிவு செய்துகொண்டு அதனூடாகவே வாக்கிடப்படுகின்றது. ஒரு கணணியிலே ஒரு வாக்கினை இட்டால், மீண்டும் ஒருவர் வாக்கிடமுடியாது. காண்க:http://blog.thamizmanam.com/archives/195 இதனடிப்படையிலேயே தமிழ்மணம் தொழிற்படுகின்றது. அதற்குமேல் தமிழ்மணம் பதிவர்களின் அடையாளத்தைக் கண்டுகொள்வதைச் செய்யமுடியாது. எத்தொழில்நுட்பத்திலும் இருக்கக்கூடிய குறையும் ஓட்டையும் இந்நுட்பத்திலும் இருக்கமுடியும். இதனைக் காலப்போக்கிலேயே மேம்படுத்தமுடியும். இவ்வோட்டைகளைப் பயன்படுத்தி, முறையற்ற வாக்குகளை இடுதலைப் பதிவர்கள் செய்தால், தமிழ்மணம் நடைமுறையிலே ஆளடையாளம் கண்டும் எதையுமே செய்யமுடியாதநிலையிலே இருக்குமென்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
ஆனால், பதிவர்களே புரிந்துகொள்ளாமல் செயற்படும்போது, ஒரு நிலையிலே இப்படியான பரிந்துரைகளையும் சூடாக்குதலையும் நீக்கவேண்டிய நிலைதான் ஏற்படும்.

ராஜ நடராஜன் said...

சகோ.மனிதாபிமானி!மதம் என்ற வட்டத்துக்குள் இஸ்லாமிய சகோதரர்கள் சுழல்வதால் பெரும்பாலும் தலைப்பை நோக்கி விட்டு கருத்து சொல்லாமல் நகர்ந்து விடுவது வழக்கம்.

நீங்கள் கூடுதல் எழுத்துக்களை குறிப்பிட்டு மாற்றுக்கருத்தாளர்கள் கள்ள ஓட்டுப் போடுவதாக கூறுகிறீர்கள்.அதற்கான ஆதாரத்தையும் காட்டுகிறீர்கள்.அதே போல் உங்கள் கருத்துக்களுக்கு மாறாக நினைப்பவர்களும் இஸ்லாமிய வட்டத்திலிருந்து கள்ள ஓட்டுப்போடுவதாக கூறுவதோடு நீங்கள் காண்பிக்கும் ஆதாரம் போலவே அவர்களும் கூறுகிறார்கள்.

இடையில் நின்று கொண்டு குழப்பங்களை விளைவிப்பவர்கள் யார் என்ற கேள்வி எழுகிறது.ஊர் இரண்டாவதில் கூத்தாடுவது யார்?

புலவர் சா இராமாநுசம் said...

தங்கள் பதிவு வரவேற்கத் தக்கதாகும்!
தமிழ் மணம பதிலுரையும் ஆராயத்தக்கதே!
என்ன செய்வது மனம் வெளுக்க மருந்திலையே!என்பது தானே உண்மை!

சா இராமாநுசம்

சிந்தனை said...ஸலாம்

==============================================
மனிதாபிமானி - கள்ள ஒட்டு - PART 2 ல இருக்கு ...

நேற்று தான் REFRESH ஆனாங்க... இனிமேலும் கள்ள ஒட்டு வரும் ன்னு நினைக்கிறன் .. இறைவன் நாடினால் .......

==============================================

தமிழ்மணம் சொல்வது மிகுந்த வருத்தமே அளிக்கிறது

//இவ்வோட்டைகளைப் பயன்படுத்தி, முறையற்ற வாக்குகளை இடுதலைப் பதிவர்கள் செய்தால், தமிழ்மணம் நடைமுறையிலே ஆளடையாளம் கண்டும் எதையுமே செய்யமுடியாதநிலையிலே இருக்குமென்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.//

எங்களால் வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடியும் என்று சொல்கிறதா .. SO SAD...

//ஆனால், பதிவர்களே புரிந்துகொள்ளாமல் செயற்படும்போது, ஒரு நிலையிலே இப்படியான பரிந்துரைகளையும் சூடாக்குதலையும் நீக்கவேண்டிய நிலைதான் ஏற்படும்.//

சட்டத்தை நீங்க கைல எடுக்க வேணாம் என்று சொல்கிறதா ??? ... நல்லதுக்கு காலம் இல்லை விடுங்க ...


finger print/கண் retina/DNA வச்சு ஓட்டு வாங்கினாதான் உண்டு
அதிலும் கூட, ஓட்டையை கண்டு பிடிச்சு, கள்ள வாக்கு போடரதுக்கு, பல பேர் தயாராவே இருப்பாங்க. லூஸ்ல விடுங்க.

