Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Sunday, 10 March 2013

"நான் அறிந்த மிகச் சிறந்த விஞ்ஞானிகள் நாத்திகர்கள் இல்லை"



இறைவனின் மாபெரும் கிருபையால், லண்டனில், "இஸ்லாமா? நாத்திகமா? - எது அறிவுக்கு ஒத்துவருகின்றது?" என்ற தலைப்பிலான விவாதம் அருமையாக நடந்து முடிந்தது. விவாதம் அறிவிக்கப்பட்ட சில நாட்களில் இதற்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன என்பதில் இருந்து இந்த விவாதத்திற்கு இருந்த ஆர்வத்தை அறிந்துக்கொள்ளலாம். 

பிரிட்டனை தலைமையிடமாக கொண்ட இஸ்லாமிய கல்வி மற்றும் ஆய்வு மையத்தின் (IERA) சார்பில் ஹம்ஸா ஆண்ட்ரியசும், நாத்திகத்துக்கு ஆதரவாக நன்கறியப்பட்ட ஆய்வாளர் லாரன்ஸ் க்ராஸ்சும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். 

விவாதத்திற்கு பிறகு - லாரன்ஸ் க்ராஸ் மற்றும் 
ஹம்ஸா ஆண்ட்ரியஸ் 

மிக சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்த இந்த விவாதத்திற்கு நேரடி ஒளிபரப்பு இல்லையென்றாலும், IERA சார்பில் உடனுக்குடனான அப்டேட்கள் முகப்பக்கத்தில் பதியப்பட்டன. ஹம்ஸாவின் வாதத்திறன் மற்றொரு முறை என்னை வியப்பில் ஆழ்த்தியது. "அட ஆமாம்ல" என்று எண்ணும் அளவிற்கு மிக ஆழமான கருத்துக்கள்.

இன்னும் சில நாட்களில் விவாத வீடியோ வந்துவிடும். அறிவுக்கு நல்ல தீனியாக அமைந்த இந்த விவாதத்தில் பார்வையாளர் நேரத்தில் ஒரு கேள்விக்கு இப்படியாக பதில் சொல்கின்றார் க்ராஸ். 

"science doesn't require you to be an atheist, I know very good scientists who aren't atheists - அறிவியல் நீங்கள் நாத்திகராக இருக்கும்படி கூறவில்லை. நான் அறிந்த மிகச் சிறந்த விஞ்ஞானிகள் நாத்திகர்கள் இல்லை" 

அட்ரா சக்க...:-) இதை தானே பல காலமா சொல்றோம்? அறிவியல் என்பது நாத்திகத்திற்கான வழியல்ல. அறிவியல் உலகில் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் கடவுள் நம்பிக்கையாளர்களே. பார்க்க http://www.ethirkkural.com/2010/09/blog-post_28.html

இந்த உண்மை க்ராஸ் மூலமாக மற்றொரு முறை வெளிவந்ததற்கு மகிழ்ச்சி. 



9 comments:

மனிதாபிமானி said...

@ அனானி,

இடம் மாறி வந்துட்டீங்க..சரியான இடத்துக்கு போய்க்குங்க

suvanappiriyan said...

சலாம்! சிறந்த இடுகை.

Unknown said...

அவர்கள் மதவாதிகளும் அல்ல!

Anonymous said...

He said "I know very good scientists who aren't atheists"

You translated as "மிகச் சிறந்த விஞ்ஞானிகள் நாத்திகர்கள் இல்லை".

Wrong translation.
Your title is modified to suit your beliefs. After all we are human beings and want to standby what we believe. Good luck.

மனிதாபிமானி said...

@ anony,

Changed the title.

மனிதாபிமானி said...

@ kannaimambathey,

//அவர்கள் மதவாதிகளும் அல்ல!
//

விஞ்ஞானிகள் என்றாலே அவர்கள் நாத்திகர்கள் என்பது போன்ற எண்ணங்கள் கொண்டவர்களுக்கான பதிவு.

நன்றி.

Anonymous said...

@மனிதாபிமானி
"நான் அறிந்த மிகச் சிறந்த விஞ்ஞானிகள் நாத்திகர்கள் இல்லை"
மீண்டும் தவறான பொருள் படும் மொழிபெயர்ப்பு.

ஏறக்குறைய அவர் சொல்ல வந்தது இதுதான் : "நாத்திகர்கள் அல்லாத மிகச்சிறந்த விஞ்ஞானிகளை(யும்) எனக்கு தெரியும்."

நன்றி

Haroonamjan Mohammed said...

Assalamu Alaikum.. Plz kindly give the download link for this debate video.

மனிதாபிமானி said...

@ Haroonamjan Mohammed,

wa alaikum salaam, here is the link

http://www.youtube.com/watch?v=uSwJuOPG4FI