தான் சார்ந்த அரசு பள்ளியை மிகச்சிறந்த முன்னுதாரண பள்ளியாக மாற்றியவர் சகோதரர் ப்ராங்க்ளின் அவர்கள். காரமடை அருகே இராமம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆசிரியரான இவரை சென்ற ஆண்டு பதிவுலகத்திற்கு சக பதிவர்கள் அறிமுகப்பத்திய போது, இவரது கல்வி பணிகளை பார்த்து மிகவும் வியப்படைந்தோம். வியப்படைந்தோம் என்பது கூட சாதாரண வார்த்தையாகவே இருக்க முடியும். (இந்த பள்ளி மற்றும் சகோதரர் ப்ராங்க்ளின் குறித்த ஈரோடு கதிர் அவர்களது பதிவை இங்கே காணலாம்).
(நம்புங்க..இது அரசு பள்ளி தான்)
தற்போது, தொடக்கப்பள்ளியின் மேலும் சில ஆக்கப்பூர்வமான பணிகளுக்காக உதவி தேவைப்படுகின்றது. சுமார் 14 லட்சம் வரை செலவாகும் இந்த பணிக்கு, எட்டு லட்ச ரூபாயை அரசு வழங்குகின்றது. மீதம் உள்ள ஆறு லட்ச ரூபாய்க்கு பொது மக்களின் உதவியை கோருகின்றார் ப்ராங்க்ளின். இதுக்குறித்த அனைத்து தகவல்களும் பின்வருகின்றன (வெளிநாட்டில் வசிப்பவர்கள் நன்கொடை அளிக்க ஏதுவாக அது குறித்த தகவல்களும் பின்வருகின்றன).
ஏழை மாணவர்கள் சிறப்பான கல்வி பெரும் இந்த பள்ளிக்கு உங்களால் இயன்ற தொகையை வழங்குங்கள். உதவி மிகச் சிறியதாக இருந்தாலும் அது இறைவனிடத்தில் மிகப்பெரிய நற்கூலியை பெற்றுத்தரும் என்பதை மனதில் கொள்ளுங்கள். நம்மால் ஆன உதவியை செய்து மாணவர்கள் சிறப்பான எதிர்காலம் அமைய பிரார்த்திப்போம்.
பின்வரும் ப்ராங்க்ளின் அவர்களின் கோரிக்கையை பாருங்கள். மேலதிக விளக்கங்களுக்கு அவரை தொடர்புகொள்ளுங்கள். முடிந்தவரை இந்த செய்தியை அடுத்தவருக்கு கூறி எதிர்க்கால சமுதாயம் சிறப்பாக உருவெடுக்க உதவுங்கள்.
சகோதரர் ப்ராங்க்ளின் இன்று அனுப்பிய மெயிலில் இருந்து,
===================
இராமம்பாளையம் பள்ளியின் வளர்ச்சி குறித்து அறிந்த பலரும் பள்ளிக்கு வருகை தந்து பாராட்டியும், பல்வேறு கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.
குறிப்பாக 2011-12 ஆம் கல்வியாண்டில் கோயம்புத்துார் மாவட்ட ஆட்சியர் திரு.எம்.கருணாகரன் அவர்கள், கோவை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அறிவர்.கருணாகரன் அவர்கள், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அறிவர்.கலாநிதி அவர்கள், கனடா நாட்டு வாட்டர்லுா பல்கலைக்கழகத்தின் இயக்குநர் அறிவர். செல்வக்குமார் அவர்கள், கல்வித்துறையின் உயர் அதிகாரிகள், எங்கள் பள்ளியின் செயல்பாடுகளை உலக நாடுகளில் வாழும் பல தமிழர்களுக்கு எடுத்துச்செல்ல காரணமாக இருந்தவர்களான புகழ்பெற்ற எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள், இனைய எழுத்தாளரும் நல்லாலோசகருமான ஈரோடு கதிர் அவர்கள், எழுத்தாளர் யுவகிருஷ்ணா அவர்கள், பல்வேறு இனைய, பத்திரிகை எழுத்தாளர்கள், கர்நாடக மாநிலத்தின் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் (சுமார் 90 பேர்), தமிழக்தின் பல பகுதிகளில் பணியாற்றிவரும் ஆசிரியர்கள் என பலரும் வருகை தந்த நிலையில், தமிழகம் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் பணியாற்றும் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள், பொதுமக்கள், இனையதள நண்பர்கள் என பலரும் தொடர்ந்து தொடர்பு கொண்டு பாராட்டி வருவது இராமம்பாளையம் பகுதி கிராம மக்களை மேலும் ஊக்கப்படுத்தி வருகிறது.
அடுத்த கட்டமாக, எதிர்வரும் 2012-13 கல்வியாண்டில் மாணாக்கரின் நலனைக் கருத்தில் கொண்டு மேலும் சில பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம்.
இதன்படி,
1. நவீன கணினி வகுப்பறை ( Smart computer lab ) கட்டுதல்.
2. பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டுதல் (125 மீட்டர் ).
3. மாணவர்களுக்கு உணவுக் கூடம் அமைத்தல்.
4. சமையலறையைப் புதுப்பித்தல்.
5. புதிதாக 11 கணிப்பொறிகள் மற்றும் LCD Projector வாங்குதல்.
6. விளையாட்டு மைதானம் அமைத்தல்.
7. விளையாட்டு தளவாடப்பொருள்கள் வாங்குதல்.
8. பொருள்கள் அறை (Store room) அமைத்தல்.
9. பள்ளி வளாகத்தில் அழகிய தோட்டம் மற்றும் கருத்துப்படங்களைச் சுற்றுச் சுவர்களில் வரைதல்.
10. புதிய தளவாடப் பொருட்கள் வாங்குதல்.
இப்பணிகளை வரும் கல்வியாண்டின் துவக்கத்திற்குள் விரைந்து முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். இப்பணிகளுக்கானத் திட்டத் தொகை ரூபாய் 14 இலட்சம் ஆகும். இதில் தமிழக அரசின் மூலம் 8.08 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. திட்டமிட்ட பணிகளை நிறைவு செய்ய இன்னும் சுமார் 6 இலட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.
(புதிய கணினி வகுப்பறை கட்டடப் பணி)
(சுற்றுச்சுவர்- வடக்குப்பகுதி)
(சுற்றுச்சுவர்- மேற்கு பகுதி)
(சுற்றுச்சுவர்- தெற்கு பகுதி)
இந்நிலையில் தங்களிடம் ஆலோசனைகளையும், உதவிகளையும் கோர விரும்புகின்றோம். எங்களின் ஆக்கப்பூர்வமான பணிக்குத் தாங்கள் தோள் கொடுத்து உதவினால் பேருதவியாக அமையும்.
தாங்கள் வழங்கும் ஒவ்வொரு ரூபாயையும் மகிழ்வோடு ஏற்றுக் கொள்வதோடு மிக நேர்த்தியாக, தொலைநோக்குப் பார்வையுடன் பயன்படுத்தப்படும்.
"தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்"
Canara Bank Swift code : CNRBINBBOXC ( வெளிநாடுகளில் வாழ்பவர்கள் )
Canara Bank IFSC Code : CNRB0001031 ( இந்தியாவில் வாழ்பவர்கள் )
வங்கிக் கணக்கு எண்: 1031101123120
கணக்கு பெயர் : PTA, PANCHAYAT UNION PRIMARY SCHOOL, RAMAMPALAYAM.
வங்கி / கிளை : CANARA BANK / SIRUMUGAI Branch
பள்ளி முகவரி : THE HEADMISTRESS,
PANCHAYAT UNION PRIMARY SCHOOL,
RAMAMPALAYAM, JADAYAMPALAYAM-POST,
SIRUMUGAI- 641302. METTUPALAYAM.
தொடர்பு எண்கள் :
ந.சரஸ்வதி : 99521 64582
து.பிராங்கிளின் : 99424 72672
" காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது"
- நன்றியுடன்,
பிராங்கிளின்.
எங்கள் பள்ளியின் இனையதளம் : www.rmpschool.blogspot.com
======================
தகவல்கள் உதவி: ஆஷிக் அஹமத் அ
Tweet | ||||
5 comments:
Kudos to them..Great work !!!
தமிழ் நாட்டில் இப்படியோரு அரசு பள்ளியா ...!! அடேங்கப்பா !!!!!!!
நம்பளும் ஏதாவது உதவி செய்யனுமையா ...
திரு.பிராங்களின் அவர்களின் கனவுகள் மெய்யாகட்டும் ..
சகோ ப்ராங்க்ளின் அவர்களின் இந்த முயற்சி உண்மையில் பாராட்டப் பட வேண்டியது..
நம்மால் ஆனா உதவிகளைச் செய்வோம், இன்ஷா அல்லாஹ்...
நல்ல பகிர்விற்கு நன்றி சகோ ஆசிக்....
சலாம்! அரசு பள்ளி இந்த அளவு நேர்த்தியாக செயல்படுவது ஆச்சரியம்தான். நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம். எனது பங்குக்கு நண்பர் ஆசிக்கை பிறகு தொடர்பு கொள்கிறேன். பகிர்வுக்கு நன்றி!
அரசு பள்ளிதான இது என்று ஆச்சரிய படவைகின்றது.இது போன்ற பள்ளியை உருவாக்க நினைக்கும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி....தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் இதுப் போல மாறினால் தனியார் பள்ளிகளின் எண்ணிகையும்,என்ன முடியாத பள்ளிகட்டனமும் குறையும்.....
எங்க தளத்திற்கும் நீங்க வாங்க,தளத்தில் உறுபினராக ஆகுங்கள்
www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் நபிகள் நாயகம் அவர்களின் குணநலன் அறிய, நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-1 TO 15), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி,ஆக்கபூர்வமான இன்னும் பல கட்டுரைகள்.அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....
Post a Comment