2012 ல இதுலாம் நடக்குமா ?

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

we will wait and see.

மனிதாபிமானி said...

சகோ நடராஜன்,

உங்கள் மீது அமைதி விழைவதாக

**மதம் என்ற வட்டத்துக்குள் இஸ்லாமிய சகோதரர்கள் சுழல்வதால் பெரும்பாலும் தலைப்பை நோக்கி விட்டு கருத்து சொல்லாமல் நகர்ந்து விடுவது வழக்கம்**

மார்க்கம் என்பதை பிரித்து முஸ்லிம்களின் செய்கைகளை பார்க்க முடியாது. ஒவ்வொரு செயலில் பிரதிபளிக்குமாரே முஸ்லிம்களுக்கு இஸ்லாம் கட்டளை வழங்கியுள்ளது. இஸ்லாம் முஸ்லிம்களிடையே ஏற்படுத்தி இருக்ககூடிய வலிமையான கட்டமைப்பை புரிந்துகொள்ள முடியாததே தவறான புரிதலுக்கு காரணம் என்று நினைக்கின்றேன். அதே நேரம், இஸ்லாமிய வரையரைக்குள்ளாக பல்வேறு துறைகளையும் அலசும் பதிவர்கள் இருக்கின்றார்களே சகோ. கசாலி, பாசித், ஹுசைனம்மா என்று சொல்லிக்கொண்டே போகலாமே. ஒவ்வொருவரின் எழுதும் விதமும் ஒவ்வொருவிதமாக இருக்கின்றது. தவறான விசயங்கள் இல்லாதவரை எல்லோரையும் ஏற்றுக்கொண்டு போவோமே.

**இஸ்லாமிய வட்டத்திலிருந்து கள்ள ஓட்டுப்போடுவதாக கூறுவதோடு நீங்கள் காண்பிக்கும் ஆதாரம் போலவே அவர்களும் கூறுகிறார்கள்**

ஒரே ஒரு கருத்து மட்டுமே சகோ. இந்த கள்ள வோட் பிரச்சனையில் அன்றிலிருந்து இன்று வரை போராடிகொண்டிருக்கின்றோம். எங்கள் மீது தவறிருந்தால் தமிழ்மனத்திடம் திரும்ப திரும்ப இது குறித்து கூறி நீக்க சொல்ல வேண்டிய அவசியமில்லை சகோ. மேலும் நாங்கள் இறையச்சம் கொண்டவர்கள். மறுமை வாழ்க்கையே நிரந்தரமானது என்று நம்புபவர்கள். இந்த கேவலமான செய்கைகளை நிரந்திரமில்லாத இந்த உலகில் செய்து நிரந்தரமான வாழ்க்கையை கைவிடும் அளவு மதிகேட்டவர்கள் இல்லை சகோ.

தங்கள் கருத்துக்கு நன்றி.

nigalkalathil siva said...

கழுகுவின் கவனத்திற்கு கொண்டு வந்தமைக்கு நன்றிகள் நண்பரே...

VANJOOR said...

.
.
CLICK >>>>>
காஷ்மீர் என்றாலே தீவிரவாதம் முஸ்லிம் என்றாலே தீவிரவாதம் என்று சொல்பவர்கள் கவனிக்கவும்.
தன்னை துன்புறுத்திய படையில் உள்ள ஒருவனுக்கு உதவும் இதயம் எத்தனை பேருக்கு உண்டு? காஷ்மீர் முஸ்லிம் வாலிபனும்,படை வீரனும்...
<<<<<<< TO READ
.
.

சௌந்தர் said...

கழுகு குறித்து விளக்கத்திற்கு நன்றி நண்பரே...... எப்போதும் நாங்கள் எப்போதும் மைனஸ் ஓட்டு குறித்து கவலை படுவதில்லை.... இந்த பதிவின் மைனஸ் ஓட்டு குறித்து நண்பர் ஒருவர் பின்னூட்டம் இட்டு இருந்தார்...

கழுகு... இஸ்லாமிய பெயரில் மைனஸ் ஓட்டு போட்டதால் இஸ்லாமிய நண்பர்களை தவறாக நினைக்க வில்லை என்பதை நான் இங்கு சொல்லி கொள்கிறேன்...

புரிதலுக்கு நன்றி நண்பர்களே....

Shankar M said...

தொடரட்டும் நற்தொண்டு @ மனிதாபிமானி....