Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Wednesday, 16 May 2012

Wi-fi போகின்றது...Li-fi வருகின்றது...


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு (உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக).

இன்டர்நெட் தொழிநுட்பத்தில் மறக்க முடியா பெயர் Wi-fi. வயர் இல்லாமல் இன்டர்நெட் உபயோகிக்க பயன்படுத்தும் இந்த தொழில்நுட்பத்திற்கு விடை கொடுக்கும் நேரம் நெருங்கிக்கொண்டிருக்கின்றது.

டாக்டர்கள் முஸ்தபா அப்கனி, கார்டன் போவே மற்றும் பேராசிரியர் ஹெரால்ட் ஹாஸ் ஆகியோரின் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புரட்சிகர Li-fi தொழில்நுட்பம் எதிர்க்கால இன்டர்நெட் உலகை மாற்றியமைக்க போவதாக அறிவியல் உலகம் கருதுகின்றது.

wifi தொழில்நுட்பத்தில் உள்ள மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் அது ரேடியோ அலைவரிசை சிக்னல்களை உபயோகிப்பது தான். இந்த சிக்னல்கள் மற்ற அலைவரிசையுடன் குறுக்கிட்டு குழப்பம் ஏற்படுத்த கூடாது என்பதற்காக தான் விமானம், மருத்துவமனை போன்றவற்றில் wifi-யை தடை செய்கின்றனர்.

Visible light communication (VLC) என்று அழைக்கப்படும் Lifi தொழில்நுட்பத்தில், ஒளியை கொண்டு தகவல்கள் அனுப்படுவதால் மேலே கூறிய பிரச்சனைகள் வர வாய்ப்பில்லை. மேலும் தண்ணீருக்கு அடியிலும் இன்டர்நெட் பயன்படுத்தலாம்.இன்னும் ஆச்சர்யம் என்னவென்றால், இந்த தொழில்நுட்பம் wifi-யை விட ரொம்ப விலை மலிவானது. மேலும் மிக வேகமானதும் கூட. 10 Gbps வரை இதன் வேகம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது 1.5 hrs ஓடக்கூடிய ஒரு High Definition வீடியோவை 30 நொடிகளில் டவுன்லோட் செய்திடலாம்.

இன்னும் ஐந்து வருடங்களில் இந்த தொழில்நுட்பம் நம் கணிப்பொறிகள் மற்றும் மொபைல் போன்களை ஆட்கொள்ள ஆரம்பித்துவிடும் என்று சமீபத்திய EFY (Electronics for You) இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு தொழில்நுட்பத்திலும் இருப்பது போல இதிலும் குறைகள் உண்டு. இருப்பினும் பாதுகாப்பு மற்றும் வேகத்தில் தலைச்சிறந்து இருப்பதால் அந்த குறைகளை நிவர்த்தி செய்யும் முயற்சியில் ஆய்வாளர்கள் இறங்கியிருக்கின்றனர்.

19 comments:

mubarak kuwait said...

ஆனால் இதில் ஒரு பிரச்னை இருக்கு wifi சுவர் போன்ற தடி இருந்தாலும் ஊடுருவி சென்று விடும் Li-fi சிறிய மறைப்பு இருந்தாலும் தடை படும் இதற்க்கு முன்னர் மொபைலில் அல்ட்ர வைலெட் ஒளிக்கதிர் இருந்தது இதன் வழியாக தகவல் பரிமாறப்பட்டது அனால் அது இப்போது பயன்பாட்டில் இல்லை அது போல் தான் இதுவும்

கோவி.கண்ணன் said...

http://www.bbc.co.uk/news/science-environment-18072618

Researchers in Japan have smashed the record for wireless data transmission in the terahertz band, an uncharted part of the electro-magnetic spectrum

Aashiq Ahamed said...

சகோதரர் முபாரக்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

//ஆனால் இதில் ஒரு பிரச்னை இருக்கு wifi சுவர் போன்ற தடி இருந்தாலும் ஊடுருவி சென்று விடும் Li-fi சிறிய மறைப்பு இருந்தாலும் தடை படும்//

ஆமாம் சகோதரர் உண்மைதான். அதே நேரம் //மொபைலில் அல்ட்ர வைலெட் ஒளிக்கதிர் இருந்தது// - இதற்கும் VLC தொழில்நுட்பத்திற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. LI-FI என்பது wifi போலவே தான். data coverage range எல்லாம் ஒரே மாதிரி தான். ஒரே ஒரு வித்தியாசம், அது ரேடியோ அலைவரிசை தேவை இல்ல என்பது தான். ரேடியோ அலைவரிசைகளை ஒதுக்கீடு செய்வதில் உள்ள சிக்கல்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். எதிர்க்காலம் ரேடியோ அலைவரிசைகளை நம்பி செல்ல முடியாது. ஆகையால் ஒரு மாற்று தொழில்நுட்பம் அவசியம்.

அந்த வகையிலேயே இந்த புது தொழில்நுட்பத்தை பார்க்கின்றனர். நீங்கள் கூறியது போன்ற சிக்கல்களை தீர்ப்பது குறித்தும் தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். அது தீர்க்கப்படும் வரை line-of-sight மட்டும் பயன்படுத்தலாம். எப்படி பார்த்தாலும் இந்த தொழில்நுட்பம் நல்ல ஒன்றாகவே தெரிகின்றது..

வஸ்ஸலாம்..

ராஜ நடராஜன் said...

தகவல் புதிதாக இருந்தாலும் பின்னூட்டத்தில் முபாரக் காலை வாரி விடுகிறாரே:)

தமிழகத்தை மொபைல் போன் ஆட்கொண்டதற்கு பதிலாக கணினி புரட்சி ஏற்பட்டிருக்கலாம்.அல்லது குறைந்த பட்சம் தொலைக்காட்சியுடன் இணைந்த கணினி தகவல்கள் உருவாகியிருக்கலாம்.

Aashiq Ahamed said...

சகோதரர் ராஜ நடராஜன்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

//பின்னூட்டத்தில் முபாரக் காலை வாரி விடுகிறாரே:)//

மேலே முபாரக் அவர்களுக்கு நான் கொடுத்துள்ள பதிலை பார்க்கவும்..

Aashiq Ahamed said...

சகோதரர் கோவி.கண்ணன்,

உங்கள் மீது அமைதி நிலவுவதாக,

தாங்கள் கொடுத்துள்ள லிங்க் பார்த்தேன். அதனை தாங்கள் கொடுத்ததின் நோக்கம் என்னவென்ற அறிய விரும்புகின்றேன். காரணம், இந்த பதிவின் மையம் அது சார்ந்து அல்ல. ஒரு தகவலுக்காக கொடுத்திருக்கிண்றீர்கள் என்றால் ஓகே. மற்றப்படி நீங்கள் கொடுத்திருக்கும் லின்க்கிற்கும் இந்த பதிவு சொல்ல வருவதற்கும் அடிப்படையாகவே நிறைய வித்தியாசங்கள் உண்டு...

நன்றி..

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.ஆஷிக் அஹமத்,
வைஃபை க்கு இது நல்லதொரு மாற்று ஏற்பாடுதான்..!
அருமையான பதிவு. புதிய தகவல்கள்..!

பதிவில் இரண்டாவது படத்தை பார்த்த உடனேயே இரண்டு விஷயம் கேட்க நினைத்தேன்.
ஒன்றை சகோ.முபாரக் கேட்டுவிட்டார்..! நன்றி சகோ.முபாரக். பதிலுக்கு நன்றி சகோ.ஆஷிக்.

கேட்க நினைத்த இரண்டாவது விஷயம்:-

இரவில் நாம் லைட்டை ஆஃப் செய்து விட்டு தூங்கும்போது, மொபைல் எப்படி வேலை செய்யும்..? நைட் லாம்ப் அளவு ஒன் வாட் அல்லது ஃபைவ் வாட் பல்ப் வெளிச்சம் என்றெல்லாம் கட்டாயம் லை-ஃபை இயங்க எல் ஈ டி பல்ப் அவசியமா..? இருட்டில் செயல்படுமா..?

நலதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.

சுவனப்பிரியன் said...

சலாம் சகோ!

சிறந்த பதிவை பகிர்ந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

Aashiq Ahamed said...

சகோதரர் முஹம்மது ஆஷிக்,

வ அலைக்கும் சலாம்,

//மொபைல் எப்படி வேலை செய்யும்..? நைட் லாம்ப் அளவு ஒன் வாட் அல்லது ஃபைவ் வாட் பல்ப் வெளிச்சம் என்றெல்லாம் கட்டாயம் லை-ஃபை இயங்க எல் ஈ டி பல்ப் அவசியமா..? இருட்டில் செயல்படுமா..?//

இதற்கு தான் smart led கான்செப்ட் என்று கூறுகின்றார்கள். உங்களின் கேள்விக்கான பதில் இதில் பதிந்து இருக்கும் என்றே நினைக்கின்றேன். மேலும் இந்த VLC தொழில்நுட்பம் ieee கழகத்தால் standardise பண்ணப்பட்டுள்ளது (IEEE 802.15.7). நீங்கள் கூறியது போன்ற சவால்களை எதிர்க்கொண்டே ieee இந்த தொழில்நுட்பத்தை அங்கிகரித்து இருக்கும் என்று நம்புகின்றேன். மேலும் இதுகுறித்து IEEE 802.15.7-இன் physical layer தகவல்களை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

வஸ்ஸலாம்..

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

மிக உபயோகமான தகவல்.. இதனை பற்றிய மேலும் விரிவாக்கமான தகவல் நிறைந்த லிங் கொடுத்தால் எல்லோருக்கும் மிக உபயோகமாக இருக்கும். எதிர்பார்க்கலாமா ஆஷிக். மிக்க நன்றி.

புலவர் சா இராமாநுசம் said...

நல்ல தகவல்! விரைவிலே வர வேண்டும்!

நன்றி!

சா இராமாநுசம்

கோவி.கண்ணன் said...

//ஒரு தகவலுக்காக கொடுத்திருக்கிண்றீர்கள்//

ஆமாம்

Aashiq Ahamed said...

அண்ணன் Starjan Sheik,

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த பதிவின் இறுதியில் உள்ள New Scientist லிங்க் சுட்டினால் மேலதிக தகவல்கள் கிடைக்கும்.

mubarak kuwait said...

சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் எடுக்க இப்போது சிலிகான் பயன்படுத்கிறார்கள், அனால் அது அந்த அளவிற்கு சூரிய ஒளியை மின்சாரமாக மாற்ற வில்லை, குண்டு பல்பில் பயன்படும் டங்க்ஸ்டன் மற்றும் tube light பயன்படும் florescent பயன்படுத்தி reverse process அதாவது மின்சாரத்தை ஒளியாக மாற்றுவதில் சூரிய ஒளியை பாய்ச்சி மின்சாரமாக பெற முடியுமா என்று எனக்கு ஒரு யோசனை இருக்கிறது, வேறு யாருக்காவது இப்படி ஒரு யோசனை இருந்தால் எனக்கு தெரிவிக்கவும் நாம் அனைவரும் சேர்ந்து ஆராய்ச்சில் ஈடு படலாம்

UNMAIKAL said...

.
.
CLICK

இஸ்லாத்தில் சாதிகள் இல்லையடி பாப்பா....!!!!
TO READ

.
.

ராஜ நடராஜன் said...

சகோ.ஆசிக் அகமது!மீண்டுமொரு முறை பின்னூட்டம் காண்கையில் உங்கள் பதிலை காண நேரிட்டது.ரேடியோ அலைவரிசைகளை முழுவதுமாக ஒதுக்கி தள்ளி விடமுடியாது.பேட்டரி மற்றும் மின்கதிர்களுக்கு மாற்றாக காற்றில் அலையும் ரேடியே அலைவரிசை பயன்பாட்டுக்குரியதே.நீங்கள் சொல்லும் அலைவரிசை ஒதுக்கும் சிரமங்கள் சில கேஜட்டுகளுக்கு அவசியமே இல்லை.

Aashiq Ahamed said...

சகோதரர் ராஜ நடராஜன்,

உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

//ரேடியோ அலைவரிசைகளை முழுவதுமாக ஒதுக்கி தள்ளி விடமுடியாது//

உண்மைதான். நான் சொல்ல வந்தது, எதிர்க்காலம் ரேடியோ அலைவரிசை bandwidth-களை நம்பி இருக்க முடியாது என்பது. இப்போதே நம் மொபைல் தொழில்நுட்பங்கள் நிறைய தகவல்களை எடுப்பதால் radio frequency bandwidth பற்றாக்குறை விரைவிலேயே வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை எதிர்க்கொள்ள lifi போன்ற மாற்று தொழில்நுட்பம் அவசியம் என்று தான் சொன்னேன். சொல்ல வந்ததை தெளிவாக சொல்லிருக்கவில்லை என்றால் மன்னிக்கவும்...

என்னுடைய இந்த எண்ணத்தையே New Scientist இதழும் பிரதிபலிக்கின்றது.

//Once established, VLC could solve some major communication problems. In 2009, the US Federal Communications Commission warned of a looming spectrum crisis: because our mobile devices are so data-hungry we will soon run out of radio-frequency bandwidth. Li-Fi could free up bandwidth, especially as much of the infrastructure is already in place.// - இப்படியாக

நன்றி..

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
நல்ல பதிவு..அறிவியல் முன்னேற்றத்தை அருமையாக விளக்கியதற்கு பாராட்டுக்கள்.......

புதிய வரவுகள்:அஹ்மத் தீதத்தும் கிறிஸ்தவ விவாதகர்களும்-சில சுவாரசியங்கள்,கிறிஸ்தவர்களே இயேசு உங்களை இரட்சிக்கமாட்டார்

T.N.MURALIDHARAN said...

புதிய தகவல் தெரிந்துகொண்டோம் நன்றி.